Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்ப

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு

http://www.youtounesco.underskrifter.dk/

இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகத்தமிழ்மக்கள்

http://www.youtounesco.underskrifter.dk/

http://www.youtounesco.underskrifter.dk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே இப்படி ஒன்டு வந்தது. கையொப்பமிடச் சொல்லி. நானும் பண்ணினன். பிறகு தான் தெரிய வந்த அது ஏதோ ஒரு தேசவிரோத செயலுக்கு பயன்பட்ட என்டு.

இதை நம்பிறதா இல்லையா என்டே தெரியேலை.

என்னப்பா நான் கைஎழுத்து போட்டபிறகு இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீயள்.

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த தேசவிரோத செயலுக்கு பாவிக்கப்பட்ட இணையத்தளமும் .dk என்று தான் முடிந்தது. மாவீரர்களிற்கு எங்களின் பெயரில் விளக்கேற்றி வைக்குமாறு எங்கள் பெயர் வதிவிடம் என்று கேட்டு இருந்தது. பின்னர் பதிவு செய்தவுடன் ஒரு விளக்கின் கீழ் எங்கள் பெயர் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் பீதியைக் கிளப்பாதிங்கப்பா!

யாழ்களத்தின் ஊடாக அந்தச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாதா? அல்லது நிர்வாகம் இதன் நம்பகத் தன்மையை உறுதி செய்ய முடியாதா?

ஆனால் dk என்று முடிவது எல்லாத்திலேயும் அப்படிப் பழி போட முடியாது..com, .net, .org. dk என்று இதுகளை விட்டால் வேற எங்க போறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னமோ இந்த தளத்தை பாத்தா சந்தேகமா தான் இருக்கு. அதன் வடிவமைப்பு ஏதோ சின்னப்பசங்க பண்ணின மாதிரி இருக்கு.

யாராவது கம்பியுட்டர் பற்றி நல்லா தெரிஞ்சவங்க கொஞ்சம் கிண்டி பாத்து சொல்லுங்கப்பா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வடிவேலு ஐயா

நாம் களப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளமுயர்ச்சி செய்துகொண்டுள்ளோம் வெகுவிரைவில் உறுதிப்படுத்துகின்றோம்.வீணா

வணக்கம் வடிவேலு ஐயா

நாம் களப்பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளமுயர்ச்சி செய்துகொண்டுள்ளோம் வெகுவிரைவில் உறுதிப்படுத்துகின்றோம்.வீணா

நான் தப்பினண்ட சாமி...

என்ர தெய்வமே வடிவேலு...

உனக்கு அப்பா..ஒரு பொங்கலு வைக்கிறன்...

அட..இப்படியும் ஒரு வேலை பண்ணுறாங்கலா...ஃ??

கேனாரி பையலுக...

அவதானி..நீ அவதானம்..கண்டியே...

இது பொல்லாத காலம் அப்பு..

கொலன்ட காறர் தான் செமத்த போட்டு இருக்கினம்....

வாழ்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே இப்படி ஒன்டு வந்தது. கையொப்பமிடச் சொல்லி. நானும் பண்ணினன். பிறகு தான் தெரிய வந்த அது ஏதோ ஒரு தேசவிரோத செயலுக்கு பயன்பட்ட என்டு.

இதை நம்பிறதா இல்லையா என்டே தெரியேலை.

:lol: :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கள் சங்கரியாரின் அருவருடிகளின் வாயில் அவல் போடுவது போல் உள்ளது நீங்கள் கூறும் அந்த இணையத்தளம் நவம்பர்27 என நினைகின்றேன் அதன்மீது ஒரு குழப்பம் முன்பு இப்போது வடிவேல் கொண்டுவந்த குழப்பம் போன்று சிலரால் கொண்டுவரப்பட்டது ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை . தீரவிசாரிக்காமல் இப்படியான வதந்திகளை பரப்புவது மற்றவர்களின் செயல்பாடுகளுக்கு தடங்கலாகத்தான் அமையும் என்பதை சற்று கவனத்தில் எடுக்கவும்.

