Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி யாழ் எங்கும் துண

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ போராட்டத்தையும் தமிழ்மக்களையும் தொச்சைப்படுத்தி கேவலமாக யாழ் நகரின் பல இடங்களிலும் தேசிய வீரர் படை என்ற பெயரில் இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

notice_jaffna.png

தமிழ் பெண்களை மிகவும் கேவலமாகவும் தமிழ் மக்களை ஆத்திரமூட்டக்கூடியவகையிலும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவு அரசவாதத்தின் பிணக்காடு ஆனகதை பொய்யா?

கல்லென்று காலைவைத்தால் சிப்பாய் தலை ஒன்று அங்கே கிடந்தகதை பொய்யா?

புதிதாய் வரும் காலடிக்கு அங்கே சிங்களவன் பிணங்கள் காலைத்தடுக்கியது பொய்யா?

1500 உயிர்களுக்கு மீள்வாழ்வளிக்க அன்று சிங்களத்தின் முழுப்பலம் தலையால் நடந்தகதை பொய்யா?

எங்கள்வீரர் சமாதியைத்தான் உழுதது உங்கள் வீரம்.

உலகின் இராணுவவளத்தை உண்டு எப்பம் விட்டு வீறாப்பாய்க்கிடந்த அந்த அரக்கபல இராணுவ வலயத்தை ஓர் இரவில் சமாதி அமைத்தோமே!

அது உங்கள் வீரத்துக்கு ஜென்மசமாதி அல்லவா!

புலிகளின் தமிழரின் பொறுமையால் ஏமாற்றமடைந்திருப்பவர்களின் கொக்கரிப்பு.

ஒருவகையில் இது போன்ற சீண்டல்கள் வார்த்தைகளால் மாத்திரமல் அல்ல செயலிலும் எதிர்பார்க்கப்பட்டது எதிர்காலத்தில் மோசமான முறையில் எதிர்பார்க்க வேண்டும். உணவு எரிபொருள் மருந்து என்று அல்லாமல் எல்லா வழிகளிலும் இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் நிலமை இன்று இருப்பதை விட பலமடங்கு மோசமாக வரும். ஒட்டுமொத்தத்தில் இப்படி ஒரு சுதந்திரம் வேண்டுமா என்று பலரை சிந்திக்க வைக்கக்கூடிய வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படும். இது தாயகத்தில் உள்ளவர்களை அவலங்களை எதிர்கொள்பவர்கள் என்றரீதியில் நேரடியாக பாதிக்கும். புலம்பெயர்ந்தவர்கள் நோக்கி அந்த தாயகத்து அவல நிகழ்வுகளின் விபரங்கள் விபரணங்கள் உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகைகியில் மிகஉச்சமான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்.

இதற்கு உளவியல்ரீதியில் நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். அவலங்களை பார்த்து அழுத்தங்களிற்கு அடிபணிந்து மனம் உடைந்து விரக்த்தியில் நிலை குலைந்தால் அதுவே எதிரிக்கு வெற்றியாகும். தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் விவரணம் கூறியது போல் நாமும் போராளியாக புலம்பெயர்ந்த வாழ்வில் செய்வதற்கு பல கடமைகள் மாத்திரமல்ல எதிர்கொள்ளவும் பல சவால்கள் உண்டு. பிரச்சாரம் தான் எமது யுத்த களம் அதில் எம்மை நோக்கி உளவியல்ரீதியான தாக்குதல்கள் நடத்தப்படும். அது தாயகத்தில் நடக்கும் அவலங்களை மைய்யப்படுதியதாகவும் இருக்கலாம் அண்மையில் அமெரிக்கா கனடாவில் நடந்தேறிய நாடகங்கள் போன்றும் இருக்கலாம். சர்வதேசம் ஒட்டுமொத்தமாக எம்மை கைவிட்டு நாம் ஒரு ஒதுக்கப்பட்ட இனம் இருந்த மரியாதை அங்கீகாரத்தையும் இழந்துவிட்டோம் என்று எம்மில் பலரை சிந்திக்கக்தூண்டக் கூடிய வகையில் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுவதை எதிர்பார்க்க வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே பணியிலிருந்த போராளி ஒருவன் பிடிபட்டால் தாக்குதல் தகவல்களை கசிந்துவிடலாம் என்ற அச்சத்தில் வெதுப்பக போறணைக்குள் சென்று தன்னை அழித்துக் கொண்ட மன உறுதியை நினைவில் கொள்ளுங்கள். அப்படியான மன உறுதி உடையவர்களால் தான் போராட்டம் இந்த அளவிற்கு வழந்திருக்கிறது அதில் ஒரு சிறுபகுதியை தன்னும் தாமும் எம்மை தயார்படுத்தி எமக்கு வரவழைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் எமது உறுதிப்பாட்டை குலைக்க பல முயற்சிகள் நடந்தேறும் அவற்றை நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த சமூகம் எந்தளவிற்கு போராட்டத்திற்கு பலமாக இருக்கிறது என்பது ஒரு உண்மையாகவும் பெருமையாகவும் இருக்கிறதோ அதே அளவு அந்த முக்கிய பலத்தின் பலவீனங்கள் எதிரிகளால் உச்சமாக பயன்படுத்தப்பட்டு அந்த பலத்தை சிதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதாவது புலம்பெயர்ந்த சமூகத்தின் பலம் என்பதை தற்காத்துக் கொள்ள நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும்.

