Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கேள்விப்பட்டேன்

திரையரங்கள் நிறைந்திருந்தது என்று

  • Replies 113
  • Views 17.4k
  • Created
  • Last Reply

கிழக்கு, வடக்கு லண்டன் பக்கம் படத்தை திரையிட மாட்டார்களாமா...??

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் திரைப்படம் என்பது தவறுதான். ஆனாலும் இது தமிழ் தொலைக்காட்சி இணையத்தை சேர்ந்த பிரபாகரன்

இவர் பெரும் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறதாம் சுவிஸிலை இருக்கிறவைதான் உண்மையை கூறவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... "ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது" உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்" என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.

மிச்சத்த வாசிக்க இங்க அமத்தி வாசியுங்கோ...............................................

நான் கடந்த சனி பார்த்தனான்.எனக்குள்ளே ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை. எனக்குத் தெரிந்து கவுஸ் புல்லாக இலண்டனில் ஓடிய முதலாவது தமிழ்ப் படம் என்ற பெருமையும் இதற்குத்தான்.

படத்தின்பிரமாண்டத்தின் முன்னே கதையினை சில இடங்களில் இடறுவதை கவனிக்க தவறி விட்டார்கள்.

உம்: 1995 இடப்பெயர்வின் முன்னரே யாழ் நக

ரம் ஸிரிலங்கா இராணுவம் வசமிருந்தது போன்று காட்டியிருப்பது. இப்படிச் சில.

இவற்றை ஓரம் கட்டி விட்டுப் பார்த்தால் தமிழீழ திரைப்படத்துறையில் இத் திரைப்படம் நிச்சயமாக ஆரோக்கியமான மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது .

எம்மவர் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். :cry: :wink:

படத்தின்பிரமாண்டத்தின் முன்னே கதையினை சில இடங்களில் இடறுவதை கவனிக்க தவறி விட்டார்கள்.

உம்: 1995 இடப்பெயர்வின் முன்னரே யாழ் நக

ரம் ஸிரிலங்கா இராணுவம் வசமிருந்தது போன்று காட்டியிருப்பது. இப்படிச் சில.

உங்கள் விமர்சனத்துக்கு நண்றி....

ஒருவேளை "தீவகம்" கோட்டப் பகுதிமக்களை நினைவில் வைத்து செதுக்க பட்டு இருக்கலாம்...! படத்தை பார்த்துவிட்டு சொல்வதுதான் சரியா இருக்கும்...! தூரமான இடங்களில்த்தான் திரையிடுகிறார்கள்.. ஆதலாம் பார்க்க போக முடியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கு...!

untitledtx7.png

ம்ம் நான் இன்று பார்த்தனான். படத்தில் அழகாகக் எல்லா விடய்டங்களையும் கூறி இருந்தார்கள் ஆனால் படத்திஒல் சில ஒழுங்குகள் மாறிக் காட்ட்சிப் படுத்தியுள்ளார்கள். உதராணமாக 1995 இடம்பெயர்வின் பின்னரே யாழ் நகரம் இராணுவம் வசமிருந்தது அத்துடன் பாரிய இடம்பெயர்வின் பின்னரே கிருசாந்தி கொலை செய்யப்பட்டமை இப்படி சில நிகழ்வுகளைக் கூறலாம். இவ்வாற சில தவறுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இத் திரைப்படம் நிச்சயமாக ஆரோக்கியமான படம் என்றே கூற வேண்டும். அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ம்ம் இன்னுமொரு சுவராசியமான விடயம் என்ன என்றால் தியேட்டரில் நான் இருந்த இருக்கைக்கு பின்னால் ஒரு குடும்பம் அம்மா அப்பா இரண்டு பிள்ளைகள் ஒரு பிள்ளைக்கு ஒரு 6 வயது இருக்கும் மற்ற பிள்ளைக்கு ஒரு 4 வயது இருக்கும், அவை இரண்டு பேரும் கேள்விமேல கேள்வி கேட்டிட்டு இருந்தினம் அவைட அம்மா அப்பாவை.