நன்றி

அண்ணோய்...நான்இப்ப போடுறன்..

என் எண்டா எங்கட நிதர்சன காறர் போட்டிட்டினம்..

பிறகென்..பட்டைய கிளப்ப வெண்டியது தான்...

அவையல் சொன்ன ஓரே சொன் மாதிரி...ஓடியங்டீகா வெல்லகுஞ்சுகளே..கிளட்டு சங்கரியை ஒஐ கை பார்ப்பம்...

அனி என்ன தாமதம் ..அண்ணா வா..அக்கா..வா..தம்பி..வாடா..தங்கச

ஆனந்த சங்கரி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமான கையெழுத்துக்கள் வந்தாலே போதும். ஆனந்த சங்கரியின் முகத்தில் கரியை பூசி விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்ளலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

anantha.gifஉந்த வியாக்கியானங்கள் ஒரு புறம் கிடக்க, உந்த கையெழுத்து இணையத்தை கூலிகளின் எச்சிலிலைக் கும்பல்கள் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது!!!!

ஆரம்பித்தவர் கவனமாக இருக்க வேண்டும்!!! சில கூலிகள் எங்கேயென்று காத்திருக்கிறார்கள்!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மின்னஞ்சல் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

என்னை பொறுத்தவரையில் இவரை நாம் பெரியாளாக்குவதாகத்தான் தெரியுது

முன்னெப்போதும் இல்லாத அளவு கடந்த சில மாதங்களாக தமிழ் தேசியத்தின் பால் ஆழ்ந்த அக்கரை உடையவர்கள் கவலை கொள்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு எதிராக விதித்த பயணத்தடை.......

அதனைத்தொடர்ந்து வந்த முழு அளவினதான தடை........

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க், பின்லாந்து, சுவீடன் வெளியேற்றப்பட்டமை..........

சம்பூரை அரச படைகள் கைப்பற்றி நாற்பதாயிரம் தமிழர்களை அகதிகள் ஆக்கியமை............

கனடிய அமெரிக்க பொலிசாரின் எமக்கு எதிரான கைதுகள்........

யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முரணாக முகமாலை முன்னரங்கு காவல் நிலையின் எல்லை உள் தள்ளப்பட்டது.........

...........

தற்போது வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ அறிவித்துள்ள சகிப்புத்தன்மைக்கும் வன்முறைஅற்ற வழிமுறைக்குமான விருது..........

இத்தொடர் நிகழ்வுகள் எதேச்சையாக நடந்தவையாக இருக்குமென வாதிடும் ஒருவர் ''சாகிறன் நான் பந்தயம் பிடி'' வகையறா பேர்வழிகளாகத்தான் இருக்கவேண்டும்.

யுனெஸ்கோவின் இந்த அறிவுப்புக்கு எதிராக எமது செயல்பாடுகள்.... ஐரோப்பிய யூனியனின் புலிகளுக்கு எதிரான தடைக்குப்பின் நாம் செய்த போராட்டங்களின் விளைவுகள் போல் பயன் எதனையும் தரமாட்டாது. சில நேரங்களில் தந்திரோபாயம் அற்ற இவ்வகையான போராட்டங்கள் எதிர்வினையாற்றக் கூடியன.

கனடாவிலும், லண்டனிலும் நிகழ்ந்த ஐ நா மனித உரிமைகளுக்கான கூட்டங்களில் எம்மவர் சிலரது செயற்பாடுகள் ஆற்றிய எதிர்வினையின் பயன்களே யுனெஸ்கோவின் விருது வழங்கும் விளையாட்டு.

''தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல் காறனாகிவிட்ட'' துர்ப்பாக்கிய நிலையில் சில புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டப் பங்களிப்பு என்ற கோதாவில் தமிழ் தேசியத்தின் இருப்புக்கு அள்ளிவைப்பு வேலையையே செய்து தொலைக்கிறார்கள்.

