Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்" - திரை விமர்சனம்

Featured Replies

இந்திய வலைப்பதிவுகளிலேயே முதல்முறையாக உங்கள் லக்கிலுக் வழங்கும் "சில்லுன்னு ஒரு காதல்" திரைவிமர்சனம்.... :lol::lol::lol:

சில நாட்களுக்கு முன் இம்சை அரசன் விமர்சனம் செய்தபோது நண்பர் வசந்தன் கதை சொல்லாமல் விமர்சனம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சிக்க முயல்கிறேன்.

படத்தின் ஆரம்பக்கட்டக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. அம்பா சமுத்திரத்தின் அருகில் அழகான கிராமம், சூது வாது தெரியாத மக்கள், ஆறு, மரம், பசுமை என கேமிரா அள்ளிக் கொள்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டக் காட்சிகளைக் கண்டால் இயக்குனர் கிருஷ்ணா ஒரு இலக்கியக் காதலர் என முடிவெடுக்கத் தோன்றுகிறது. முதல் 10 நிமிடம் எக்ஸ்பிரஸ் வேகம் தான். இப்படியொரு படமா என ஆவென வாயைத் திறந்தால் ஒரு வடிவேலுவின் குத்துப் பாட்டு ஒன்றின் மூலமாக நம் வாயில் மண்ணை போடுகிறார் இயக்குனர். அந்தப் பாடல் படத்தின் வேகத்துக்கு தேவையில்லாத ஒரு பிரேக்.

ஆனால் அடுத்தக் காட்சியிலேயே மும்பை - மீண்டும் எக்ஸ்பிரஸ் வேகம். இந்த வேகமும் இடைவேளை வரை தான். சூர்யா - ஜோதிகா ஜாடிக்கேத்த மூடி மாதிரி அப்படியொரு ஜோடிப்பொருத்தம். சிவகுமார் சார்! மகனுக்கும், மருமகளுக்கும் சுத்திப் போடுங்க. திருஷ்டிபடப் போகுது. இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியால் அவர்கள் கேரக்டர்களுக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது. பொதுவாக நம்ம வாழ்க்கையிலேயே ரெகுலராக நடக்கும் சில சம்பவங்களையே காட்சிகளாக இவர்களுக்குள் அமைத்திருப்பது நல்ல சுவாரஸ்யம்.

சூர்யா அறிமுகமாகும் காட்சியிலேயே புயல் அடிக்க ஆரம்பித்து விடுகிறது இசைப்புயலின் இசையில். ஒரு பாட்டைத் தவிர மீதி பாட்டுக்கள் எல்லாம் சூப்பர்ஹிட். இந்தப் படம் இயக்குனர் - இசையமைப்பாளர் - ஒளிப்பதிவாளர் - எடிட்டர் நான்கு பேரின் உழைப்பிலேயே 'நச்'சென மிளிருகிறது.

குறிப்பாக அன்பே, அன்பே பாடலிலும் நியூயார்க் நகரம் பாடலிலும் எடிட்டர் புகுந்து விளையாடி இருக்கிறார். நியூயார்க் நகரம் பாடலுக்கு குறைந்தது 100 பிரேமாவது உபயோகித்திருப்பார் போல. ஒவ்வொரு ப்ரேமும் ஒவ்வொரு லொகேஷனில். எப்படித்தான் இயக்குனர் இதை படமாக்கினாரோ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டேன்.

தொழில்நுட்பரீதியாக இந்தப் படம் சர்வதேசத் தரத்தில் இருந்தாலும் செண்டிமெண்டு மேட்டரில் கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். படத்தின் முற்பாதியில் தம்பதிகளுக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தை அருமையான காட்சிகளால் நிரப்பியவர் எப்படி படத்தை முடிப்பது எனத் தெரியாமல் கொஞ்சம் குழம்பி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாதி இளம் கணவர்களுக்கு நெஞ்சில் இனம்புரியாத பீதியைக் கிளப்பப் போவது உறுதி.

பிளாஷ்பேக்கில் வரும் பூமிகாவை நாமே லவ் செய்யலாமா என யோசிக்க வைக்கிறார். அதே பூமிகா ரீ-எண்ட்ரி ஆகும் போது சூர்யாவுக்கு மட்டுமல்ல. நமக்கும் தலைவலி தான். சூர்யாவை ஜோதிகா எந்த அளவுக்கு காதலிக்கிறார் என காட்சிகளால் காட்டியிருக்கும் இயக்குனர் அதே அளவு அன்பு சூர்யாவுக்கும் ஜோ மீது உண்டு என்பதை ஒரு பாடல் காட்சியிலேயே காட்ட முனைந்திருக்கிறார். அழுத்தம் ரொம்ப குறைவு. நியூயார்க்கில் பாடல் மட்டும் இல்லாமல் சில காட்சிகளையும் படமாக்கியிருக்கலாம்.

வடிவேலு வழக்கம்போல காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மும்பையில் "அந்த" ஏரியாவுக்கு போய் வருவது மட்டும் கொஞ்சம் நெளிய வைக்கிறது. பிளாஷ்பேக்கில் வரும் சந்தானமும் கலகலக்க வைக்கிறார்.