எஙகட அப்பம்மாவும் அங்க தானேம்மா இருக்கிறா அங்கயும் இப்படி பிரச்சினையா அவையள் எப்படி அங்க இருக்கினம் அதை விட இது சந்தியாவா மற்றவவா? சிவசாந்தி செத்துப் போனவா? ஏன் இப்ப ஆமிக்காரன் அவை அடிசவன் நாங்கள் போனாலும் இப்படியோ செய்வினம் மற்றது அவர் செத்தவர் எப்படித் திரும்ப வந்தவர்? அப்ப அவருக்கு வீடு கிடைச்சுட்டோ என்டு? அந்த அப்பா அம்மாவும் சலிக்காமல் அவர்களுக்கு புரியுற மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை எல்லாம் விட என்ன பகிடி எண்டால் இதுல யாரம்மா ஆணி ஆமிக்காரனோ எண்டு கேட்டினம் எனக்கு எண்டால் சிரிப்பை அடக்க முடியலை. அப்ப அவட அம்மா சொன்னா ஆணி இல்லை ஆணி வேர் எண்டதை ஆங்கிலத்துல சொன்னா இப்படி நிறைய மிச்சம் பேந்து சொல்ல்லுறன்

நன்றி வணக்கம்

கட்டாயம் எல்லோரும் பாருங்கோ என்ன.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்ள் கேள்வி கேட்டு அதை பார்ப்பதும் அழகுதான்.

மேலும் தொடருங்க இரசிகை அம்மணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நான் இன்று பார்த்தனான். படத்தில் அழகாகக் எல்லா விடய்டங்களையும் கூறி இருந்தார்கள் ஆனால் படத்திஒல் சில ஒழுங்குகள் மாறிக் காட்ட்சிப் படுத்தியுள்ளார்கள். உதராணமாக 1995 இடம்பெயர்வின் பின்னரே யாழ் நகரம் இராணுவம் வசமிருந்தது அத்துடன் பாரிய இடம்பெயர்வின் பின்னரே கிருசாந்தி கொலை செய்யப்பட்டமை இப்படி சில நிகழ்வுகளைக் கூறலாம். இவ்வாற சில தவறுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இத் திரைப்படம் நிச்சயமாக ஆரோக்கியமான படம் என்றே கூற வேண்டும். அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ம்ம் இன்னுமொரு சுவராசியமான விடயம் என்ன என்றால் தியேட்டரில் நான் இருந்த இருக்கைக்கு பின்னால் ஒரு குடும்பம் அம்மா அப்பா இரண்டு பிள்ளைகள் ஒரு பிள்ளைக்கு ஒரு 6 வயது இருக்கும் மற்ற பிள்ளைக்கு ஒரு 4 வயது இருக்கும், அவை இரண்டு பேரும் கேள்விமேல கேள்வி கேட்டிட்டு இருந்தினம் அவைட அம்மா அப்பாவை.

எஙகட அப்பம்மாவும் அங்க தானேம்மா இருக்கிறா அங்கயும் இப்படி பிரச்சினையா அவையள் எப்படி அங்க இருக்கினம் அதை விட இது சந்தியாவா மற்றவவா? சிவசாந்தி செத்துப் போனவா? ஏன் இப்ப ஆமிக்காரன் அவை அடிசவன் நாங்கள் போனாலும் இப்படியோ செய்வினம் மற்றது அவர் செத்தவர் எப்படித் திரும்ப வந்தவர்? அப்ப அவருக்கு வீடு கிடைச்சுட்டோ என்டு? அந்த அப்பா அம்மாவும் சலிக்காமல் அவர்களுக்கு புரியுற மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை எல்லாம் விட என்ன பகிடி எண்டால் இதுல யாரம்மா ஆணி ஆமிக்காரனோ எண்டு கேட்டினம் எனக்கு எண்டால் சிரிப்பை அடக்க முடியலை. அப்ப அவட அம்மா சொன்னா ஆணி இல்லை ஆணி வேர் எண்டதை ஆங்கிலத்துல சொன்னா இப்படி நிறைய மிச்சம் பேந்து சொல்ல்லுறன்

நன்றி வணக்கம்

கட்டாயம் எல்லோரும் பாருங்கோ என்ன.

