Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை! – வடக்கில் வெடிகொளுத்தி கொண்டாடுமாறு இராணுவம் அழுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை! – வடக்கில் வெடிகொளுத்தி கொண்டாடுமாறு இராணுவம் அழுத்தம் 

[Monday, 2014-04-07 08:52:49]
sanga-070414-150.jpg

பங்களாதேசில் நேற்றிரவு நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்,இந்தியாவை வீழ்த்தி இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார்.

  

இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட்டியிருந்தனர். முதலில் மட்டை வீசிய இந்திய அணியில் விராத் கோலியைத் தவிர மற்ற மட்டைவீச்சாளர்களின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதியாட்டத்தை மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டிருந்த இலங்கை அணி, இம்முறை இறுதியாட்டத்தை சிறப்பாக வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

அதேவேளை, இலங்கை உலக கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து படையினர் கொண்டாட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் உள்ளுர் பத்திரிகைகளைத் தொடர்பு கொண்ட படை அதிகாரியொருவர் இலங்கை உலக கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளதாக இன்றை பதிப்பில் தலைப்பு செய்தியாக வெளியிடுமாறு பணிப்புரை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலககிண்ணத்தை இலங்கை வென்றதை தமிழர்கள் வெடி கொளுத்திக் கொண்டாட வேண்டும் என்றும் படையினர் வன்னியிலும் வற்புறுத்தியுள்ளனர். வன்னியில் நிலைகொண்டுள்ள படையினரும் நேற்றிரவு வெடி கொளுத்தி வெற்றியைக் கொண்டாடினர். இதை மக்களும் கொண்டாட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இலங்கை கிண்ணத்தை கைப்பற்றிய அடுத்த கணமே, கிளிநொச்சி நகரம் இராணுவத்தினரின் வெடி ஓசையால் அதிர்ந்தது. வீதியால் போக்குவரத்து செய்தவர்களை மறித்த இராணுவத்தினர் இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி நகரத்தில் உள்ள கணணி நிலையம் ஒன்றில் கிரிக்கட் போட்டியயை பார்த்து விட்டுச் சென்ற இளைஞர் ஒருவரை வழி மறுத்த இராணுவத்தினர், இந்தியா வெல்ல வேண்டும் என்று சிவபெருமானை கும்பீட்டிர்களா எனக் கேட்டுத் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://seithy.com/breifNews.php?newsID=107105&category=TamilNews&language=tamil

நல்ல விடயம். இந்திய 110 கோடி மக்களும் வெறுப்பில் இருப்பார்கள்.

வெடியை வாங்கி கொடுத்தார்கள் என்றால் ஜாலிய கொழுத்திட்டா போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.