Jump to content

லண்டனில் may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்


Recommended Posts

மன்னிக்கவும் என்னால் புது டோப்பிக் திறக்க முடியாததால் இங்கே இதை பகிர்கிறேன்

 

may 18 தினத்தன்று மக்களின் ஒற்றுமையை குலைக்க வந்த சிலர்..

 

 

நான் யாருக்கும் சார்வு இல்லை ஆனால் நேற்று  BTF ஆல்
ஏற்பாடு செய்யப்படா முள்ளிவாய்க்கால் தினத்தன்று சிலர் தேசிய கோடியை ஏற்றிய பின்புதான் மற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று  BTF  உடன் 
பிரச்சனையில் ஈடுபட்டனர்  அவர்கள் சொன்னது நல்ல விடயம் தான் ஆனால் அதன் பின்னணியை இப்போது கூறுகிறேன் 
 
ஒன்று இதற்கு பின்னணியில் அதிர்வு கண்ணனுக்கும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்களுக்கும்  ஏதோ தொடர்பு இருக்கிறது ( அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்ியவர்க்காக காவல்காரரிடம் அதிர்வு கண்ணன் பேசுவதை நான் பார்த்தேன் என்னிடம் ஆதாரமும் உண்டு,அதோடு அவர் அங்கிருந்து மாயம்மாகி விட்டார் அதற்கு பின்னர் அவரது அதிர்வு இநயதில்  BTF க்கு எதிராக எழுதினார்.
 
இரண்டு அங்கு மேடை மேல் ஆர்ப்பாட்டம் பணியவர்கள் அந்த கொடி பிடிப்பதர்க்கு தகுதி இல்லாதவர்கள் அதில் இருவர் அரை காச்சடை அநித்திருந்தார்கள் இதுவே தாயாகமாக இருந்திருந்தால் கதயெ வேறு .இவர்கள் கொழ்ம்பு தமிழர்கள்.
 
மூன்று நீங்கள் மேல பார்க்கும் வீடியோ அதில்  ரௌடீதனம் பண்ணும் நபரை பாருங்கள்....என்னால் இதை சற்றும் சகித்து  கொள்ள முடியவில்லை 
 
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்,விடயம் உங்களிடம் சேர்ந்தால் செறி...
 
தமிழனுக்கு தமிழன் தான் எதிரி :(
Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு வருடங்களாக பிரித்தானியத் தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை நடாத்தி வருகிறது. இவ்வருடமும் அவர்களே நடத்துவதற்கு அனுமதி பெற்று வழமைபோல் ஒழுங்குகள் எல்லாம் முடிந்த நிலையில் அனைவரும் வந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. ஒரு வாரத்தின் முன் அனைவருக்குமாக நடைபெற்ற கூட்டத்தில் TCC கட்டாயம் கோடி ஏற்றியே நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டது. ஆனால் BTF மறுத்துவிட்டது. காரணம் BTF பல நாடுகளுடனும் பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான வேலைத்திட்டங்கள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கின்றது. இவ்வேலைத்திட்டங்கள் பல வருடங்களாகச் சிறுக்கச் சிறுக கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல நாடுகள் நீங்களும் புலிகள் அதனால் உங்களுடன் கதைக்க மாட்டோம் என தாட்டிக் களிப்பதும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிக் கொடியைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கதைக்க வாருங்கள் என்றதனாலும் வேறு சில தூர நோக்கான சிந்தனையாலும் BTF நடத்தும் நிகழ்வுகளில் புலிக்கொடி ஏற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்ல நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கும் கவுன்சிலால் புலிக்கொடி, மெழுகுதிரி போன்றவர்ரிர்க்குத் தடைகளும் போடப்பட்டன.

 

புலிக்கொடி ஏற்றுவதுதான் தடையே தவிர பொதுமக்கள் யாரும் கொடியைப் பிடிப்பதற்கு BTF எந்தத் தடையும் வழங்கியதில்லை.

 

நேற்று நிகழ்வுகள் ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னதாக திடீரென ஒரு ஐம்பது பேர் வரையில் மேடைக்கு முன்பாக தாமாக ஒரு கம்பத்தைக் கொண்டுவந்து நிறுத்தினர். TYO வைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பத்துப் பேர் புலிக் கொடிகளுடன் மேடையை ஆக்கிரமித்து கோடி ஏற்றினால்த்தான் மேடையை விட்டு இறங்குவோம் என அடம் பிடித்தனர். பார்வையாளாராக வந்திருந்த மக்களும் குழம்பிப் போய் சுற்றிவர வந்து நின்று புதினம் பார்க்கவாரம்பித்தனர். ஒரே காட்டுக் கத்தல் கொஞ்ச நேரம். அதில் வந்து நின்ற பலர் அன்று தான் வந்திருந்தனர் ரவுடிகள் போல் தோற்றத்துடன். அவர்களை நான் இதற்கு முன் கண்டதில்லை.

 

நானும் இன்னும் ஒருவரும் கொடி ஏற்றுவதற்கு நாம் பொறுப்பு தயவு செய்து எல்லோரும் இறங்கிப் போங்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை. கொடிப்பாடலை கொண்டுவாருங்கள் நான் ஏற்ற ஒழுங்கு செய்கிறேன் என்று கூறியபின் மற்றவர்கள் கத்தாது நின்றனர். மேடையில் நின்ற TYO வைச் சேர்ந்த இரு இளையவர்கள் இப்ப மேடையில் BTF கொடி ஏற்ற விடவில்லை என்று அறிவியுங்கோ நாம் இறங்குகிறோம் என அடம் பிடித்தனர். அவர்கள் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

கடைசியில் தாமே மைக்கை எடுத்து அறிவித்துவிட்டு கொடியேற்ற, அப்போதுதான் யார் ஏற்றவது என்னும் சர்ச்சையில் ஈடுபட்டு ஒருவாறு ஒருவரைத் தேர்வுசெய்தனர். அவர்களை வழி நடத்திய ஒருவர் வந்து அக்கா நீங்கள் கோடியை ஏற்ருங்கோ என்று கூறியவுடன் நான் மறுத்துவிட்டேன் எனக்கு அந்தத் தகுதி இல்லை. யாராவது மாவீரர்களிளின் உறவுகளை அழையுங்கள் என்று சொல்லி. 