நன்றி தங்கை :lol:. இது Totonto திரையரங்குகளிற்கு வரேக்க நிச்சயமா பாக்கிறன்.

[நன்றி தங்கை :lol:. இது Totonto திரையரங்குகளிற்கு வரேக்க நிச்சயமா பாக்கிறன்.

ஓம் நிச்சயமாக பாருங்கோ

அதுல 95 இடம்பெயர்வுல மக்கள் நடந்து போறது தண்ணி இல்லாமல் மழை பெய்ய அதை ஏந்திக் குடிச்சது அது எல்லாம் பார்த்த உடனே பழைய நினைவுகள் வந்துட்டு. இப்ப ஒரே அந்த நினைவுகளை கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட நிலமை விளங்குது தங்கை. என்ன செய்யிறது எல்லாரும் பட்டது தானே. கவலையை விட்டிட்டு படிப்பில் கவனமெடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நிச்சயமாக பாருங்கோ

அதுல 95 இடம்பெயர்வுல மக்கள் நடந்து போறது தண்ணி இல்லாமல் மழை பெய்ய அதை ஏந்திக் குடிச்சது அது எல்லாம் பார்த்த உடனே பழைய நினைவுகள் வந்துட்டு. இப்ப ஒரே அந்த நினைவுகளை கிடக்கு. :lol:

உண்மையில் யாராலும் மறக்கமுடியாத நினைவுகள் தான். அன்று தான் சில உண்மைகளை எமக்கு உலகம் சொன்னது. எம்மைக் காக்க நாம் தான் போராட வேண்டும். அன்னியரை நம்பியல்ல என்ற தத்துவத்தை!

ஏதோ, இக்காலத்தில் அதை உணர்ந்து கொண்டால் தான் சரி!

உங்கட நிலமை விளங்குது தங்கை. என்ன செய்யிறது எல்லாரும் பட்டது தானே. கவலையை விட்டிட்டு படிப்பில் கவனமெடுங்கோ.

ஓம் அண்ணா நேற்று முழுக்க உந்த படத்தை பற்றித்தான் நானும் எண்ட ரூமேற்றும் கதைச்சு நம்மடை பழைய நினைவுகள் வந்து இரண்டு பேரும் திருப்ப அந்த பயந்து வாழ்ந்த காலத்தை நினைச்சு அழுது படுக்க 4 மணியாப்போச்சு. :cry: :cry:

உண்மையில் யாராலும் மறக்கமுடியாத நினைவுகள் தான். அன்று தான் சில உண்மைகளை எமக்கு உலகம் சொன்னது. எம்மைக் காக்க நாம் தான் போராட வேண்டும். அன்னியரை நம்பியல்ல என்ற தத்துவத்தை!

ஏதோ, இக்காலத்தில் அதை உணர்ந்து கொண்டால் தான் சரி!

ஓம் தூயவன்

அந்த பின்னால நடந்த சம்பாசணையை நான் ஏன் இங்க எழுதினான் என்றால். அதாவது இந்தப்படம் பார்த்த எங்கட இங்கேயே பிறந்து வளருர புள்ளையளுக்கு நாம் பட்ட கஷ்டத்தை கூறி இருக்கு அந்த வகையில இந்த படம் ஒரு வெற்றி என்றுதான் சொல்லணும்.

ஓ நான் இதைப்பார்க்கலை இணைப்புக்கு நன்ரி புரவசர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் தூயவன்

அந்த பின்னால நடந்த சம்பாசணையை நான் ஏன் இங்க எழுதினான் என்றால். அதாவது இந்தப்படம் பார்த்த எங்கட இங்கேயே பிறந்து வளருர புள்ளையளுக்கு நாம் பட்ட கஷ்டத்தை கூறி இருக்கு

நிச்சயமாக வெற்றி தான்.

