Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபி நாடகம் முடிவுக்கு வந்துள்ளதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோபி நாடகம் முடிவுக்கு வந்துள்ளதா?

முத்துக்குமார்

ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட இருந்த நிலையில் ஜெயக்குமாரியின் கைதுடன் கோபி நாடகம் மேடையேற்றப்பட்டது. ஜெயக்குமாரி வீட்டிலிருந்து கோபி தப்பி ஓடினார் எனக் கூறப்பட்டது. சுற்றிவர அவ்வளவு படையினர் நிற்கும்போது தனி ஒரு நபர் எவ்வாறு தப்பி ஓட முடியும். வீட்டிற்கு வெளியே பெரும் வெட்டைவெளியான இடம் இருந்த போது அவரைச் சுட்டிருக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தபோது படையினரால் சரியான பதிலைக் கூறமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே அவ்வாறான கேள்வியைக் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்காக ஆண்கள் பெண்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டவர்கள்வரை கைது செய்யப்பட்டனர். இதன் உண்மை நிலையை ஆய்வு செய்யச் சென்ற ருக்கி பெர்ணாண்டோவும் அருட்தந்தை பிரவீன் மகேசனும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் கைதுடன் உண்மை நிலை பற்றிய சுயாதீனமான ஆய்வும் இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து உண்மை நிலை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஒருவருக்கும் துணிவு வரவில்லை. படையினர் தருகின்ற அறிக்கைகள் மட்டும் தகவல்களாக வெளிவந்தன.

ஊடகவியலாளர்கள் சென்று பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் எதுவும் வழங்கப்படவில்லை. இறுதியாக நெடுங்கேணிப் பிரதேசத்தில் கோபி உட்பட மூவர் சுடப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்காது தானே அனுராதபுரத்தில் அடக்கம் செய்ததாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இங்கும் கூட உண்மையாக துப்பாக்கிச்சூடு நடந்ததா? உடல்கள் அடக்கம் செய்யப்பட்டனவா? என்பதற்கு சுயாதீனமாக சாட்சிகள் இல்லை.

பெண்கள், சிறுமிகள் உட்பட 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூட ஊடகச் செய்திகள் வந்தன. துரதிஸ்டவசமாக இதிலுள்ள உரிமை விவகாரம் தொடர்பாகக் கூட குரல்கள் இலங்கையிலோ சர்வதேச மட்டத்திலோ பெரியளவிற்கு கேட்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் புனர்வாழ்வு பெற்றவர்கள் என்பது தான் இங்கு மிகப்பெரிய சோகம்.

இந்த நாடக மேடையேற்றலை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திடமிருந்தே இலங்கை கற்றிருக்கலாம். ஈராக்கிலும், லிபியாவிலும் பொய்யான மேடையேற்றல் ஒன்றினை மேற்கொண்டுதான் அழிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. அதேபோன்றே இலங்கையிலும் மேடையேற்ற அரசாங்கம் முயல்கின்றது.

இந்த மேடையேற்றலும் அதனைத் தொடர்ந்த படையினரின் கெடுபிடிகளும் தமிழ் சிவில் வெளியினை வெகுவாக சுருங்கச் செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ் மக்களிடமிருந்து போராட்டங்கள் எழும்பியிருக்க வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பெரிய அக்கறை காட்டாததினால் போராட்டங்கள் எழவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் ஜெயக்குமாரி கைது தொடர்பாக போராட்டம் நடாத்தியமையினால் கூட்டமைப்பினர் மன்னாரில் ஒரு போராட்டத்தை நடாத்தினர். அதன் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் எதுவும் நடத்தாததினால் கூட்டமைப்பினரும் நடாத்தவில்லை.

