Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Featured Replies

புலிகள் தமிழரின் சுய நிர்ணயதிற்காகப் போராடுகிறார்கள்.அவர்களே ஏகப் பிரதினிதிகள் என்றும் மேற்குறியதே தமிழர் போரட்டத்தின் குறிக்கோள் என்றும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே தமிழர் கூட்டமைவு.அதன் மூலம் ஜன நாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

இங்கே டக்கிளசோ சங்கரியோ இந்தக் கோரிக்கைகளை முன் வைதுப் போட்டி இடவில்லை, போராடவில்லை,அதனல் அவர்கள் தமிழர்களின் பெரும்பானமை ஆதரவைப் பெறவில்லை.இங்கே ஜன நாயகம் என்பது பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவே இருக்க முடியும்.ஒற்றயாட்ச்சிக்குள் அதிகார பகிர்வது, மத்தியில் கூட்டாட்ச்சி மானிலத்தில் எமது ஆட்சி மேலும் கொள்ளயடிப்பு, கொலை ,பாலியல் வல்லுறவு என்ற கொள்கைகளை உடைய கைக் கூலிகலுக்கு எவ்வாறு தமிழர்களைப் பிரதி நிதிதுவப் படுத்த முடியும்? அது எவ்வாறு ஜன நாயகம் ஆகும்.இவ்வாறான பல் வேறு நோக்கங்களை கொண்டவர்களால் எவ்வாறு தமிழரின் சுய நிற்ணயத்தைப் பெற முடியும்.இது பயன் படப் போவது மகிந்தரின் சர்வகட்சி மானாட்டைப் போல முன்னர் பல வருடங்களாக நாடாத்தப்பட்ட சர்வகட்சி மானாடுகளைப் போல காலத்தை விரயமாக்கி எதுவித முடிவுகளையும் எடுக்காமல் தமிழரின் அரசியைல் இலக்கைச் சிதைக்கும் எண்ணதுடன் விதைக்கப்படும் நச்சு விதையே.இதுவே ஜனனாயக விரோதமானது.ஜன நாயக ரீதியாக பெரும்பானமைத் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட இயக்கமும் அதன் அரசியற் கோட்பாடும் எவ்வாறு பின் தல்லப் பட இடங்கொடுக்க முடியும்?இதன் மூலம் எமது போராட்டம் சிதைக்கப் படும் சூழ்ச்சியே பின் நிற்கிறது என்பது எலோருக்கும் விளங்கும் ஒரு விடயம்.அதற்குத் தான் சமாதனம் என்னும் சூழ்ச்சிகரமான வேடத்தை நீர் இங்கு போட்டிருகிறீர்.உம்மை தற்போது தாராளாமாக அடயளம் காட்டியாயிற்று.தமிழருகுள் இருக்கும் உம் போன்ற புல்லுரிவகளால் தான் பெரும் ஆபத்துக் காத்திருக்கிறது.

நீர் தேசியா ஆதரவாளன் போலவும்,சுய நிர்ணய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் போலவும் போட்ட வேடம் கலைந்துள்ளது.

புலிகள் தான் தமிழரின் தலைச் சக்திகள் .அவரகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகளாக ஜன நாயக ரீதியா தமிழ் மக்களால் பிரேரிக்கப் பட்டு உள்ளனர்.எந்தப் பேச்சுவார்த்தையும், எந்த அரசியல் முடிவுகளும் அவர்களாலயே மேற் கொள்ள படும். உம்மைப் போன்ற புல்லிருவிகள் இங்கே வந்து எழுதுவதால் இவை எவையுமே மாறிவிடப்போவதில்லை.ஆனால் உம்மைப் போன்றவர்களின் சமாதான வேடம் தோலிருக்க பட்டு உமது உண்மயான சுய ரூபம் காட்டப் பட வேண்டும், தமிழ் மக்கள் எமாறாது தொடர்ந்தும் அரசியல் விழிப்புடன் இருக்க.

  • Replies 211
  • Views 26.9k
  • Created
  • Last Reply

மேற்குலகம் கூப்பாடு போடும் ஜனநாயக முறையில் அவர்களுடைய பிரதிநிதிகளின் கண்காணிப்பில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கமாஸ் உடன் உறவுகளை பேண மறுக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அது மாத்திரமல்ல பொருளாதார தடைகளை உருவாக்கி மேற்குலகின் எடுபிடிகளை தெரிவு செய்யாததற்கு தண்டனை குடுக்கவும் முயலுகிறது ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களிற்கு.

ஆனால் எந்தவித ஜனநாயக முறையும் இன்றி சவுதி, குவெயித், ஜோர்தான் போன்ற நாடுகளில் நடக்கும் மன்னராட்சிகளை தக்க வைத்துக் கொள்ள இராணுவ, வர்த்தக சிறப்புரிமைகள், பொருளாதார, இராஜதந்திர உதவிகள் அமெரிக்காவால் வாரி வழங்கப்படுகிறது.

இப்படியான அப்பட்டமான இரட்டை வேட நாடகத்தின் இன்னொரு வடிவம் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட கைக்கூலிகளிற்கு தமது அளவு கோல்களில் பட்டங்களும் கொளரவங்களும் கொடுத்து அவர்களை தூக்கி வைத்துக் கொள்ளுவது தமது கபடங்களை அரங்கேற்ற.

தேர்தலில் நின்று வெல்லாதவர்களும் பிரதிநிதகள் அவர்கள் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் என்றால் தேர்தல் வேட்பாளர்கள் எல்லாரும் பிரதிநிதகள் ஆகிவிடுவினம். பணம் இருந்தால் ஒரு கட்சி ஆரம்பித்து வேட்பாளராகி காசுக்கு 1000...2000 வாக்குகளை வேண்டிவிட்டால் அவரும் சிறுபான்மை பிரதிநிதி. அவர் என்ன அடிப்படையிலான சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகிற

1985 மே மாத ஆரம்பத்தில் டெலோ புலிகளால் தடை செய்யப்பட்டு அத்தடை 2001 ஏப்பிரலில் ரி என் ஏ தோற்றம் பெறும் வரை மிக இறுக்கமாக புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டிட்ருந

இந்த 2001ம் ஆண்டு வரை ரெலோ மீது புலிகள் இறுக்கமான போக்கினைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது மிகவும் தப்பானது.

வவுனியாவில் 90களின் பிற்பகுதியில் புளோட் மாணிக்கதாசன், ரெலோவிற்கிடையில் நடந்த சண்டையின் போது, புளோட் தான் படு அநியாயங்களைச் செய்தது! லக்கி முகாம் என்று, ஒரு சித்திரைக் கூடமே இருந்தது.