ஆணிவேர் - நந்தா

எழுதியவர் நீலா

வுரநளனயலஇ 03 ழுஉவழடிநச 2006

"எதிர் பாராத இடத்திலிருந்து எனக்கு கிடைத்த வெற்றி இது" என்று சொல்கிறார் ஆணிவேர் படத்தின் நாயகன் நந்தா. ஈழத்து மண்வாசனையை ஆணிவேர் படத்தின் மூலம் நுகர்ந்து வந்திருக்கும் நந்தா கோடம்பாக்கத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர். பொள்ளாச்சியை சொந்த ஊராக கொண்ட நந்தாவுக்கு ஈழ சினிமாவில் ஆர்வம் வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை....

"இயக்குநர் ஜாணோட அசிஸ்டெண்ட் என்னோட நண்பர். ஒரு நாள் அவரிடம் ஜாண் சாரைப் பற்றி விசாரித்த போது அவர் சொன்னார் இப்போது அவர் ஈழ மக்களுக்காக ஒரு சினிமா பண்ணப் போகிறார் என்றார். அவர் சொன்ன போது மணி இரவு பதினொன்று அடுத்த அரை மணி நேரத்தில் ஜாண் சாரோட வீட்டில் இருந்தேன் 'நீங்க ஈழ சினிமா பண்ணபோறதா கேள்வி பட்டேன்.அதில் சின்னதாக ஒரு கேரக்டர் கொடுத்தா போதும்.ஆனால் கண்டிப்பாக எனக்கு இந்த சான்ஸ் வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டேன்'. நான் ஏன் அப்படி கேட்டேண்ணா?முதலில் நான் தமிழன் எனக்கு எப்போதுமே அந்த உணர்வு உண்டு. ஈழ மக்கள் விடுதலக்காக போராடுறாங்க இந்த உலகத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதற்காக நடக்கிற முதல் சுதந்திர போர் என்பதாக ஈழ விடுதலைப் போராட்டத்தை நான் புரிந்திருந்தேன். மற்ற படி அரசியல் தத்துவமோ ஆயுதப்போராட்டத்தின் வலிமை பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாது.கல்லூரி முடித்துவிட்டு நடிப்பதற்க்காக சென்னைக்கு வந்தவன் நான் அவளவுதான்....இது இப்படியிருக்க ஜாண் சார் கூப்பிட்டு 'நீதான் அந்த படத்தில் மிக முக்கியமான ஈழத்தில் வாழும் மருத்துவராக நடிக்கப்போகிறாய்' என்று சொன்னார் நம்பமுடியவில்லை நடித்து முடித்துவிட்டேன். இப்போது இயக்குநர் சீமான் ஒரு நாள் போன் பண்ணி 'தம்பி ஆணிவேர் படம் பார்த்தேன்.மிகவும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறாய்' என்று சொன்னார்.தொடர்ந்து கவிஞர் காசி ஆனந்தன் இயக்குநர் செல்வபாரதி எல்லாம் பேசினாங்க. வைகோ போன் பண்ணி 'சந்தோசமாக இருக்கு நீங்க நல்லா வருவீங்க' என்று வாழ்த்தினார் ஒரு நடிகனாக கோடம்பாக்கத்தில் நான்கு படங்கள் பண்ணிவிட்டேன். ஆனால் ஆணிவேர்தான் என்னோட முதல் படம் ஏண்ணா அதுதான் என்னை இன்னும் கொஞ்சம் பொறுப்பான ஆளாக மாற்றியிருக்கிறது" என்கிறார் நடிகர் நந்தா...."எனக்கு ஆணிவேர் ஒரு ர்ளைவழசiஉயட புகைவ" என்கிறார்....

நீங்க ஆணிவேர் படத்தில் நடிப்பதாக முடிவு செய்த போது யாரும் உங்களைத் தடுக்கவில்லயா?

