Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமான் மலையக தமிழரின் தலைவனா எட்டப்பனா...???

Featured Replies

இப்ப கனக்க அரசியல் ஆய்வாளர்கள் வெளிக்கிட்டுட்டார்கள்

தூயது தூயது எண்டு சொல்லிற்று குப்பைகளை கொட்டுகிறனர் சிலர்.கூட்டத்துக்குள் இருந்து கல்லெறிவது யாருங்கோ அண்ணாத்தை

  • Replies 63
  • Views 9.8k
  • Created
  • Last Reply

....

எதற்க்காக எனது பெயரை

''வன்னி மனிதன்'' என்று இட்டீர்கள்...???

எனது பெயர் ''வன்னி மைந்தன்...''

வன்னியான் என்ற படியால்

வன்னி மனிதன் என்ற கருத்தோடு

போட்டிருந்தால்....

உங்களின் உள் நோக்க

பிரதேச வாதம் இங்கு

பிய்த்து கொண்டு வருகிறது ...

...

மீண்டும் சொல்கிறேன் வீணாக இங்கு

பிரதேச வாதம் வீணாக வேண்டாம்...

என்றும்

அன்புடன

-வன்னி மைந்தன்

அண்ணாத்த என்ன சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கே :roll:

யாருங்க பிரதேசவாதத்த வைக்கிறது "வன்னி மைந்தன்".

மீண்டும் வடிவா பாருங்க யாரெண்டு புரியும். புரியாவிடில் உங்களின் எழுத்துப்பிழைகள் போல் யுனிகோட்டில மாற்றும் போது தவறாக இடைவெளி வந்து விட்டது என்று சொல்லுங்க.. :wink: :oops:

எதுங்கோ விமர்சனத்த வரவேற்கிற பக்குவம் :roll: :roll:

மலையகத் தமிழ்மக்களின் பிரைச்சினையில் என்றாவது உணர்வு பூர்வமாக நாம் குரல் கொடுத்திருக்கின்றோமா?? ஆனால் எமது பிரைச்சினையில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று பேராசைப்படுகின்றோம். எமது போராட்டத்தில் கூட மலையக மக்களின் நலன் சார்ந்து ஏதாவது செய்திருக்கின்றோமா?? வெறும் கருவேப்பிலை போல் எமது தேவைகளுக்கு மட்டும் அவர்களைப் பாவிக்க நினைப்பதில் நியாயமில்லை.

சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மின்னல் நிகழ்வொன்றில் மலையகத் தமிழர்களின் பிரச்சினை பற்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்நந்தவர் கருத்துக்கூற முற்பட்டபோது அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த இ.தொ.கா உறுப்பினர், மலையகத்தவர் பற்றிப் பேசுவதற்கு மலையக மக்களின் தனிப்பெரும் சக்தியாக இ.தொ.கா இருக்கிறது. அவர்கள் பிரச்சினைபற்றிப் பேசுவதற்கு உங்களிற்கு எவ்வுரிமையும் இல்லை அருகதையும் இல்லை என்று கூறியிருந்தார். அவ்வேளையில் அவர் ஓர் பிரதி அமைச்சராக அரசில் அங்கம் வகித்தார். :oops:

மீண்டும் தொண்டமானுக்கு வந்தால்... அவர்களது நிலைப்பாடு:

1. தொண்டாவின் மக்களிடம் ஏனைய தமிழ்மக்கள் வைத்திருப்பதைப் போல ஆயுதம் இல்லை. ஆதலால் ஆட்சியாளர்கள் காலைப்பிடிப்பதைவிட அவர்களுக்கு வேறுவழியில்லை. சௌமியமூர்த்தி காலம் முதல் இன்றுவரை ஆட்சியாளர்களுடன் பேரம்பேசிப் பெறக்கூடிய அனைத்தையும் பெற்றுக்கொள்வதே அவர்களின் கொள்கையாக இருந்துவருகிறது.