ஆனால் புளோட் காரர்கள் தான் தண்டிக்கப்பட்டார்களே தவிர, ரெலோவில் தப்பு என்று புலிகள் அக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புலிகள் 90களின் பிற்பகுதியில் பெற்ற ஓரளவு நன்மதிப்பினூடகத் தான், புலிகளோடு நெருக்கமானார்கள் என்று சொல்லலாம்.

அவ்வாறே, சுரேஸ் பிரேமச்சந்திரன் வரதரின் தப்பியோட்டத்துக்கு பிறகு தலைவராக இருந்தாலும், யாழ்பாணத்தில் சுபத்திரன், சிறீ தரன் கொட்டமும், வவுனியாவில் இலிங்கேஸ், என்று பிராந்தியத் தாதா நிலையில் தான் அவர்கள் இருந்தனர்.சொல்லப் போனால், அக்காலப்பகுதியில் சுரேஸ் முகவரி இழந்தவராகவே இருந்தார்.

எனவே, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டே, ஏற்றுக் கொள்ளப்பட்டனர் எனலாம். ஆனால் ஈஎன்டிஎல்எவ், நேற்று வரைக்கும் கருணாவோடு நின்று அநியாயப் படுகொலைகளைச் செய்து போட்டு, கருணா பிரிந்தவுடன், அவர்களை உள்வாங்குவது என்பதற்கு, இது ஒன்றும், சாக்கடை அரசியல் அல்லவே!

இதைத்தான் நானும் சொல்கின்றேன்... சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட அப்படித்தான் EPRLF அதைவராக ஏற்க்க பட்டபோது(எஞ்சிய கூலிகள் வரதர் அணியில் அரச சார்பாளர்களானது வேறகதை) அந்த அமைப்பின் அடிப்படையில் மாற்றங்கள் வந்தது.... அதன்பின்னர் அவர்களை புலிகளால் நிராகரிக்கபட முடியாது போனது...

  • தொடங்கியவர்

தமிழ் தேசியம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன் வரலாற்றில் புலிகளின் காலம் ஒரு கண் இமைக்கும் பொழுது என்றுகூட சொல்லலாம். தமிழ் தேசிய வளர்ச்சிப்போக்கில் புலிகளின் பணி மகத்தானது. ஆனால் புலிகளின் வரலாற்றுக்குள் தமிழ் தேசியம் அடங்கிவிடக்கூடியது இல்லை. அது தனது பயணத்தை தனக்குரிய வழிகளில் தொடர்ந்து கொண்டுசெல்லும்.

சிலர் இங்கு கருத்தெழுதுவதை விட மற்றவர்களுக்கு புலி எதிர்ப்பாளார் முத்திரை குத்தி தமக்குள் தாம் சுய இன்பம் அடைகிறார்கள். காலம் இவர்களின் போன்ற கருத்துகளை கருத்தில் எடுப்பத்தில்லை. இவர்களது கருத்துகள் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிப்போக்கை ஆரோக்கியமான ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது குறித்து அக்கரை எதுவும் காட்டப்பட்டதாக தெரியவில்லை. தறுக்கணித்து காலாவதியாகிவிட்ட வாதப்பிரதிவாதங்கள் இனி பயன் ஏதும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணர்த்ததாக தெரியவில்லை.

SAMATHAANAM எழுதியது:

'''''தமிழ் தேசியம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன் வரலாற்றில் புலிகளின் காலம் ஒரு கண் இமைக்கும் பொழுது என்றுகூட சொல்லலாம். தமிழ் தேசிய வளர்ச்சிப்போக்கில் புலிகளின் பணி மகத்தானது. ஆனால் புலிகளின் வரலாற்றுக்குள் தமிழ் தேசியம் அடங்கிவிடக்கூடியது இல்லை. அது தனது பயணத்தை தனக்குரிய வழிகளில் தொடர்ந்து கொண்டுசெல்லும்.''''''

.

.

.

.

.

SAMATHAANAM அண்ணெய்க்கு பதில் எழுத வெளிக்கிட்டேன்.... பைத்தியம் ஆனேன்............... :shock:

தமிழ் தேசியம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதன் வரலாற்றில் புலிகளின் காலம் ஒரு கண் இமைக்கும் பொழுது என்றுகூட சொல்லலாம். தமிழ் தேசிய வளர்ச்சிப்போக்கில் புலிகளின் பணி மகத்தானது. ஆனால் புலிகளின் வரலாற்றுக்குள் தமிழ் தேசியம் அடங்கிவிடக்கூடியது இல்லை. அது தனது பயணத்தை தனக்குரிய வழிகளில் தொடர்ந்து கொண்டுசெல்லும்..

இது உம்முடைய அறிவீனத்தை தான் காட்டுகிறது... தமிழ் தேசியம் என்பதை எங்களிலும் பலமடங்காய் காக்க இந்திய தமிழ்நாட்டு தமிழர்கள் இருக்கிறார்கள்...

நாங்கள் பேசுவதும் உயிர்ப்பீப்பதும் தமிழீழ தேசியம்... அதில் புலிகளை விலக்கி வைத்து வேற ஒரு சக்தி உள்நுளைந்து விடும் என்பது... மாவோ சேதூங்கை விலக்கிவிட்டு சீனா வந்து விடும் என்பது போண்றதோ... இல்லை ஆபிரகாம்லிங்கனை விலக்கி அமெரிக்கா வந்த கதைதான்... இல்லை உமக்கு விளங்கினமாதிரி சொன்னால்... சோழர்களை விலக்கிவிட்டு தமிழர் வரலாறு சொன்ன கதைதான்... இன்னும் விளக்கமாக சொல்வதானால் புத்தரை விலக்கி வைத்துவிட்டு பௌத்த சீர்த்திருத்த கருத்து வந்த மாதிரி இருக்கும்...

வாய்க்கு வந்த படி உளறுவது என்பது நீர் சொல்லி இருக்கிறீரே அதுதான்... மற்ற எல்லாரும் திட்டாத புரிந்துணர்வோட நீர்தான் எழுத வேணும்...... எழுந்த மானத்துக்கு ஏன் எழுதுறீர்..???? அதுவும் உமது கனவுகளை ஏன் திணிக்கிறீர்....??? மற்றவை திட்டுகினம் எண்டு அனுதாபம் தேடப்பாக்காதையும்....

1,எனக்கு பைத்தியமா?

2,சமாதானத்திற்கு பைத்தியமா?

3,சமாதானத்திற்கு போன எமக்கு பைத்தியமா?

