Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்த face book பதிவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி மின்வெட்டே இருக்காதுன்னாங்க ஆனா...

விடுப்பா விடுப்பா ...

பிரைவேட் பஸ் சீட்ட நாம கிழிக்கிறதும் அரசு பஸ் சீட்டுங்க நம்மள கிழிக்கிறதும் சகஜம் தானே...............!

:D:(

  • Replies 171
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகா பார்த்திபன்

2 மணி நேரம் முன்பு

சமநிலை

கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் இருக்கும்

ஒரு ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி உடனடித்

தேவை !

கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் உள்ள

சுந்தர்ராஜன் வளர்மதி தம்பதியரின் மகள்

கலைமதி கன்னியப்பா சமூகக் கல்லூரியில் MLT

(Lab Technician) ஆய்வுக் கூடம் சார்ந்த

படிப்பை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சிலர்

இவரது படிப்பிற்கு உதவியதால் இவரால்

ஒரு ஆண்டு படிக்க முடிந்தது. இந்த

ஆண்டு கல்லூரிக் கட்டணம் 18,000 ரூபாய் கட்ட

வேண்டி உள்ள நிலையில் இவரால்

பணத்தை செலுத்த இயலவில்லை.

இவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும்

ஒரு வர்ணம் பூச்சாளர் (painter) . இவரால்

அவ்வளவு பெரிய தொகையை திரட்ட

முடியவில்லை. படித்திருந்தாலும் முகாமில்

இருந்து கொண்டு கூலி வேலையை தவிர

வேறு வேலைகளை பார்க்க முடியாது. இந்த

நிலையில் கலைமதியால் கல்லூரி கட்டணம் கட்ட

முடியாததால் அவரை கல்லூரியில்

இருந்து தற்காலிகமாக

நிறுத்தி விட்டது கல்லூரி நிர்வாகம்.

இப்போது வீட்டில் தான் உள்ளார் கலைமதி.

கலைமதி தன்னுடைய கல்வி படிப்பை தொடர

நம்மாலான சிறு உதவியை செய்ய

வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தனி நபர்களால் முடியாவிட்டாலும்

கல்வி அறக்கட்டளைகள் , அமைப்புகள், கட்சிகள்

இவருக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்

கொள்கிறோம். உங்கள்

உதவி இவரது வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை காட்டட்டும்.

கலைமதி தந்தை சுந்தர்ராஜன் தொடர்பு எண் -

9677683381

கல்லூரி முதல்வர் சங்கரன் எண் - 9894024292

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பிகர் கிடைக்கனம்னு சொல்லி சொல்லியே கல்யாணம் பண்ணிக்காம இருக்கிற காவாளி பயல்வலுக்கு வயது ஆக ஆக தான் "கழுத குடிசையா இருந்தாலும் பரவாலை"ங்கற மைன்ட் செட் வந்திடுது....................!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்டாட்டிகிட்ட அடி வாங்குறதும், நாய்கிட்ட கடி வாங்குறதும் ஒன்னு..!

சீக்கிரம் ஆறவே ஆறாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10446370_676448305760509_358989301371271

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை பற்றி ஒருவரிடம் போட்டுக் கொடுப்பதும் ஒரு வகையான விபச்சாரமே..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரக்கு மாஸ்டர்

வீட்டில் சாப்பாடு இல்லை. சுமாரான ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டீர்கள். மசால்தோசை ஆர்டர் செய்து அது வந்தும் விட்டது. சாப்பிட்டுப் பார்த்தால் தோசை நீங்கள் எதிர்பார்த்ததை விட அருமையாய் இருக்கிறது. சட்னி சாம்பாருக்கும் சுவையில் குறைவில்லை. வயிறோடு சேர்ந்து உங்கள் மனதும் நிறைகிறது. கல்லாவில் பணம் செலுத்தும்போது அங்கு மேலும் ஒரு ஆச்சரியம் உங்களுக்கு காத்திருக்கிறது. விலை மிகவும் நியாமானதாக மெச்சும்படியாக உள்ளது.