அரசாங்கம் கோபி நாடகத்தை மேடையேற்றியமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் முதலாவது ஜெனிவாவிலிருந்து வரும் அழுத்தத்தினைக் குறைப்பதாகும். புலிகள் மீண்டும் ஒருங்கிணைகின்றனர். இதனால் நாம் பயங்கரவாதிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்கும் போது மனித உரிமை மீறல்கள் சில இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்ற தோற்றத்தை அரசாங்கம் கொடுக்கப் பார்க்கின்றது. எப்படியாவது மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் விசாரணைப் பொறிமுறையை தவிர்க்கவே இலங்கை விரும்புகின்றது. அதேநேரம் நம்பத்தகுந்த உள்ளக விசாரணை ஒன்றை நடாத்தவும் அது தயாராக இல்லை. ஆணையாளரின் விசாரணையை தவிர்க்கவும் வேண்டும், தானும் விசாரணை செய்ய முடியாது. நல்லிணக்கம் தொடர்பான அழுத்தத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முகம் கொடுப்பதற்கு இதற்கு கிடைத்த தெரிவு மீண்டும் புலிக்கதையை அரங்கேற்றுவது தான்.

இரண்டாவது டயஸ்பொறாவின் செயற்பாட்டை கட்டுக்குள் வைத்திருத்தலாகும். டயஸ்பொறாவின் செயற்பாடு அரசாங்கத்திற்கு பலவித நெருக்கடிகளைக் கொடுக்கிறது. பாரிய வலையமைப்பு அதற்கு இருப்பதனால் அது ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான பொதுக்கருத்தை சர்வதேச மட்டத்தில் உருவாக்கின்றது. அடுத்தது மேற்குலகம் டயஸ்பொறாவினை பயன்படுத்தித்தான் அரசாங்கத்தின் மீது செல்வாக்கினை பிரயோகிக்கின்றது. கூட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கிற்கு கீழ் இருக்கின்றதே ஒழிய மேற்குலகத்தின் செல்வாக்கின் கீழ் இருக்கின்றது எனக் கூற முடியாது. இந்தியா கூட்டமைப்பைப் பயன்படுத்துவது போல மேற்குலகம் டயஸ்பொறா அமைப்புக்களை பயன்படுத்துகின்றது.

இந்தப் பயன்படுத்துகை இந்தியாவிற்கும் சில நெருக்கடிகளைக் கொடுக்கின்றது. இந்தியா சர்வதேச மட்ட விசாரணையை ஒருபோதும் விரும்பவில்லை. தானும் மாட்டுப்பட வேண்டி வரும் என்பது ஒரு காரணம். இதை விட தன்னை மீறி மேற்குலகம் இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதையும் இந்தியா விரும்புவதில்லை. அத்துடன் டயஸ்பொறாவின் இருப்பு தனது எடுபிடியான கூட்டமைப்பினை பலவீனப்படுத்தி விடும் என்ற அச்சமும் அதற்கு உண்டு.

டயஸ்பொறாவினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அதன் மீது தடைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டில் புலிக்கதையைக் கட்டியெழுப்பாமல் டயஸ்பொறாத் தடைக்கு நியாயத்தை தேட முடியாது.

மூன்றாவது தாயகத்தில் மீண்டும் இராணுவ நிர்வாகத்தை பலப்படுத்துவதாகும். அரசாங்கம் அரசியல் தீர்விற்கு தயாரில்லாத நிலையில் தமிழ் மக்களை நம்பத் தயாரில்லை. தமிழ்த் தேசியம் ஆழ வேரூன்றி உள்ளமையினால் அபிவிருத்தி மாயைகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் பெரியளவிற்கு எடுபடவில்லை. இந்நிலையில் இராணுவ இறுக்கத்தை குறைக்க அரசாங்கம் அஞ்சுகின்றது. ஜனநாயக சூழல் அதிகரிக்க அதிகரிக்க தமிழர் தாயகத்தின் மீதான அரசாங்கத்தின் பிடியும் கொஞ்சம் கொஞ்சமாக தளரத் தொடங்கும்.

சிங்கள நண்பன் ஒருவன் கூறினான். 'அரசாங்கம் பந்தினை தண்ணீருக்குள் அமிழ்த்தி வைத்திருப்பது போல தமிழ் மக்களை இராணுவ நிர்வாகத்தின் கீழ் அமிழ்த்தி வைத்திருக்கின்றது. எப்போது கையை எடுக்கின்றதோ அன்றிலிருந்து தமிழ் மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க மாட்டார்கள்.