  • தொடங்கியவர்

....வாய்க்கு வந்த படி உளறுவது என்பது நீர் சொல்லி இருக்கிறீரே அதுதான்... மற்ற எல்லாரும் திட்டாத புரிந்துணர்வோட நீர்தான் எழுத வேணும்...... எழுந்த மானத்துக்கு ஏன் எழுதுறீர்..???? அதுவும் உமது கனவுகளை ஏன் திணிக்கிறீர்....??? மற்றவை திட்டுகினம் எண்டு அனுதாபம் தேடப்பாக்காதையும்....

..சிலர் இங்கு கருத்தெழுதுவதை விட மற்றவர்களுக்கு புலி எதிர்ப்பாளார் முத்திரை குத்தி தமக்குள் தாம் சுய இன்பம் அடைகிறார்கள். காலம் இவர்களின் போன்ற கருத்துகளை கருத்தில் எடுப்பத்தில்லை. இவர்களது கருத்துகள் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிப்போக்கை ஆரோக்கியமான ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது குறித்து அக்கரை எதுவும் காட்டப்பட்டதாக தெரியவில்லை. தறுக்கணித்து காலாவதியாகிவிட்ட வாதப்பிரதிவாதங்கள் இனி பயன் ஏதும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணர்த்ததாக தெரியவில்லை.

உந்தா பொறி பொறி என்று எல்லாரும் கத்துறீர்களே!!!!!

எங்களுக்கு எதிரி வச்ச ஒரே பொறி 'சமாதானம்' தானுங்கோ!

சொ..... இன்னும் எவ்வளவு காலம் உந்த 'தமிழ் தேசியம்' சேடம் இழுக்குமுங்கோ? சொல்லுங்கொ 'சமாதானம்' சொல்லுங்கொ........ :twisted:

இதுக்குள் புலி எதிர்ப்பு முத்திரை இருக்கிறதா..??? தகவலுக்கு நண்றி....!

உமது உள்நோக்கம் என்ன அதி நீர் சொல்லவரும் கருத்துக்கள் என்ன... அதில் நீர் போடும் உள்முடிச்சுகள் எல்லாம் என்ன எண்று விளங்கிக்கொள்வதுக்கு பேர் புலி எதிர்ப்பு முத்திரையா...???

சமாதானம் நீரே உமது சொற்களால் நீர் யார் என்பதை இனங்காட்டி உள்ளீர். நீர் இங்கே எழுதியவை எல்லாமே எல்லோரும் படிக்கும் வண்ணம் தான் உள்ளது.உமக்கு ஏற்றவாறு நீர் இங்கே வரலாற்றைத் திரிக்கலாம் வியாக்கிய்னாங்களை எழுதலாம், மூன்று கால் தான் முயலுக்கு என்று எழுதலாம் நான் சொல்லுறது தான் ஜன நாயகம் என்றும் எழுதலாம். ஆனால் வாசிப்பவர்களுக்கு தமிழர்களுக்கு எல்லாமே விளங்கும்.உமது விதண்டாவாதமான கருத்தாடல் பாணி, ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்கள் எல்லாமே இங்கே முன்னர் கருத்தாடி முகமூடி கிழிக்கப்பட ஒருவரையே நாயபகதுக்குக் கொண்டு வருகிறது.இதை நான் மட்டும் உணரவில்லை.உமது புலம்பல்களும் அலம்பல்களும் விரைவில் பொய்யாக்கப்படும் என்பதுவே யதார்த்தம்.

தமிழரின் வரலாறு என்னவாகவும் இருக்கட்டும் இன்றைய வரலாறு புலிகளால் தான் எழுதப் படுகிறது என்பதுவும் அவர்களாலையே தமிழரின் விடிவு சாத்தியம் என்பதுவே இன்றைய நிலை.இங்கே அதனை நீர் நிராகரிப்பதால் ஒரு பொய் உண்மை ஆகி விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் அண்ணா.......

எனக்கென்னமோ ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் போலத்தான் தெரியுது." பேசாமல் சரணடைந்து விடுங்கள். சும்மா புhச்சாண்டி வார்த்தைகளைவிட்டு யாழ் களஉறவுகளை குளப்பி தற்போதைய புலிகளின் பொறுமை காத்தலையும் உமக்கு சாதகமாக பயன்படுத்தி. அமெரிக்காவின் பலத்தை காட்டி யாழ்கள உறவுகளை மனதளவில் பலவீனமற்றவர்களாக மாற்ற நீர்போட்ட பருப்பு வேகும் மாதிரி எனக்கு தெரியவில்லை.

காரணங்கள்..........

பக்கம் 1ல் நீர் எழுதமுனைந்த விடயமும் தற்பொழுது நீர் எழுதுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாது இருந்தால் பரவாயில்லை... ஒன்றுடன் ஒன்று முரண்படுகிறது.

(2) முன்வைக்கபடும் கேள்விகளுக்கு நீர் கொடுக்கும் விளக்கம் சிலவேளைகளில் விளக்கம் குறைந்ததாகவும் விளக்கம்அற்றதாகவும் சிலவேளைகளில் விளங்கமுடியாததாகவும் உள்ளது.

(3) அமெரிக்காவின் பலமென்பது புலிகளை விட கூடியதே தவிர தற்போதுள்ள உலகநிலைளில் பின்தங்கியதாகவே இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் இந்தியாவும் சீனவும்தான் ஒன்றடன் ஒன்று போட்டி போடுகிறது அமெரிக்கா விலகியே நிற்கவேண்டியுள்ளது. பாதுகாப்பு எனும் போது கடந்த 6 வருட சுயநல வாதிகளின் ஏகாபத்திய ஆட்சியால் எதிரிகள் பல மடங்காக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆக கூடியது இவர்களால் இன்னமும் இரண்டு வருடம்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும். அதன் பின் ஆட்சியேறுபவர்களுக்க இவர்கள்விட்ட தவறுகளை திருத்தவே குறைந்தது 4 வருடங்கள் வேண்டும். இவர்கள் ஆட்சியை பொறுப்பேற்ற போது அமெரிக்காவிற்கு அல்கெய்ட்த்தா மட்டுமே அச்சுறுத்தலாக இருந்தது இப்போ இவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாம்மியர்களையும் எதிரி ஆக்கிவிட்டுள்ளார்கள். அதற்கு கடந்த காலங்களில் ஸ்பெயின் இலண்டன்னில் நடந்த தாக்குதல்களே ஆதாரம். இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் அல்கௌ;த்தாவுடன் தொடர்பற்றவர்கள் (சுய தாக்குதல்காரர்கள்). அதைவிட பெரிய விடயம் அமெரிக்காவை இன்னுமொருமுறை அல்கெய்த்தா தாக்கினால் இறந்தவர்களை எடுத்து புதைத்து விட்டு இருக்க வேண்டியதுதான் ஆ ... ஊ என கத்தி எங்கேயும் தாக்கதல் நடத்த முடியாது. காரணம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் துர்ரதிஸ்டவசமாக மிக துல்லியமாக தமது நெற்வெர்கை இரகசியமாக இயக்கிகொண்டுதான் இருக்கிறார்கள். பாகிஸ்தானுடன் இணைந்து மொப்பம் பிடித்தாலும் முடியவில்லை காரணம். தற்போதைய ஆட்சியாளர்கள் தமது எண்ணை வியாபரத்தில்தான் அதிக கவனம் காட்டுகிறார்கள்.