 

மாவீரர் நாளில் மட்டும் தான் வருடத்தில் ஒரு நாளோ ஒரு வாரமோ அவர்கள் எல்லாம் நாட்டை நினைப்பதும் வேலை செய்வதும். வருடத்தில் மிகுதி நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் ஆசை கொள்வதில்லை. வருடத்தில் இன்னொருநாள் UN இக்கு முன்னாள் நின்று ஆர்பாட்டம் செய்தால் போதும் என்றும் நினைக்கின்றனர். யாதர்த்தத்தையும் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவத்தையும் தரத்தையும் கூட உணர்ந்து கொள்ளாது தாமே முன்னிக்க வேண்டும்.  அவ்வளவே.

 

ஒற்றுமை என்கின்றனர். தாமே ஒற்றுமையைக் குலைத்தபடி. விடுதலை வேண்டும். ஆனால் அதற்க்கான உருப்படியான வேலைகள் எதுவும் செய்யாது. இப்படியே எத்தனை நாள்  பார்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

யாதர்த்தத்தையும் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவத்தையும் தரத்தையும் கூட உணர்ந்து கொள்ளாது......

 

உண்மைதான் ..கொடி ஏற்ராததிற்கு உரிய காரணம் தெளிவாக தெரிந்தும் குளப்ப முயல்வது மிகவும் வருந்த தக்கது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு வருடங்களாக பிரித்தானியத் தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை நடாத்தி வருகிறது. இவ்வருடமும் அவர்களே நடத்துவதற்கு அனுமதி பெற்று வழமைபோல் ஒழுங்குகள் எல்லாம் முடிந்த நிலையில் அனைவரும் வந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. ஒரு வாரத்தின் முன் அனைவருக்குமாக நடைபெற்ற கூட்டத்தில் TCC கட்டாயம் கோடி ஏற்றியே நீங்கள் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டது. ஆனால் BTF மறுத்துவிட்டது. காரணம் BTF பல நாடுகளுடனும் பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான வேலைத்திட்டங்கள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கின்றது. இவ்வேலைத்திட்டங்கள் பல வருடங்களாகச் சிறுக்கச் சிறுக கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல நாடுகள் நீங்களும் புலிகள் அதனால் உங்களுடன் கதைக்க மாட்டோம் என தாட்டிக் களிப்பதும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிக் கொடியைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கதைக்க வாருங்கள் என்றதனாலும் வேறு சில தூர நோக்கான சிந்தனையாலும் BTF நடத்தும் நிகழ்வுகளில் புலிக்கொடி ஏற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்ல நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கும் கவுன்சிலால் புலிக்கொடி, மெழுகுதிரி போன்றவர்ரிர்க்குத் தடைகளும் போடப்பட்டன.

 

புலிக்கொடி ஏற்றுவதுதான் தடையே தவிர பொதுமக்கள் யாரும் கொடியைப் பிடிப்பதற்கு BTF எந்தத் தடையும் வழங்கியதில்லை.

 

நேற்று நிகழ்வுகள் ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னதாக திடீரென ஒரு ஐம்பது பேர் வரையில் மேடைக்கு முன்பாக தாமாக ஒரு கம்பத்தைக் கொண்டுவந்து நிறுத்தினர். TYO வைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பத்துப் பேர் புலிக் கொடிகளுடன் மேடையை ஆக்கிரமித்து கோடி ஏற்றினால்த்தான் மேடையை விட்டு இறங்குவோம் என அடம் பிடித்தனர். பார்வையாளாராக வந்திருந்த மக்களும் குழம்பிப் போய் சுற்றிவர வந்து நின்று புதினம் பார்க்கவாரம்பித்தனர். ஒரே காட்டுக் கத்தல் கொஞ்ச நேரம். அதில் வந்து நின்ற பலர் அன்று தான் வந்திருந்தனர் ரவுடிகள் போல் தோற்றத்துடன். அவர்களை நான் இதற்கு முன் கண்டதில்லை.

 

நானும் இன்னும் ஒருவரும் கொடி ஏற்றுவதற்கு நாம் பொறுப்பு தயவு செய்து எல்லோரும் இறங்கிப் போங்கள் என்று சொல்லியும் கேட்கவில்லை. கொடிப்பாடலை கொண்டுவாருங்கள் நான் ஏற்ற ஒழுங்கு செய்கிறேன் என்று கூறியபின் மற்றவர்கள் கத்தாது நின்றனர். மேடையில் நின்ற TYO வைச் சேர்ந்த இரு இளையவர்கள் இப்ப மேடையில் BTF கொடி ஏற்ற விடவில்லை என்று அறிவியுங்கோ நாம் இறங்குகிறோம் என அடம் பிடித்தனர். அவர்கள் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

கடைசியில் தாமே மைக்கை எடுத்து அறிவித்துவிட்டு கொடியேற்ற, அப்போதுதான் யார் ஏற்றவது என்னும் சர்ச்சையில் ஈடுபட்டு ஒருவாறு ஒருவரைத் தேர்வுசெய்தனர். அவர்களை வழி நடத்திய ஒருவர் வந்து அக்கா நீங்கள் கோடியை ஏற்ருங்கோ என்று கூறியவுடன் நான் மறுத்துவிட்டேன் எனக்கு அந்தத் தகுதி இல்லை. யாராவது மாவீரர்களிளின் உறவுகளை அழையுங்கள் என்று சொல்லி. 

