Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு

Featured Replies

ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு
 

 

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான்.

நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

 

ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மட் பிரையரிடம் போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தினார். அதில், ஆண்டர்சனை நோக்கி பேட்டை உயர்த்தி ஜடேஜா அச்சுறுத்தினார். அப்போது ஆண்டர்சன் தன்னை பாதுகாத்துக் கொள்ள மட்டுமே முயன்றார்.

 

ஜடேஜாதான் முதலில் ஆண்டர்சனை தள்ளினார் என அவர்கள் இருவரும் சாட்சியம் அளிக்க, இந்தியத் தரப்போ அதை முற்றிலும் மறுத்தது. முடிவில் ஜடேஜாவுக்கு அவருடைய போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டது. நியாமற்ற இந்தத் தீர்ப்பால் பொறுமையின் சிகரமான இந்திய கேப்டன் தோனியே கொதித்துப் போனார்.

 

ஏமாற்றமளிக்கும் தீர்ப்பு

இதனிடையே ஆண்டர்சன் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நிச்சயம் அவருக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸின் தீர்ப்போ அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இருவர் மீதும் தவறில்லை என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஜடேஜா-ஆண்டர்சன் இடையில் மோதல் சம்பவமே நடைபெறவில்லை என்பதைப் போல் கார்டன் லீவிஸின் தீர்ப்பு உப்பு சப்பில்லாததாக அமைந்திருக்கிறது.

இப்படியொரு தீர்ப்பை வழங்குவதற்கு பதிலாக இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு வீரர்களையும் அழைத்து சமாதானம் செய்திருக்கலாமே? அதைவிட்டு ஏன் இப்படியொரு வீடியோ கான்பரன்ஸ் விசாரணை, அதற்கு ஒரு நடுவர் என எல்லோரையும் ஏமாற்ற வேண்டும்? பந்தை சேதப்படுத்துவது, களத்தில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, நடுவரிடம் முறைப்பது உள்ளிட்ட அற்ப விஷயங்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கும் ஐசிசி, ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை மட்டும் இவ்வளவு மென்மையாக அணுகியிருப்பது ஏன்?

 

மறைக்கப்பட்ட வீடியோ ஆதாரம்

இதையெல்லாம்விட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாட்டிங்காம் மைதானத்தில் பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் மட்டும் செயல்பாட்டில் இல்லை என நாட்டிங்காம் செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஒரு மைதானத்தில் போட்டி நடைபெறும்போது பாதுகாப்பு கருதி அங்குள்ள அனைத்து கேமராக்களும் முழு அளவில் செயல்பாட்டில் இருக்கும்.

ஆனால் முக்கியமான பகுதியான பெவிலியன் வாயிலில் இருந்த வீடியோ கேமரா செயல்பாட்டில் இல்லை என்ற நாட்டிங்காம் செய்தித் தொடர்பாளரின் பதிலை வைத்துப் பார்க்கும்போது, வீடியோவில் பதிவான ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் காட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆண்டர்சன் மீது தவறில்லாதபட்சத்தில் அவர்கள் வீடியோ பதிவுகளை மறைக்க வாய்ப்பில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

 

காப்பாற்றப்பட்ட ஆண்டர்சன்

ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் சம்பவம் நடந்ததற்கு இரு அணிகளின் வீரர்களைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லை. அவர்களில் யாரை விசாரித்தாலும், நிச்சயம் உண்மை வெளிவராது. ஆண்டர்சனை காப்பாற்ற இங்கிலாந்து அணி நிர்வாகம் மேற்கொண்ட கடுமையான முயற்சிக்கு இப்போது கார்டன் லீவிஸ் தீர்ப்பின் மூலம் பலன் கிடைத்திருக்கிறது.

 

ஆண்டர்சனைக் காப்பாற்ற இங்கிலாந்து கடுமையான முயற்சி மேற்கொண்ட அதேவேளையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏன் ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்க குரல்கொடுக்கவில்லை? நடுவரின் முடிவை மறு ஆய்வு செய்யும் முறை (டிஆர்எஸ்) உள்ளிட்ட சிறு விஷயங்களுக்குகூட போர்க்கொடி தூக்கும் செல்வாக்கு படைத்த பிசிசிஐ, ஜடேஜா விஷயத்தில் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது ஏன்?