இதற்குமேல் தாமதிக்காமல் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். கல்லாவில் அமர்ந்திருக்கும் கடை ஓனருக்கு கேட்கும்படியாக உங்களுக்கு மசால்தோசை வார்த்துக்கொடுத்த சரக்கு மாஸ்டரைப் பாரத்து கையை உயர்த்தி "அண்ணே! தோசை சூப்பர்!!" என்று பாராட்டைத் தெரிவித்துவிட்டு சட்டென்று கிளம்பி விடுங்கள். இன்னும் சற்றுநேரம் நிற்பீரகளானால் உங்களுக்கும் அவருக்கும் ஒருசேர கூச்சத்தை ஏற்படுத்தி அந்தப் பாராட்டை அர்த்தமற்றதாக மாற்றியவராவீர்கள். அந்த சரக்கு மாஸ்டருக்கு சந்தோஷத்தில் அன்றிரவு சரியாக தூக்கம் வராது. உங்கள் முகம் வந்துபோகும்.

கொடுத்த காசுக்கு தந்த சாப்பாடு சரியில்லை என்றால் திட்டிக் காறி காறித்துப்பிவிட்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கும் அதே வேளையில், தரமாக இருக்கும் பட்சத்தில் பாராட்டத்தயங்காதீர்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தரம் நீர்த்துப்போகாமல் தொடரச்செய்ய அவர்களை ஊக்குவிக்கும். வாய்திறந்து பாராட்டச்செய்யும் செயல் கொள்ளை லாபம் அடிப்பது பற்றி அவர்களைக் கொஞ்சம் யோசிக்கவைக்கும்.

இந்தக்காலத்தில் நல்ல சாப்பாடு அம்மா போடுவார் அல்லது மனைவி போடுவார். அதற்குமேல் யார் சார் போடுகிறார்கள்! முகம் தெரியாதவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் என்று உழைக்கும் இதுபோன்ற நல்ல உள்ளங்களை பாராட்டுவதால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்

saami.jpg

இவரு பிரதமரா ….??

இல்லை ..!

இவரு மந்திரியா …??

இல்லை..!

இவரு நாடாளுமன்ற உறுப்பினரா … ??

இல்லை ..!

இவரு சட்டமன்ற உறுப்பினரா … ??

இல்லை ..!

இவரு கவுன்சிலரா .. ??

இல்லை ..!

இவரு விவசாயியா ..??

இல்லை ..!

இவரு அறிவாளியா …??

இல்லை..

இவரு வேலை செய்கிறாரா ..??

இல்லை இல்லை இல்லவே இல்லை.......

இவன் ஒரு வெட்டி பயா!! …!!”

“இந்திய ஊடக கூட்டமே …

இப்படி ஒரு வெட்டிப் பயல

பேட்டி எடுக்கவா நீங்க

நாயா பேயா அலையுறீங்க…...

இந்த பொழப்புக்கு நீங்க...

பிச்சை எடுக்கலாம்...

குப்பை பொறுக்கலாம்...

இவன பேட்டி எடுப்பதற்கு அதுவே மேல்...

((போங்கயா போய் எதாவது உருப்படியா செய்யுங்க))

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புமனின் வெற்றி தன் சாதி மக்களிடம் மடிப்பிச்சை கேட்டு வாங்கிய வெற்றி- திருமாவளவன்

// சொல்லிட்டார் பா சாதி சார்பற்ற கட்சித்தலைவர் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்...

.

.

கேப்டன் நீங்க ஸ்டெடியா நின்னு உங்க பக்கத்துல நிக்கிற ஆச்சியை பிடிங்க பாப்போம்.....

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமனின் வெற்றி தன் சாதி மக்களிடம் மடிப்பிச்சை கேட்டு வாங்கிய வெற்றி- திருமாவளவன்

// சொல்லிட்டார் பா சாதி சார்பற்ற கட்சித்தலைவர் ..

 

இதைத்தான் சொல்வது

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுவது  என்று..

எப்ப சிங்கம் குனிய  தொடங்கிச்சிதோ

அன்றிலிருந்து பேச்சும் போக்கும் தடுமாறுது... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் சொல்வது

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுவது  என்று..

எப்ப சிங்கம் குனிய  தொடங்கிச்சிதோ

அன்றிலிருந்து பேச்சும் போக்கும் தடுமாறுது... :(

 

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப சிதம்பரம் கோஷ்டிகளை களைய வேண்டும்- ஞானதேசிகன்

.

சத்தியமா .....மொதல்ல வேஷ்டினுதான் படிச்சுட்டேன்......