 

மாவீரர் நாளில் மட்டும் தான் வருடத்தில் ஒரு நாளோ ஒரு வாரமோ அவர்கள் எல்லாம் நாட்டை நினைப்பதும் வேலை செய்வதும். வருடத்தில் மிகுதி நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் ஆசை கொள்வதில்லை. வருடத்தில் இன்னொருநாள் UN இக்கு முன்னாள் நின்று ஆர்பாட்டம் செய்தால் போதும் என்றும் நினைக்கின்றனர். யாதர்த்தத்தையும் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவத்தையும் தரத்தையும் கூட உணர்ந்து கொள்ளாது தாமே முன்னிக்க வேண்டும்.  அவ்வளவே.

 

ஒற்றுமை என்கின்றனர். தாமே ஒற்றுமையைக் குலைத்தபடி. விடுதலை வேண்டும். ஆனால் அதற்க்கான உருப்படியான வேலைகள் எதுவும் செய்யாது. இப்படியே எத்தனை நாள்  பார்க்கலாம்.

இதை பற்றி எழுத நிறைய இருக்கிறது ..............
இப்போது முடியவில்லை.
 
கொடியை தவிர்த்து சாதாகமாக அரசியல் பண்ணுவது என்பது ஒரு முட்டாள்தனம். இதை எப்போதோ நான் முயற்சி செய்து இறுதியில் கைவிட்டு விட்டேன். 
தமிழன் என்றவுடனேயே ............... புலியோடு நின்றுதான் விவாதம் தொடங்குகிறது.
நாம் குனிய குனிய அவர்களுக்கு வசதியாக இருகிறதே தவிர ..........
குனிவதால் மனிதன் வாழலாம் என்பது வெறும் சோம்பேறி சிந்தனை.
 
அப்படி யாரவது வாழ்ந்திருந்தால் உதாரனம் தந்து அதை விளக்க வேண்டும்.
 
எமக்கு என்று ஒரு அடையாளம் இருந்தால்தான் .............
எமை அடையாளபடுத்த முடியும்.
கொடிக்கு இருக்கும் உரிமையை நாம் தடை கொடுக்கும் இடங்களில் போராடி பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
முள்ளிவாய்கால் நிகழ்விற்கு வருவது .............
தனது சகோதர்களை புலி என்ற பெயரில் பலி கொடுத்தவன் என்பதை ஏற்பாட்டாளர்கள் நினைவு கொள்ள வேண்டும். சகோதரனின் அடையாளத்தையே நீங்கள் தூக்கி எறிந்துவிட்டு.
உங்கள் இருப்புக்கு விளம்பரம்தேட எனது சகோதரனின் மரணத்தை பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றசாட்டிட்கு. சரியான விளக்கம் BTF தரவேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BTF கொடி ஏற்றிய போதும்.. தலைவர்கள் அதனுடன் பேசினார்கள் தானே. 1996 அமெரிக்க தடையின் பின்னரும்.. விடுதலைப் புலிகளோடு... உலக நாட்டுப் பிரதிநிதிகள் தேசியக் கொடியின் முன் பேசினார்கள் தானே.

 

இப்ப மட்டும்.. என்ன பிரச்சனை..????!

 

இது BTF இல் உள்ள சிலபேர் தாங்கள் நடுநிலையாட்கள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு.. விலாங்கு நிலை எடுக்க முனைகிறார்கள் என்பதையே இனங்காட்டுகிறது.

 

இவர்களின் இந்தப் போக்கில் எந்த ஒரு தூர நோக்கும் இல்லை.. தொலை நோக்கும் இல்லை. சிறீலங்காவுக்கு கொலிடே போற நோக்கம் மட்டுமே உண்டு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10312079_714214011969055_813705190715698

 

தேசியக் கொடிக்கு முன்னால உட்காரமாட்டம் என்று இவங்க ஏன் வெளியேறல்ல. ஆக.. BTF க்காரரோட தான் அப்படிச் சொன்னவையோ. அப்ப பலவீனம்.. BTF இனதே தவிர.. தேசியக் கொடியினதல்ல. :icon_idea:

Link to comment
Share on other sites

 

இதை பற்றி எழுத நிறைய இருக்கிறது ..............
இப்போது முடியவில்லை.
 
கொடியை தவிர்த்து சாதாகமாக அரசியல் பண்ணுவது என்பது ஒரு முட்டாள்தனம். இதை எப்போதோ நான் முயற்சி செய்து இறுதியில் கைவிட்டு விட்டேன். 
தமிழன் என்றவுடனேயே ............... புலியோடு நின்றுதான் விவாதம் தொடங்குகிறது.
நாம் குனிய குனிய அவர்களுக்கு வசதியாக இருகிறதே தவிர ..........
குனிவதால் மனிதன் வாழலாம் என்பது வெறும் சோம்பேறி சிந்தனை.
 
அப்படி யாரவது வாழ்ந்திருந்தால் உதாரனம் தந்து அதை விளக்க வேண்டும்.
 
எமக்கு என்று ஒரு அடையாளம் இருந்தால்தான் .............
எமை அடையாளபடுத்த முடியும்.
கொடிக்கு இருக்கும் உரிமையை நாம் தடை கொடுக்கும் இடங்களில் போராடி பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
முள்ளிவாய்கால் நிகழ்விற்கு வருவது .............
தனது சகோதர்களை புலி என்ற பெயரில் பலி கொடுத்தவன் என்பதை ஏற்பாட்டாளர்கள் நினைவு கொள்ள வேண்டும். சகோதரனின் அடையாளத்தையே நீங்கள் தூக்கி எறிந்துவிட்டு.
உங்கள் இருப்புக்கு விளம்பரம்தேட எனது சகோதரனின் மரணத்தை பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றசாட்டிட்கு. சரியான விளக்கம் BTF தரவேண்டும்.