தேச விடுதலைப்போராட்டத்துக்கு உதவிசெய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாதிருக்க கற்றுக்கொள்ளாவிட்டால் மேற்குலகத்திடம் நாம் குட்டு வாங்குவது தவிர்க்கமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[18]quote="SAMATHAANAM"]முன்னெப்போதும் இல்லாத அளவு கடந்த சில மாதங்களாக தமிழ் தேசியத்தின் பால் ஆழ்ந்த அக்கரை உடையவர்கள் கவலை கொள்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு எதிராக விதித்த பயணத்தடை.......

அதனைத்தொடர்ந்து வந்த முழு அளவினதான தடை........

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க், பின்லாந்து, சுவீடன் வெளியேற்றப்பட்டமை..........

சம்பூரை அரச படைகள் கைப்பற்றி நாற்பதாயிரம் தமிழர்களை அகதிகள் ஆக்கியமை............

கனடிய அமெரிக்க பொலிசாரின் எமக்கு எதிரான கைதுகள்........

யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முரணாக முகமாலை முன்னரங்கு காவல் நிலையின் எல்லை உள் தள்ளப்பட்டது.........

...........

தற்போது வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோ அறிவித்துள்ள சகிப்புத்தன்மைக்கும் வன்முறைஅற்ற வழிமுறைக்குமான விருது..........

இத்தொடர் நிகழ்வுகள் எதேச்சையாக நடந்தவையாக இருக்குமென வாதிடும் ஒருவர் ''சாகிறன் நான் பந்தயம் பிடி'' வகையறா பேர்வழிகளாகத்தான் இருக்கவேண்டும்.

யுனெஸ்கோவின் இந்த அறிவுப்புக்கு எதிராக எமது செயல்பாடுகள்.... ஐரோப்பிய யூனியனின் புலிகளுக்கு எதிரான தடைக்குப்பின் நாம் செய்த போராட்டங்களின் விளைவுகள் போல் பயன் எதனையும் தரமாட்டாது. சில நேரங்களில் தந்திரோபாயம் அற்ற இவ்வகையான போராட்டங்கள் எதிர்வினையாற்றக் கூடியன.

கனடாவிலும், லண்டனிலும் நிகழ்ந்த ஐ நா மனித உரிமைகளுக்கான கூட்டங்களில் எம்மவர் சிலரது செயற்பாடுகள் ஆற்றிய எதிர்வினையின் பயன்களே யுனெஸ்கோவின் விருது வழங்கும் விளையாட்டு.

''தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல் காறனாகிவிட்ட'' துர்ப்பாக்கிய நிலையில் சில புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டப் பங்களிப்பு என்ற கோதாவில் தமிழ் தேசியத்தின் இருப்புக்கு அள்ளிவைப்பு வேலையையே செய்து தொலைக்கிறார்கள்.

தேச விடுதலைப்போராட்டத்துக்கு உதவிசெய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாதிருக்க கற்றுக்கொள்ளாவிட்டால் மேற்குலகத்திடம் நாம் குட்டு வாங்குவது தவிர்க்கமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகிப்புத்தன்மைக்கு விருதுபெற்றவர் அதர்க்கெதிராக மக்கள் ஐனநாயகமுறையில் எதி-ர்ப்பு தெரிவிப்பதை சகிக்கமுடியாமல் தனது கைக்கூலிகளை இங்கும் அனுப்பியுள்ளார் போல உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சமாதானத்துக்கு!