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம், வரலாற்றிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மவுனமும் ஒரு மொழிதான்

-----------------------------------------

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. எதேசையாக கால் மணி நேரம் பார்த்ததில் ஒன்று புரிந்தது. நம்பர் 1 சேனலான சன் டீவியே வேறு வழியில்லாமல் விஜய் நிகழ்ச்சிகளை காப்பி அடிப்பது ஏன் என்று.

அதே மாதிரி, இத்தனை நல்ல நிகழ்ச்சிகளை தயாரிக்கும் விஜய் ஏன் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதும். பார்வை இல்லாத ஒரு சிறுவன் அசத்தலாக பாடி நாம் தடுத்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் வெளியே கொண்டு வந்தான். அது 15 சதவீதம் முடிவதற்குள் விளம்பர இடைவேளை விட்டு அடுத்த கட்ட நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் போட்டது விஜய் சேனல்.

இதைவிட சீக்கிரமாக சுலபமாக நேயர்களை கேவலப்படுத்த முடியாது. அருமையான விளம்பரம் தயாரித்து காட்டும்போது சில பத்திரிகை முதலாளிகள் அல்லது விளம்பர முதலாளிகள் சொல்வார்கள்: 'ஏங்க, அவ்வளவு ஒயிட் கேப் தேவைதானா?'. 'அட நாதாரிகளே, வெள்ளையும் ஒரு கலர்தானடா. விளம்பரத்துக்கு அழகூட்ட அது தேவையடா' என்று சொல்ல நா(க்கு) துடிக்கும். முடியுமா? ப்ராஜக்ட் ட்ராப் ஆகிவிடும்.

அதுபோல, சேனல்களில் நிகழ்ச்சிகள், விளம்பரங்களுக்கு இடையே மவுன இடைவெளியும் ரொம்ப அவசியம். விஜய் அறிவாளிகளுக்கு புரியவில்லை. 7 மணி மகாபாரதத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். டைட்டில் மியூசிக் கேட்டு அவர்கள் ஓடி வருவதற்குள் சீரியலின் முதல் 3 நிமிட முக்கிய காட்சிகள் ஓடிவிடும். அப்படிஎன்னடா அவசரம், உங்களுக்கு என்று கேட்க தோன்றும். மகாபாரதம் பார்ப்பது பழைய பவர் ஸ்டார் படம் பார்ப்பது மாதிரிதானே என்று அவர்கள் நினைத்திருந்தால் நாம் என்ன செய்யமுடியும்?

சன் டீவியில் மகாபாரதம் பார்த்த பிறகுதான் 'அடடே,விஜய் டீவியில் இதே சீரியல் சிறப்பாக வருகிறதே' என்று பலரும் இந்த பக்கம் வந்தார்கள். அவர்களை தக்கவைக்க துப்பில்லை விஜய் டீவி நிர்வாகத்துக்கு. வீட்டில் உட்கார்ந்து டீவி பார்க்கும் எவருமே காலில் வெந்நீரை கொட்டிக் கொண்டு ரிமோட்டை கையில் எடுக்கவில்லை.

புரிஞ்சுக்கங்கப்பா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Yogoo Arunakiri

2 மணி நேரம் முன்பு

எனக்கு தெரிந்து மிக சிறந்த எழுத்தாளர்கள் ..

கம்பன் .

ஒளவையார் .

வால்மீகி .

கண்ணதாசன் .

சாண்டிலியன் ..

இப்படி பலர் இருக்கினம் ...

இவர்கள் எழுதியதை உல்டாபண்ணி இப்ப எழுதுபவர்கள்ளே இலக்கியவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள் ...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் ஜெயித்தவனும் அழுகிறான்....

காதலில் தோற்றவனும் அழுகிறான்....

.

.

.

.

.

.

.

.

.

.

.

மேலே உள்ளவன் இப்படி அநியாயமா மாட்டிகிட்டோமே னு அழுகிறான்.... இவன் அழுகையில் ஒருவித பரிதாபம் இருக்கும்..

கீழே உள்ளவன் இப்படி அநியாயமா இழந்துட்டோமே னு அழுகிறான்.... இவன் அழுகையில் ஒருவித சுகம் இருக்கும்..

இது தான் வித்தியாசம்...

ஆக மொத்தம் "காதல்" ஒரு அழகிய தொல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‪#‎இருந்தும்_இல்லாத_உறவுகள்‬

தேவை தீர்ந்ததும் விலகும்

நண்பர்கள்...