 

அங்கு நடந்தது இதுதான்
 
ஒன்றாவது அங்கு கொடி ஏற்றுவதுக்கு கவுன்சில் அனுமதி தரவில்லை ஆனாலும் மக்கள் தாங்களாக கோடி பிடிப்பதர்க்கு யாரும் தடை சொல்லவில்லை இருப்பினும் அங்கு வந்த ஆர்ப்பாத்த்கரர்களிடம் நீங்கள் வந்து பொருப்பெடுத்து கொடி ஏற்ருங்கள் என்று சொல்ல...எல்லாரும் பயந்துபின் வாங்கி ஓடிவிட்டார்கள்

 

இரண்டு ஏன் கவுன்சிழுடன் பேச இவர்கள் யாரும் முன்வரவில்லை  /முயற்சிக்கவில்லை??

 

மூன்று அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் சொன்ன அந்த 15 பேர் கொண்ட மக்கள் கும்பல்  தலைவர் பிறந்த இடத்தை சேர்ந்தவர்கள்... அங்கு வந்து சத்தம் பொடுவதெ குறியாக இருந்தனர் யாரும் இவளவு துடிப்பு இருந்தால் ஸ்காட்லாந்து போலீஸாரிடம் பேசவேண்டியது தானே??? இதற்கு வக்காலத்து அதிர்வு கண்னன்,வந்து நரிவெலை பார்த்து கொண்டு இருந்தார். பின்னர் நல்லவர் போல் கதை கதையாக விடுகிறார்.

Link to comment
Share on other sites

BTF கொடி ஏற்றிய போதும்.. தலைவர்கள் அதனுடன் பேசினார்கள் தானே. 1996 அமெரிக்க தடையின் பின்னரும்.. விடுதலைப் புலிகளோடு... உலக நாட்டுப் பிரதிநிதிகள் தேசியக் கொடியின் முன் பேசினார்கள் தானே.

 

இப்ப மட்டும்.. என்ன பிரச்சனை..????!

 

இது BTF இல் உள்ள சிலபேர் தாங்கள் நடுநிலையாட்கள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு.. விலாங்கு நிலை எடுக்க முனைகிறார்கள் என்பதையே இனங்காட்டுகிறது.

 

இவர்களின் இந்தப் போக்கில் எந்த ஒரு தூர நோக்கும் இல்லை.. தொலை நோக்கும் இல்லை. சிறீலங்காவுக்கு கொலிடே போற நோக்கம் மட்டுமே உண்டு. :lol::D

 

அய்யா உண்மையில் அந்த அமைப்பு தேசிய கொடிகளை கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்தததை பார்த்தேன் இந்த கோடி விடயம் அவர்களக்கு எப்போதே தெரியும் என் அப்போது அவர்களுக்கு எங்கே போனது ரோஷம்... இப்போது அரை தவுசற் போட்டுக் கொண்டு வந்து விட்டார்கள் கொடி பிடிக்க...

 

தாயாகத்தில் நடந்த போராட்டடதிர்க்கும் அங்கு வந்த சிறுவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை....
 
சண்டை பொடுவதற்க்கு உரிய இடமும் இல்லை அது....தமிழனின் மானம் தான் போகிறது
Link to comment
Share on other sites

என் அன்பு நண்பர்களே எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்..நான் ஒரு மென்பொருளின் மூலமே இங்கு டைப் செய்வதால் எழுத்து பிழைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு வந்தது.. சிறுவர்கள் அல்ல. TYO மாணவர்கள். BTF கடந்த காலங்களிலும்.. இப்படி விலாங்கு நிலை எடுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன. 2008 பொங்கு தமிழ் நிகழ்வின் போது.. தேசியக் கொடியை பிடிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.. இதே BTF ஆட்கள். ஆனால் மக்கள் பொக்கட்டுக்குள் கொண்டு வந்து பிடித்தார்கள். கடந்த 6 வருசமா கொடி பிடிக்காமல்.. இவர்கள் கண்ட அரசியல் இலாபம் என்ன..?????????????????????????????????????????????????!  முள்ளிவாய்க்கால் அவலத்தையாவது நிறுத்தினார்களா.........................???????????????????????????! :icon_idea:


தமிழீழத் தேசியக் கொடியை புறக்கணித்த BTFஇற்கு பாடம் புகட்டிய தமிழ் இளையோர்கள்!!!

 
mqdefault-12.jpg
 

May 18, 2014 10:33 pm

 

லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதனை (BTF)  ஏற்பாடு செய்திருந்தார்கள். இன் நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் புலிக் கொடி ஏற்றவேண்டும் என்று பெருமளவான மக்கள் பிரித்தானிய தமிழர் பேரவையினரிடம்(BTF) கோரிக்கை விடுத்தார்கள்.

 

ஆனால் அந்த அமைப்பில் உள்ள சில நபர்கள் இதனை எதிர்தார்கள். புலிக் கொடி ஏற்ற முடியாது என்றும்இ அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று BTF அமைப்பில் உள்ளவர்கள் கூற முற்பட்டார்கள்.

இதனை அடத்து கடுமையாக எதிர்த தமிழ் மக்கள், தேசிய கொடியை ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இளையோர்கள் பலர் உடனே மேடைக்குச் சென்று புலிக் கொடி கொடியை ஏந்தி, அதனை முறையாக ஏற்றிய பின்னரே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். புலிக் கொடியை நாம் மறந்தால், எமது அடையாளத்தை இழந்தவர்களாக நாம் மாறிவிடுவோம் என்று அவர்கள் உரக்க கூறினார்கள்.

