Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பள்ளிவாயல் திறப்பு

Featured Replies

DSC06200.JPG
-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையின் கடற்கரைப் பகுதியில நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய பள்ளிவாயல் திங்கட்கிழமை(23) திறந்துவைக்கப்பட்டது.

எஸ்.எப்.ஆர்.டி எனும் நிறுவனத்தினால் குவைத் நாட்டின் தனவந்தர் ஒருவரின் உதவியுடன்; நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமித்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி எம்ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் திறந்து வைத்தார். 

இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவரும் காததான்குடி காதிநீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அஸர் தொழுகை நடத்தப்பட்டு பள்ளிவாயலில் தொழுகைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
DSC06199(1).JPG
DSC06197.JPG
DSC06197(1).JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/115430-2014-06-24-03-50-15.html

விலாசத்தை போடாதைங்கோ.

சீலை உடுத்திய சிறி லண்கன்ஸ் வந்து தரைமட்டமாக்கிவிடுவார்கள்.

அட ..., இவங்களும் விடுகிறமாதிரி இல்லை சரியான போட்டி 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்கள  இடங்களில் விடவில்லையோ?? :(

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகள் இருக்கும் வரை..... எத்தனை பள்ளி வாசல் உடைத்தாலும், சளைக்காமல் கட்டிக் கொண்டே இருக்கலாம்.

  • தொடங்கியவர்
 
பள்ளிவாசலின் புதிய கட்டிடம் திறப்பு
 

DSC05700.jpg
-முறாசில்

மூதூர் ஆலிம் சேனை, முந்திரியஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிறா பள்ளிவாசலின் புதிய கட்டிட திறப்பு விழா சனிக்கிழமை இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் ஜே.எம்.றியாஜ் நத்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  நூற்றுக்கும் அதிகமான  மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ரஷீத் (ரியாதி), இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின்  பணிப்பாளர் ஸபர் ஸாலி, தஃவா பிரிவுப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் என்.நிஸாத் நளிமி, இந்துமத அர்ச்சகர் சிவஸ்ரீ எஸ். வேலுப்பிள்ளை, பாலமுருகன் கோயில் நிர்வாக சபைத் தலைவர் மாரிமுத்து நாதன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இலங்கை  முஸ்லிம் வாலிபர்  ஒன்றியத்தின் திட்டப் பணிப்பாளர் ஸபர் ஸாலி, 

'இந்த பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழாவில் முஸ்லிம் மக்களோடு இந்து மற்றும் கிரிஸ்தவ சகோதர சகோதரிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதைக் காணுகின்ற போது மனம் பெரும் மகிழ்ச்சியடைகின்றது. 

இனங்களுக்கிடையில் இத்தகைய ஒற்றுமையானது நல்லதொரு எதிர்காலத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்நிகழ்வின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லதொரு செய்தி கொண்டு செல்லப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம் வாலிபர்  ஒன்றியமானது சகவாழ்வை மையமாகக் கொண்டு இலவச கண் காட்ரக்ட் சத்திர சிகிச்சை முகாமை 2001ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது.  தனியார் வைத்தியசாலைகளில் சுமார் ஐம்தாயிரம் ரூபாய்வரை செலவு செய்து மேற்கொள்ளவேண்டியுள்ள இச்சத்திர சிகிச்சை, 12 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இந்துமத குரு அர்ச்சகர் எஸ்.வேலுப்பிள்ளை ஆலிம்சேனை பாடசாலையில் இருக்கும் தொழுகை அறையில்  நிலவிரிப்பொன்றை வழங்குவதற்கு ஆவனசெய்யுமாறு இலங்கை  முஸ்லிம் வாலிபர்; ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தபோது அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  அவ்வமைப்பு இப்பகுதியினது இன ஒற்றுமையின் சின்னமாக  அர்ச்சகர்  இருப்பதாக பாராட்டியது.
DSC05704.jpg

 

DSC05680.jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/81--image/114410-2014-06-16-02-59-04.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபு நாடுகள் இருக்கும் வரை..... எத்தனை பள்ளி வாசல் உடைத்தாலும், சளைக்காமல் கட்டிக் கொண்டே இருக்கலாம்.

 

நாங்கள் சைவசமயக்காரர்!!!!!!
 
ஒருமரத்தை கண்டமாம் சூலத்தை குத்தினமாம் அண்டையிலையிருந்து அது வைரவர் கோவில்.
 
அரசமரத்தை கண்டமாம் சாணகத்திலை பிள்ளையார் புடிச்சு வைச்சமாம்  அண்டையிலையிருந்து அது பிள்ளையார் கோவில்.
 
ஆலமரத்தை கண்டமாம் ஒரு கல்லை தூக்கி வைச்சமாம் அண்டையிலையிருந்து அது காளி கோவில்.
 
நெல்லிமரத்தை கண்டமாம் வேலாயுதத்தை குத்திப்போட்டு அண்டையிலையிருந்து அது முருகன் கோவில்....
 
எங்களுக்கு வத்திக்கானுமில்லை....சவூதியுமில்லை.....எல்லாம் இயற்கையை நம்பித்தான்...... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.