......... தற்போதைய இஸ்ரவேல் நிலமைகள் உமக்கு மிக பாதகமாக இருக்கின்றது. அவதானித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐநா மனித உரிமை ஆணையம் இஸ்ரேலை மிககடுமையாக கண்டித்திருக்கின்றது. பத்திரிகை மாநாட்டில் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்கள் இஸ்ரேல் மனித உரிமைகளை மதிப்பதில்லையென்று. ஆகவே பயங்கரவாதம்மெனும் ஒரு சிறு மூடிக்குள் உண்மையான ஒரு இனவிடுதலைப்போராட்டத்தை மூடலாம் என நான் நம்பவில்லை. கொடுமை இழைக்கிறார்கள் என்பதை உலகமக்கள் உணர தொடங்கியுள்ளார்கள்.

காரணம் ஊடக வலைப்பின்னல். சின்ன் ஒரு மூவிமேக்கிங் இன்டஸ்ரி என்பதை அமெரிக்க நாட்டு மக்கள் உணர தொடங்கியுள்ளார்கள். செய்திகளை வேறு வடிவிலேதான் அறிய ஆவலுள்ளார்கள்.

உமக'கு சாதகமாக இருக்க கூடியது....

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவுக்கான எண்ணை கப்பல்களின் போக்குவரத்திற்கான பாதுகாப்பு என்பது மட்டும்தான். அதற்காக இலங்கையில் கால்ஊன்ற வேண்டிய ஒரு அவசியம் அமெரிக்காவிற்குள்ளது. இநதியாவின் கன்னியாகுமாரி முனையை கடந்தால் கப்பல் போகும் எல்லா முனைகளிலும் (நாடுகளிலும்) அமெரிக்கா இராணுவ தளமிருக்கிறது இலங்கையில் தேவையில்லை என்றாலும் .......

புலிகள் பலமடைந்திருந்தால் அரசாங்கமே தாக்கிவிட்டு புலிகள் மீது பழிபோடும் என்பது அமெரிக்காவிற்கு தெரியும்.

இருப்பினும் இந்தோனேசியா மிகபெரிய இஸலாம் நாடு அமெரிக்காவிற்கு எதிரான சக்த்திள் பல உள்ள நாடு ஆகவே அதுதான் அமெரிக்காவின் பார்வையில் முன்நிற்கம்மென நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் எளுதியது. ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல.

ஜஉழடழசசிறீசநனஸஏகபிரதிநிதிக

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் எளுதியது. ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல.

ஏகபிரதிநிதிகளாக ஜனங்கள் ஒருகட்சியை பிரதிநித்துவபடுத்துவது. ஜனநாயகமில்லை எனில்.......

ஜனநாயக கோட்பாடுஎன்பது என்ன என்ற கேள்வியை நாம் கேட்போம்......

நீர் புத்திசாலி அதற்கும் ஒரு பதிலை கொடுப்பீர்.

ஏன் ஜனநாயகம் என்ற கேள்விக்கு என்ன பதிலோ அதையே எழுதலாம்.

ஆனால் எமது பிரச்சனை இதுவல்ல. தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகளாக நீர் யாரை குறிப்பிடுகிறீர் என்பத.

ஆகவே நீர் மேல் எழுதியுள்ள ஓரு பெரிய பந்தியே இங்கு தேவையில்லாதது ஆனாலும' எழுதுகின்றீர்.

எமது கேள்வி நீர் என்ன சோல்லவவருகிறீர்

புலிகள் தமிழரின் சுய நிர்ணயதிற்காகப் போராடுகிறார்கள்.அவர்களே ஏகப் பிரதினிதிகள் என்றும் மேற்குறியதே தமிழர் போரட்டத்தின் குறிக்கோள் என்றும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே தமிழர் கூட்டமைவு.அதன் மூலம் ஜன நாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

புலிகள் தமிழீழ விடுதலை போராட்டத்தின் தலைமை சக்திகள் என்பதில் இங்கு கேள்விக்கே இடமில்லை. ஆனால் ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு குழுமத்திற்கோ ஏக பிரதிநிதி யாரென்று கேட்பதும் அந்த மக்களின் சர்வாதிகாரி யார் என்று கேட்பதும் அடிப்படையில் ஒரே தன்மையைக் கொண்டவையே.

தமிழ் கூட்டமைப்பு புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து அந்த ஆதரவு மூலம் அமோக வெற்றியையும் பெற்றது. இருந்தாலும் கூட்டமைப்பும் புலிகளும் இரு வேறு சக்திகள். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் இருந்தாலும் அவர் தன்னை அவ் அமைப்பின் ஏக பிரதிநிதி என்று சொன்னதும் இல்லை அப்படி ஒருவர் ஒரு ஜனநாயக கட்சியில் இருப்பதற்கு சாத்தியமும் இல்லை. இதே போல சிங்கள மக்களின் ஏக பிரதிநிதியாக மகிந்தரும் மார் தட்டிக் கொள்ள முடியாது.

எவ்வாறாயினும், மேற்குலம் கற்பிக்க முயலும் கபடத் தனமான ஜனநாயகமும் பன்முகத் தன்மையும் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற கூட்டத்தின் மறு பிரவேசத்திற்கு தான் வழி வகுக்குமென்றால், தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை.

நாம் வாழும் சமூகம் செழுமையாய் இருந்தாலே நமது செயல்களும் செழுமையாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய கேள்விக்கு பதில் அழிக்கத் தெரியாவிட்டால், உடனே, "ஐயோ! என்னைப் புலி எதிர்ப்பாளர் என்று பச்சை குத்துகின்றார்கள்" என்று, ஒப்பாரி வைப்பது யாழ்களத்துக்கு ஒன்றும் புதிதில்லை.