2. எமக்கு எமது பிரதேசங்களில் வாழமுடியும். ஆனால் சுதந்திரமாகவும் நிம்ம்தியாகவும் வாழ்வதுதான் எங்கள் பிரச்சனை. ஆனால் அவர்களுக்கு? அன்றாடம் வாழ்க்கையே ஒரு பிரச்சனை.

3. அவர்கள் பிரதேசம் சிங்கள ஆட்சியாளர்களால் சூழப்பட்டுள்ள பிரதேசம் அவர்களது குடியை அறுக்கவேண்டுமென்று சிங்களவர்கள் நினைக்கும் பட்சத்தில் அதை ஒரே இரவில் செய்துமுடித்துவிட முடியும். அதிலிருந்து தம்மைக்காத்துக்கொள்ளவாவது நாய்வேடம் போடத்தான் வேண்டும். அப்படிப்போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.

#1. பேரம் பேசி என்னத்தப் பெற்றவையள், பெருந்தோட்ட அமைச்சைத்தவிர. அதன்மூலம் தொண்டமானின் குடும்பம் வளர்ந்ததுதான் மிச்சம்.

#2. :roll:

#3. தொண்டமான் சரியான ஓர் மக்கள் தலைவனாக இருந்திருப்பின் மலையக மக்களிற்கு ஓர் விடிவு எப்போதோ ஏற்பட்டிருக்கும். ஆனால் மலையக மக்களின் விடிவினை விடத் தன் குடும்ப நலனே முக்கியம் என தொண்டமான் நினைத்திருந்ததன் காரணமே மலையக மக்களின் இன்றைய நிலைக்குகக் காரணம். மலையக பூகோள அமைப்பு மிகவும் கடினமான சிங்களவர்களைச் சூழ்ந்தது என்பது உண்மைதான். மலையக மக்களின் தனிப்பெரும் அமைப்பு எனத் தம்மைத் தம்பட்டம் அடிக்கும் இ.தொ.க செய்தவை என்ன. மலையகத்தில் என்ன பிரச்சினை என்றாலும் முதலில் இதொக செல்லும் இடம் இந்தியா. இந்திய அரசுத்தலைவர்களை தம் ஆலோசகர்களாகக் கொண்டிருக்கும் இவ்வமைப்பினால் எவ்வாறு தன் சொந்த மக்களின் பிரச்சினையை அணுகக் கூடியவாறு இருக்கும்.

இறுதியாக மலையகத்தில் நடைபெற்ற சம்பள உயர்வுப் போராட்டத்திலே அரசுடன் கைகோர்த்துக் கொண்டு அம்மக்களைக் கைவிட்ட இதொகவின் கபட நோக்கம் யாரும் அறியாததல்ல. பெரும்பான்மையான தொழிற்சங்கங்களைக் கைவசம் வைத்திருந்த இதொக மீண்டும் ஓர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டார்கள் என்று அம்மக்களின் உரிமையைக் கொன்று தம் விசுவாசத்தை அரசிற்கு தெரியப்படுத்தியிருந்தனர். அவ்வுடன்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை அப்பகுதி மக்களின் மனங்களில் இருந்து மிகக் குறுகிய காலத்திலேயே அகற்றியும் விட்டது. அன்றாடம் பிழைப்பு நடத்தி வாழ்க்கையை ஓட்டும் அம் மக்களும் ஏதோ கிடைத்ததே என்று மீண்டும் தங்கள் இயலாமையால் பழைய நரக வாழ்வில் நுளைந்துள்ளனர்.

