Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் புதிய மதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு

1.மதம்- சத்தியசாய்பாபா

2.வழிபடும் நாள் -வியாழன்

3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர்

4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா

5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா

6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்)

7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம்

இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அதிலு புத்திஜீவிகளின் பங்கு அளப்பரியது.

இங்கு அநேக வீடுகளில் பிள்ளையாரின் படங்களுக்கு பதிலாக இவரின் படங்கள் தான் வீடுகளை அலங்கரிக்கிறது முன்பு கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கு விநாயகருக்கு பூசை செய்து தான் தொடங்குவார்கள் ஆனால் இப்போது இவருக்கு பஜனை வைத்து தான் எல்லாம் தொடங்குகிறார்கள்.இங்கு செல்லும் சில மக்கள் கோயிலிலும் பார்க்க இங்கு செல்வதி அமைதி கூட கிடைப்பதாக கூறுகிறார்கள்.

மதங்கள் எப்படி மனிதனால் உருவாகுவது என்று எமது கால கட்டத்திலேயே பார்க்க கூடியதாக உள்ளது போற போக்கில் தமிழ் பேசும் மக்களின் வானோல்லி மேடை நிகழ்ச்சிகளில் மும்மத பிரார்த்தனை போய் நாலு மத பிரார்த்தினை வந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை.

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோ,அந்த டாக்டர்,எஞ்ஜினியர்,அக்கவுண்ட

  • Replies 118
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மடலுக்கு நன்றி புத்தன், சாயிபாபா வழிபாடு பற்றியோ அல்லது அவரை பின்பற்றுபவர்கள் பற்றியோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தாயகத்தில் கூட சாயி பக்தர்கள் மத்திய தரமாகவோ அல்லது உயர் தரமாகவோ இருப்பர்கள். சாயிபாபா ஏழைகளின் கடவுள் இல்லை. அது மட்டுமல்ல பாபா லிங்கம், மோதிரம் கொடுப்பது எல்லாம் பிரபல்யமான நபர்களுக்கு மட்டுமே. எனக்கு தெரிந்து தொண்டமானின் பேர்த்தியின் திருமணத்திற்கு தங்கத்தாலி வாயிலிருந்து எடுத்து கொடுத்தார்.

ஒரு முறை சாயிபாபா தீடிரென்று "நிறுத்து, உன் துப்பாக்கியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று புட்டபர்த்தியில் இருந்து கொண்டு கத்தினார். பக்தர்களுக்கு விவரம் புரியவில்லை. காஸ்மீரில் உள்ள அவரது பக்தரான இராணுவ அதிகாரி துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார் என்றும், அதை தான் தடுத்து விட்டதாகவும் சாயிபாபா பக்தர்களுக்கு விளக்கினார். கேட்ட பக்தர்கள் மிகவும் பரவசமானார்கள்.

இன்னொருமுறை சாயிபாபா "உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.

ஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.

:lol::lol::lol:

இந்தத் தலைப்பே பிழையென நினைக்கிறேன்!!!

இந்த புதிய மதமல்ல, நீண்ட காலங்களுக்கு முன் உருவாகிய மூடநம்பிக்கை அல்ல ஒரு மேல் தரப்பு மக்களிடையேயான நாகரீகம் என்றுதான் சொல்லலாம்!!!!

தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தை போக்குவதற்கு நாகரீகமாக மதத்தை மாற்றிய நிகழ்வுதான் இந்த பாபா மதம் என்றுதான் சொல்லலாம்!!!

புத்தன் எழுதியது:

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாயி பாபாவுக்கு மூப்பு வந்த திண்டாடுறார். ஆள் இப்ப இண்டைக்கோ நாளைக்கோ கேஸ்.. இந்த டொக்டர்கள் போய் ஏதாவது செய்யலாமே ... ஒரு வேளை மற்றாக்களின் மூப்பை இவர் எடுத்துக்கொண்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருமுறை சாயிபாபா "உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.

சுனாமி போன்ற இயற்கை அழிவுகளையும் எடுத்து பல்லாயிரகணக்கான மக்களையும் காப்பாற்றி இருக்கலாம்.

புத்தன் அங்கிள் இன்னும் கொஞ்ச காலத்தில் சுண்டல் பாபாவும் பிரல்பயமாகி அவருக்கு கூட ஒரு மதம் இருக்கும் என்ன இருந்தாலும் நான் தான் அவரின் முதல் சிஷ்யை

சாய்சுண்டல் சாய்சுண்டல்

எனி எல்லா தேவாரங்களின் முடிவிலும் இதை தான் போட்டு முடிக்க வேண்டும்

:wink:

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.

மிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.

அதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்

:oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா புத்தன் !

உங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....

இங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்.

ஐயா புத்தன் !

உங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....

இங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்

கீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள் அல்லது தரமிறக்கம் செய்து போட்டுப் பாருங்கள் (அதை சேமித்து வைத்து பின்பு யாருக்காவது போட்டும் காட்டலாம் - Right Click and 'Save Target As')

Windows Media அல்லது RealPlayer அவசியம்.