 

ஜடேஜா பலிகடா?

கார்டன் லீவிஸ் தீர்ப்பு தொடர்பான பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலின் பதிலும் மழுப்பலான பதிலாகத்தான் இருக்கிறது. மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சக்தி படைத்த இரு அணிகளும் பரஸ்பரம் பேசி தங்களின் வீரர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொண்டதையே கார்டன் லீவிஸின் தீர்ப்பு காட்டுகிறது.

 

அதேநேரத்தில் இந்தத் தீர்ப்பை இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஆண்டர்சனால் கீழே தள்ளிவிடப்பட்ட ஜடேஜாவுக்கு நியாயம் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஐசிசி நிர்வாகத்தில் கோலோச்சும் பிசிசிஐக்கு இங்கிலாந்தின் ஆதரவும், இங்கிலாந்துக்கு பிசிசிஐயின் ஆதரவும் தேவை என்பதால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட ஜடேஜாவை பலிகடா ஆக்கியிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

 

ஆண்டர்சனோ, ஜடேஜாவோ யாராக இருந்தாலும் சரி, செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். செல்வாக்கு படைத்த அணிகளுக்கு ஒரு தீர்ப்பும், எஞ்சிய அணிகளுக்கு ஒரு தீர்ப்பும் வழங்கப்படுவது சரியான அணுகுமுறையல்ல. ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் கார்டன் லீவிஸின் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6276717.ece

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் தொலைக்காட்சிக்காரர் எவரும் இதை பதிவு செய்யவில்லையா? ஆதாரம் இல்லா பட்சததில் இந்தத் தீர்ப்பு நியாயமானதுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை பதிவு செய்த வீடியோவை எடுத்து மறைத்து வைத்து விட்டு இது தான் நீதி என்டால் ஏற்பீர்களா?

  • தொடங்கியவர்

தீர்ப்பு நகல் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா-இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜடேஜாவை ஆண்டர்சன் கீழே தள்ளியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜடேஜாவுக்கு அவருடைய போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

 

இதனிடையே இதுதொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஆண்டர்சன், ஜடேஜா இருவர் மீதும் தவறில்லை என ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆண்டர்சன் எவ்வித தண்டனையுமின்றி தப்பினார். ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலிடம் கேட்டபோது, “கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அது நாளைக்குள் (இன்று) வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு நகலைப் பார்த்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும். அடுத்தகட்ட நடவடிக்கை முன்னதாக தீர்ப்பு நகலை முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.

 

எங்களுடைய சட்டநிபுணர் குழு தீர்ப்பின் நகலை படித்துவிட்டு எங்களுக்கு ஆலோசனை வழங்கும். இதுபோன்ற பிரச்சினைகளில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகத்துல்லியமாக ஆராய்வது அவசியம். அதற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவை. அதற்கு முன்னதாக மேல்முறையீடு செய்யப்படுமா என நாங்கள் கூறினால் அது சரியானதாக இருக்காது” என்றார்.

 

இந்த விஷயத்தில் இந்திய அணி அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா என கேட்டபோது, சஞ்சய் பட்டேல் அளித்த பதிலோ, இந்தப் பிரச்சினையை பிசிசிஐ முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக அமைந்தது. “தீர்ப்பு நகலை பார்க்காமல் இந்த விசாரணை நியாயமற்றது எனக்கூறினால் அது பொருத்தமற்றதாக அமைந்துவிடும்” என்றார் சஞ்சய் பட்டே

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6276718.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை பதிவு செய்த வீடியோவை எடுத்து மறைத்து வைத்து விட்டு இது தான் நீதி என்டால் ஏற்பீர்களா?

இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை போலல்லாது நீதி உள்ளது என நம்புகிறேன். ஆகவே காணொளி ஆதாரம் இருந்தால் நிச்சயம் அது முன் கொண்டுவரப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. :huh:

  • தொடங்கியவர்

ஜடேஜாவை தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஆண்டர்சன்

கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவை திட்டியதையும், தள்ளிவிட்டதையும் விசாரணையின்போது ஆண்டர்சன் ஒப்புக்கொண்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்.இன்போ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணையின்போது பிசிசிஐ வழக்குரைஞர் ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்துள்ளார்.

அப்போது ஜடேஜாவை திட்டியதையும், அவரை கீழே தள்ளியதையும், கிரிக்கெட் விதிமுறையை மீறியதையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜடேஜாவின் பல்லை உடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ஆண்டர்சன் மீதான விசாரணையின்போது அவரை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் ஜடேஜாவின் மேல் முறையீட்டு விசாரணையின்போது ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஆண்டர்சன் மேற்கண்டவாறு கூறினார்” என பிசிசிஐ வழக்குரைஞர் தெரிவித்ததாக கிரிக்.இன்போவில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

http://tamil.thehindu.com/sports/ஜடேஜாவை-தள்ளிவிட்டதை-ஒப்புக்கொண்ட-ஆண்டர்சன்/article6277780.ece?homepage=true

  • தொடங்கியவர்

எதிரணி வீரர்களிடம் முறைதவறிப் பேசுவதில் எனக்கு நம்பிக்கையில்லை: ஹோல்டிங்
 

 

எதிரணி வீரர்களை வசைபாடுவது என்ற அணுகுமுறையில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னாள் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

 

ஜடேஜா-ஆண்டர்சன் புயல் ஒருவழியாக ஓய்ந்தாலும் ஜடேஜாவை கீழே தள்ளியதை ஒப்புக் கொண்டுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதுபற்றி விஸ்டன் இதழில் பத்தி எழுதியுள்ள மைக்கேல் ஹோல்டிங் கூறியதாவது:

 

"பொதுவாக ஏதாவது பேசுவது வேறு விஷயம், எதிரணி வீரர்களை இழிவு படுத்தும் விதமாகப்பேசுவதில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை.

அதற்காக இந்தியா பதிலடி கொடுப்பதான பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. கிரிக்கெட் என்ன கால்பந்தாட்டமா? அதில்தான் ஒரு வீரரை எதிரணி வீரர் தள்ளி விட்டால் மீண்டும் அவரை இவர் தள்ளிவிடுவது என்பது நடக்கும். இது மேலும் மேலும் பகையை வளர்க்கவே உதவும்.

 

கிரிக்கெட் ஆட்டம் களத்தில் மட்டைக்கும் பந்துக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்க வேண்டும்” என்றார்.

இந்திய அணியின் தோல்விக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று பொதுவாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது குறித்து கூறிய ஹோல்டிங், "தோனி சரியான அணியைத் தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனத்தை முழுதும் ஏற்கிறேன், ஜடேஜா நல்ல ஸ்பின்னர் இல்லை. அஸ்வினைத்தான் அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

இதைத் தவிர இந்தியா மோசமாக விளையாடியது. கேட்ச்களைக் கோட்டைவிட்டனர். ஃபீல்டிங்கில் பந்துகளைத் தவறவிட்டனர். முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்தனர். இந்தியா நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை, அதுவே தோல்விக்குக் காரணம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article6280180.ece

  • தொடங்கியவர்

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம்: மேல்முறையீட்டிற்கு பிசிசிஐ கோரிக்கை
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் ஆண்டர்சன் மீது தவறில்லை எனக்கூறி அவரை விடுவித்த கார்டன் லீவிஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது.

 

இந்த விவகாரத்தில் ஆண்டர்சனுக்கு 2 முதல் 4 டெஸ்ட் போட்டிகள் வரை தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி விசாரணை நடத்திய ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ், இருவர் மீதும் எந்தத் தவறும் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். இதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பினார்.

 

இதைத் தொடர்ந்து கார்டன் லீவிஸ் வழங்கிய தீர்ப்பின் நகல் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது ஐசிசியை நாடியிருக்கிறது பிசிசிஐ. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால், ஐசிசியை அணுகியிருக்கிறது பிசிசிஐ.