 

நடை முறையில் இது தமிழ் இனத்திற்கு சாத்தியமானது ஆனால் இதனை இன்று உலகம் ஏற்க மறுத்து விட்டது. புலிக் கொடி என்றால் அது பயங்கர வாதம் என்கிறது அது அல்ல இங்கு வாதம் சூழ் நிலைக்கு ஏற்றால் போல் நாம் எமது செயற் பாட்டை நகர்த்த வேண்டும். காரணம் இன்று ஐ.நா சபைக்குள் புலி என்றால் அது தேவையற்ற ஒன்றாகவே பாற்கிறது ஐ.நா சபை அது வேறு, ஆனால் தமிழ் இனத்தின் போராட்டத்தில் புலிகளும் புலிக் கொடியும் முதன்மையானது என்கிறது தமிழ் சமூகம் அது இன ரீதியில் மாற்றமில்லாத கருத்து.

 

ஒரு இனம் தன் தனித்துவத்தையும் தன் போராட்ட அடையாளங்களையும் அழிக்க நினைக்கவும் கூடாது அல்லது அதனை புறந் தள்ளவும் கூடாது. அதனை நிரந்தரமாக நிராகரித்தல் என்பது பொருளாகுமானால் அதற்கு காலம் பொருள் சொல்லும்.

 

btf-may18-2014.jpg

 

http://www.velichaveedu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அங்கு நடந்தது இதுதான்
 
ஒன்றாவது அங்கு கொடி ஏற்றுவதுக்கு கவுன்சில் அனுமதி தரவில்லை ஆனாலும் மக்கள் தாங்களாக கோடி பிடிப்பதர்க்கு யாரும் தடை சொல்லவில்லை இருப்பினும் அங்கு வந்த ஆர்ப்பாத்த்கரர்களிடம் நீங்கள் வந்து பொருப்பெடுத்து கொடி ஏற்ருங்கள் என்று சொல்ல...எல்லாரும் பயந்துபின் வாங்கி ஓடிவிட்டார்கள்

 

இரண்டு ஏன் கவுன்சிழுடன் பேச இவர்கள் யாரும் முன்வரவில்லை  /முயற்சிக்கவில்லை??

 

மூன்று அங்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் சொன்ன அந்த 15 பேர் கொண்ட மக்கள் கும்பல்  தலைவர் பிறந்த இடத்தை சேர்ந்தவர்கள்... அங்கு வந்து சத்தம் பொடுவதெ குறியாக இருந்தனர் யாரும் இவளவு துடிப்பு இருந்தால் ஸ்காட்லாந்து போலீஸாரிடம் பேசவேண்டியது தானே??? இதற்கு வக்காலத்து அதிர்வு கண்னன்,வந்து நரிவெலை பார்த்து கொண்டு இருந்தார். பின்னர் நல்லவர் போல் கதை கதையாக விடுகிறார்.

 

உங்கள் கருத்தில் நான் பிழை காணவில்லை.... அங்கு என்ன நடந்தது எனபது எனக்கு சரியாக தெரியாது.
(கூட்டத்தோடு நின்று சவுண்டு விடுவதும் பின்பும் தமக்கு ஏதாவது ஆகும் என்று எண்ணி ஒடுபவர்களையும் நான் கண்டிருக்கிறேன். அவர்களை நியாயபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை)
 
என்னுடைய கருத்து கொடி பற்றிய எனது தனிபட்ட எண்ணம்.
அது தவறு என்று எண்ணுபவர்கள். ஏன் என்று சரியான விளக்கம் தரவேண்டும்.
 
கொடியை தவிர்ப்பது ..... எந்த லாபத்தையும் தராது.
கவுன்சில் தடை விதித்தால் .......  அடுத்த நடவடிக்கை அதை எதிர்த்து போரடுவதாகத்தான் இருக்க வேண்டும்.
நாட்டிலும் ...... இங்கும் புலி என்றால் ............. தமிழ் மக்கள் எங்கே ? என்ற கேள்விகளை தொடுக்க வேண்டும்.
 
எங்களை அடையாளபடுத்த வேண்டும்.
தமிழன் என்று சொல்லவே பயந்தால் .........? 
தமிழனுக்கு விடிவு பற்றி பேசுவது என்பது வெட்டி  பேச்சு.
 
இங்கு சிலர் குத்தி முறிவதுபோல்.
Link to comment
Share on other sites

புலிக்கொடி தமிழனின் உயிர்க்கொடி புலிக்கொடி தமிழரின் முகவரி  எத்தனைபேர் வந்தாலும்

அந்தக்கொடியைத் தமிழனிடமிருந்து பறிக்கமுடியாது

 

 

தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றாதது என்பது நடப்பு நாட்களின் வாதமாக இருக்கலாம் , அந்த மேடை , அந்த இடம் ,காலம் சண்டைபிடிப்பதற்குரிய இடம் இல்லை.

 எத்தனை ‌பேர் இங்கே வாக்களித்தீர்கள்? 

 

அந்த மேடை தமிழ் இனத்திற்கு கிடைத்த அவமானம்

 

 

 

Link to comment
Share on other sites

கவுன்சில் தடை விதித்தால் .......  அடுத்த நடவடிக்கை அதை எதிர்த்து போரடுவதாகத்தான் இருக்க வேண்டும்.

 நிச்சயமா போரட்டத்தை எற்பாடு செய்யலாம், யார் செய்வது ?

எல்லேரும் மேடை பேச்சுக்குத்தான்

Link to comment
Share on other sites

இன்று ராஜதந்திரமாக கொடிபிடிக்காமல் விட, அடுத்த பிரச்சாரம் வெள்ளையனிடமிருந்தே கிளம்பும்.