01. Baba cheating with vibhuti

You can clearly see how Baba gets something from his left hand, in which he is holding the letters, and then a bit later is performing vibhuti with his right hand.

பாபா சட்டையின் நீள கையில் இருந்து எடுத்து குடுக்கிற தங்க் சங்கிலிகளில் 916 அடயாளம் எல்லாம் போட்டு இருக்காம். கைக்கடிகாரம்கள் எல்லாம் குடுப்பாரம் அது 2 வருசத்துக்கு பிறகு வேலை செய்யுறது இல்லையாம். (கடையில் வாங்கின மணிக்கூடுகள் மாதிரி)

பாபா சாதனைகளில் கொஞ்சம்.

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba02.wmv

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba03.wmv

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba06.wmv

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு எழுதியது

புத்தன் எழுதியது:

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:

மாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:

தங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.

இன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ?

கிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா? :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதஅன்புக்கு இனிக்கும் வாழ்க்கைக்காறனுக்கும்,

தீமைக்கு இனிக்கும் வாழ்க்கைக்காறனுக்கும்,

கடவுளுக்கு எது இனிக்கும் என்று இருவேறு அளவுகள்.

முன்னவனுக்கு மக்கள்நலப்பணியே கடவுள் வழிப்பாடாகிறது.

பின்னவனுக்கு சுரண்டிவைத்திருக்கும் மாற்றான் வியர்வையின் ஒருபகுதியை கடவுளின் கைகளில் திணிக்க ஆசைப்படுகிறான்

வையாதீர்கள் இது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதம் கதம் (சாயி)பாபா கவுண்டவுன் ஆரம்பம்.

சாய்பாபா கெட்டிக்காரர்தான்....

அவரை தொழும் அதிபுத்திசாலிகள்????????????

பாவம் பாபாதான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

வேறவழி இல்லை... வேற யார் சொன்னாலும் அவை கேக்கமாட்டினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு எழுதியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:

மாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:

தங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.

இன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ?

கிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா? :?:

இதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்

அண்ணோய் இது தெய்வக் குத்தமாகப் போகுது... இந்த விளையாட்டுக்கு நான்வரேல்லை,

உங்களுக்கென்டாலும் மனிசி பேசிப்போட்டு குசினிக்க போட்டுது, எனக்கு இங்க என்ட மனிசி சாப்பாட்டிலை கையைவச்சிடும்...

நான் நினைக்கிறன் இது ஒரு பெரிய விசயம் (ஐஞ்சு சதத்திற்ககு பிரியோசனமில்லாத) உதப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா பிறகு மற்றமதங்களைப் பற்றியும் ஆராயவேண்டிவரும், அதுக்கு எங்கட வாழ்நாளே போதாது, அது தன்டபாதையில போகட்டும் அதுக்குப்பின்னால போறதுகளும் போகட்டும்.

சாணக்கியன

ஐpம் கிளப்பிற்குக் போறவனுக்கு நல்ல உடல்வலுவை எதிர்பார்த்து போகிறான் அவனுக்கு அது கிடைக்கிறது. சாய் சற்சங்கத்திற்க்கு போறவன் மனஅமைதியை நாடிப் போறான் அவனுக்கும் அது கிடைக்கிறதாம். அதனால் தான் அவன் திரும்பவும் போகிறான்.

பாலர் பாடசாலையில் ஆசிரியர் ஒரு மட்டையினால் செய்த குதிரையின் உருவத்தை காட்டி இது குதிரை என்று சொல்லிக் கொடுக்கிறாறோ அது போலத்தான் சாயி பாபாவும் அவரவர் அறிவுக்கு ஏற்றாற் போல சில யுத்திகளை கையாளுகிறார் போல.

ஆசிரியர் காட்டிய குதிரையை பார்த்து இது உண்மையான குதிரையில்லை இது மட்டை என்று ஒரு பிள்ளை சொன்னால் அந்தப்பிள்ளை அந்த வகுப்பில் இருக்கத் தேவையில்லை என்கிறது எனது வாதம். அந்தப்பிள்ளைக்கு தகுதிக்கேற்றாற்போல வகுப்பேற்றம் கொடுப்பதுதான் முறை. அதனால தான் நாங்கள் (இப்ப) போறதில்லை.

அதற்காக அவர் செய்வது பிழையென்று சொல்ல முடியாது. அப்படி சொல்வதானால் அறியாமையாய் இருப்பதுவும் தவறே.

ஒவ்வொருவரும் தத்தமக்கென வௌ;வேறு அளவிலான வௌ;வேறு துறைகளில் அறிவை கொண்டிருப்பர். அவர்கள் அதன்பாற்பட்டு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வர் அதில் திருப்தியும் அடைவர்.

அன்பே சிவம், அன்பே சாயி.

(மன்றப் பெரியவர்களே நான் அதிகம் பேசியிருந்தால் மன்னிக்கவும், மனதில் பட்டதை சொன்னேன்)

சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்

:oops: :oops:

அப்பிடியே எனக்கு ஒரு காணியும் homebush இல்ல starthfeild ல தந்திங்கன்னா...இன்னும் நல்லா இருக்கும்பா.. :oops: :oops:

மன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.