எவை எவற்றைக் கண்டெல்லாம் புலிஎதிர்ப்புவாதம் குரைக்குமோ, அவைகளே உமது குரைப்புக்கும் காரணமாகும் போது, உன்பேர் மட்டும் நீர் யார்வீட்டுச் செல்லப்பிராணி என்று வெளிப்படுவதை தடுத்துவிடுமா ஐயா? போங்க றொம்பவும்தான் புத்திசாலியாகப்பாக்குறீங்

ஒரு முறை ஹிந்தி கதாநாயகன் கோவிந்தாவுக்கு பத்திரிகை ஒண்று நடத்திய விருது வளங்குவதற்காக நடத்திய வாக்கெடுப்பில் மக்கள் எல்லாம் அவரை சிறந்த நகைச்சுவை நடிகராக தேர்வு செய்தனர்...! :wink:

அப்படித்தான் ஆனந்த சங்கரிக்கு குடுத்த இந்த "நாகரீக கோமாளி" என்பது போண்ற இந்த சகிப்பு தன்மை விருது...! இதை அடுத்ததாக இந்திய அரசியல்வாதியான சுப்பிரமனியசுவாமிக்கு குடுப்பினம்....!

அரசியலில் இருக்கும் முன்னணி அரசியல் வாதிகள் எவருக்கும் இந்த பரிசில் வாங்க முன்வருவார்கள் எண்டுறீங்கள்...??? இல்லை யாருக்காவது கிடைக்குமா என்ன...??

நிச்சயமாக நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!!! இப்படியான இனத் துரோகிகளின் முகங்கள் கிளிக்கப்பட வேண்டும்!! ...

..... இன்று ஒரு ஆயுத கூலிக்கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவரும், தமிழ் மக்கள் மீதான சிங்கள வல்லாதிக்கத்தின் கொலைகளை உலகிற்கு சரியென்று எடுத்துக் கூறும் இந்தத் துரோகிக்கு வழங்கும் விருது "யுனெஸ்கோ நிறுவனத்திற்கே" வெட்கக் கேடானது!!! மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு வெற்று அரசியல்வாதிக்கா இந்தப் பரிசு!!! இது பரிசல்ல, சர்வதேச சதியின் ஓரங்கமே!!!!....

ஆனையிறவு மீட்புப்போர் காலகட்டம் இன்றைய அமெரிக்க அல்கைடா எதிர்ப்பு யுத்த நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் எமது கொடியை பறக்கவிட அனுமதித்தை ஒரு அரசியல் அங்கீகாரமாக பார்ப்பது அமெரிக்க உள்துறை மற்றும் வெளித்துறை அரசியலை எம்மால் ஆழமாக பகுத்தாய்வு செய்யமுடியாமல் போன தவறாகும்.

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

இன்னும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1987 இந்திய இலங்கை ஒப்பந்ததின்பின் உருவான ஈழப்போரில் மேற்குலகம் வெளிப்படையாக புலிகளை ஆதரித்ததும், அதில் இந்திய (சோவியத்) சார்பு ஈ பி ஆர் எல் எவ் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உருவானதொன்றும் தற்செயல் அல்ல.

புலிகளின் தலைமை மேற்குலகுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவுதான் எமது போராட்டதை இன்று வரை காப்பாற்றிவந்துள்ளது.

மேற்குலகுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு தமிழர் தலைமை வர தாமதம் ஏற்பட்டிருந்தால் ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலேயே எமது போராட்டம் தோற்கடிக்கப்ப்ட்டிருக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அழிந்துபோன அனைந்து அமைப்புகளுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் சர்வதேச அரசியலில் புலிகள் எடுத்த தந்திரோபாய சரர்பு நிலைதான். அதனால்தான் புலிகளால் இருபது வருடங்களுக்கு மேல் தமிழர்க்கு தலைமை கொடுக்கமுடிகிறது.

