Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம்

Featured Replies

  • Replies 113
  • Views 17.4k
  • Created
  • Last Reply

ஆணிவேர் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்கு நன்றி.

எப்ப தியேட்டருக்கு வருது என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிவேர் திரைக்கு வருகின்றது.

எம்மவரின் திரைப்படம் ஐரோப்பிய திரையரங்குகளுக்கு வர இருக்கின்றது.

மேலதிக விபரங்கள் விரைவில்

வாழ்த்துக்கள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம் ஆணிவேர்.12:04:28

ஈழத்தமிழர் வரலாற்றில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட முழுநீளத் தமிழ் திiர்படமான ஆணி வேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ளுழுர்ழு ளுஊசுநுநுNஐNபு சுழுயுனு ல் அமைந்துள்ள சினிமா திரையரங்கில் ஊடகவியலாளர்களுக்காக காண்பிக்கப்பட்டது.

லண்டனில் இருந்து செயல்படுகின்ற தமிழ் இலத்திரனில் அச்சு ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். முதன்முறையாக தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு நிகராக உயர் தொழில் நுட்பத்துடன் ஆணிவேர் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தை இந்த திரைப்படம் சொல்கின்றது. ஸ்ரீலங்கா இராணுவ அக்குமுறையினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்இ இடப்பெயர்வுகள் என்பன படத்தின் முக்கியமானவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ஈ

  • தொடங்கியவர்

இம் மாத இறுதி முதல் இலண்டனில் காண்பிக்கப்படவுள்ளது.

anivear2wv6.jpg

ஆணிவேர்

வெற்றி பெற

இதயபூர்வமான வாழ்த்துகள்!

ஆணிவேர் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்கு நன்றி. திரைப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களும்.

ஆனால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம் ஆணிவேர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை??.

ஆணிவேர் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்கு நன்றி. திரைப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களும்.

ஆனால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம் ஆணிவேர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை??.

தனித்தமிழரின் முயற்சியாக இருக்கலாம், வாடைக்காற்று எல்லாம் சிங்கள கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் முடிந்திருக்காது, படத்துறையில் அனுபமுள்ள அஜீவன் அண்ணாதெரிந்தால் சொல்லுங்க?

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இலகுவாக விற்ககூடிய வகையில் ஆணிவேர் திரைப்படத்தின் ஆரம்ப விளம்பரங்கள் அமைந்துள்ளதால் தம்பி திரைப்படம் பற்றி ஷோபாசக்தி எழுதிய விமர்சனத்தை இங்கு தருவது ஆணிவேர் பற்றிய புரிதலுக்கு ஒரு உதவியாக இருக்கும்.

தம்பி

திரை விமர்சனம்

திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான காதல் படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட தம்பி திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன் இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் படையப்பா, பரமசிவன், திருப்பாச்சி போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து நிறுத்திக் கொள்வோம் என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன் என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்? என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :

மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது என்று கூறத் தம்பி பொழைச்சிட்டான் ……………

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?

“தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் பாதை தெரியுது பார், ஏழாவது மனிதன், கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை நிறப்பிரிகை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. கப்டன் பிரபாகரன் படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. ‘வைஜந்தி அய்.பி.எஸ்’ திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?

தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் ‘உண்மை’ இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் ‘தென் செய்தி’ இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?

எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் ‘நாளை நமதே” திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை……!

தென்செய்தி இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் பசும்பொன் திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்.

நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது சண்டாளா எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். ஆறு சண்டாளர்கள் என இவர்களைப் பற்றி பகிரதி என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் கதாநாயகி, கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், மனதில் உறுதி வேண்டும், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி,ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார

சுப்பராக இருக்கு அவுஸ்ரேலியா பக்கம் காண்பிக்கபடாதா

யாராவது தரவிறக்க இணைப்பு இருந்தால் தாருங்கோ

நன்றி சமாதானம் உங்கள் பதிவிற்கு

இத்திரைப்படத்தின் இயக்குனர் உட்பட முக்கிய கதாபாத்திரங்களெல்லாம் இந்தியக் கலைஞர்கள். அத்துடன் தொழில்நுட்ப வேலைகள் உட்பட பல இந்தியாவிலேயே செய்யப்பட்டுள்ளன.

விளம்பர உத்திக்காக நம்மவர்களே நம்மவர் தலையில் மிளகாய் அரைக்கும் போது அடுத்தவனைக் குறைசொல்லி என்ன பயன்??????????

இல்லை வசம்பு அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள் youtube இருக்கும் காட்சிகளை பார்த்திட்டு கதையுங்கோ

கிருசாந்தியின் கதை போல இருக்குது :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிவேர் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்கு நன்றி. திரைப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களும்.