இங்கு எழும் கேள்வி அரசாங்கம் தனது நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறதா? பெரிய வெற்றி கிடைத்தது எனக் கூற முடியாது. அதனால் தான் கோபி நாடகத்தை தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள். அதேவேளை வெற்றி எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூற முடியாது. புலம்பெயர் மக்களையும் நிலத்தையும் பிரிப்பதில் அவர்கள் ஒரளவு வெற்றி கண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். இந்தப் பிரிப்பு மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்கான சாட்சியங்களை இல்லாமல் செய்யும், புலம்பெயர் மக்களின் உதவியின்றி யுத்தத்தில் அழிவுக்குள்ளான தாயக மக்கள் தமது பொருளாதார சுமைகளை தாங்க முடியாது. அதனால் அரசாங்கத்தில் தங்கிவாழ வேண்டிய நிலை ஏற்படும். புலம்பெயர் நாடுகளிலும் நிலத்துடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் அச்சம் காரணமாக அரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் ஆபத்தும் உள்ளது. இது டயஸ்பொறாவின் செயற்பாட்டு வெளியையும் சுருங்கச் செய்யும். டயஸ்பொறாவின் போராட்டங்கள் பரந்த வெகுஜனங்களின் போராட்டங்களாக இல்லாமல் சிறிய போராட்டங்களாக சுருங்கவும் செய்யலாம். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு நிலம்-புலம்-தமிழகம் என்பவற்றின் ஒருங்கிணைத்த செயற்பாடு தேவை. அதிலும் தடங்கல்கள் வரலாம்.

டயஸ்பொறாவின் தடையினை மேற்குலகம் தனக்கு வழங்கப்பட்ட அழுத்தமாகவே பார்க்கும். இதனால் மேற்குலக இலங்கை முரண்பாடு அதிகரிக்கலாம். டயஸ்பொறாவிலும் இரு பிரிவினர் காணப்படுகின்றனர். ஒரு பிரிவினர் மேற்குலக விசுவாசிகள். அதன் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள். இன்னோர் பிரிவினர் எவரது செல்வாக்கிற்கும் உட்படாது சுயாதீனமாக தமிழ் மக்களது அரசியல் விடுதலையை முன்னிறுத்திச் செயற்படுபவர்கள். ஜெனிவாவில் இவ்விரு பிரிவினரையும் தெளிவாகவே அடையாளம் காண முடிந்தது.

மேற்குலக விசுவாசிகள் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்தபோது, சுயாதீனமாகச் செயற்பட்ட தரப்பினர் அமெரிக்கத் தீர்மானத்திலிருந்த பலவீனங்களை சுட்டிக்காட்டி அத் தீர்மானத்தினை பலப்படுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். சுயாதீனமாக செயற்படுபவர்கள் தடைசெய்யப்படுவதை மேற்குலகும் விரும்பக்கூடும். இந்த சுயாதீனமாகச் செயற்படுபவர்கள் தான் நிலத்திலும், புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலும் இந்தியாவும், மேற்குலகமும் தமிழர்களை வெறும் கருவியாக பயன்படுத்தப்படுவதற்கு பெரும் இடைஞ்சலாக இருக்கின்றனர். நிலத்தில் சுயாதீனமாகச் செயற்படுகின்ற ஒரேயொரு சக்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அது சந்திக்கும் அழுத்தங்களை இலங்கையில் செயற்படும் எந்த அரசியற்கட்சியும் சந்திப்பதில்லை.

இன்று இந்த நாடகம் சரிவராததினால் இந்தியாவும், அரசாங்கமும் இணைந்து தென்னாபிரிக்க அனுசரணை என்ற நாடகத்தை மேடையேற்ற முயற்சிக்கின்றன. நல்லிணக்க முயற்சிகள் இடம் பெறுகின்றது என்பதைக்காட்டி மனித உரிமை ஆணையாளரின் விசாரணையை தவிர்க்கவே இந்த மேடையேற்றம் இடம்பெறுகின்றது. கூட்டமைப்பும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் இந்த நாடகத்தில் பங்கு பற்ற முயல்கின்றது.

குறைந்த பட்சம் டயஸ்பொறா மீதான தடையை நீக்கு, சிறைக்கைதிகளை விடுதலை செய், இராணுவத்தை அகற்று என்கின்ற நிபந்தனைகளைக்கூட முன்வைக்கக் கூட்டமைப்பு தயாரில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=d7838c36-8ea4-4b8b-9089-094218ab569c

"புலம்பெயர் நாடுகளிலும் நிலத்துடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் அச்சம் காரணமாக அரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் ஆபத்தும் உள்ளது. இது டயஸ்பொறாவின் செயற்பாட்டு வெளியையும் சுருங்கச் செய்யும்."

