Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....

Featured Replies

''காயப் பட்ட செஞ்சோலை மாணவிகளை மிரட்டி ருபவாகினி பேட்டி....ஆத்திரத்தில் மக்கள் ...''

அன்மையில் செஞ்சோலை மீதான கொடிய சிங்கள விமானப் படையின்

காட்டு மிரண்டித்தனமான தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும்

பலர் படும் காயம் அடைந்திருந்தார்கள் .

ஈவ் இரக்கமற்று சிங்கள படைகளால் செய்யப்பட்ட இந்த கொலையை கண்டித்து

உலகம் புராவும் வாழும் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர்கள் .

சிங்கள படைகளின் இந்த கொடுரத்தை உலகிற்க்கு வெளிப் படுத்தினார்கள்

தமிழர் தரப்பின் நியாய பாடுகளை கேட்டு வீதியில் இறங்கினார்கள்.

அதில் கொல்லப்பட்டோர் அப்பாவி சிறார்கள் என்பதை உலிகிற்க்கு நிருபித்ததர்கள்

கொதித்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கினார்கள்.

அந்த தாக்குதலில் காயப் பாட்ட சிலர் இலங்கை மருத்துவ மனைகளில்

அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

அப்படி அனுமதிக்கப் பட்டவர்களில் சிலரை மிரட்டி எழுதி கொடுத்து தாங்கள் தந்ததை

அப்படியே மனப் பாடம் செய்து சொல்லும் படி அந்த காயப்பட்டவரின் குரல் ஊடாக

ருபவாகினி செய்தி வெளியிட்டுள்ளது .

இது எதை காட்டுகிறது....????

அந்த ஒளிபட காட்சியை பார்க்கும் போது ஒன்றும் மட்டும் தெட்ட தெழிவாக

புரிகிறது அந்த செவ்வியை வழங்கும் நபர் தனது சுய கருத்தின் அடிப்படையில்

சொல்ல வில்லை என்பதும் யாரோ அருகில் நின்று மிரட்டி எழுதி கொடுத்ததை சொல்லும் படி

சொல்ல வைப்பதையும் உணர முடிகிறது .

இப்படியான இழிவு செயலை புரியும் அந்த அரச ஊடகத்தின்

இழிவு நிலையை கண்டு ஒட்டு மொத்த தமிழினமும் வெட்க்கப் படுகிறது

தமது கைய்யாலகத்தனத்தின் உச்ச வெளிப்பாடே இதுவாகும் .

ஊடக சுதந்திரத்தை காக்க வேண்டிய இவர்கள் தனி நபரை மிரட்டி பணயம் வைத்து

செய்திகளை திரிவு படுத்தி சொல்ல வைப்பதானது தமிழ் மக்கள் மீது

சிங்கள படைகள் செய்யுகின்ற கோர செயலின் உச்ச வெளிப்பாடே இதுவாகும் .

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்ற இவர்களின் செயலானது

கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றே .

திட்டம் இட்டு தாங்கள் தான் செய்தோம் என சிங்கள படைகள் சொல்லியும்

எந்த வித இறுக்கமான அழுத்தம் ஏதும் கொடுக்காமல் உலகம் மௌனம் காப்பது

அவர்களின் இரட்டை வேடத்தை காட்டி நிக்கின்றது .

சிறார் நலனில் அக்கறை கொண்ட நிறுவனங்கள் ஏன் இந்த செயலை காணவில்லை என்பது

கேள்விகனைகளை எழுப்புகிறது .

ஒரு தனி மனித சுதந்திரத்தை பறித்து அவரை பணயமாக வைத்து செய்யப் படும்

இந்த நிலைமகளை ஏன் இந்த நிறுவனங்கள் காணதது போல் பார முகமாய்

இருக்கிறார்கள் என்பது புரியவில்லை .

இந்த செய்திகளை பார்த்த பல மக்கள் கோப அவேசத்தில்

இருப்பதை கண் முன்னால் காண கூடியதாக இருந்தது .

இந்த செயலை அணைத்து தமிழர் ஊடகங்களும் வன்மையாக கண்டிக்க முன் வர வேண்டும்.

இன்று அவர்களுக்கு நாளை எம் உறவுகளுக்கு எனவே

இதற்க்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தார்மிக கடமையாகும் .

இந்த நிறுவனங்களின் இந்த போலி பிரச்சாரங்களை

எந்த மானமுள்ள தமிழனும் எற்றுக் கொள்ள மாட்டான் .

