Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜீரிய பள்ளிச் சிறுமிகள் கடத்தல்: மிஷெல் ஒபாமா கண்டனம்

Featured Replies

140508133655_michelle_obama_nigeria_200_

மிஷெல் ஒபாமா

நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்ட செய்திகேட்டு தானும் தனது கணவரும் மிகுந்த கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவின் வாராந்த வானொலி உரையை, அவரது மனைவி மிஷெல் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

சின்னஞ்சிறு பிள்ளைகளின் கனவுகளை பறிக்கும் வளர்ந்த மனிதர்களின் மனசாட்சியற்ற செயல் என்று மிஷெல் ஒபாமா இந்தக் கடத்தல்களை வர்ணித்துள்ளார்.

கடத்தப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்குலக நாடுகளின் நிபுணர்கள் தற்போது நைஜீரியாவில் உள்ளனர்.

இதற்காக கண்காணிப்பு விமானங்களை தந்துதவுமாறு அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகள் கோரப்பட்டுள்ளன.

http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140510_michelle_obama.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தனது நிறம் என்பதால் இந்த கரிசனையோ???

தனது நிறம் என்பதால் இந்த கரிசனையோ???

 உண்மை தான் ...!!

 சிரியாவில் லட்சக் கணக்கில் இறந்த போதும் , ருவாண்டா , காங்கோ , போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கானோர் இறந்த போது வருந்தாதவர்கள் .271 பெண்களுக்காக குரல் கொடுப்பது மட்டும் எப்படி நியாயமாகும்

தனது நிறம் என்பதால் இந்த கரிசனையோ???

இல்லை. நைஜீரியாவில் உள்ள எண்ணெயில் கரிசனை.

வட ஆபிரிக்க எண்ணெய் வள நாடுகள் எல்லாவற்றிலும் சாக்கு போக்கு சொல்லி கை வைச்சாச்சு.

நைஜீரியா தான் மிச்சம். பிளேன் தேடி முடிஞ்சு குழந்தைகளை தேடினம்.

உலக அரசியல் ஒரு நாடக மேடை.

இல்லை. நைஜீரியாவில் உள்ள எண்ணெயில் கரிசனை.

வட ஆபிரிக்க எண்ணெய் வள நாடுகள் எல்லாவற்றிலும் சாக்கு போக்கு சொல்லி கை வைச்சாச்சு.

உலகில் உள்ள பலர் வருத்தம் தெரிவிக்கும் வேலையில் ..அங்கு uthava வந்த அமெரிக்கா கனடா நாடுகள் வரவேற்பிற்குரியன

நைஜீரியா தான் மிச்சம். பிளேன் தேடி முடிஞ்சு குழந்தைகளை தேடினம்.

 விமானத்தை தேட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டவில்லை என்றாலும் கிண்டலடிக்காமல் இருப்பது நல்லது .

 அவர்கள் எத்தனையோ மக்களை இப்படி தினமும் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள் ..அவர்களுடன் இந்த குழந்தைகளும் சேர்வார்கள் ..

உலகில் உள்ள பலர் வருத்தம் தெரிவிக்கும் வேலையில் ..அங்கு uthava வந்த அமெரிக்கா கனடா நாடுகள் வரவேற்பிற்குரியன

விமானத்தை தேட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டவில்லை என்றாலும் கிண்டலடிக்காமல் இருப்பது நல்லது .

அவர்கள் எத்தனையோ மக்களை இப்படி தினமும் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள் ..அவர்களுடன் இந்த குழந்தைகளும் சேர்வார்கள் ..

எங்கட குழந்தைகளும் மூன்று வருசமா இறந்ததுகள் தானே ஏன் காப்பாற்றவில்லை?

எங்கள் பாடசாலை மாணவிகள் 62 பேர் குண்டு போட்டு இறந்த போது ஒருத்தரும் ஹாஷ் டாக் படம் பிடிக்கவில்லை என்ற ஆதங்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் மீதான கரிசனை என்பது அவர்களது சொந்த நலன்கள் சார்ந்தது. ருவாண்டாவில் 5 மாதங்களில் ஒரு மில்லியன் சிவிலியன்கள் வேட்டையாடப் பட்டபோது அமெரிக்காவிற்கு அது ஒரு பிரச்சினையாகப் படவில்லை. 1980 முதல் 2009 வரை ஈழச் சிறார்களும், மக்களும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்றுவரை சிரியாவில் சிறார்களும், மக்களும் ஆசாத் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவரும்போது இன்னும் அங்கு தனக்கு என்ன நண்மை இருக்கிறதென்றுதான் யோசித்து வருகிறது. 

இப்படியிருக்க, அமெரிக்கர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று யாரை நம்பச் சொல்கிறீர்கள் ? அப்படியிருந்திருந்தால், ஹிரோஷிமா, நாகசாகி மக்களோ, மில்லியன்கணக்கான வியட்நாமியர்களோ, பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்களோ அல்லது ஆப்கானியர்களோ கொல்லப்பட்டிருக்க மாட்டாரர்களே?

  • கருத்துக்கள உறவுகள்

200 பேருக்கு அழுது வடிக்கினம்.. 40,000 பேரைக் கொல்லேக்க.. வேடிக்கை பார்க்கினம்.

நல்ல மனிதாபிமானம். யாரை ஏய்க்கிறார்கள்.. சனநாயகத்தின் பெயரால்..??! :icon_idea:

அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் மீதான கரிசனை என்பது அவர்களது சொந்த நலன்கள் சார்ந்தது. ருவாண்டாவில் 5 மாதங்களில் ஒரு மில்லியன் சிவிலியன்கள் வேட்டையாடப் பட்டபோது அமெரிக்காவிற்கு அது ஒரு பிரச்சினையாகப் படவில்லை. 1980 முதல் 2009 வரை ஈழச் சிறார்களும், மக்களும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்றுவரை சிரியாவில் சிறார்களும், மக்களும் ஆசாத் அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுவரும்போது இன்னும் அங்கு தனக்கு என்ன நண்மை இருக்கிறதென்றுதான் யோசித்து வருகிறது. 

 உடன்படுகிறேன்

இப்படியிருக்க, அமெரிக்கர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று யாரை நம்பச் சொல்கிறீர்கள் ? அப்படியிருந்திருந்தால், ஹிரோஷிமா, நாகசாகி மக்களோ, மில்லியன்கணக்கான வியட்நாமியர்களோ, பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்களோ அல்லது ஆப்கானியர்களோ கொல்லப்பட்டிருக்க மாட்டாரர்களே?

 ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் எப்படி ஈடுபட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் ..?

 வியெட்நாம் நாட்டில் சோவியெத்  படைகளின் தாக்குதலை எதிர்க்கவே அமெரிக்காவும் அங்கு களம் இறங்கியது ..ஆனால் போரின் தாக்கம் படு பாதகமாகவே அமைந்தது

 தேவை இல்லாமல் குவைத் மீது படை எடுத்தது ..சவுதி இஸ்ரேல் நாடுகளின் மீது ஏவுகணைகளை வீசியது ..!!

  ஆப்கனில் முன்பு நடந்தது தீவிரவாதிகளின் ஆட்சி .அதை மையமாகக் கொண்டு அவர்கள் அரங்கேற்றியது   பல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.