1. புலிகளை ஏகபிரதித்துவத்துக்குரியவர்

ஒருவருடைய கேள்விக்கு பதில் அழிக்கத் தெரியாவிட்டால், உடனே, "ஐயோ! என்னைப் புலி எதிர்ப்பாளர் என்று பச்சை குத்துகின்றார்கள்" என்று, ஒப்பாரி வைப்பது யாழ்களத்துக்கு ஒன்றும் புதிதில்லை.

1. புலிகளை ஏகபிரதித்துவத்துக்குரியவர்

புலிகள் தமிழீழ விடுதலை போராட்டத்தின் தலைமை சக்திகள் என்பதில் இங்கு கேள்விக்கே இடமில்லை. ஆனால் ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு குழுமத்திற்கோ ஏக பிரதிநிதி யாரென்று கேட்பதும் அந்த மக்களின் சர்வாதிகாரி யார் என்று கேட்பதும் அடிப்படையில் ஒரே தன்மையைக் கொண்டவையே.

தமிழ் கூட்டமைப்பு புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து அந்த ஆதரவு மூலம் அமோக வெற்றியையும் பெற்றது. இருந்தாலும் கூட்டமைப்பும் புலிகளும் இரு வேறு சக்திகள். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் இருந்தாலும் அவர் தன்னை அவ் அமைப்பின் ஏக பிரதிநிதி என்று சொன்னதும் இல்லை அப்படி ஒருவர் ஒரு ஜனநாயக கட்சியில் இருப்பதற்கு சாத்தியமும் இல்லை. இதே போல சிங்கள மக்களின் ஏக பிரதிநிதியாக மகிந்தரும் மார் தட்டிக் கொள்ள முடியாது.

எவ்வாறாயினும், மேற்குலம் கற்பிக்க முயலும் கபடத் தனமான ஜனநாயகமும் பன்முகத் தன்மையும் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற கூட்டத்தின் மறு பிரவேசத்திற்கு தான் வழி வகுக்குமென்றால், தமிழ் மக்களுக்கு அது தேவையில்லை.

நாம் வாழும் சமூகம் செழுமையாய் இருந்தாலே நமது செயல்களும் செழுமையாயிருக்கும்.

மாற்று அவர்களே நீங்கள் சொல்வதைத் தான் நானும் முதலிலையே சொன்னேன்.இந்த ஏக பிரதி நிதி, பன்முகத்தன்மை ,சமாதானம் என்ற சொற்பதங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் சூழ்ச்சிகளை நாம் இனங்காண வேண்டும் என்பதுவே.ஏக பிரதி நிதித்துவம் என்பது எதற்காக என்பதே இங்கே பார்க்கப் பட வேண்டும், அதே போல் பன்முகத் தன்மை என்பதுவும் சமாதானம் என்பதுவும் எதற்காக என்பதாகப் பார்க்கப் பட வேண்டும்.அதற்காகவே நான் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன்.அதற்கான பதில்களில் இருந்து சமாதானம் என்ற முகமூடியில் எழுதுபவரின் நோக்கு அவரின் வெற்று வார்த்தைகளின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளை வெளிக் கொணர முடிந்தது.இங்கே ஏக பிரதி நிதிகள் என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புலிகள் பிரதினிதித்துவப் படுத்துவதால் மடுமே உருவான நிலமை.உலகெங்கும் நடந்த விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள்,எங்கெல் லாம் மக்கள் ஓரணியில் அணி திரளுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பலம் பெற்றவர்களாக தமது உரிமைகளை வென்றெடுதுள்ளார்கள்.எங்கெல்

  • தொடங்கியவர்

...பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்

http://tamil.sify.com/fullstory.php?id=14303546

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

....ஒப்பியவாறு இரா. சம்பந்தன் வரவில்லை. எனவே மாவை சேனாதிராசாவும் நானும் இச்சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன. இரா. சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார். அக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம். இந்தச் சந்திப்புகளின் தேவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் ளதான்றியது............

இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எதையும் செய்ய முடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்............

இரா. சம்பந்தன் சென்னையில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9 அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.......

7.9.2006 காலை 10.30 மணிக்குக் கூடியபொழுது, எங்களுள் பலருக்கு இருந்த கருத்தொற்றுமையில், பிரதமரைச் சந்திக்கும் வரை இது தொடர்பான செய்திகள் வெளிவரக் கூடாதென்பதாகும். ஆனால் கூட்டமாக நாம் கலந்துரையாடிக்கொண்டிருந்த பொழுதே, சிவாஜிýங்கத்தின் தொலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. அது மட்டுமல்ல, அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிýங்கம் விரும்பினார்.

பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளை, பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிýருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாதென முடிவு செய்தோம். ......

இதற்கிறடயில் மாவை சேனாதிராசாவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் தொடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்............

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்த நாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்டோடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம். ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றில் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?.......

செய்தியாளர் வெளியே காத்திருப்பதாக வைகோவின் செயலர் என்னிடம் கூறினார். வியப்பாக இருந்தது. தனிப்பட்ட பணிக்காக வந்திருப்பதையும் முடிந்தால் இந்தியாவில் தலைவர்களைச் சந்திப்பதாகவும் பொதுப்படச் செய்தியாளரிடம் கூறுவதாக ஒப்பிக்கொண்டு, வெளியே வந்தோம். 3 þ 4 இதழ்களிýருந்து செய்தியாளரும் புகைப்படப் பிடிப்பாளரும் காத்திருந்தனர். செய்தியாளரிடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டவாறு செய்தியைக் கூறி, அனைவரும் எமதில்ல வாயில் வந்தோம்.

இரா. சம்பந்தனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புறப்பட்டனர். சிவாஜிýங்கத்தை அழைத்து வந்தேன். அவர் சினத்துடன் இருந்தார். செய்தியாளரை அழைத்ததன் பின் விளைவுகளைப் பத்மினி சிதம்பரநாதனும் நானும் அவரிடம் கூறினோம். பிரதமரைச் சந்திக்க முன், செய்திக் கசிவுகளில் எனக்கு உடன்பாடில்லை என்பதை நான் அழுத்தமாக அன்று தெரிவித்தேன். மாவை சேனாதிராசாவும் உடனிருந்தார். தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்ற சிவாஜிýங்கம், தனக்கு இச்சந்திப்பை அறிவிக்காதது பற்றிக் கடிந்தார். பதற்றமான நிலையில் இருந்த அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். நல்லது செய்தால் யார் செய்தாலென்ன எனக் கூறினேன். சினந்து வெளியேறினார்......

