Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் பலர் மீது தடை உத்தரவு வெளியிடப்படலாம் – மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரண கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maj.gen.kapila-hendawitharana.jpg

முல்லைத்தீவு போர்முனையில், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடை செய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், . 

“இந்த 16 அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்களும், பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் சந்தேக நபர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். 

இவர்கள் மீது இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் இல்லை. 

அவர்களைத் தடை செய்வதற்கு அல்லது விலக்கி வைப்பதற்கு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். 

விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளில் அதன் வலைப்பின்னல் இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. 

அதனை எம்மால் நிரூபிக்க முடியும். 

நாம் முல்லைத்தீவில் பெருந்தொகையான ஆவணங்களை கைப்பற்றினோம். 

அவர்கள் நிதியை எப்படித் திரட்டினார்கள், புலிகளுக்கு இங்கு எப்படி அனுப்பினார்கள் என்ற விபரங்கள் அவற்றில் உள்ளன. 

இவற்றில் புலிகளின் மூத்த தலைவர்களின் குறிப்புகளும் அடங்கும். 

அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள எவரேனும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பினால், சிறிலங்கா நீதிமன்றங்களில் அந்த உத்தரவுக்கு எதிரான சவால்விட முடியும். 

அவர்கள் இங்கு வந்து தம்மை நிரூபிக்க முடியும். 

ஐ.நா தீர்மானத்துக்கு அமைய இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதும், நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து உள்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக இவர்களைத் தடை செய்ய முடியும். 

கடந்த 18 மாதங்களாக இந்த அமைப்புகள், தனிநபர்களின் விபரங்களை அதிகாரிகள் திரட்டி வந்தனர். 

எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புகள், தனிநபர்களின் பெயர்களும் வர்த்தமானியில் வெளியிடப்படக் கூடும். 

இந்தப் பட்டியலில், லண்டனில் வசிக்கும் அடேல் பாலசிங்கம், கிளிநொச்சியில் வசிக்கும் புலிகளின் பிரதான ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. 

குமரன் பத்மநாதன் இப்போது புலிகளுடன் இல்லை. அவர் இப்போதும் அவர்களுடன் அங்கிருந்தால், கேபியின் பெயரையும் உள்ளடக்கியிருப்போம். 

ஆனால், அமைச்சர் முரளிதரன் மற்றும் பிள்ளையான் ஆகியோரின் பெயர்களையும் வர்த்தமானியில் உள்ளடக்கவில்லை. 

புனர்வாழ்வு திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களை நாம் பட்டியலில் வெளியிடவில்லை.

நாம் ஏற்கனவே, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினுடையது உள்ளிட்ட புலிகளின் பல சொத்துக்களை இங்கு முடக்கி வைத்துள்ளோம். 

சிறிலங்காவினது அனைத்துலக இராஜதந்திரத் தூதரகங்களின் மூலம், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பாக, ஐ.நா தீர்மானத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகளிடம், கோருவோம். 

இது தொடர்பாக இணையத்தளம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம். 

அதில் பட்டியலிடப்பட்ட அமைப்புகள் தனிநபர்களின் முழு விபரங்களும் இடம்பெறும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறாத வகையில் எதுவும் செய்யலாம். 

தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிக்கலாம். ஆனால், பயங்கரவாதத்துக்கு அல்ல. 

பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தால் நாங்கள் அவர்களைப் பிடிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
 

மோடையர்கள்.

போர் வெற்றி என்ற பூமாலையை வானர கூட்டம் பிச்சு பிடுங்கி நாராக்கி போட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி

சரி

நம்ம பெயரையும் போடுங்களப்பா....

அதைப்பார்த்தா

ஒரு தில் வருமில்ல.......... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவலைபடாதீங்கு விசுகு இலங்கையரசுக்கு எதிராக கதைப்பவர்கள் எழுதுபவர்கள் அனைவருக்கும் தடைபட்டியலில் கொண்டுவந்துவிடும் இலங்கைபேரிணவாதஅரசு அவ்வளவுக்குகிலிபிடித்து ஆடுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.