Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை

 

 

 

Hekalia_CI.jpg

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசேட நிபுணர் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடாத்த உள்ளார். மூவர் அடங்கிய இந்த விசாரணைக் குழுவினர் எதிர்வரும் மே மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்,

இந்த சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட்டுக்கு வெளியே நடத்தப்பட உள்ள சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளில் பங்கேற்று சாட்சியமளிப்பதானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டின் இறைமை பாதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட 60 பேர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசேட நிபுணர் குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிக்க உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று நேற்றைய தினம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105300/language/ta-IN/----.aspx#.U0ISZoj14U8.facebook

  • கருத்துக்கள உறவுகள்

Flag-sri-lanka.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல் வெளியிடுகையில், 

“சாட்சியமளிக்கும் தனிநபர்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில், செயற்படுவது கண்டறியப்பட்டால் மட்டும், அவர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கும் எவரேனும், சமர்ப்பிக்கும் சான்றுகள் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக இருந்தால், நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். 

அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாதென்று சிறிலங்கா உறுதியாக அறிவித்து விட்டது. 

எந்வொரு விவகாரமும் உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும் என்று அண்மையில் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியிருந்தது. 

அனைத்துலக விசாரணைக்கு நாம் அனுமதி அளித்தால், அது நாட்டின் இறைமைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஐ.நா விசாரணைக் குழு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாட்சியமளிக்க முடியாது. 

ஏனென்றால், அவர்கள், நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக உறுதிப்பிரமாணம் எடுத்த பின்னரே, பதவியேற்றுள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, அனைத்துலக விசாரணைக் குழு முன்பாக, சாட்சியமளிப்பது தேசத்துரோகம் என்றும், அவ்வாறு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக அரசாங்க இரகசிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140407110280

என்ன நடவடிக்கை? குடித்துவிட்டு மாடியால் குதிப்பது? அல்லது குடித்து விட்டு பிளேனில் இருந்து குதிக்க முற்படுவது?

சிறி லங்கன் பேச்சு வெறி முறிஞ்சால் போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.