1) இலங்கையை துண்டாட நினைத்தவர்கள் புலிகள் மட்டுமே..

2) தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்கள் புலிக்கொடி பிடிப்பதில்லை.

3) நல்லிணக்கம் மட்டுமே போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ராஜதந்திரமாக கொடிபிடிக்காமல் விட, அடுத்த பிரச்சாரம் வெள்ளையனிடமிருந்தே கிளம்பும்.

1) இலங்கையை துண்டாட நினைத்தவர்கள் புலிகள் மட்டுமே..

2) தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்கள் புலிக்கொடி பிடிப்பதில்லை.

3) நல்லிணக்கம் மட்டுமே போதுமானது.

 

வெள்ளைக்காரன் சொன்னால் வேதவாக்கு.. அவன் அங்கீகரிச்சு.. சேர்ட்டிபிக்கட் கொடுத்தால் தான் விடுதலை.. என்று நம்பும் முட்டாள்கள் எம்மத்தியில் அதிகம் இருக்கிறார்கள்.

 

இதே மேற்குலகத்தை.. கிழக்கு ஐரோப்பிய ரஷ்சியர்.. ஒரு சதத்துக்கும்.. கூட மதிப்பதில்லை.. என்பது இவர்களுக்குப் புரியவில்லை. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செய்தார்கள் நம்மவர்கள். கொடி ஏற்றுவது முக்கியத்துவம் பெற்றது. அதே தமிழக உறவுகள் செய்த நினைவஞ்சலி இப்படி உள்ளது. புலியும்.. பிரபாகரனும் அல்ல அங்கு பிரச்சனை. அது சர்வசாதாரணமாக உள்ளது.

 

http://youtu.be/ucMVeOkflLA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தமிழர் பேரவை அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்வதற்காக 2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அப்பகூட தலைவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் அதை வைத்திருக்கவில்லை. இப்போதிருக்கும் அதன் வளர்ச்சியும் மற்றைய நாட்டுகளுடனான உறவும் ஒரு நாளில் வந்துவிடவுமில்லை. முதலில் ஒவ்வொரு MP மாருக்கு அவர்களின் கடிதங்கள்,துண்டுப் பிரசுரங்கள் என  வீடுவீடாக வினயோகித்து, அவர்கள் கூப்பிடும் இடங்களுக்குச் சென்று, நிதி திரட்டுவதற்கான இரவு விருந்துகளுக்கு நாமே பணம் செலுத்தி எண்ணிக்கைக்காக மற்றவர்களைக் கூட்டிக் கொண்டு சென்று அதன் பின்தான் அவர்கள் நாம் கூறுவதை செவிமடுக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் தான் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு பாராளுமன்றம் தொடங்கி ஐநா வரை எமது பிரச்சனையைக் கொண்டு செல்ல முடிந்தது. ஐநாவுக்கு முன்னாள் நின்று ஆர்பாட்டம் செய்ததால் அவர்கள் பயந்து போய் எமது பிரச்னையை ஐநாவில் கதைக்கின்றனர் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

 

அதுவும் அமேரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறதெனில் மற்றைய நாடுகளுக்கு ஓடி அதரவு கேட்டு எம்பக்க நியாயத்தைக் கூறி மாதக்கணக்காக பல நாடுகளில் நின்று செய்கிற வேலைத்திட்டம். இதை உண்மையில் எழுதுவது கூடத் தவறுதான். ஏனெனில் இலங்கை அரசாங்கம் பிரித்தானியத் தன்மிழர் பேரவை செய்யும் வேலைத்திட்டங்களுக்கு எத்தனையோ இடஞ்சல்களைக் கொடுத்தபடிதான் இப்போதும் இருக்கிறது. இந்த வேலைத் த்ட்டங்களுக்கு எப்போதும் TCC எந்த உதவியும் செய்ததுமில்லை.

 

புலிக்கொடியை வைத்துக்கொண்டுதானே எல்லா நாடுகளும் ஈழத்தில் பேசின என்று கூறினீர்கள். அங்கே எண்பது வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தனி ஆட்சியையும் வைத்திருந்தனர். தமது நலன் சார்ந்து புலிகளுடன் பேசவேண்டிய தேவையும் புலிகளை அடக்க வேண்டிய தேவையும் உலக நாடுகளுக்கு இருந்தன. அதனால் அவர்கள் புலிக்கொடி பற்றி அக்கறை கொள்ளவில்லை அந்தத் தேவை அவர்களுக்கு இருக்கவும் இல்லை. ஆனால் இன்று எமது நிலை அப்படி அல்ல எல்லா வழிகளிலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எதுமர்ரவர்களாக நாம் நிற்கிறோம். எமக்காக இறங்கி வரவேண்டிய தேவையோ எமது பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டிய தேவையோ ஒருவருக்குமே இல்லை.

 

எமது தற்போதைய தேவை அங்கு தொடந்து துன்பப்படும் மக்களின் துன்பத்தை நிறுத்துவதுதான். புலிக்கொடி இன்றி நாம் இல்லை என்று நாம் கூறினால் அவன் எதுவும் பேசாது தன வேலை பார்ப்பான். அவனுக்கு எந்த நட்டமும் இல்லை. நாம் கொடிகளுடன் போனால் எம்மைத் தட்டிக்கழிக்க அவர்கள் கூறும் குற்றச்சாட்டு நீ  புலிக் கொடிடி வைத்திருக்கிறாய். புலிகளுடன் கதைக்க ஒன்றும் இல்லை என்பதே.