பொறுப்பான குடும்பத்தலைவனாக ஒரு குழந்தைக்குத் தகப்பனாக கவுதம் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் சூர்யா பிளாஷ்பேக் கல்லூரி மாணவனாகவும் "நச்" என்று இருக்கிறார். ஜோதிகா ரொம்ப அழகு. இதுதான் கடைசி படமாமே? :-)

படத்தின் ஹீரோக்களில் கேமிராமேனும் ஒருவர். கிளைமேக்ஸ் காட்சியில் படுக்கையின் மேலே போடப்பட்டிருக்கும் டயரிக்கு மட்டும் அவர் கொடுத்திருக்கும் லைட்டிங்.... ரசிக்கத்தக்க சுவையான ஹைக்கூ....

இந்தப் படம் நகர்ப்புறங்களில் வெற்றிபெறலாம். செண்டிமெண்டுகள் குறைவாக இருப்பதால் பி மற்றும் சி ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் எனத் தெரியவில்லை. சூர்யா-ஜோதிகா சென்சேஷனல் ஜோடி என்பதாலேயே படம் போட்ட காசை எடுத்து விடும் :-)

படத்திற்கு நான் கொடுக்கும் மார்க் 42/100. ஆனந்த விகடன் விமர்சனத்தோடு இந்த மார்க் தோராயமாக ஒத்துப் போகிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தின்ர கதைய சொல்லுங்கப்பா!!! எப்ப படம் றிலீசாகுது? அடுத்த நாள் இன்ரர்நெட்டில பத்திட்டு வந்து கதை சொல்லுறன்.

என்ன சொல்லவாறியள் லக்கி படத்தை போய் பார்க்கவா வேண்டாமா...??? வேலை எல்லாத்தையும் தள்ளீட்டு நேரம் ஒதுக்கலாமா...??

"ஜில்லுனு ஒரு காதல்" திரை விமர்சனத்தை நல்லா எழுதியிருக்கீங்க லக்கிலுக்.

தொடருங்கள் உங்கள் பணியை...........

மேலதிக தகவல்கள்:

சில்லுன்னு_ஒரு_காதல்.jpg

இயக்குனர் N. Krishna

தயாரிப்பாளர் K.E. Gnanavel

கதை N. Krishna

A.C. Durai

நடிப்பு Surya

Jyothika &

Bhoomika Chawla

இசையமைப்பு A. R. Rahman

பாடல்கள் Vali

ஒளிப்பதிவு R.D. Rajasekhar

படத்தொகுப்பு Anthony

வினியோகம் Greenline Studios

வெளியீடு August 23, 2006

மொழி தமிழ்

  • தொடங்கியவர்

என்ன சொல்லவாறியள் லக்கி படத்தை போய் பார்க்கவா வேண்டாமா...??? வேலை எல்லாத்தையும் தள்ளீட்டு நேரம் ஒதுக்கலாமா...??

அற்புதமான முதல் பாதி படத்துக்காக.... தலைவலி கொடுக்கும் இரண்டாம் பாதியையும் பார்த்து தொலைக்கலாம்.... :lol::lol::lol:

அற்புதமான முதல் பாதி படத்துக்காக.... தலைவலி கொடுக்கும் இரண்டாம் பாதியையும் பார்த்து தொலைக்கலாம்.... :lol::lol::lol:

அற்புதமான தலைவலிங்கிறீங்களா? :P :lol: :P

அற்புதமான முதல் பாதி படத்துக்காக.... தலைவலி கொடுக்கும் இரண்டாம் பாதியையும் பார்த்து தொலைக்கலாம்.... :lol::lol::lol:

நீங்க சொல்லீட்டீங்க இல்லை....! போகப்போறன் அதுவும் தியட்டருக்கு...! :wink: :P :P

அற்புதமான தலைவலிங்கிறீங்களா?

எதுக்கும் கையில பனடோலோட போனாப்போச்சு....! :wink:

எனக்கு இதுவரைக்கும்

இந்த டிரீட்மென்ட் பத்தி சொல்லவே இல்லையே தல :oops: .

தலவலிக்கு

rodney-dangerfield_m3.jpg

பனடோல கையில வச்சுட்டாலே போதுமா தல? :lol:

எனக்கு இதுவரைக்கும்

இந்த டிரீட்மென்ட் பத்தி சொல்லவே இல்லையே தல :oops: .

தலவலிக்கு

rodney-dangerfield_m3.jpg

பனடோல கையில வச்சுட்டாலே போதுமா தல? :lol:

கையில வச்சிருந்தா போதாது உள்ள போடவும் வேணும் தான்....! நான் சும்மாவே இருந்திருக்கலாம்... இப்பிடி வாங்கிகட்டி இருக்க வேண்டி இருந்துதிருக்காது.... :wink: :lol:

ஒரே டென்சனா இருக்கிறதை விட

உங்கள் பனடோல் பிரச்சனையால

கொஞ்சம் சிரிக்க முடிஞ்சுது தல!