தற்காப்பிற்கு அடுத்தாக வலிந்த நகர்வுகளாக எமது பரப்புரை பிரச்சார கடமைகள் இருக்கிறது. தாயகத்தில் நடக்கும் அவலங்கள் அதில் இழக்கப்படும் உயர்களிற்கு அர்த்தமோ அவை எமது விடுதலைக்கான விலையாகவும் அந்த விடுதலையை விரைவு படுத்துவதும் எமது பிரச்சாரத்தை பொறுத்தது. ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் வெளியில் கொண்டுவரப்படாத அவலங்கள் எமது இழப்புகளையும் அதிகரிப்பது மாத்திரமல்ல விடுதைலையை பிற்போட்டு கொண்டிருக்கும். 13 ஆண்டுகளிற்கு முன்னர் றுவண்டாவில் 800,000 முதல் 1,000,000 மக்கள் வெறும் 100 நாட்களில் கொல்லப்பட்டு கொண்டிருந்த பொழுது அதை ஒரு இன அழிப்பாக விவரிக்கலாமா இல்லையான என்ற வார்த்தைப் பிரயோக சித்து விளையாட்டு பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த உலகில் நாம் வாழ்கிறோம் என்றதை மறந்துவிடக்கூடாது. எனவே நாம் கவனத்தை அங்கீகாரத்தை பெற வேண்டிய உலகமானது தாயகத்தில் எமது உறவுகளிற்கு நடந்தவை நடப்பவையை விட பல மடங்கு கொடூரமாக நடந்ததை கண்ட கண்டு கொண்டிருக்கிற ஒரு உலகம். அவர்களுடைய கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற நேர காலத்தோடு சிந்தனை செயல் வளப் பிரயோக குவிப்போடு நாம் எந்தளவிற்கு உழைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு றுவாண்டா கொலைக்களத்தின் எண்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு இன அழிப்பு தற்பொழுது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு என்ன செய்யலாம் என்று ஆதாரத்துடன் கூறுவதால் ஒருவருக்குள் உண்டாகும் உணர்ச்சிகளிற்கும் அவை சார்ந்த நிர்பந்தங்களிற்கும் கடந்த வருடம் அல்லது சில வருடங்களிற்கு முன்னர் இப்படி ஒரு இன அழிப்பு நடந்ததாம் இவை தான் ஆதாரங்கள் விபரங்கள் என்று கூறுவதால் ஒருவருக்குள் உண்டாகும் உணர்ச்சிகளிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எமது இழப்புகளை குறைத்து எமது விடுதலையை விரைவுபடுத்த நாம் தாயகத்து அவலங்களை உலகிற்கு நேரடி அஞ்சல் செய்கிற போராளிகளாக மாற வேண்டும். தாயகத்தில் யுத்தக்களம் வேறும் புலம்பெயர்ந்தவர்களின் யுத்தகளம் வேறு என்பதை நாம் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தாயகத்து யுத்தக்களத்தில் போராடும் மக்களை தயார்படுத்த அறிவூட்ட நெறிப்படுத்த வெளியிடப்படும் தகவல்கள் ஆய்வுகள் விவரணங்கள் புலம் பெயர்ந்த எமக்கு பொருத்த மற்றவை. அதை புலம்பெயர்ந்த சமூகங்களிற்கு வழங்குவது குளப்பத்தையும் உருவாக்குவதோடு அவர்களது போராட்டத்தின் குறிக்கோளை கடமையை சரியாக உணரவைக்காது. நாம் பொறுமையின் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கும் இழப்புகளிற்கு நேர் எதிர்மாறான அவப் பெயராக இராணுவதீர்வில் ஆர்வம் கொண்ட தமிழர் தரப்பு என்று சர்வதேசத்தை எண்ண வைக்கும்.