 

நாம் புலிக்கொடியை நாட்டில் ஏற்ற தூர நோக்கில் யோசிக்க வேண்டுமே தவிர யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாது விதண்டாவாதம் கதைத்து எந்தப் பயனும் இல்லை.

 

சரி புலிக்கொடியை வைத்துக்கொண்டு TCC கடந்த ஐந்து வருடங்களாக என்ன வேலையை அந்த மக்களுக்காக முன்நெடுத்தனர் என்று யாராவது கூற முடியுமா ?????

எந்தவிதமான அரசியல் முன்னகர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூற முடியுமா ????? எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. தேசியம் தேசியம் என்று கதைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்காக எம்மாலான எதையாவது செய்யாது இதில் வந்து கருத்துக்களை மட்டும் எழுதிப் பயனில்லை.

 

மே 18 அன்று வந்து நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்கள் அதன் பின் என்ன செய்கின்றனர் ????அவர்களில் முக்கால்வாசிப் பேரை எனக்குத் தெரியும். எந்தவித தேசியம் சார்ந்த வேலையும் அவர்கள் செய்வதில்லை. இனியும் செய்யப்போவதில்லை என்பதும் தான் உண்மை.

 

கொடியின்றி விடுதலை இல்லை என்று கூறுவோர் நீங்களாவது ஏதாவது செய்கிறீர்களா ??????

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது TCC க்கும்.. BTF இங்கும் இடையில் உள்ள பிரச்சனையே தவிர.. புலிக்கொடி அல்ல.

 

புலிக்கொடி.. எந்த வகையில்.. எம்பி மாரின் தலையீட்டை தடுக்கும் என்று சொல்ல முடியுமா..??!

 

புலிக் கொடிக்கு தடையே இல்லை என்று.. பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் அறியத்தந்த பின்னும்... அதுவும் வெள்ளையர்களின் உதவியோடு பெறப்பட்ட விளக்கம் உள்ள நிலையிலும்.. புலிக்கொடியை மையாக வைச்சு..  ஒரு நினைவஞ்சலி செய்ய வேண்டிய இழி நிலையில்.. BTF உள்ளமை வெட்கக் கேடானது..!

 

2008 இல்.. பொங்கு தமிழில்.. புலிக்கொடிக்கும்.. தேசிய தலைவரின் படத்துக்கும்.. தடை விதித்த BTF  ஏன்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இந்த எம்பி மாரை வைச்சுத் தடுக்கேல்ல..???! 2009 இல் இளையோர் தூக்கிய.. புலிக்கொடியின் பின்னால் தானே பின்னர் பதுங்கிக் கொண்டது. இதனை BTF மறுக்க முடியுமா...???????????! பகிரங்கமாகவே கேட்கிறோம்..????! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே திருமுருகன் காந்தியின் பேச்சை கேளுங்கள். உங்களால் முடியாட்டி விலகிப் போய் வீட்டில் குழந்தை குட்டியை கவனியுங்கள். அதற்காக.. வீரமும்.. உயிரும் கொடுத்து பெறப்பட்டதை தன்னிச்சைக்குப் புறக்கணிக்க.. BTF க்கு மக்கள் ஆணை எதுவும் வழங்கவில்லை..!

 

இந்தியாவில்.. புலி.. பிரபாகரன்.. தமிழீழம் உச்சரிக்கத் தடை உள்ள போதும்.. திருமுருகன் காந்தியால் அதனை தமிழ் மக்களின் முன் மீறிக்காட்ட முடியுது என்றால்... ஏன் BTF ஆல் முடியாது. TYO வால்.. டவுனிங் வீதியில்.. புலிக்கொடியோடு போராட முடிகிறது என்றால்.. ஏன் BTF ஆல் முடியாது..????!

 

கடந்த முறை.. டேவிட் கமரோன்.. தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த போது.. BTF ஆட்களை மட்டுமா சந்தித்தார். புலிக்கொடி ஏந்தியவர்களையும் தானே சந்தித்து கருத்துக் கேட்டார்..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இரண்டு மூன்று TYO என்று சொல்லிக் கொள்பவர்கள் கொடி பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். அவர்கள் தனி நபர்களாகப் போட்ட வழக்குத் தான் அவர்கள் கொடி பிடிக்கலாம் என்று தீர்ப்புக் கொடுக்கப்பட்டதே தவிர தமிழர்கள் எங்கும் கொடி பிடிக்கலாம் என்றோ புலிக் கொடிக்குத் தடை இல்லை என்றோ யாராலும் வழக்குப் போடப்படவில்லை. ஸ்கொட்லண்ட யாட் அதில் சொன்னது ஒரு வீடியோவுக்காகவே தவிர அது பிரித்தானியச் சட்ட மூலத்தால் தீர்ப்புச் சொல்லப்பட்டுக் கொடுக்கப்பட்டதும் அல்ல. அன்று அவர்கள் என்னிடம் கூறினார்கள் எங்களிடம் கொட கடிதம் இருக்கிறது என்று. நான் கூறினேன் அப்படிக் கொட கடிதம் இருந்தால் கொண்டுவாருங்கள் நானே இனிவரும் காலங்களில் கோடியை ஏற்றப் பண்ணுகிறேன் என்று. யாரும் கொண்டுவரவில்லை. அவர்களிடம் இருக்கும் கடிதம் தனிப்பட்ட ஒருவருடையது.

 

BTF புலிக் கோடிக்கும் தேசியத் தலைவருக்கும் தடை விதிக்கவில்லை. அனுமதி வழங்கும் கவுன்சிலால் சொல்லப்படுபவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை

அனுமதி எடுத்தவர்களுக்கு உண்டுதானே நெடுக்ஸ்.