மாறாக கொதித்தெழுந்து இப்படியான ஊடகங்களின் போலி

முகமூடிகளை கிழித்தெறிவார்கள் எனபது தின்னம் .

தங்களது படைகள் செய்த தாக்குதலை நியாயப் படுத்தும் முகமாக

இந்த செயலை அந்த அரச ஊடகம் ஊதியதாக தெரிகிறது .

காயப்ப பட்டு வேதனையால் துடிக்கும் உறவுகளின் உணர்வுகளில்

விளையாடும் இவர்கள் எல்லாம் மனித உரிமை பற்றி பேசுவதும்

சிறார் நலன் பற்றி உரைப்புதும் ஏற்று கொள்ளப் பட முடியாத ஒன்றே .

குறிப்பகாக இராணுவ காட்டுப் பாட்டில் உள்ள இவர்கள் அவர்களின் செய்தியை சொல்லியே

ஆக வேண்டும் இல்லை எனின் அவர்களையும்

புலிச்சாயம் புசி அவர்களை சிறைப் படுத்தி சொலலென்னா கொடுமைகளை

புரிவார்கள் கொலையை கூட புரிவார்கள் .

அந்த அச்சத்தின் காரணமாகவே இவர்கள்

இதை சொல்லி இருக்கிறார்கள் என்பது

அவர்களின் புலன்களின் ஊடு அறிய முடிகிறது .

தமிழர் மீது திட்டம் இடப்பட்டு சிங்கள படையும் அதன் ஊடகங்களும் செய்யும்

இந்த நிலயானது ஒட்டு மொத்த தமிழினத்திற்க்கும் விடப்பட்ட பாரிய

அச்சுறுத்தல் எனபது இதன் ஊடாக தெழிவகிறது .

இதன் செய்திகளை இந்த வெப்பில் பார்க்கலா

http://defence.lk/new.asp?fname=20060902_10

- வன்னி மைந்தன்

இது உண்மையிலேயே.. அபத்தம்..

அந்தப் பிள்ளையோ..தாயோ..சுயஅhக எதையம் சொல்லவில்லையென்பது அப்படியே.. தெரிகிறது.

அந்தப்பிள்ளை.. எதையோ.. பார்த்தே படிக்கிறது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இவர்களுடைய இந்த சண்டாளத்தனத்திற்கான விளக்கம்...

..இந்த அரக்கத்தனத்திற்கான பதில்..

வருகின்ற மாவீரர் நாளுக்கு முன்பதாக உணர்த்துவிக்கப்படலாமென என்னுள்ளுணர்வு சொல்கிறது.

ஆம்

நானும்

இந்த செய்தியை தற்போது பார்த்தேன்

தாங்கள்

கூறிப்பிட்டது போல

அந்த பிள்ளை மற்றும் தாய்

தமது சுய hPதியாக

சொல்டலவில்லை என்பது

தான் உண்மை...

இது

அப்பட்டமான மனித உரிமை மீறும் செயல்

இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த...ஐசிஆர்சியை பாராட்டாமல் இருக்கவே கூடாது...???! :roll: :idea:

  • தொடங்கியவர்

மேற்க்கோள்....

தற்ப்போது

ஈழவன் இந்த

செய்தியை

முதல் வெளியிட்டதாக

குறி உள்ளார்

எனவே

நிர்வாகப் பகுதி

இதை பார்வையிட்டு

தங்கள் முடிவக்கு அமைய ஏதும்

செய்யலாம் என்பதை தெரிவத்து

கொள்ளும்

அதே நேரம்

இந்த செய்தியினை

இன்று காலையெ நான் பார்த்தேன்..

அது நிற்க்க சில வேளைகளிவ் நானும் செய்திகளை எழுதி

முடித்து இங்கு போடும் போது அதையொத்த

செய்திகள் பரசுரமகுவதை

தவிர்க்

முடியாத உன்றாக உள்ளது

எனி வாருங்காலங்களில்

அதை கவனத்தில் எடுக்கிறேன்...

ஈழவன்

நன்றி உடன அறியத் தந்ததிற்கு....

- வன்னி மைந்தன் -

கட்டுரை எழுதி விட்டு பாடமாக்கி பயிற்சி செய்வதுபோல் இருக்கிறது. பாவம் சிறுமி மிகவும் அச்சத்தில் இருப்பது போல் தென்படுகிறாள்.

உண்மையிலே.. நாங்கள் யாரும் அவர்களை தப்ப சொல்லமுடியாது...