என்னைப் பற்றி ஒரு விஷயத்தை தெளிவாக்கிவிடுகிறேன். நான் நடித்த முதல் படமான மௌனம் பேசியதேஇ புன்னகைப்பூவேஇ செல்வம்இ கோடம்பாக்கம் போன்ற படங்கள் எல்லாமே நல்ல சினிமாக்கள். கமர்ஷியலாக அது வெற்றி பெற்றதா இல்லயா என்பதெல்லாம் இரண்டாவது. இந்த படங்களில் கமிட்டானதெல்லாம் என்னோட சொந்த முடிவுகள். தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் என்னோட கேரியரில் தலயிடுவதில்லை என்னோட மனசுக்கு சரி என்று தோன்றினால் அதை செய்துவிடுவேன். அதே மாதிரித்தான் ஆணிவேர் படமும். நானாக முடிவு செய்தேன் போய் நடித்தேன் இரண்டு மாதம் கழித்து தமிழகத்க்கு வந்த பிறகு வீட்டில் சொன்னேன் அவளவுதான். கொஞ்சம் ரிஸ்க்கான வேலையில் ஈடுபட்டால் சந்தோசமாகத்தான் இருக்கு...

கோடம்பாக்கத்தில் ஒரு ஹீரோவாக இருப்பதற்கும் யுத்த பூமியான ஈழத்தில் போய் ஒரு நடிகராக தங்கியிருந்ததற்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?

கோடம்பாக்கத்தில் சினிமாவுக்கென்று ஒரு வணிக பார்முலா இருக்கு. ஈழத்தில் அப்படியில்ல அவங்க சினிமாவை வர்த்தகமாக நினத்து பார்க்கவே முடியாது. புதுடில்லிஇ மும்பை மாதிரியான நகரங்களில் நடக்கும் சில சர்வதேச பட விழாக்களுக்கு நான் போயிருக்கிறேன். அங்கே சிங்கள படங்களைப் பார்த்திருக்கிறேன்.அது அவங்களோட விஷயங்களை மட்டுமே பேசுவதாக இருக்கும்.அதே சமயம் யுத்தத்தால் இருபதாண்டுகள் பாதிக்கப்பட்ட ஈரான். மற்றும் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற லத்தீன் அமெரிக்க படங்களும் வரும் ஆனால் இத்தன வருஷமாக ஏன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம் இருந் சினிமா வரவில்லை என்ற கேள்வி எனக்குள் தேங்கி நிற்கும். இதையெல்லாம் உணர்ந்தாலும் அடுத்த நாள் கோடம்பாக்கத்தில் வந்து என்னோட பணிகளை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும். பெஸ்டிவலுக்கு வருகிற படங்கள் கூட விற்ப்பனை உத்திரவாதம் உள்ள படங்கள்தான். முதலில் ஜாண் சார் படம் பண்னுகிறார் என்றவுடன் நிச்சயமாக பண நோக்கமில்லாமல் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கோடம்பாக்கத்தில் எனக்கு கேரவேன் (நடிகர்கள் ஷ§ட்டிங் ஸ்பாட்டில் தங்கியிருக்கும் நவீன வசதிகளை கொண்ட வேன்) உண்டு. தயாரிப்பாளரில் தொடங்கி புரொடக்ஷன் மேனஜர் டீ தருகிற தம்பி வரை அதற்கென்று ஒரு சிஸ்டம் இருக்கு ஆனா ஈழ சினிமா இப்போதானே தொடங்கியிருக்கு. கோடம்பாக்கத்திற்கு நேர்மாறறான சூழல்தான் ஈழத்தில் இருந்த ஏராளமான கதைகளோடு யுத்த பூமியில் இன்னும் வாழ்கிற மனிதர்களுக்காக அவங்களோட பூமியில் போய் சினிமா பண்ணின சந்தோசமாக இருக்கு....

ஒரு நடிகராக ஆணிவேர் உங்களுக்கு ஒரு சினிமா அவளவுதான் இல்லையா? தனிப்பட்ட முறையில் ஈழத்தின் வாழ்க்கைச் சூழல் உங்களை தொல்லைப் படுத்தியதா?