சிரிக்க வைத்து திசை மாற்றியதற்கு நன்றி!

கோபமில்லையே?

ஒரே டென்சனா இருக்கிறதை விட

உங்கள் பனடோல் பிரச்சனையால

கொஞ்சம் சிரிக்க முடிஞ்சுது தல!

சிரிக்க வைத்து திசை மாற்றியதற்கு நன்றி!

கோபமில்லையே?

கோபமா...??? அப்பிடி எண்டா என்னானானா...???? :roll:

அண்ணா உங்களையும் நம்பித்தான் படத்துக்கு போகப்போறன்.... நாளைக்கு வந்து இருக்கு உங்களுக்கு..! :wink: :P :P

எனக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை தல.

லக்கிலுக் எங்கேயாவது கண்ணில படுறாறாண்ணு பாருங்கப்பா! :lol: :P :lol:

எனக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை தல.

லக்கிலுக் எங்கேயாவது கண்ணில படுறாறாண்ணு பாருங்கப்பா! :lol: :P :lol:

தவிர்க்க முடியாத காரணத்தால் இண்று படம் பாக்க முடியவில்லை எண்டு சொல்லத்தான் ஆசை...! லேற்றாக படம் பாக்க எண்டு போனதால் ரிக்கேற் இல்லை எண்டு திருப்பி அனுப்பீட்டாங்கள்...!

வந்து உங்களை விட்டுட்டு லக்கியை பிடிக்கிறன்...! :wink: பிடிக்கிறது எண்டா கையால பிடிக்கிறது இல்லை ஏச்சுத்தான்.. (விவரமான ஆக்களோட கவனமா இருக்கனாக்கும் :D:D:D )

(லக்கிதான் தூரத்தில இருக்கிறார் என்னை தேடிப்பிடிக்கிறது கஸ்ரம்)

கிர்ரெண்ணு, சில்லெண்ணு ஒண்ணும் வேணாம், எங்கை சுட்டு போட்டிருக்கீங்க எண்டு தொடுப்பு தந்தால் போதும். ஒரு காட்சிக்காக யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கு, அதை பார்க்கத்தான்.

படத்தின்ர கதைய சொல்லுங்கப்பா!!! எப்ப படம் றிலீசாகுது? அடுத்த நாள் இன்ரர்நெட்டில பத்திட்டு வந்து கதை சொல்லுறன்.

படத்தில உங்கன்ட டான்ஸ் சூப்பர் வாழ்த்துகள்

8) 8)

  • தொடங்கியவர்

கிர்ரெண்ணு, சில்லெண்ணு ஒண்ணும் வேணாம், எங்கை சுட்டு போட்டிருக்கீங்க எண்டு தொடுப்பு தந்தால் போதும். ஒரு காட்சிக்காக யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கு, அதை பார்க்கத்தான்.

சுட்டு, கிட்டெல்லாம் போடல்லே.... நம்பளோடது எப்பவுமே சொந்த சரக்கு..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ வெளிவந்து விட்டது!!!!

http://www.vaddakkachchi.com/livemovie.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இந்த படம்? இன்னொரு கலாச்சார சீரழிவா??? அப்படி பாக்க போனால் ஒவ்வொரு ஆணும் கல்யாணத்துக்கு பிறகு வேற ஒருத்தியோட தான் வழனும்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் திரையரங்கில் காசு குடுத்துப்பாக்கக்கூடிய ஒகோ என்ற படமல்ல. பொம்பிளப்பிள்ளைகள் சிலர் படம் நல்ல படம் என்று சொல்லிச்சினம். பிறகு தான் தெரிஞ்சுது சூரியாவுக்காக அவைக்கு படம் பிடிச்சது என்று. வேறு நடிகர் நடிச்சிருந்தால் அவைக்கு பிடிச்சிருக்குமா?.

சில் என்று காதல் மற்றும் எம்ரன் மகன் படத்தை தரவிறக்கம் செய்ய

http://www.yarl.com/forum3/weblog.php?w=123

அன்புடன்

ஈழவன்

படம் திரையரங்கில் காசு குடுத்துப்பாக்கக்கூடிய ஒகோ என்ற படமல்ல. பொம்பிளப்பிள்ளைகள் சிலர் படம் நல்ல படம் என்று சொல்லிச்சினம். பிறகு தான் தெரிஞ்சுது சூரியாவுக்காக அவைக்கு படம் பிடிச்சது என்று. வேறு நடிகர் நடிச்சிருந்தால் அவைக்கு பிடிச்சிருக்குமா?.

கந்தப்பு தாத்தா எனக்கும் அந்த படம் நல்லா பிடித்தது

8) 8)

படம் சிறப்பாகத்தான் இருந்தது...

மனைவியே மாமா வேலை செய்யப் புறப்படும்வரை...

பெயரை பேசாமல்..

பகீரென்று ஒரு காதல் என்று வைத்திருக்கலாம்

இரண்டு பொண்டாட்டி கதைப்பா....! ஆனாலும் அனியாயத்துக்கு விட்டு குடுகிறாங்கப்பா...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.