Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா; ரஜனி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
 
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் ஜெயலலிதா இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் பதவியேற்பு விழாவுக்கு தனது சார்பில் பிரதிநிதி யாரையும் அனுப்பி வைக்கப் போவது இல்லை என்று கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/jaya-boycott-modi-swearing-in-ceremony-201882.html
 
இதேவேளை....
 
மோடி விழாவில் பங்கேற்க எதிர்ப்பு :ரஜினிகாந்த் வீடு முன் ஆர்ப்பாட்டம்

rajini%20latest.jpg

 

இந்தியாவின் 14–வது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகி றார். நாளை குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள விருக்கிறார்.
 

ஈவு இரக்கமின்றி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகிறது.
 

ஜெயலலிதா,கலைஞர், வைகோ, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜபக்சேவை அழைத்ததால்  தமிழகத்தில் இருந்து யாரும் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

இந்நிலையில், நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திரமோடி ரஜினி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இருவரும் நீண்ட கால நண்பர்கள்.  மோடி பதவி ஏற்பு விழாவிற்கும் மோடியிட மிருந்து அழைப்பு வந்துள்ளது.   இந்த சூழ்நிலையில் ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=122406

 

சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது. 

 

ரஜனி ஒரு முறை பேசியது .. :icon_idea: 

சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது. 

 

ரஜனி ஒரு முறை பேசியது .. :icon_idea: 

 

யாராவது எழுதிக் கொடுத்து இருப்பார்கள்...

 

ரஜனி கோச்சடையான், லிங்கா படங்களின் பிஸ்னஸ் கெட்டு விடக்கூடாது என்பதற்காக அநேகமாக போகமல் விடத்தான் சான்ஸ் அதிகம்.

யாராவது எழுதிக் கொடுத்து இருப்பார்கள்...

 

ரஜனி கோச்சடையான், லிங்கா படங்களின் பிஸ்னஸ் கெட்டு விடக்கூடாது என்பதற்காக அநேகமாக போகமல் விடத்தான் சான்ஸ் அதிகம்.

இல்லை அண்ணே இது அவர் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த போது பேசியது பத்து லட்சம் கொடுத்தார் பேசி முடிவில் ..யுத்த இறுதிநாளா இருக்க வேணும் .

  • கருத்துக்கள உறவுகள்

10363670_820999591245401_593639493122287

ஆட்டோக்காரன் அமெரிக்காவிலிருந்து சிறப்பு தனி விமானம் மூலம் மோடி பதவியேற்புக்கு வருகை!

ஆச்சரியமாக இருக்கிறதா?! இவர் பெயர் கே. ஏ. பால், தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தியவர், ஆந்திரா சென்று மதபோதகராக மாறி இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவுள்ளார். அவர் பெயரில் எந்த சொத்துமில்லை என்று அவரே பறைசாற்றிக்கொண்டாலும் மூன்று பெரிய விமானங்களுக்கு தனிசொந்தகாரர். அதில் ஒரு விமானத்தில்தான் நாளை மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். தேர்தலுக்கு முன்பே மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்த கிறித்தவ மதபோதகரும் இவரே.

 

 

 

10366144_605818076193150_386316478621050

மோடி-பேரச் சொன்னாலே சும்மா அதிருதுல

1.jpg

 

நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பே அவரது அதிரடி உத்தரவைக் கண்டு இந்திய அரசு அதிகாரிகள் மட்டுமின்றி...தீவிரவாதிகள்,அண்டை எதிரி நாடுகள் என்று அனைவரும் அரண்டுக் கிடக்கிறார்கள்
வாதிகள்,அண்டை எதிரி நாடுகள் என்று அனைவரும் அரண்டுக் கிடக்கிறார்கள் ..

 

ஆப்கானிஸ்தானில்  உள்ள இந்திய தூதரகத்தை  தீவிரவாதிகள் தாக்கியப் போது அங்கிருந்த இந்திய வீரர்கள் திருப்பி தாக்க யாரிடம் அனுமதிகேட்க வேண்டும் என்று தெரியாமல்இந்திய ராணுவத்தை தொடர்புகொள்ள....

 

1.jpg

 

இந்திய  ராணுவ அதிகாரிகள் உடன் பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் மோடியிடம் தொடர்பு கொண்டனர்..எவ்வித தயக்கமுமின்றி மோடியோ....

"அந்த தீவிரவாதிகளை அழித்துவிட்டு நம் வீரர்களை என்னுடன் விருந்து சாப்பிட அழைத்து வாருங்கள்" 

என்று உத்தரவு விட........

இதுவரை இப்படியொரு அதிரடி உத்தரவை கேட்டிராத நம் இந்திய வீரர்கள் எழுச்சி கொண்டு போரிட்டு  அந்த தீவிரவாதிகள் அத்தனை பேரையும் அழித்துவிட்டு இன்று மோடியுடன் விருந்து சாப்பிட வருகிறார்கள் 

இதுமட்டுமல்ல.........

 

2.jpg

 

மோடியின் குடும்ப நண்பர் நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பேசும் வசனம்.......

"எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு அதில் முதல் வழி....மன்னிப்பு" 

இக்கூற்றின் படி...

மோடியின் பிரதமர் பதவிஏற்பு விழாவுக்கு அண்டை நாடுகள் பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா...போன்றவைகளை மிகுந்த எதிர்ப்புக் கிடையில் அழைத்ததால் பயம் கொண்டோ அல்லது மரியாதைக்கோ உடனடி நடவடிக்கையாக..........

-பாக்கிஸ்தான் சிறையில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது 

-ஸ்ரீலங்கா சிறையில் இருந்த தமிழ் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது   


மோடி-பேரச் சொன்னாலே சும்மா அதிருதுல

 

உபயம்: கவிதை வானம்

டும் என்று தெரியாமல்இந்திய ராணுவத்தை தொடர்புகொள்ள....

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.