அம் மக்களின் சம்பளப்பணத்திலே கட்டாயமாக அறவிடப்படும் இதொக விற்கான அங்கத்துவப்பணம் அதன் தலைவர்களால் விழுங்கி ஏப்பம் விட மட்டுமே. வேலைநிறுத்த காலத்தில் கூட அம்மக்களிற்கு கிடைக்க வேண்டிய இழப்பீடுகள் வழங்கப்படாத தட்டிக் கழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் வேறெந்த தொழிற்சங்கங்களையும் காலூன்ற விடாது தன்னை முதன்னிலைப்படுத்தி என்னென்ன செய்து அவற்றை அழிக்கமுடியுமோ அவ்வாறு அழித்து தன் சொந்த மக்களையே சுரண்டி தாங்கள் மட்டும் மாடமாளிகைகள் கட்டி வாழ்கிறார்கள் இதொக தலைவர்கள். அப்பகுதி வாழ் மக்களிடம் அவர்களின் சோகக் கதைகளைக் கேட்கும் போதே கண்ணில் நீர் வரவைக்கும் வகையில் சொந்த மக்களையே அடிமைபோன்று நடத்துகின்றது இதொக. அதில் அவர்கள் பேரம் பேசிப் பெறுகிறார்களாம்.

பெருந்தோட்டத் துறை அமைச்சினைத் தொடர்ந்து கைவசம் வைத்திருந்த இதொக அதன் மூலம் தன் மக்களிற்கு செய்தவைதான் என்ன?? இப்படித்தான் ஈபிடிபி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவும் கூறுகிறாராம். மக்களிற்கு சேவை செய்வதாக.

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழ்மக்களின் பிரைச்சினையில் என்றாவது உணர்வு பூர்வமாக நாம் குரல் கொடுத்திருக்கின்றோமா?? ஆனால் எமது பிரைச்சினையில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று பேராசைப்படுகின்றோம். எமது போராட்டத்தில் கூட மலையக மக்களின் நலன் சார்ந்து ஏதாவது செய்திருக்கின்றோமா?? வெறும் கருவேப்பிலை போல் எமது தேவைகளுக்கு மட்டும் அவர்களைப் பாவிக்க நினைப்பதில் நியாயமில்லை.

எம் மக்களே, இலங்கையரசிடம் நீதி பெற முடியாமல் இருக்கின்றபோது, மலையகத் தமிழ்மக்களுக்கு, நீதிக்காக கேள் என்பது சாத்தியமான ஒன்றா? உண்மையில் அது அவர்களை ஏமாற்றும் விதம்!

அவர்களுக்கு அநீதி நடந்ததாக இருக்கின்றது என்றால் சேர்ந்து போராடுவதில் தடையில்லை. ஏற்கனவே கிளிநொச்சி, மன்னார் பகுதிக்கு சிறிமா, 83ம் கலவரத்தில் இரம்பெயர்ந்த மலையகத் தமிழ்மக்கள் போராட்டத்தின் பங்களியாகத் தான் இருக்கின்றார்கள்.

நிச்சயமாக, தமிழீழ மண்கிடைத்தால், அவர்களுக்கும் வதிவதற்கு தலைவர் ஆவன செய்வார் என நம்பலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையக, மேலக, தமிழக, உலக தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஒரு தனித் தமிழ் நாடு வேண்டும்! அதற்காகத்தானே தமிழீழம்! தமிழீழம் பலமாக இருக்கும்போது, மலையக, மேலக, தமிழக, உலக தமிழர்கள் பயமின்றி வாழ முடியும்! இல்லயா? இதனாலேயே, உலகின் எல்லாத் தமிழர்களும் (எட்டப்பர்கள் உட்பட) தனித் தமிழீழம் நிறுவ ஒத்துழைக்க வேண்டும்!

உண்மையில் இவ்விடயத்தில் வன்னிமைந்தனைப் பாராட்டத் தான் வேண்டும். விமர்சனத்தை வரவேற்கின்ற பக்குவம் அவருக்கிருக்கின்றது!

நண்பரே உங்கள் கருத்தைக் கேட்டு நம் எல்லோரையும் விட வன்னி மைந்தன் தான் அதிகம் சிரித்திருப்பார்.

மலையகத் தமிழ்மக்களின் பிரைச்சினையில் என்றாவது உணர்வு பூர்வமாக நாம் குரல் கொடுத்திருக்கின்றோமா?? ஆனால் எமது பிரைச்சினையில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று பேராசைப்படுகின்றோம். எமது போராட்டத்தில் கூட மலையக மக்களின் நலன் சார்ந்து ஏதாவது செய்திருக்கின்றோமா?? வெறும் கருவேப்பிலை போல் எமது தேவைகளுக்கு மட்டும் அவர்களைப் பாவிக்க நினைப்பதில் நியாயமில்லை.