ஒரு நடிகராக நான் ஆணிவேரில் நடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினக்கிறேன். ஏனென்றால் இது நானே விரும்பி கேட்ட வாய்ப்பு. அப்புறம் எப்படி தொழிலாக இருக்க முடியும். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் நான் ஈழத்தில் தங்கியிருந்த காலத்தில் கோடம்பாக்கத்தில் ஒரு படத்தில் நல்ல ஊதியம் வாங்கி கொண்டு நடித்திருக்க முடியும். தொழில்இ நடிப்புஇ ஊதியம்இ சினிமா இதையெல்லாம் தாண்டி எனக்கும் ஆணிவேர் படப்பிடிப்பு குழுவுக்கும் ஒரு மனரீதியான நெருக்கம் ஈழ மக்களிடம் இருந்தது என்பதுதான் உண்மை. ஏனென்றால் தமிழகத்க்கு வந்து சேர்ந்த பிறகு ஈழத்திலிருந்து வருகிற செய்திகள் எல்லாமே நல்ல செய்திகள் இல்லை. ஒரு யுத்தத்திற்கு எதிரான படத்தில் நடித்துவிட்டு அதுவும் அந்த பூமியிலேயே போய் நடித்துவிட்டு வந்தால் எப்படி பாதிப்பில்லாமல் இருக்க முடியும். எல்லோர் வீட்டிலும் இழப்பு இருக்கிறது. ஒரு வேளை யாருடைய வீட்டிலாவது இழப்பு இல்லாமல் இருந்தால் அவர்களுடைய மனவேதனை இன்னும் அதிகம். காரணம் அவர்களின் பக்கத்து வீடுகள் பற்றி எரிகின்றன. அந்த தீ எப்போ தங்கள் வீட்டுக்கு தாவுமோ என்கிற பயம் உண்மையில் அந்த பயம் எனக்கும் இருந்தது. ஏனென்றால் அங்கு மனித உயிர்களுக்கு மதிப்பில்லை...

நடிப்பதற்க்கு முன்னால் ஈழ மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்களை படித்தீர்களா?

ஆமாம் அனுபவித்து படித்தேன். மிக முக்கியமாக மொழியில் கவனம் செலுத்தினேன் தமிழ்நாட்டில் மூச்சுக்கு முந்நூறு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுவோம். நம்மை அறியாமலேயே தமிழ் கொலை செய்கிறோம் நாம் ஆனா அவங்க இன்னும் மொழியை கொண்டாடுகிறார்கள். சிங்களம் உட்பட எந்த மொழியும் அங்கு தமிழை அழித்துவிட வில்லை. வியப்பாக இருந்த நான் ஒரு தமிழாசிரியரிடம் இந்த தூய தமிழ் பற்றி கேட்டேன் அவர் சொன்னார்.சிங்கள அரசு தனிச்சிங்களம் என்கிற சட்டம் ஒன்றை கொண்டு வந்ததாம் தமிழ் படித்தால்தான் இனி இலங்கையில் வேலை என்று. அப்போ கூட சிங்களத்தை படித்து அதன் மூலம் கிடைக்கும் வேலையே தேவையில்லை என்று ஈழத்தமிழர்கள் மறுத்து பள்ளி கல்லூரிகளையே புறக்கணித்தார்களாம். சட்டம் அழிந்துவிட்டது ஆனால் தமிழ் இன்னும் வாழ்கிறது. அதே மாதிரி அவங்க பேசுற தமிழில் இன்னும் இசை நயம் இருக்குது. மட்டகளப்பில் ஒரு வழக்கு. திருகோணமலயில் ஒரு வழக்கு. யாழ்பாணத்தில்இ மலயகத்தில் என்று விதவிதமான இசை லயத்தோடு ஆனால் தமிழை கொல்லாமல் வாழ்கிறார்கள். நான் மிகவும் கடினப்பட்டு அவங்களோட மொழிக்கு பழகினேன்.ஆணிவேர் படத்தை ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும் என்பதான் இன்னும் இயல்பாக இருக்கட்டும் என்று அதற்கு மட்டும் வேறு நபர்களை வைத்து டப்பிங் பேசினார்கள்.