பெண்பிள்ளை வேறு என்ன செய்ய முடியும்.

பாவிகள் துன்புறுத்தி வாசிக்கவைத்திருக்கிறார்கள்

இங்கே

20060903_01.jpg

இவர்களது பேட்டி

எடுக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து

இவர்களது நடை முறை இருப்பினும்

போர் நடை பெறும் சூழலில் வாழும் மக்கள்

போர் ஒன்றிலிருந்து

தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான

பயிற்சிகளைப் பெறுவதை

தவறென எவருமே கூற முடியாது.

மேலத்தேய நாடுகளில் கூட போர் காலத்தில்

மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும்

அயலவர்களுக்கு உதவவும் பயிற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

பல நாடுகளில் 18 வயதுக்கு பின்னர்

கட்டாய இராணுவ பயிற்சி பெறும் சட்டம் உண்டு.

இந்த நியதி சிறீலங்கா அரசுக்கு ஒப்பில்லாத ஒன்றாக இருக்கலாம்.

இலங்கையில் இரு தனி அரசுகள் இயங்குகின்றன

என்பதை சுனாமி அனர்த்த காலத்திலேயே உலகம் ஏற்றுக் கொண்டது.

வேவ்வேறு இராணுவம் : போலீஸ் : நீதிமன்றம் : அரசுக் கொள்கைகள் ?

அப்படி பார்க்கையில் ஒரு பகுதியினரின்

சட்ட அமுலாக்கம் இப்படியானதாய் இருக்கலாம் என நினைக்கிறேன்.

சிங்களப் பகுதியிலிருந்து இது தொடர்பான ஓர் அறிக்கை :-

_41433657_wounded_203.jpg

"The Massacre of innocent School girls Sri-Lanka"

அஜீவன் நீங்கள் 2 வேறு விடையங்களை குளம்பியிருக்கிறியள் போலுள்ளது.

அந்த பாடசாலை சிறுமிகள் பங்குபற்றியது தமிழீழ கல்வித்துறை பாடத்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட யுத்த மற்றும் அனர்த்த காலத்தில் எவ்வாறு பொறுப்போடு பயனுள்ள வகையில் நடத்து கொள்வது என்ற பட்டறை. இது சிறீலங்கா கல்வி திட்டத்தில் இல்லை. அதற்காக அது ஆயுதப்பயிற்சி ஆகிவிடாது. அவர்களிற்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது ஒரு (இயற்கையோ செயற்கையோ) அனர்த்த காலத்தில் எவ்வாறு முதலுதவி செய்வது எவ்வாறு நிலமைகளை சுதாகரித்து சுற்றியுள்ள குளப்பத்திலிருக்கும் மக்களை பாதுகாக்க செய்யக்கூடிய அடிப்படை தற்பாதுகாப்பு நகர்வுகள் பற்றியது. அதாவது விமானத்தாக்குதலோ எறிகணை தாக்குதலில் இருந்தோ எவ்வாறு பாதுகாப்பை தேடுவது ஒதுங்குமாறு மக்களை வேண்டிக் கொள்வது அதை மேற்பார்வை செய்வது அறிவுறுத்துவது போன்ற சமூக நிலை தலமைத்துவ பண்புகளை கற்பிப்பது தான் நோக்கம். இதை நீங்கள் கட்டாய இராணுவப்பயிற்சியோடு குளப்புவது மகாதவறு.

உங்களிடம் இருக்கும் தொடர்புகளை வைத்து உண்மையில் அந்த பட்டறையின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். பொறுப்பாக கருத்தெழுதும் உங்களிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.

உங்கள் கருத்து சரியானதே!

நான் கட்டாய இராணுவ பயிற்சியோடு

இதை ஒப்பிடவில்லை.

உலகின் பல நாடுகளில்

18 வயதிற்கு பின்னர் கட்டாய இராணுவ பயிற்சி

நடைபெறும் போது

குழந்தைகளை இராணுவ பயிற்சிக்காக கட்டாயப்படுத்துகின்றனர்

எனும் பரப்புரை

சிறீலங்கா அரச தரப்பு மூலம்

சிங்கள ஊடகங்களில் முன் வைக்கப்படுகிறது.

அதை மனதில் கொண்டே

"போர் நடை பெறும் ஒரு சூழலில் வாழும் மக்கள்

போர் ஒன்றிலிருந்து

தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான

பயிற்சிகளைப் பெறுவதை

தவறென எவருமே கூற முடியாது."