இது தான் உண்மையில் யதார்த்தமாக உள்ளது. ஆனால் இதனை நியாயப் படுத்தும் வகையில், எமக்கென்றொரு நாடு கிடைத்த பின் நாம் எல்லாம் அவர்களுக்கு செய்வோம் என்ற மாதிரி கருத்து வைக்கப் படுகிறது. பிறகேன் அவர்களையும் அவர்களது தலைமையையும் வம்புக்கிழுக்கிறீர்கள்? அவர்களுக்கென்றொரு ஒரு ஆட்சி கிடைத்த பின் அவர்களும் எல்லாம் எமக்கும் செய்வார்கள் என்று விட வேண்டியது தானே.

உண்மையில் எமக்கு அவர்களில் அக்கறை என்றால் அதற்கான சமிக்கைகள் திட்டங்கள் இப்பொழுதே காட்டப் பட வேண்டும். அதை நம்பி தான் அவர்கள் எம்மோடு கை கோர்ப்பார்களே தவிர உறுதி மொழிகளை நம்பி அல்ல.

இது தான் உண்மையில் யதார்த்தமாக உள்ளது. ஆனால் இதனை நியாயப் படுத்தும் வகையில், எமக்கென்றொரு நாடு கிடைத்த பின் நாம் எல்லாம் அவர்களுக்கு செய்வோம் என்ற மாதிரி கருத்து வைக்கப் படுகிறது. பிறகேன் அவர்களையும் அவர்களது தலைமையையும் வம்புக்கிழுக்கிறீர்கள்? அவர்களுக்கென்றொரு ஒரு ஆட்சி கிடைத்த பின் அவர்களும் எல்லாம் எமக்கும் செய்வார்கள் என்று விட வேண்டியது தானே.

உண்மையில் எமக்கு அவர்களில் அக்கறை என்றால் அதற்கான சமிக்கைகள் திட்டங்கள் இப்பொழுதே காட்டப் பட வேண்டும். அதை நம்பி தான் அவர்கள் எம்மோடு கை கோர்ப்பார்களே தவிர உறுதி மொழிகளை நம்பி அல்ல.

ம்ம்ம்..... விளங்குது...! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களின் தேவைகளை மலையக தலைவர்கள் மாத்திரமே நன்கு அறிவார்கள். அந்தவகையில் தொண்டமானின் முடிவு சரியானதே

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே உங்கள் கருத்தைக் கேட்டு நம் எல்லோரையும் விட வன்னி மைந்தன் தான் அதிகம் சிரித்திருப்பார்.

தன் கட்டுரை மீதான விமர்சனத்தை வைக்குமாறு கேட்ட பாங்கினைத் தான் சொன்னேன்.சிரித்தது பரவாயில்லை! ஆனால், வெறுமனே அவரை எழுத விடாமல் கேலி மட்டுமே செய்த் தெரிந்தவர்களை நினைத்து கட்டாயம் அவர் அழுதிருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த தீர்மானங்களில் தொண்டைமான் அரசாங்கத்தோடு இனைந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று குறிபிட்டிருப்பது சிந்திக்கத்தக்க ஒரு விடயம். அத்துடன் வருகிற நாட்களில் ராஜபக்ஸ அமெரிக்க விஜயமும் பல அரசியல் தலைவர்களுடன் சந்திப்பும் குரித்து கண்ணோக்குகின்ற வேளையில், இந்த அரசியல் நாடகங்கள் ராஜபக்ஸவின் திருவிளையாட்டுக்களே என்று காண தோன்றுகின்றது.

அந்த நிலையில், தொண்டமானுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டுமாயின் அத்தீர்மானங்களை சிறிது பின்போட்டிருக்களாம் அல்லவா?

