Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் 32 விடுதலைப்புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2(2785).jpg

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த, 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, விடுதலை புலிகள் அமைப்பு, குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட, 16 அமைப்புகளுக்கு, இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

பல்வேறு அமைப்புகளின் பெயரில் செயல்படும் விடுதலை புலிகள், இலங்கைக்கு வந்தால், அவர்களை உடனடியாக கைதுசெய்ய, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில், 422 விடுதலை புலிகள் தங்கியுள்ளதாகவும், இவற்றில், 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாகவும், இவர்களை கைதுசெய்ய, சர்வதேச பொலிசாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/106084--32-.html

லங்கா புவத் நல்லா புட்டு அவிக்குது.

வேண்டுமென்றே தலையில் மண்ணை வாரி கொட்டுகிறார்கள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தடை விதித்தவர்களில் 32 பேர் இந்தியாவில்

 

 

Banned%20new_CI.jpg

 இலங்கையில் மீண்டும் விடுதலை புரட்சிக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தததாக கூறி , இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் விடுதலை புலிகள் இயக்கம் உள்ளிட்ட16  தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்தது. 

அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை  பிரஜைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. 

தடை செய்யப்பட்ட அமைப்புகளில் உள்ள 424 நபர்களின் பட்டியல் இலங்கை வர்தமானியில்  வெளியிட்டது. 

அவர்களில் 32 பேர் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 32 பேர்களில் 6 பேரின் இந்திய முகவரி மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பட்டியலில் உள்ள மற்றவர்கள் தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வசிக்கிறார்கள். 

அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை கைது செய்ய சர்வதேச போலீசாருக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அல்லது குழுக்களை தற்போது தடை செய்யப்பட்டவர்களாக கருத முடியாது. 

இதுதொடர்பாக இலங்கை அரசு பாராளுமன்றத்தில், அவர்களை தடை செய்ய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அதிகாரி ஒருவர் கூறினார். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105309/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.