 

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “கார்டன் லீவிஸின் தீர்ப்பு முற்றிலும் தவறானது என அணி நிர்வாகம் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் கருதுகிறோம். அதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு திங்கள்கிழமை இரவு இ-மெயில் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 

லீவிஸின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்ய முடியாது. ஐசிசி மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதால் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என நம்புகிறேன்.

ஜடேஜாவை தள்ளிவிட்டதாக ஆண்டர்சனே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியிருக்கையில் அவர் குற்றமற்றவர் என எப்படிக்கூற முடியும். என்னைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன் ஐசிசியின் பல்வேறு விதிமுறைகளை மீறியிருக்கிறார் என்றார் பட்டேல்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6284590.ece

 

இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு உந்த அடாத்து போக்கிலி தனங்களை கற்பிற்பதே இங்கிலாந்து போன்ற நாடுகள் தான்  .

  • தொடங்கியவர்

முதல் பக்கம்
சரி என்று நினைத்ததை செய்தேன்: கேப்டன் தோனி கோபம்
ஆகஸ்ட் 06, 2014.

மான்செஸ்டர்: ‘‘ஆண்டர்சன் தள்ளு விவகாரத்தில் நான் சரி என்று நினைத்ததை செய்தேன்,’’ என, இந்திய அணியின் கேப்டன் தோனி, கோபத்துடன் தெரிவித்தார்.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில், இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இந்தச் சம்பவம் குறித்து ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ் விசாரித்தார். இதில், ‘ஜடேஜாவை மிரட்டும் வகையில் பேசியது உண்மை தான்,’ என, ஆண்டர்சன் ஒப்புக் கொண்டார்.

இருப்பினும். இதற்கு போதிய ஆதாரம் இல்லாததால், இருவரையும் கார்டன் லீவிஸ் விடுவித்தார். ஆண்டர்சனுக்கு தடை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இவர் விடுவிக்கப்பட்டது, கேப்டன் தோனிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

 

இதற்கேற்ப, ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுப்பிய கடிதத்தில்,‘ ஆண்டர்சன் தவறு செய்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரை விடுவித்தது திருப்தி தரவில்லை. இதை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஐ.சி.சி., மறுப்பு தெரிவித்தது.

தோனி கோபம்:

பி.சி.சி.ஐ., கேட்டுக் கொண்ட பின்பும், ஐ.சி.சி., அப்பீல் செய்ய மறுத்தது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

‘தள்ளு’ சம்பவத்தின் போது, ஒரு சில கடினமான வார்த்தைகள் பேசியிருக்கலாம். ஆனால், இதை நாங்கள் புகாரில் குறிப்பிடவே இல்லை. ஆண்டர்சன், ஜடேஜாவை தள்ளி விட்டார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு.

 

தெரிய வேண்டும்:

இது கிரிக்கெட்டுக்கு மோசமான சம்பவம் என்று கருதினோம். இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பியதால் தான், வெளியில் கொண்டு வந்தோம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சிலர் போதிய ஆதாரம் உள்ளது என்பர். சிலர் ஆதாரம் இல்லை என்பர். இதில் தீர்ப்பு என்பது இரண்டுக்கும் இடைப்பட்ட நுாலில் தான் உள்ளது.

நல்ல விஷயம்:

இதில் ஜடேஜாவுக்கு மட்டும் அபராதம் விதித்தனர். அப்போதே, இவர் மீது ஒரு சதவீதம் கூட தவறு இல்லை எனத் தெரிவித்தேன். கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்தது நல்ல விஷயம்.

இதில், ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் பார்வையில், ஜடேஜாவின் செயல் தவறாக பட்டதால், 50 சதவீதம் அபராதம் விதித்தார். இது ஐ.சி.சி.,க்கு தெரியாதது சற்று வித்தியாசமாகத் தான் உள்ளது.

 

தவறு தான்:

என்னைப் பொறுத்தவரையில் தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் எதிராகத்தான் இருப்பேன். எனது சக வீரர் எல்லை மீறாத நிலையில், அபராதம் விதிக்கப்பட்டால், எப்படியும் அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன்.