அப்படி ஒரு சிந்தனையோ, கடமையோ தோன்றியிருக்கவிட்டால் அது அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையையும் தழிழருக்கான அவரின் கரிசனையற்ற தன்மையையுமே வெளி காட்டுகின்றது.

மலையக மக்களின் தேவைகளை மலையக தலைவர்கள் மாத்திரமே நன்கு அறிவார்கள். அந்தவகையில் தொண்டமானின் முடிவு சரியானதே

ஓம்..ஓம...இவர் ஏன் இப்படி யால்ற அடிக்கிறார் எண்டு எனக்கு விளங்கல துயவன் கொடுத்த பதில் சரியானதே...

அவையுன்ர பல வரலாற்ற பிரட்டி பார்த்தால் எல்லாம் நாறும்...

  • கருத்துக்கள உறவுகள்

"நிச்சயமாக, தமிழீழ மண்கிடைத்தால், அவர்களுக்கும் வதிவதற்கு தலைவர் ஆவன செய்வார் என நம்பலாம்"

தலைவர் செய்வார்! மலையக மக்களை சகோதராக ஏற்க எம்மில் எத்தனை பேர்கள் தயராக உள்ளேர்ம்

"நிச்சயமாக, தமிழீழ மண்கிடைத்தால், அவர்களுக்கும் வதிவதற்கு தலைவர் ஆவன செய்வார் என நம்பலாம்"

தலைவர் செய்வார்! மலையக மக்களை சகோதராக ஏற்க எம்மில் எத்தனை பேர்கள் தயராக உள்ளேர்ம்

ஏன் சிங்களவனோட நட்பு பாராட்ட தெரிந்த உங்களுக்கு தமிழர்களை மதிக்க வராது எண்ட சந்தேகம்...???

உழைப்பில் மலையக தமிழர் ஒண்றும் சளைத்தவர்கள் அல்ல... அவர்களுக்கான வாய்ப்புக்களும் வசதிகளும் கிடைக்கும் பட்ச்சத்தில் தாங்களும் உயர்ந்து மற்றவரையும் உயர்த்தும் குணம் கொண்ட மக்கள்... ஆனால் தோட்டங்களில் வேலை செய்து முதலாளிகளை மட்டும் உயர்த்தும் சாபமான நிலையில் வாழ்கிறார்கள்...!

இதைவிட தாழ்மையான நிலை ஈழத்தில் அவர்களுக்கு இருக்கிறது எண்று நான் நினைக்கவில்லை...! கிளிநொச்சியில் திருவையாறு, 55ம் கட்டை , பாரதிபுரம், வேறு இடங்களில் கூட மலையகத்தில் இருந்து வந்து குடியேறிய மக்கள் இருக்கிறார்கள்... அவர்கள் என்ன கஸ்ரப்பட்டு ஓடியா போய் விட்டார்கள்..??

  • கருத்துக்கள உறவுகள்

"கிளிநொச்சியில் திருவையாறு, 55ம் கட்டை , பாரதிபுரம், வேறு இடங்களில் கூட மலையகத்தில் இருந்து வந்து குடியேறிய மக்கள் இருக்கிறார்கள்... அவர்கள் என்ன கஸ்ரப்பட்டு ஓடியா போய் விட்டார்கள்..?"

ஆனாலும் இன்றும் தோட்டக்காட்டான் என்ற பெயரில்தான் அழைக்கின்றோம்.

மலையகக் கட்சிகளின் இரட்டை வேடம் - (அஜாதசத்ரு

தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத யுத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு பட்டினிச் சாவையும் மனிதப் பேரழிவையும் அங்குள்ள மக்கள் எதிர் கொண்டுள்ள நிலையில் தென்னிலங்கையில் குறிப்பாக தலைநகர் கொழும்பில் கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், கப்பம் பெறுவது போன்ற பல்வேறு சம்பவங்கள் மிக மோசமாக அதிகரித்துள்ள வேளையிலேயே அவசர காலச் சட்டம் மாதம் தோறும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களை முப்படையினராலும் எந்தவொரு காரணமுமின்றி கைது செய்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அல்லது தமிழ் மக்களை அழித்தொழித்து விட்டு சட்டத்திற்கு முன் காரணம் சொல்வதற்கு வழி வகுக்கும் அவசரகாலச் சட்டம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசர காலச் சட்டப் பிரேரணையை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரிப்பது வழமையான ஒரு விடயம். ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதில் பங்காளராக இணைந்து கொண்டுள்ளமை மலையகத் தமிழர்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் செய்யும் மிகப் பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

அவசரகாலச் சட்டப் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வேளையில் சபையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோர் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தனர்.