பிரதமருக்கு எழுதவுள்ள கடிதத்தின் வரைவு பற்றி ஆலோசிக்க, மாலை 3 மணிக்குக் கூடினோம். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும், தில்ý வெளிவிவகார அமைச்சும் தன்னுடன் தொடர்பாக இருப்பதாவும், மூன்று பேர் அடங்கிய தூதுக் குழுவை மட்டும் அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார். தான் முயன்று, தன்னையும் தன்னுடன் மூவரையும் சேர்த்து நால்வராகப் போகலாம் எனக் கூறினார். பத்மினி சிதம்பரநாதனைக் குழுவுள் அடக்கமுடியாதென அவர் நேரடியாகக் கூறவில்லை. சுற்றி வளைத்துச் சொன்னார். தன்னைச் சேர்ததுக்கொள்ளும்படி சிவாஜிýங்கம் கூறினார். தமது கட்சியின் அரசியல் குழுத் தலைவர் தாமென்பைதயும் விளக்கினார். செல்வம்தான் தலைவர் அவரைத்தான் அழைப்பது முறை எனச் சம்பந்தன் விளக்கினார்............

அன்று மாலை, பத்மினி சிதம்பரநாதன் என்னிடம் பேசினார். தான் வந்ததே தில்ý போவதற்காக என்றும் வந்த பின்பு தன்னையும் சேர்த்து அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டுச் செல்ல முயல்வதாகவும் மிக மனம் நொந்து கூறினார்...........

பிரதமருக்கு ஈழத் தமிழர் சார்பில் கொடுக்கும் கடித வரைவு தயாரிப்பதில் ஈடுபட்டோம். சிவாஜிýங்கம் வரவில்லை. சுருக்கமாக எழுதவேண்டும் என்பதில் சிலர், நீண்டே எழுதலாம் எனச் சிலர் கூற, வரைவுக்குரிய பனுவலை இரா. சம்பந்தன் தன் கைப்பட எழுத, பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தட்டச்சுச் செய்தார். அங்கிருந்தோர் சொன்னனவும் இருந்தன, சொன்னன பல விடுபட்டும் இருந்தன. சொல்லாதனவும் இருந்தன. 7.9 தொடக்கம் 14.9 வரை எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பனுவல் 8 பக்கங்கள் வரை நீண்டது.

இவ்வாறு எழுதிக்கொண்டிருக்றகயில், இரா. சம்பந்தன், என்னைப் பார்த்து, சச்சி, தமிழர் தாயகத்தின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை பற்றிப் பாஜகவிடம் நீங்கள் கூறியது மடத்தனமான கருத்து என்றார். நீண்ட எல்லைகளையும் பரந்த நிலப்பகுதியையும் காக்கும் படைகளை நாம் வைத்திருக்க முடியுமா? எனக் கேட்டார்.

அடித்தளத்திலேயே கை வைக்கிறாரே? சொல்லாட்சி கூடப் பொருத்தமானதாக இல்லையே!

உங்கள் சொல்லாட்சியைப் பொருட்படுத்தவில்லை, 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் எந்தத் தனமானேதா, அந்தத் தனமானதுதான் நான் தொடர்ந்து பாஜகவிடம் மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் தலைவர்களிடமும் வýயுறுத்தி வருகிற கருத்து என்றேன்.

மாவை சேனாதிராசாவும் நானும் அந்தக் கருத்தை வýயுறுத்தியே தமிழகத் தலைவர்களிடம் பேசி வந்தோம். சிவாஜிýங்கமும் அதையே தமிழகத் தலைவர்களிடம் பேசி வருகிறார். மாவை சேனாதிராசாவுக்கு இது நன்றாகத் தெரிந்தும் அவர் வாய் திறக்கமால் இருந்தமை, தமிழகத் தலைவர்களிடம் தான் பேசியதைத் தன் தலைவரிடமே பேச முயலாமல் மெüனியாக இருந்தமை வியப்பாக எனக்கு இருக்கவில்லை. நாடாளுமன்றப் பதவி அரசியலே அதுதான்.......

இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் யாவரும் காலையில் எனது இல்லத்துக்கு வந்தனர். மாவை சேனாதிராசாவும் நானும் சேர்ந்துகொண்ளடாம். பிரதமருக்குக் கொடுக்கவுள்ள கடித வரைவைத் தயாரித்தோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஆக்கபூர்வமான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டிருந்தனர். ஆட் கடத்தல்களின் வேகம் விரைவு எண்ணிக்கை பற்றிச் சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமாகக் கூறினார். அவற்றையும் உள்ளடக்கியே கடித வரைவை இரா. சம்பந்தன் எழுதிக்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கக் கூடாது எனக் கடிதத்தில் எழுதுங்கள் எனக் கேட்டேன். நேரில் சொல்லுவோம், கடிதத்தில் எழுத வேண்டாம் எனச் சம்பந்தன் மறுத்துவிட்டார். நேரில் சொல்வேத சரியாக இருக்கும் என மாவை சேனாதிராசாவும் கூறினார்.

போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்ý வýயுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப்புýகள்தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

தமிழர் எதிர்பார்ப்புகளை நோக்கிய அரசியல் தீர்வுக்கு உடன்படுமாறு கொழும்புக்குப் போதுமான தூதரக, பொருளாதார, அரசியல் அழுத்தம் கொடுக்காமாறு தில்ýயைக் கேட்டுக் கடிதத்தில் எழுதுங்கள் என்றேன். இது முதல் சந்திப்பு; இதில் அரசியல் தீர்வு விடயங்கள் வேண்டாம் என இரா. சம்பந்தன் கூறினார்.

அல்லலுற்று ஆற்றாது துயருரறும் ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா உடனடியாக உதவவேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் உதவிகளை, இலங்கை அரசின் மூலமாக வழங்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி, தமிழர் அமைப்புகள் மூலம் வழங்குமாறு பிரதமருக்கு எழுதுங்கள் எனக் கோரினேன். பயனாளிகளுக்கு நேரடியாக இந்திய உதவி உடனடியாகக் கிடைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசில் தமிழருக்கு நம்பிக்கை இல்லை என்றும் எழுதுவதாகக் கூறினார் இரா. சம்பந்தன்............

காலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தில்ýக்கு ஐவரும் புறப்பட்டனர். இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தில்ýயில் தங்கியிருந்தனர்.