என எழுதினேன் குறுக்ஸ்.

தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சி என்பது

தற்காப்பு என்பதே என நினைக்கிறேன்.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!

நன்றி

இந்தப் பிள்ளைகளை சிங்கள தேசத்துக்கு மேலதிக சிகிச்சைக்கு செஞ்சிலுவைச் சங்கம் கொண்டுபோக முற்படுகையில், உண்மையிலேயே இவர்கள் ஆயுதப் பயிற்சிக்குத்தான் சென்றவர்கள் என்றால் விடுதப்புலிகள் விட்டிருப்பார்களா????

இந்த சிங்களதேசம் போட்ட பேட்டி நாடகத்தை, சிங்கள ஊடகங்களை விட வேறொன்றும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை!!!

இது உலகிற்குத் தெரிந்த உண்மை!!! கொல்லப்பட்டவர்கள் அணைவரும் அப்பாவி மாணவிகள்!!!!

சிங்கள தேசம், ஒவ்வொரு படுகொலைக்கும் பின்னுக்கும் ஆடிய நாடகங்கள் உலகறிந்தவை!!!! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!!!! இந்தப் பேட்டி எதிர்பார்த்த ஒன்றுதான்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பேசுபவர்கள் நேரடியாகக் கமராவைப் பார்த்துப் பேசாமல் இருப்பதும், அவர்களின் கண்கள், அசைவதையும் வைத்துப் பார்க்கின்றபோது, முன்னுக்கு ஏதோ ஒன்றில் எழுதி வைத்ததைப் படிப்பதாக உணர முடியும்.

அதை அந்தச் சிறுமி படுத்திருந்தபடி கதைக்கின்ற குரல் தொனி, பாடப் புத்தகத்தைப் பார்த்து வாசி;ப்பது போலவே உணர முடிகின்றது. குரலில் ஏற்றத் தாழ்வே, இருக்கவில்லை.

திட்டமிட்டு சதி செய்திருக்கின்றார்கள். முன்பு, தயா மாஸ்டர் கொழும்பு வந்து சேர முன்பே, தமது மனிதாபிமானத்தைப் பற்றி, பெரிதாக அறிக்கை விட்ட, சிங்கள அரசு, இக் குழந்தைகளைகளும் புலி என்றால், இப்போதும் மனிதாபிமானத்தைப் பற்றிப் பேச வில்லையே!

ஆக, தங்களின் சதி வேலை அரங்கேற்றும் வரை அமைதியாக இருந்து, செய்திருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் பல்வேறு பாகங்களில் பலவந்தமாக கடத்தப்பட்டவர்களினால் வெளியிடும் பேட்டிகள், அறிக்கைகள் கடத்தியவர்களின் சார்பாகவே இருக்கும், இருந்திருக்கின்றன என்பதை அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். கைது, கொலை மற்றும் மிரட்டல்களுக்கு அஞ்சியே இவர்கள் கடத்தியவர்களின் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகளை வாசிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதே பயங்கரவாத முறையையே சொறிலங்காவும் பின்பற்றுகிறதென்பதை ஏன் இந்த மனித உரிமைக் குழுக்கள் இன்னும் கண்டு கொள்ளவில்லை!

இந்த ICRC இவர்களைப் அவரவர் குடும்பத்துடன் சேர்க்க ஏதாவது முயற்சி எடுக்கிறதா? யாருக்காவது தெரியுமா?

சிரிப்பாக இருக்கிறது....

ஐ.சி.ஆர்.சி அரசாங்கத்தின்.. அசௌகரியங்களுக்காக..

அட்ஜெஸ்மென்ட் செய்துகொடுக்கிறது..

இவர்களே.. இந்த சடையல் நாடகத்திற்கு பாத்திரவாளிகள்.

உடலால் காயப்பட்ட குழந்தைகளை மனஉளைச்சல் தரக்கூடிய இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்கள்.

உண்மையிலே.. மனிதநேயம்..மக்களில் மேல் அக்கறை கொண்டவர்களானால் இதற்கு அனுமதித்திருக்ககூடாது...

இல்லை கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

ஒன்றுமேயில்லை எனும்போது தெரிகிறது.. எல்லாரும் பெரும்பான்மைக்கு அராஜகத்திற்குமே துணை போகின்றனர் என்பது.

பாவம் இந்த பிள்ளை மிரட்சீல என்ன சொல்லுறன் எண்டே தெரியாமல் தடுமாற வைச்சிருக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.