அவசர காலச் சட்டப் பிரேரணை கொண்டு வரும் வேளையில் சபையிலிருந்தால் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தினால் மலையக மக்கள் முன்னணியின் இரு பிரதி நிதிகளும் அவ்வேளையில் சபையிலிருக்காமல் நழுவல் போக்கொன்றைக் கடைப்பிடித்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் அமைச்சராகவும் அவரது கட்சியின் முக்கியஸ்தரான இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராகவும் பதவியேற்றுள்ள நிலையில் கட்சியின் முக்கிய பிரமுகரும் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான கே.சிவகாந்தன் ஆயுத பாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு இருவாரங்களாகியுள்ள நிலையில் அவர் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

சந்திரசேகரனும் இராதாகிருஷ்ணனும் அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் நாட்டின் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்னரே பாதுகாப்பு கெடுபிடிகளும் சோதனைச் சாவடிகளும் மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ள தலைநகர் கொழும்பின் மெசஞ்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வைத்து பட்டப்பகல் வேளையில் சிவகாந்தன் ஆயுத பாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

சிவகாந்தன் கடத்திச் செல்லப்பட்டு இரு வாரங்கள் கடந்த நிலையிலும் அவர் பற்றிய எந்தவொரு தகவலையும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரால் பெற முடியவில்லையென்றே தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தின் இரு பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பன அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள நிலையில் சிவகாந்தனின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் அவரின் விடுதலைக்கு உதவ முடியுமென்று பல்வேறு தரப்பினராலும் சுட்டிக் காட்டியுள்ள போதிலும் இரு கட்சிகளின் தலைமைகளும் அது தொடர்பான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லையென்றே தெரிய வருகிறது.

தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே அரசுடன் இணைந்துள்ளதாக இரு கட்சிகளின் தலைமைகளும் கூறிக் கொள்ளும் அதேவேளை, தமது மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கெடுபிடிகள், தொழில் வாய்ப்பின்மை, சம்பள அதிகரிப்பு மறுப்பு என்பன தொடர்பாக எந்தவொரு தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்கவுமில்லை. அரச உயர் மட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை என்றே குற்றஞ் சாட்டப்படுகிறது.

மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தலைநகர் கொழும்புக்கு தொழில் வாய்ப்புகளுக்காக வந்திருக்கும் பெருமளவு இளைஞர், யுவதிகள் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடி, சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது பெருமளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாள அட்டை மற்றும் உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இல்லாத மலையகப் பெருந்தோட்டப் பகுதி இளைஞர், யுவதிகள் பலர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பாகவோ அல்லது சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது அப்பாவி இளைஞர், யுவதிகள் கைது செய்யப்படுவதை தடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலோ ஈடுபடாது அமைச்சுக் காரியாலயங்களில் காலம் கடத்தும் இந்த இரு அரசியல் கட்சித் தலைமைகளின் போக்கானது அரச படையினரின் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.

இதனை விட வடக்கு, கிழக்கிலோ அல்லது தலைநகர் கொழும்பிலோ அரச படையினருக்கு எதிராக ஏதாவதொரு பெரியளவிலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றால் சிங்களப் பிரதேசங்களை அண்டி வாழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காடையர்களினால் தாக்கப்பட்டு பணம், பொருள், அபகரிக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் மிக மோசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை, இரத்தினபுரி, காவத்தை, பண்டாரவளை, பதுளை, அவிசாவளை, புவக்பிட்டிய போன்ற பகுதிகளிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குண்டர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் முன்வராத நிலையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ள மலையகத்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் கண்ணை மூடிக் கொண்டிருப்பது தான் கவலைதரும் விடயமாகும்.