இரவு, இரா. சம்பந்தனின் அறையில், அவரைப் பார்த்ததாகவும் பின்னர் மாவை சேனாதிராசாவைப் பார்த்ததாகவும், தன்னையும் அந்தக் குழுவில் இணைத்துக்கொள்ள அவர் செய்த கடைசி முயற்சியும் வெற்றி பெறாமல் சோர்வுடன் தில்ýயிலுள்ள தனது அறைக்குத் திரும்பியதாகவும் 27.8 அன்று சென்னையில் என்னிடம் சிவாஜிýங்கம் கூறினார். 18.9 புதன் மாலையே தில்ý போய்விட்டதாகவும் 22.9 மதிய விமானத்தில் சென்னை திரும்பியதாகவும் சிவாஜிýங்கம் தெரிவித்தார்........

21.9.2006

ஈவிரக்கமற்ற ஆயுதபாணிகளே விடுதலைப் புýகள், என்ற துணைத் தலைப்புடன் இரா. சம்பந்தன் தில்ýயில் பேசிய பேச்சின் சாரம் சென்னை இந்துவில் வெளிவந்திருந்தது.

தப்புத் தப்பாய் வெளியிடும் வழமை இந்துவுக்கு உண்டு என்பதால் மற்றொரு ஆங்கில இதழான டெக்கான் குரொனிக்கிள் பார்த்தேன். தலைப்பில் அந்த வரி இல்லை. உள்ளே செய்தியில் அதே வரிகள். நான் வியப்படையவில்லை............

தேனீர் இடைவேளையின் பொழுது பேராசிரியர் முனைவர் வா. செ. குழந்தைசாமி என்னிடம் பேசினார். சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத் தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத் தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஜதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழரால் முடியவில்லையே சச்சிதானந்தம் என என்னிடம் உரிமையோடு மனம் நொந்து கூறினார். பின்னர் அவரிடம் மாவை சேனாதிராசாவை அழைத்துச் சென்றேன். முன்பு என்னிடம் கூறியதை மாவை சேனாதிராசாவிடமும் கூறுங்கள் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதையே அவர் திரும்பவும் சொன்னார்.

  • தொடங்கியவர்

இனியும் காலத்தைத் தாழ்த்தாது மாணவர் பகிஷ்கரிப்பை கைவிடுக யாழ்.ஆயர் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம்,ஒக்.2

தமிழ் மக்கள் வேறு எந்த நலன்களுக்காகவும் கல்வியைப் பேரம் பேசியவர்கள் அல்லர்.

எனவே இனியும் காலந் தாழ்த்தாது மாண வர்களின் பகிஷ்கரிப்பை உடன் நிறுத்தும் படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறோம்.

இவ்வாறு யாழ்.ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பாடசாலை பகிஷ்கரிப்பைக் கைவிடக் கோரி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இடம்பெயர்ந்து பாடசாலைகளில் இருப்போர் அவற்றை விட்டு விலக உரிய ஏற்பாடுகளைச் செய்தும், போதுமான போக்குவரத்து சேவை, தடையற்ற மின்சாரம், ஊரடங்கு தளர்வு மற்றும் வசதிகளை வழங்கி இயல்பு நிலையைத் தோற்றுவித்து கல்விச் சேவை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆயரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடிய போரினால் நாம் எமது நிலத்தை, வீடுகளை, செல்வத்தை, சேமிப்புக்களை, கல்விமான்களை, பெற்றோரை, இளையோரை, ஏன் எமது மனித மாண்பையும், சிந்திக்கின்ற கருத்து வெளியிடுகின்ற சுதந்திரத்தையும் இழந்துள் ளோம்.

ஒரு பானை கஞ்சிக்காக அரச நிவாரணத்தை நம்பி அனைத்தையுமே இழந்து விட்டோம்.

இந்த அனைத்து இழப்புக்களுக்கும் மத்தியிலும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளின் பொன்னான கல்வியை ஒரு போதும் மறந்தவர்கள் அல்லர்.

கல்விக்காக எதையும் சமரசம் செய்தவர்களும் அல்லர். அரசியல் பொருளாதார அல்லது வேறு எந்த நலன்களுக்காகவும் கல்வியை பேரம் பேசியவர்கள் அல்லர்.

வருந்தத்தக்கது

மாணவர்களின் கல்வியையும் முன்னேற்றத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய மதிப்பான கடமையைக் கொண்டுள்ள மாணவர் அமைப்பின் ஒரு பகுதியினர், மாணவர்களைப் பாடசாலைக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கும் ஒரு நிலை தோன்றி இருப்பது வருந்தத்தக்கது.

இனப் பிரச்சினை வட பகுதியினரின் கல்வித் தரத்தையே வெகுவாகத் தாக்கியுள்ளதென கல்விமான்கள் கவலையடைத்துள்ளனர்.

ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை மிகவிரை வில் நடத்தப்படவிருக்கிறது. வருடாந்தப் பரீட்சைகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே இனியும் காலந்தாழ்த்தாது மாணவர்களின் பகிஷ்கரிப்பை உடன்நிறுத்தும்படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறோம்.

இயல்பு நிலையைத் தோற்றுவிக்குக

இடம்பெயர்ந்து பாடசாலைகளில் இருப்போர் பாடசாலைகளை விட்டு விலகியும், போதுமான போக்குவரத்துச் சேவை, தடையற்ற மின்சாரம், ஊரடங்கு தளர்வு மற்றும் வசதிகளை வழங்கி இயல்பு நிலையைத் தோற்றுவித்து கல்விச் சேவை தொடர ஒத்துழைக்கும்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றுள்ளது.

http://www.uthayan.com/pages/news/061002/04.htm

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஜனநாயக தன்மையானது அல்ல என்று நான் எழுதியவுடன் துள்ளிக்குதித்து மறுப்பு எழுதிய கனவான்கள் மேற்படி செய்தியை வாசித்துவிட்டு பாராமுகமாக இருப்பது ஏன்?

கபொத சா/த பரீட்சைக்கு இன்னும் சிலவாரங்களே இருக்கும் போது மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரிப்பதன் பின்னணி என்ன?

புலிகளின் இந்த பகிஸ்கரிப்பை வேண்டாமென்று வெளிப்படையாக அறிவித்து மக்களின் நலன்களில் அவர்களது அக்கரையை வெளிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண மக்களின் வாழ்வில், கல்வி தான் பெரும் பங்கு அதை மறுக்க முடியாது. ஆனால் யாழ் ஆயர் கேட்டுக் கொண்ட விதம் சரியானதா?

இன்று யாழ்பாணத்தில் ஒரு கிலோ அரிசி: 100 ரூபா,

சீனி: 250 ரூபா

கடலை: 350 ரூபா

எரிபொருட்கள் கிடைக்குதே இல்லை.என்று ஏழைகளின் கைகளில் கூட உணவுப் பண்டம் கிடைக்கவே வழியில்லாமல் இருக்கின்றார்கள். இந்த நேரத்தில், பள்ளி போக ஏழையால் எவ்வாறு முடியும்?