ஆனால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம் ஆணிவேர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை??.

புலம் பெயர் நாடுகளில் எம்மவர்கள் எடுக்கும் படங்கள் இதில் வராதா?. தமிழச்சி, மண்,பூக்கள்

ஈழவன்85 எழுதியது:

இல்லை வசம்பு அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள் youtube இருக்கும் காட்சிகளை பார்த்திட்டு கதையுங்கோ

நான் அதனைப் பார்த்தவிட்டு பாராட்டியுமுள்ளேன். ஆனால் நீங்கள் தான் நான் எதனைக் குறித்து விமர்சித்துள்ளேன் என்பதை அறியவில்லை. தயவு செய்து இங்கு நான் எழுதியவற்றை முழுமையாக (பக் 1, பக் 2) வாசித்துப் பாருங்கள். பின்பு உங்களுக்குப் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் திரைப்படம் என்பது தவறுதான். ஆனாலும் இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் வேண்டுகோளின் பேரிலேயே தயாரிக்கப்பட்டதாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். தவிரவும் இந்திய கலைஞர்களை விட ஈழத்துக்கலைஞர்களே அதிகம் நடித்துமிருக்கிறார்கள். நந்தாவும் இயக்குனரும் மட்டுமே வன்னி மற்றும் யாழப்பாண பகுதிகளுக்கு வந்திருந்தார்கள். படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் தமிழ்ச்செல்வன். நேரடியாக சொன்னால் புலிகளின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வில் தமிழீழத்தின் முதலாவது பெரிய திரை திரைப்படம் என்றே சொல்லப்பட்டது. அதாவது இதற்கு முன்பு எடுக்கப்பட்டவை வீடியோ திரைப்படங்கள்.

நன்றி காவடி நானும் அதைத்தான் நினைச்சேன்

காவடி எழுதியது:

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் திரைப்படம் என்பது தவறுதான். ஆனாலும் இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் வேண்டுகோளின் பேரிலேயே தயாரிக்கப்பட்டதாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். தவிரவும் இந்திய கலைஞர்களை விட ஈழத்துக்கலைஞர்களே அதிகம் நடித்துமிருக்கிறார்கள். நந்தாவும் இயக்குனரும் மட்டுமே வன்னி மற்றும் யாழப்பாண பகுதிகளுக்கு வந்திருந்தார்கள். படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் தமிழ்ச்செல்வன். நேரடியாக சொன்னால் புலிகளின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வில் தமிழீழத்தின் முதலாவது பெரிய திரை திரைப்படம் என்றே சொல்லப்பட்டது. அதாவது இதற்கு முன்பு எடுக்கப்பட்டவை வீடியோ திரைப்படங்கள்.

காவடி நீங்கள் இதுவரை ஈழத்தமிழ்ப்படங்கள் பார்த்ததில்லையா?? உங்கள் அறியாமைக்காக மனம் வருந்துகின்றேன். நீங்கள் மட்டுமல்ல உங்களைப்போல் நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்பதற்கு உங்களைத் தொடர்ந்து வந்த கருத்துக்கள் சில உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பிழையை மறைக்க தயவு செய்து மேலும் மேலும் பிழையான கருத்துக்களை எழுத முயலவேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி நீங்கள் இதுவரை ஈழத்தமிழ்ப்படங்கள் பார்த்ததில்லையா?? உங்கள் அறியாமைக்காக மனம் வருந்துகின்றேன். நீங்கள் மட்டுமல்ல உங்களைப்போல் நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்பதற்கு உங்களைத் தொடர்ந்து வந்த கருத்துக்கள் சில உறுதிப்படுத்துகின்றன.

நான் பெரிய திரையில் ஈழத்தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன். தமிழீழத் திரைப்படங்கள் பார்த்ததில்லை. தவிர அவ்வாறு சொல்லப்பட்டது என்று தானே சொல்லியிருக்கிறேன்

ஆனால் அந்த நிகழ்வில் தமிழீழத்தின் முதலாவது பெரிய திரை திரைப்படம் என்றே சொல்லப்பட்டது

கொழும்பை தயாரிப்பு மையமாக கொண்டு சிறிலங்கா திரைப்பட கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அல்லது அவர்களிடம் தணிக்கை பெற்று தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் தமிமீழ திரைப்படங்களா தெரியவில்லை..

வேண்டுமானால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து தமிழீழத்தில் வெளிவந்த அதாவது சிறிலங்கா அரசின் அல்லது அரச கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி வெளிவராத அதே நேரம் வீடியோ திரைப்படம் அல்லாத ஒரு திரைப்படம் சொல்லுங்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.