இதெல்லாவற்றுக்குமப்பால் மிகவும் மோசமாக அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடைப்பிடித்து வரும் போக்கானது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

மலையகத்தின் ஏனைய தொழிற்சங்க அமைப்புகள் யாவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு சாக்குப் போக்கான காரணங்களைக் கூறி நழுவல் போக்கொன்றை கடைப்பிடித்து வருகின்றது.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களிலும் தன்னிச்சையாக செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் உரிய வேதனத்தை பெற்றுக் கொடுக்கவில்லையென்ற பல்வேறு தொழிற்சங்கங்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இம்முறையும் அதேநிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவிடயங்களாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பல்வேறு இரகசிய சந்திப்புகளை நடத்திய பின்னரே சம்பள உயர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதாக பல்வேறு தொழிற்சங்கங்களினாலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களை கைது செய்து தடுத்துவைப்பதற்கும், கடத்துவதற்கும், கப்பம் பெறுவதற்கும் அழித்தொழிப்பதற்கும் வழிவகுக்கும் அவசரகாலச் சட்டத்தை சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து ஆதரிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுபக்கம் பொருளாதார வறுமைக்குள் மிகவும் மோசமாக தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி கபட நாடகமாடி வருவது மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகும் என்பதை காலம் ஒரு நாள் உணர்த்தும்.

தமிழ் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளான ஜனதாவிமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய போன்ற சக்திகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டதன் மூலம் குறைந்த பட்சம் தமிழ் மக்களுக்கு எதிரான பாதுகாப்பு கெடுபிடிகளையாவது தளர்த்த முடியுமா?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பன அரசுடன் இணைந்து கொண்டதுக்குப் பின்னர் மிகவும் மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் பலர் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தினமும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்படுகின்றனர். அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள இரு கட்சிகளின் தலைமைகளும் இதனைத் தடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வருவார்களா?

சுயநலன்களுக்காக அரசுக்கு ஆதரவு கொடுப்பதற்கு அப்பால் சமாதான சக்திகளுடன் இணைந்து சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்வருவதன் மூலமே அரச தரப்பின் அடக்கு முறைகளை கட்டுப்படுத்த முடியும்.

http://www.thinakkural.com/news/2006/9/10/...s_page10450.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்..ஓம...இவர் ஏன் இப்படி யால்ற அடிக்கிறார் எண்டு எனக்கு விளங்கல துயவன் கொடுத்த பதில் சரியானதே...

அவையுன்ர பல வரலாற்ற பிரட்டி பார்த்தால் எல்லாம் நாறும்...

உமக்கு எதிராக வைத்தால் யால்ரா? யால்ரா கூடத் தமிழில்லையாம். அவர் எழுதி 100 கருத்துக் கூட எட்டவில்லை. அதுக்குள் வரலாறாம். உமக்கே நாறுது என்றால் யோசிக்கத்தான் வெணும்.

அவரின் கட்டுரையில் ஆதராமின்றி இருப்பதைத் தான், கண்டிக்கின்றோமே தவிர, அவர் கருத்து தேசியத்தைக் கொச்சைப்படுத்தாத போது கண்டிக்க வேண்டிய தேவையில்லை.

ஆமாம். நீர் யாரின் யால்ரா?

ஆனாலும் இன்றும் தோட்டக்காட்டான் என்ற பெயரில்தான் அழைக்கின்றோம்.

ஏன் யாழ்ப்பாணத்துக்குள் இருக்கிற தீவுபகுதி மக்களை தீவார் எண்டும், தென்மராட்ச்சியிலும் கரவெட்டியில் வாழ்பவர்களை குழைக்காட்டார் எண்டும் தான் சொல்பவர்கள்...!

அப்பிடியே பிரித்தானியாவில் எடுத்துக்கொண்டால்.... ஆங்கிலம் பேசும் ஐரீஸ் காறரையே கேவலமாகத்தான் சொல்வார்கள்...