ஆனால் இந்தளவு நிலை போகின்றபோது, ஆயர் அது பற்றி உலக நாடுகளுக்கு, முக்கியமாக வத்திக்கானுக்கு இந்த நிலமை பற்றி அறிவிக்காமல் பள்ளி நடவடிக்கை தொடரவேண்டும் என்று ஏன் கேட்கின்றார்?

சிறிலங்கா அரசு இத்தனை பட்டினிச் சாவினுள் மக்களைத் தவிக்க விட்டுக் கொண்டு, பள்ளிக் போ என்று மக்களைத் தூண்டுவதற்கு காரணமே, யாழ்பாணத்தில் ஒரு பொருளாதாரப் பிரச்சனையில்லை. மக்கள் இயல்பாக இருக்கின்றார்கள் என்று உலகிற்கு காட்டுவதற்குத் தான்.

அதை மேலும் இறுக்குவதற்காக நேற்று முன்தினம் தன்னார்வ அமைப்புக்களின் விசாக்களைக் கூட இலங்கையில் ரத்து செய்திருக்கின்றது. ஆக, தமிழரினின் பட்டினிச்சாவை, இலங்கையரசு தூண்டிக் கொண்டு, அதை மறைப்பதற்கான கைங்காரியத்தில் ஈடுபடுகின்றபோது, அதை உணர்ந்த மாணவர்கள், அதை வெளிப்படுத்த துணியும்போது பாதிரியார் அதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

முக்கியமாக தமிழீழப் போராட்ட்ததில் பாதிரிமாhர்களின் வெளிப்பாடுகள் முக்கியானவை. ஆனால் இப்படியான நேரங்களில் அவர்களின் பங்கு மக்களின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கு முன்நிற்க வேண்டும் என்பதே அவா!

ஆனால், இதற்கும் ஏகபிரதிநித்துவத்துக்கும் முடிச்சுப் போடும் உம் பங்கைக் கண்டு சிpரிக்காமல் இருக்கமுடியவில்லை.

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஜனநாயக தன்மையானது அல்ல என்று நான் எழுதியவுடன் துள்ளிக்குதித்து மறுப்பு எழுதிய கனவான்கள் மேற்படி செய்தியை வாசித்துவிட்டு பாராமுகமாக இருப்பது ஏன்?

கபொத சா/த பரீட்சைக்கு இன்னும் சிலவாரங்களே இருக்கும் போது மாணவர்கள் பாடசாலையை பகிஸ்கரிப்பதன் பின்னணி என்ன?  

புலிகளின் இந்த பகிஸ்கரிப்பை வேண்டாமென்று வெளிப்படையாக அறிவித்து மக்களின் நலன்களில் அவர்களது அக்கரையை வெளிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

கல்வி பெற்று பல்கலைக்களகம் போனாலும் எப்போ கொல்லபடுவோமோ எனத்தெரியாது தவிக்கும் மாணவர்களின் உயிர் போனபின். அங்கு வாங்கும் பேப்பறில் இருக்கும் சாண்றிதளை வைத்து என்ன செய்வது...??

மக்களின் இயல்பு வாழ்க்கையே அங்கே கேள்விக்குறி...! கபோதா பரிட்ச்சை யாழ்ப்பாணத்தில் நடக்காமல் விட்டால் இலங்கை முழுவதும் நடத்த முடியாது என்ற தகவலோடும்... யாழ்ப்பாண மாணவர்கள் எல்லாரும் பாடசாலைகளில் தான் தங்களின் பாடத்திட்டங்களை எல்லாம் பூர்த்தி செய்கிறார்கள் என்பது ஆயரின் அறியாமை... அதை விமர்சனம் செய்ய இப்போ காலத்தேவை கிடையாது என்பதால் விடப்பட்டது...

உயிருக்கே உத்திரவாதம் இல்லாமல் பாடசாலைக்கு அருகிலேயே இராணுவகாவலரண் அமைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்குகிறான்... இதை ஆயரால் தடுக்க முடியாது. அவரால் குறைந்த பட்ச்சம் கேள்வி கூட கேட்க்க முடியாது... ஆனால் அவரால் தமிழரை,புலிகளையும் எல்லாம் விமர்சிக்க முடியும்.... காரணம் புலிகளாலோ இல்லை தமிழர்களாலோ அவருக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை....!

இப்படி ஆயர் தனக்கு மக்களும் புலிகளும் தரும் மரியாதையை குலைத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் முக்கியம்....!

பொருத்தமில்லாத்தை பொருத்தமில்லாத இடங்களில் ஆயர் எப்போதும் செய்ததில்லை.... ஆனாலும் இப்போது எல்லாம் செய்கிறார்... அப்படி எண்றால் யாரினாவது அச்சுறுத்தல் அல்லது அவரை சேர்ந்தவர்களுக்கு பாதிப்புக்கு அஞ்சிக்கூட அவர் அறிக்கைகளை விட்டு இருக்கலாம்... மாணவர்கள் பாடசாலை திரும்புவது யாருக்கு அவசியம் எண்றால்....

http://sankathi.org/news/index.php?option=...id=689&Itemid=1

அரசதரப்புக்கு எண்று.அதை இந்த செய்தி சொல்கிறது...!

யாழ்பாணம் இயல்பு நிலையில் இருக்கிறது திரும்பி விட்டது என்று வெளி உலகிற்கு காட்ட சிறீலங்கா அரசாங்கம் பல வழிகளில் பல முறை முயற்சித்தது முயற்சித்து கொண்டு இருக்கிறது கடந்த 2 மாதங்களிற்கு மேலாக.

பலாலிக்கு தனியார் பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பித்துவிட்டது என்றும் இராணுவத்தளபதி ஆவணியில் புலம்பினவர்.

தற்பொழுது முகமாலையூடாக செல்லும் ஏ9 எங்கே முடியிருக்கிறது திறந்து தானே இருக்கிறது என்று இன்னொரு இராணுவ அதிகாரி புலம்பிறார். ஆனால் கண்காணிப்பு குழு முகமாலை முன்னரங்க பகுதிகளிற்கு சென்று பார்வையிட இராணுவம் அனுமதி மறுக்கிறது.

மந்திகை வைத்தியசாலையில் பணிபுரிந்த 3 பிரான்ஸ் அய் மய்யமாக கொண்டியங்கு எல்லைகள் அற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பின் தொண்டர் வைத்தியர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.