கடந்த மாவீரர் நாளில் தலைவரின் படம் எக்செல் மண்டபத்ஹில் ,எங்காவது கண்டீர்களா ??? ஏனெனில் படம் உள்ளே வரக்கூடாது என்பது அவர்களின் சட்டம். தலைவரின் படம் இல்லாமல் மாவீரர் நாள் நாம் செய்ய மாட்டோம் என்று TCC கூறியதா ???? கடந்த கலண்டரில் கூட அதனால்த்தான் அண்ணனின் படத்தை முழுதாகப் போடவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ????

 

நெடுக்ஸ் கனக்க வேண்டாம். உங்கள் நாட்டுக்காக ஒரு வருடம் உங்கள் இடத்ஹில் இருக்கும் MP ஒருவருடன் வேலை செய்து பாருங்கள். அப்ப தெரியும் BTF in கஷ்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குற்றச்சாட்டுக்கள் பலவற்றில் இயலாமை தான் தென்படுகிறது.

 

தமிழீழ தேசியக் கொடியை.. கடந்த சிறீலங்கா கிரிக்கெட் போட்டியில் காட்ட கொண்டு சென்ற போதும்... இப்படி தடைகள் குறித்துப் பேசப்பட்டது. ஆனால்.. சரியான விளக்கம் அளிக்கப்பட்ட பின் கொடி அனுமதிக்கப்பட்டது.

 

அதேபோல்.. காமன்வெல்த் தலைவர் ராணியின் யுப்லி விருந்துக்கு வந்த போதும்.. இதே பிரச்சனை எழுப்பப்பட்டது.

 

பிரித்தானியா தனக்கு தேவையான போது.. கொடி விவகாரத்தை தூக்கிப் பிடிப்பதும்.. பின்னர் கைவிடுவதும்.. முதல்முறை அல்ல. இருந்தாலும்.. கொடியை பிரித்தானிய மண்ணில் பிடித்தே தீருவோம்.. என்ற TYO உட்பட்ட அமைப்புக்களின் கடின உழைப்பால் தான் அது பறக்கிறது.

 

BTF முடியாது என்று கருதினால்.. ஒன்றையும் பிற்காலத்தில் செய்ய முடியாது. போராடித்தான் எங்கும் நீதியை பெற வேண்டும்.

 

ஏன் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகள் உட்பட.. BTF சாராத பலரும் எம் பி க்களோடு சேர்ந்து இயங்கினம். எம்பிக்களைப் பொறுத்தவரை அந்தத் தொகுதி வாக்காளர்களின் வாக்குத்தான் அவர்களின் குறி. கொடியோ... தமிழீழ விடுதலையோ.. தமிழருக்கு நீதியோ அல்ல. இதனை முதலில் நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தமிழ் வாக்குகளை வைச்சுக் கொண்டு.. நிறையவே எம்பிக்களூடு செய்யலாம். அப்படி செய்கிறார்கள்.

 

ஆக.. கொடி என்பது.. BTF தங்களை புலிசாரா ஆட்கள் என்று காட்டிக்கொள்ள முன்னெடுக்கும் ஒன்றே தவிர.. அதன் மூலம் தான்.. எம் பிக்களை.. கவுண்சிலை அணுக முடியும் என்பது பொய்.

 

மாவீரர் தின நிகழ்வில்.. புலிக்கொடி வைக்கப்பட்டது. புலிச் சின்னம் வைக்கப்பட்டது. தேசிய தலைவரின் படம் திரையில் வந்து போனது. யாரும் வந்து தடுக்கவில்லையே..???!

 

மேலும்.. சிவப்பு மஞ்சள் கொடியும் பறந்தது. அதனைப் பறக்க விடுவதில் கூட  BTF க்கு எம்பி மார் தடை போடினமோ..??????!

 

BTF இன் கடந்த கால நடவடிக்கைகளை உற்றுநோக்கினால்.. அவர்கள் செல்லும் பாதை தமிழ் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவே தெரிகிறது. மிக விரைவில்.. லைக்கா மொபைல் காரர் போல.. BTF மகிந்த கூட கைகுலுக்கினால் கூட ஆச்சரியம் இல்லை..! அதனை நோக்கியே அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். சமரச அரசியலை.. பிரித்தானியாவில் திணிப்பதே BTF இன் இன்றைய நாசகார முடிவுகளுக்கு முக்கிய காரணம். இதன் மூலம் பிரித்தானிய ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக தாங்கள் இருந்து கொள்ளலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். அவ்வளவே..!

Link to comment
Share on other sites

வெள்ளை எம்பிக்கள் கொடி பிடிக்க வேண்டாம் எண்டு சொல்லுகினம் ..சரி.. உதில் கனபேர் தலைவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தானே.. அவர்களுடன் எப்படி கதைக்கினம் எம்பிமார்?? :rolleyes: அல்லது எம்பிமாருக்கு ஒளிச்சு கதைக்கினமா?? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TYO_UK_June_23_2013_03_104178_445.jpg

 

TYO_UK_June_23_2013_01.jpg

 

 

இளையோரால் தான் இந்தக் கொடியே பறக்குது. BTF எப்பவும் பதுங்கினது தான் மிச்சம். பண்ணினது ஒன்றுமில்ல. எனியாவது பதுங்காமல்.. பப்ளிக்க.. மற்றவர்களோடு சேர்ந்தியங்க முன்வரட்டும். இல்ல மகிந்த கூட கைகோர்க்கட்டும். பிரச்சனை இல்லை..! எல்லாரும் ஒற்றுமையா போய் கேட்டால் கவுன்சில் தடுக்காது. எம்பி யோசிப்பான். இது நான்.. புலி இல்லை.. நீ புலி என்று வேசம் போட்டுக் கொண்டு.. போனால் இதுதான் ஆகும் BTF காரர்களே. மக்கள் முட்டாள்கள் அல்ல..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoist.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.