புலிகளின் முதல் வெளியீடான வந்த ''சோசலிச தமிழீழத்தை நோக்கி'' என்ற புத்தகத்தில்தான் சோசலிசம் என்ற அரசியல் கோட்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதுவும் அப்போது லண்டனில் படித்து கொண்டிருந்தவரது சொந்த அரசியல் ஆசையே தவிர புலிகளது அரசியல் அல்ல. இருப்பினும் தலைமை சரியான நேரத்தில் சரியான திசையில் எமது போராட்ட அரசியலை நெறிப்படுத்தியதன் விளைவுதான் இன்று எம்மால் அறுவடை செய்யப்படும் புலிக்கொடி ஏந்தும் சுதந்திரதின் சூட்சுமம்.

எம்மை மற்றவர்கள் அழித்துவிவார்கள் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் எம்மை பலமானவர்களாக்குவது வெறும் கருத்து தளத்தில் நிகழ்வது அல்ல. அதற்கான கருத்து தளம் உயிர்நிலை கொள்ளக்கூடிய புறச்சூழல் எமக்கு சாதகமாக இருக்கவில்லை எனில் தற்போதை சர்வதேச சூழலுக்கு உகந்த கருத்து நிலையை தமிழர் தரப்பு கைக்கொண்டால் அன்றி சிங்களத்தை நாம் வென்று விடமுடியாது.

அமெரிக்க மற்றும் மேற்குலகத்துக்கு எதிராக தமிழர் போராட்டதை திசைதிருப்பும் முயற்சியில் சிங்கள இனவாத அரசுகள் காலம்காலமாக முயற்ச்சி செய்துவந்தன. புலிகளின் தலைமை தீர்க்கதரிசனமான அரசியல் இராணுவ காய் நகர்த்தல்களால் சிங்களத்தின் அந்த முயற்சிகளை முறியடித்துவந்தது.

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எதிர் நோக்கும் அல்ஹைடா பயங்கரவாதத்துக்கு சமாந்திரமாக புலிகளின் இராணுவ யுக்திகள் இருப்பதாக சிங்களத்தின் சர்வதேச பிரச்சாரம் மேற்குலகை கொஞ்சம் குழப்பியுள்ளது.

அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பினால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் சிலர் தாம் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொண்டு புலிகளுக்கு தவறான இமேச்சை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதன் பின் அந்த நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட அறிக்கை எமது போராட்டத்துக்கும் தலைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திக்கொடுத்தது.

மனித உரிமைகளுக்கான ஐ நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி அல்ஸ்டன் எழுதிய அறிக்கையை குறித்து ஒரு சிறப்பு வெளியீட்டு கூட்டத்தை லண்டனில் சர்வதேச மன்னிப்பு சபை சில வாரங்களுக்கு முன் நடாத்தியது.

அதிலும் தமிழ் தேசியத் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தம்மை தமிழ் தேசிய பக்தர்களாக காட்டிக்கொண்டனர்.

அல்ஸ்டன் பேச்சின் வரிகளுக்கு இடையிலான அர்த்ததைப் புரிந்து கொள்ளாது தமிழ் ஊடகங்களில் தமிழருக்கு பேசுவதுபோல் கோமாளித்தனம் செய்தனர்.

எமக்கு உடனடித்தேவை இப்போது தோன்றியுள்ள புதிய சர்வதேச அரசியலை உள்வாங்கி காய்நகர்த்த வல்ல இளம் தலைமைகளை புலத்தில் முன்னிலைபடுத்தி தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் பலப்படுத்துவதாகும்.

அதன் வழி எமக்கு முன் உள்ள ஒரே பாதை சமாதனம் என்ற கோசம் தான்

கனடாவிலும், லண்டனிலும் நிகழ்ந்த ஐ நா மனித உரிமைகளுக்கான கூட்டங்களில் கலந்துகொண்ட சிலரது செயற்பாடுகளின் எதிர்வினைதான் யுனெஸ்கோவின் இந்த விருது வழங்கும் விளையாட்டு.....

இதனை நாம் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இருந்து சில நாடுகளை வெளியேற்றியது போல் முரட்டுத்தனமாக கையாண்டால் வரும் விளைவுகள் இன்னும் பாதகமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.