நினைத்ததை செய்தேன்:

அதேநேரம், அவர் எல்லை மீறி இருந்தால், கண்டுகொள்ள மாட்டேன். அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும். எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியும். ஜடேஜா விஷயத்தில் சரி என்று பட்டதை செய்தேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/08/1407344771/dhoniindiacricket.html

 

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டில் தவறான வார்த்தை பிரயோகம் சரி?: டிராவிட்
வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 23:47

கிரிக்கெட்டில் தவறான வார்த்தை பிரயோகங்கள் சரியானது என்ற முடிவை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது என்ற அதிருப்தியான கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சனின் மோதலின் இறுதி தீர்ப்பு இப்படியான ஒரு தகவலையே வழங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

போட்டி நடுவர் ப்ரூஸ் ஒக்ஸ்பன்போர்ட் இன் அறிக்கையின் படி ஜேம்ஸ் அன்டர்சன் மோசமான தகாத வார்த்தை பிரயோகத்தை பாவித்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் அந்த மோசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. அவர் ஏதோ கூறினார். ஜடேஜா ஆக்ரோஷமாக பார்த்தார். தன்னை பாதுகாக்க அன்டேர்சன் அவரை தள்ளி விட்டார். இவை தீர்ப்பின் படி சரி என்றாலும் வார்த்தைப் பிரயோகம் என்பதற்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

சிலர் இதை விட்டு நகருங்கள் என்று கூறுகின்றனர். இங்கே இவர்கள் இரண்டு வார்தைகளுக்கிடையிலான வித்தியாசத்தை உணரவில்லை. சிலெஜிங்க் வேறு அபியூஸ் வேறு என்பதை புரிந்து கொள்ளவில்லை. வீரர்களை வெறுப்பேற்ற செய்வது சிலெஜிங்க். ஒரு வீரரை மோசமான வார்த்தைகளால் திட்டுவது அபியூஸ். ஜேம்ஸ் அன்டேர்சன் செய்தது இரண்டாவது ரகம். இதை விட்டு விலக முடியாது. அவர் எல்லையை இங்கே தாண்டி விட்டார். காட்டாயம் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் என ராகுல் டிராவிட் மேலும் கூறியுள்ளார்

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/121136-2014-08-07-18-18-52.html

  • தொடங்கியவர்

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் பதவிக்காக கோழையானார் சீனிவாசன்: ஆதித்ய வர்மா கடும் குற்றச்சாட்டு
 

 

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஐசிசி தலைவர் சீனிவாசன் தன் பதவிக்காக கோழைத்தனமாகச் செயல்பட்டார் என்று பிஹார் கிரிக்கெட் சங்கச் செயலர் ஆதித்ய வர்மா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெறும் பொம்மையாக சீனிவாசன் செயல்பட்டதால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம் கையாளப்பட வேண்டிய விதத்தில் கையாளப்படவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட்டை நோக்கி உலகம் சிரிக்கும்படியாக ஆகிவிட்டது, காரணம் சீனிவாசன் தனது பதவிக்காக கோழையாக நடந்து கொண்டதுதான்.

 

சீனிவாசன் ஏன் இப்படி தைரியமில்லாது நடந்து கொண்டார் என்பது ஆச்சரியாமாக உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்களின் உதவியுடன் ஐசிசி தலைவர் பதவி கிடைத்ததால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையா? இதனால் ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ததோடு, ஐசிசியை தன்னிச்சையாக செயல்பட விடுத்து அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானதும் நடந்தது

ஆண்டர்சனே தனது தவற்றை ஒப்புக் கொண்ட பிறகு ஐசிசி அவரை தண்டிக்காமல் விட்டது. ஐசிசி-யில் சீனிவாசன் முதன்மைப் பதவியில் இருக்கும்போது இது நடந்துள்ளது. இவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் ரகசிய புரிதல் இருக்கிறதோ, அதனால் ஆண்டர்சன் தண்டனையிலிருந்து தப்பிவிக்கபப்ட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

மேலும் சரத் பவார் அல்லது ஜக்மோகன் டால்மியா தாமாகவே முன்வந்து இந்திய கிரிக்கேட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் காப்பாற்ற வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article6299134.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.