ஈழத்திலிருந்து தொடர்ந்து இந்த வாய்ப்பு வந்தால் நடிப்பீங்களா?

சந்தோசமாக செய்வேன். ஆனா ஈழ சினிமா அவங்களோட சினிமா ஈழ விடுதலக்காக அந்த மக்கள்தானே போராடுறாங்க. ஊதியத்க்கு ஆள் அமர்த்தி போராடுனா நல்லயிருக்குமா? அதே மாதிரித்தான் சினிமாவும் தலமுறை தலமுறையா பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து நடிகர்கள் வரணும். அவங்களோட சினிமாவை அவங்களே எடுக்கணும் அப்போதுதான் அத இரத்தமும் சதையுமாக இருக்கும் மற்ற படி எனக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன் இல்ல..இல்ல போராடுவேன்....நடிப்பும் ஒரு ஆயுதம் தானே? என்னால் முடிந்தது அதுதான்.....

http://www.salanam.com/index.php?option=co...id=87&Itemid=47

AANIVAER

Friday, 06 October 2006

ஆணிவேர் தயாரிப்பாளர் யார்?

சிறப்புக் கட்டுரை.12:08:16

தமிழ் திரைக்கண் வெளியீடாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ஆணிவேர். ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இந்தப்படம் வெளிவந்துள்ளது. 5 ஆண்டுகால தமிழர்களுடைய இந்த சமாதான காலத்திலே நடைமுறைப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை ஸ்ரீலங்கா அரசானது தமிழ் மக்கள் மத்தியில் திணித்து யாழ் குடாநாட்டை தனிமைப்படுத்தி அங்கு பட்டினி வாழ்வை பிரகடனப்படுத்தியுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் இந்த திரைப்படம் வெளி வந்திருப்பது கவனிக்கப்படவேண்டும். ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் ஸ்ரீலங்கா அரசு எத்தகைய அடக்குமுறைகளை பிரயோகித்ததோ எந்த அழிவுகளை நடத்தியதோ அவை ஆணிவேரிலே படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிருசாந்தியின் பாலியல் பலாத்கார படுகொலை ஆணிவேர் கதையின் படத்தின் முக்கிய அம்சம.; படம் பார்த்தவர்களுக்கு இது புரியும்.

காலம் காலமாக தென்னிந்திய மசாலா திரைப்படங்களை பார்த்து கற்பனா உலகத்தில் வாழ்கின்ற எமது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஆணிவேர் வேறு கோணம்தான். வயிற்றில் பம்பரம் சுற்றுவதும், உதடும் உதடும் ஒட்டிக்கொள்ள முத்தம் கொடுப்பதும் இந்தப் படத்தில் இல்லைத்தான். ஆனால் தமிழனுடைய வாழ்வு இந்தப் படத்தில் பதியப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் பாதிப்பு ஈழத்தில் வாழ்ந்த ஒவ்வொருவனுக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்திருக்கும் இதை மறுக்க முடியாது.இடப்பெயர்வு,அகதி வாழ்வு என்று தமிழனுடைய துன்பங்கள் ஆணிவேரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது.

தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையில் போடப்பட்டுள்ள இறுக்கமான ஒரு இரும்புப்பாலம் ஆணிவேர். உடைப்பது என்பது கடினம். நீங்களும் திரைப்பம் பார்க்க வேண்டும் நிறைய எழுதினால் அந்த த்ரில் உங்களுக்கு இருக்காது. முக்கியமான ஒரு விடயத்துக்கு இனி வரலாம்.