தவறான கணிப்பு.

இது சும்மா இருந்த பலரையும் திருப்பி களத்திற்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"புலம்பெயர் நாடுகளிலும் நிலத்துடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் அச்சம் காரணமாக அரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் ஆபத்தும் உள்ளது. இது டயஸ்பொறாவின் செயற்பாட்டு வெளியையும் சுருங்கச் செய்யும்."

தவறான கணிப்பு.

இது சும்மா இருந்த பலரையும் திருப்பி களத்திற்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

 

 

இப்படித்தான்  தேசியத்தை நேசிப்போரையும்

தமிழருக்காக வேலை  செய்வோரையும்

ஊரில் சொத்து வைத்துள்ளார்கள்

என்று இங்கு பலர் புலுடா விடுகிறார்கள்.........

 

தேசத்தை நேசிப்பதற்கு சொத்து எதற்கு???

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் முன்னர் எப்போதுமிலாது தீவிரமாகவும் புத்திசாதூரியதடனும் செயற்படவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதைவிட புலம்பெயர்சமூகம் எதிர்பார்ப்பது சிறீலங்காச் சிங்களப்பேரினவாததிடமிருந்து இதைவிட பாரிய நெருக்கடிகளையே இன்னாமு வேகாமாகச் செயற்படவேண்டிய தருணங்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

 தவிர நெடியவைக் கைதுசெய்து  கொண்டுசெல்வது இலகுவான விடையாமாக இருக்கலாம் எனிலும் அதனால் மேற்குலகத்தின்பால் புலம்பெயர் சமூகத்தின் மனதில் ஏற்படப்போகும் பாரிய மனத்தாங்கள்களை எவ்வாறு நிவர்த்திசெய்யப்போகின்றார்கள் என்பதே கெள்விக்குறி

 

கடந்த வாரத்தில் சிங்களத்துக்கும் மேற்குலகுக்கும் மாமாவாகவிருந்த எறிக் சொல்ஹெய்ம் தமிழர்களுக்குச் சார்பானதான ருவிற்ரர் கலந்துரையாடலை பரிமாறியிருந்தபோதே அனைவரும் உணரவேண்டும் நோர்வே தமிழர்தரப்புக்கு ஆப்பு வைக்கப்போகின்றதென.

 

காலப்போக்கில் இலங்கைத் தீவினிற்கு வெளியால் ஈழத்தமிழர்க்கான ஒரு நிலப்பரப்பை தமிழர்தரப்பு வேண்டிநிற்கும் கட்டாயத்துக்கு நாம் வரவேண்டியிருக்கும்.

 

நெடியவனது கைது தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்குத் தடைகள் எதையும் கொண்டுவரமாட்டாது. இது எப்போதோ முடிந்த விடையம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனது கைது தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்குத் தடைகள் எதையும் கொண்டுவரமாட்டாது. இது எப்போதோ முடிந்த விடையம்.

இந்தக் கூற்று உண்மையானது. நெடியவனைப்பற்றி அறிந்தவரையில், அனேகமாக அவர்பற்றி மக்கள் கூடி விவாதித்த சம்பவமெலல்லாம் எப்போதே நடந்து முடிந்துவிட்டது. அவரைத் தாங்கிநிற்பவர்களாக அறியப்பட்டவர்களையும் மக்கள் இனம்கண்டு உள்ளனர். அனேகமாக தமிழ்க் கல்விக்கழகம் ஒன்றின் மூலமாகவே நெடியவன் பிராணவாயுவைப் பெற்று நடமாடி வருகின்றார். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியே பெற்றோர்களும் அந்த வாயுவைச் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். நெடியவனுக்கு ஏதாவது நடந்தால் அதனால் பாதிப்படையப்போவது அவரைத் தாங்கிநின்று தன்னலம் தேடும் சுயநலவாதிகளே! அவர்கள் கட்டமைப்பு உடையும். உடையும்போது வெளிப்படும் நாற்றம், துர்நாற்றமாக சகிக்க முடியாதிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.