சொத்து இருந்தால் உறவாடும்

சொந்தங்கள்...

பணம் இருந்தால் பாசத்தை காட்டும்

பந்தங்கள்...

இவர்களுடன் இருப்பதை விட

நான் " அனாதை " போல் இருப்பதே மேல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சான் படசூட்டிங்கில் சூர்யாவுக்கு கட்டை விரலில் அடிபட்டது

‪#‎எந்தவிரல்னு‬ சரியா சொல்லுங்கய்யா அந்தாளுக்கு எல்லா விரலும் கட்டையாதான் இருக்கும்.............!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகைச்சுவைக்கான பதிவு...

மோடிக்கு பதில் நம்ம விஜயகாந்த் பிரதமராக ஆகி இருந்தால் எப்படி இருந்துருக்கும்.

1. பம்பர விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவித்து இருப்பார்.

2. தலையில் டார்ச்லைட்டை கட்டிக்கொண்டு ஒத்தை ஆளாக மொத்த பாக்கிஸ்தான் எல்லையையும் காவல் காப்பார்.

3. மீறி இந்திய எல்லைக்குள் நுழைய முற்படும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை நோக்கி நாக்கை துருத்தி முஷ்டியை தூக்கி காட்டி பயமுறுத்தி பின்வாங்க வைத்துருப்பார்.

4. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து எந்த நிருபர் கேள்வி கேட்டாலும் “நீயாடா எனக்கு சம்பளம் கொடுக்குற” என்று திருப்பி கேட்டு மிரள வைத்து இருப்பார்.

5. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் “மன்னிப்பு” என்கிற அர்த்தம் வரும் வார்த்தையை அகராதியில் இருந்தே தூக்க உத்தரவு போடுவார்.

6. இந்தியாவுக்கு ஒரு கேப்டன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி கிரிக்கட், ஹாக்கி, கபடி போன்ற இந்திய அணிகளில் உள்ள கேப்டன் என்கிற பதவியை கேன்சல் செய்து உத்தரவு போட்டு இருப்பார்.

7. இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தன் உடம்பில் இருந்து மின்சாரம் எடுத்து கொள்ள மின்வாரியத்துக்கு அனுமதி கொடுத்து இருப்பார்.

இவ்வளவு திறமைவாய்ந்த ஒருவரை பிரதமராக அடையும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்

 

fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன்...

அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள்

யாரென்று எனக்கு தெரியவில்லை.இருந்தாலும் உங்களை பார்த்தால்

பசியுடன் இருப்பதாக தெரிகிறது.அதனால் என் வீட்டிற்கு வாருங்கள்.

நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை.வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில்

அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள்

நடந்தவற்றை கூறுகிறாள்.அதற்கு அவள் கணவன் நான்

வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள் அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.அதற்கு அவர்களில் ஒரு முதியவர்

இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும்,

மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான்

அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள் அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும்

மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள்.ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.இதை அனைத்தையும்

செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த

அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது?

அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார்

அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட

அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம்

வீட்டிற்கு அழைத்துக்கொண்டுவா என்கிறார். அப்பெண்

வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் "அன்பு", அவர்

என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார்.அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த

அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான்

அழைத்தது அன்பை மட்டு்ம் தானே? என்றுஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ

செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால் ,

மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ

அன்பை அழைத்திருக்கிறாய்.எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும்,வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பர்தா போட்ருக்க பொண்ணுங்கள

பார்க்கும்போதெல்லாம்

"வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே"ங்கிற இளையாராஜா சாரின் இசை தான் மனதில்

இசைக்கின்றது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் சிரிப்பவன் சந்தோசமாக இருக்கிறான் என்று அர்த்தமில்லை,

லூசாக கூட இருக்கலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழப் போராளிகள் உண்மையிலேயே அவர்களது இலக்கை நோக்கி பயணிக்க நினைத்தால் , ஆரம்பக் கட்டம் முதல் 1947 வரையிலான ஜின்னாவின் அரசியல் பயணத்தை , அவரது பேச்சுக்களை ஆழ்ந்து படியுங்கள் , நிறைய பாடங்களை கற்கலாம் , எப்படி இரு பெரும் சக்திகளை எதிர்கொண்டு அவர் நினைத்ததை முழுமையாக சாதிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு வெற்றி கண்டார் என்று ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.