ஆணிவேர் திரைப்படத்தை தமிழ் திரைக்கண் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் ஈழத்து தமிழகத்து கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இது தெரிந்த விடயம். இந்த தரைப்படத்தை சுவிஸ் பிரபா தயாரித்துள்ளார் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு தான் சர்ச்சை இருக்கிறது. கடந்த செப்ரம்பர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனிலுள்ள சொகோ சினிமாவில் ஆணிவேர் திரைப்படம் செய்தியாளர்களுக்காக திரையிடப்பட்டிருந்தது. லண்டனில் செயல்படக்கூடிய ஊடகங்களில் பணியாற்றுகின்ற பலர் இதற்கு வருகை தந்திருந்தனர். இதில் நானும் ஒருவன். ஐபிசி அறிவிப்பாளர் எஸ்கே ராஜனின் அறிமுக உரையுடன் திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் ஓடிய பின்னர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்தப்பட்ட லண்டனின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திலகராஜ் நன்றியுரை வழங்கினார்.

அது மட்டுமின்றி இந்த திரைப்படத் தயாரிப்பின் போது தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இதன் பின்னர் அன்றைய நிமிடமே நான் அவரை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்ததிரைப்படத்தின் பிறப்புப் பற்றி பல கருத்துக்களை நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் தனது சுவையான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு 23 ம் திகதி ஈஸ்ற்ஹாம் பொலின் சினிமாவில் ஆணிவேர் திரப்படம் முதன் முறையாக பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அன்றைய நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் விடயம் என்னனெவெனில் அன்றைய கிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என முன்னர் அறிமுக்கப்படுத்தப்பட்ட திலக் ராஜ் அவர்கள் விழாவில் புறக்கணிக்கப்பட்டதாகவும், சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த பிரபா என்பவர் தயாரிப்பாளர் என அறுமுக்கப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டதாகவும் எனது நண்பர் ஒருவர் மூலமாக நான் கேள்விப்பட்டேன். இது பற்றி திலக் அவர்களை தொடர்பு கொண்டபோது என் நண்பர் தெரிவித்த விடயங்கள் உண்மைதான் என்றும் ஒத்துக் கொண்டார். திட்டமிட்ட முறையில் தான புறக்கணிக்கப்பட்டது பற்றியும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். அப்படியதானால் ஆணிவேர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார்? பிரபாவா திலக் ராஜாவா? இதற்குள்ளும் எம்மவர் அரசியல் நடத்துவதா? பிரபாவின் பதில் கண்டு மீதி சம்பவங்கள் தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணிவேர் திரைப்படத்தை தயாரித்தவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இத் திரைப்படத்தின் விளம்பரங்கள், மற்றும் இணையத்தளங்கள், மற்றும் பத்திரிகைகள் அனைவற்றிலும் தயாரிப்பாளர் சி.பிரபாகரன் என்று போடப்பட்டுள்ளது. மற்றும் ஆணிவேர் திரைப்படத்தின் ரைற்றிலில் கூட பிரபாகரன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல ஈழத்தமிழர்களின் பங்கு இருக்கின்றது என்பதன் உண்மை அதில் திலக்ராஜ்யும் முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் மேற்குறிப்பிட்டதுபோன்று தனது ஆதங்கத்தையும் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறிவருவது அவர் தான் செய்யத பணியையே இழிவு படுத்துவதாக உள்ளது. இத் திரைப்படத்திற்குப் பின்னால் பலரின் உதவிகள் இருந்த போதும் எல்லாரையும் குறிப்பிடமுடியாமலிருந்திரு

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் சனத்திரள் காட்சியாக காண்பிக்கப்பட்ட ஆணிவேர் திரைப்படம்.யேர்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆணிவேர் திரைப்படம் திரையிடப்பட்டது.வூப்பெற்றால

  • கருத்துக்கள உறவுகள்

'ஆணிவேர்' திரைப்படம் குறித்து ஒரு அலசல்

http://www.tamilnaatham.com/articles/2006/...avi20061012.htm

இப்படம் இருவெட்டு வடிவில் வெளி வந்து விட்டதா? CD எங்கே வாங்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.