அது முக்கியம் இல்லை... மனிதர்களாக மதிக்கப்படுகிறாகளா என்பதுதான் முக்கியம்.... காலத்தாக் மாற்ற முடியாதது என்பது எதுவும் இல்லை...!

ஏன் யாழ்ப்பாணத்துக்குள் இருக்கிற தீவுபகுதி மக்களை தீவார் எண்டும், தென்மராட்ச்சியிலும் கரவெட்டியில்

ஏன் ப்பா கரவெட்டியை இதுக்குள்ளே கொண்டு வாறிங்கள்

பிறகு மகேஸ்வரிக்கு கோவம் வந்து டன் ஏதும் செய்து போடுவார் :(:lol::lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக நாம் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை, இனியும் செய்வேர்ம் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

மேற்கோள்:

ஏன் யாழ்ப்பாணத்துக்குள் இருக்கிற தீவுபகுதி மக்களை தீவார் எண்டும், தென்மராட்ச்சியிலும் கரவெட்டியில் வாழ்பவர்களை குழைக்காட்டார் எண்டும் தான் சொல்பவர்கள்...!

இப்படி மலையகமக்களா அழைக்கின்றார்கள். ஆனால் நாம் தான் மற்றவர்களை கேவலப்படுத்துவதற்காக இப்படியான குறியீட்டுப் பெயர்களை வைத்து அழைக்கின்றோம்.

மலையகமக்களுக்கு நாங்கள் நன்மை செய்ததைவிட தீமை செய்ததே அதிகம். இவை தெரியாது எதைவேண்டுமானாலும் எழுதுவதா??

குறிப்பாக மலையகமக்களின் வாக்குரிமையைப் பறித்ததில் எம்மவர்களின் பங்கை அறிந்தவர்கள் எத்தனைபேர்.

தயவுசெய்து அவர்களைக் கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலபேர் செய்த தப்புக்களுக்காக நாம் தான் பொறுப்பு என்று சொல்ல முடியாது. வாக்குரிமை பறிக்கத் துணை போனவர்கள் எவரோ, அவர் தான் பொறுப்பெடுக்க முடியும்.

அப்படிப் பார்த்தால், இண்டைக்கு டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துக்கு துணை போகும், அனைத்து செயல்களுக்கும் தமிழ் மக்களா பொறுப்பெடுக்க வேண்டும். அல்லது, அரசாங்கம் அவசங்கத்தின் அவசர காலத்திற்கு, அன்று முதல் இன்று வரை கைதூக்கும், அல்லது எதிர்த்து வாக்களிக்காமல் விடுகின்ற மலையகக் கட்சிகள் செய்யும் துரோகத்தனத்திற்கு மலையக மக்களா பொறுப்புக் கூட முடியும்.

இந்த அவசர காலத்திற்கு எதிராக வாக்களித்து ஒண்டும் ஆகப் போவதில்லை என்று சொல்லுவீர்கள் என்று தெரியும். ஆனால் தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அனைவரும் எதிராக வாக்களித்தால், பார்க்கி;ன்றவர்களுக்கு, ஒரு செய்தி சொல்லப்படும். தமிழ்மக்களுக்கு எதிரானது என்றதால் தான் எதிர்த்து வாக்களிக்கின்றனர் என்று. ஏனென்றால் இதனால் எத்தனையாயிரம் தமிழ்மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு, கொலை செய்யப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

«ôÀ àÂÅý ¾Á¢ú Áì¸Ç¢ý þý¨È ¿¢¨ÄìÌ, «ýÚ º¢í¸Çòмý §º÷óÐ ´ÕÁ¢ò¾ þÄí¨¸Â¢ý Ţξ¨Ä측¸ô §À¡Ã¡Ê §º÷ ¦À¡ý þáÁÉ¡¾ý, «Õ½¡ºÄõ §À¡ý§È¡÷ ¦À¡Úô¦ÀÎì¸ §ÅñÎÁ¡?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.