எம்மை இராணுவரீதியில் பலமுள்ளவர்களாக உலகிற்கோ உங்களுக்கு தெரிந்தவர்களிற்கோ கூறி பெருமிதம் அடைந்தோ அதைப்பற்றி ஆய்வு செய்து விளக்கங்கள் கொடுத்து எந்த பயனும் வரப்போவது இல்லை. அதுவந்து எம்மைபற்றி ஒரு தப்பான அபிப்பிராயத்தை மற்றவர்களிற்கு கொடுக்கும். நாம் இராணுவரீதியில் சில வெற்றிகளை பெற்றபடியால் தான் இது ஒரு போராட்டமாக தெரிகிறது அதில் நாமும் ஆர்வம்காட்டி பங்கெடுக்கிறோம் அதைப்பற்றி மற்றவர்களிற்கு விளக்கம் கொடுக்கிறோம் என்ற ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் அந்த தவறான எண்ணத்திற்கு இன்னொரு பெயர் பயங்கரவாதம். ஒரு இராணுவ கண்ணோட்டத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தையும் அதன் நீதியான நியாயமான குறிக்கோள்களையும் நியாயப்படுத்த முடியாது. எமது போராட்டம் இராணுவ வெற்றி தோல்விகளிற்கு அப்பால் நியாயமானது நேர்மையானது. தாயகத்தில் உள்ள எமது மக்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் அடக்கு முறைகள் அவலங்கள் இன அழிப்புகள் என்பனவும் இராணுவ வெற்றி-தோல்விகள் புலிகளின் இராணுவ பலம்-பலவீனத்திற்கு அப்பால் நடந்தேறிக் கொண்டிருப்பவை மாத்திரமல்ல ஆங்கிலேய காலணித்துவ ஆட்சி இலங்கைத்தீவில் முடிந்த காலத்திலிருந்து பல்வேறு வடிவங்களில் வழிகளில் நடந்தேறிக் கொண்டிருப்பவை.

புலிகள் பலமாக இருக்கிறார்களா பலவீனமாக இருக்கிறார்களா வெல்கிறார்களா தோக்கிறார்களா என்பது முற்றிலும் அவசயம் அற்றது. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் சார்ந்த எமது பற்று உறுதியும் எமது கடமைகளும் பங்களிப்புகளும் இவற்றிற்கு அப்பாற்பட்டவை. இன்றுள்ள கள நிலமையில் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி நாம் அலட்டிக் கொள்ள கூடாது. அவை பற்றிய வினாக்கள் விளக்கங்கள் வியாக்கியானங்கள் குளப்பங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இதை நீங்கள் கருத்து சுதந்திரம் ஜனநாயகம் என்று கூக்குரல் இட்டு எதிர்கொள்ளலாம். ஆனால் நீங்கள் மாணவர்களாக பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இருக்கும் பொழுதும் வேலைத்தளங்களில் பல்வேறு படிநிலையில் தொழிலாளிகளாக இருக்கும் பொழுதும் அந்தந்த நிர்வாக இயந்திர கட்டமைப்பில் உங்களிற்கு என்று வரையறுக்கப்பட்ட கடமைகள் இருக்கு. இவற்றிற்கு வெளியில் அவசியமற்ற முறையில் உங்களிற்கு தகவல்கிடைப்பதுமில்லை உங்களின் வினாக்கள் விளக்கங்கள் வியாக்கியானங்கள் குளப்பங்கள் வரவேற்கப்படுவதும் இல்லை என்பதை ஒரு முறை சிந்தியுங்கள். மக்கள் கேட்கும் பொழுது அதை புலிகள் செவிசாய்த்து செய்யாது விடமாட்டார்கள் இது வரலாறு. எனவே அவசியமற்ற விடையங்களை தூக்கி வைத்து மக்களாகிய நாம் பொறுப்பற்ற முறையில் வினாக்கள் தொடத்து விளக்கங்கள் கேக்க எமக்குள்ளேயே இராணுவ ஆய்வாளர்களா கனவு காண்பவர்கள் குளப்பங்களை விடைகளாக கொடுக்க புலிகள் அதை தெளிவுபடுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்க

அருமையாக கருத்துகள் குறுக்ஸ்... இதுக்காக நண்றி கலந்த வணக்கங்கள்... ( இதைகூட நான் செய்ய இல்லை எண்டால் எப்பிடி...??? )

இண்று தமிழ் மக்களிடையே பரவி இருப்பதுக்கு பேர், அச்சம் கிடையாது... அதுக்கு பேர் "தாள்வு மனப்பாண்மை"...! நாங்கள் தோற்று போகின்றோமோ என்கின்ற ஒரு ஏமாற்றம்தான் அதிகம்...! அடக்கி வைத்து இருக்கும் தேசாபிமானம் இப்பதான் பலருக்கு கிளர்ந்து எழுகின்றது... என்னவாவது செய்து மக்களை காக்கவேணும் எண்டு பலர் வரிந்து கட்டுவதை காணக்கூடியதாக இருக்கின்றது....! இதுதான் நாளை மக்கள் புரட்ச்சியாக வெடிக்க போவதன் அறிகுறி... இதைத்தான் தேசம் பலகாலமாய் எதிர்பார்த்து காத்திருந்தது...!

பயந்து அடங்கிய காலம் போய் அங்கலாய்க்கும் காலம் வந்தாச்சு... இனி மக்கள் நடவடிக்கையில் இறங்குவார்கள்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை யார் செய்தார்களோ தெரியா! ஆனால் இது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் செயல்!

இதை யார் செய்தார்களோ தெரியா! ஆனால் இது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் செயல்!

ஆனால் இதைச்செய்த சிங்களவன் தமிழ்மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.... ஊரை விட்டு தப்பி போனால் போதும் எண்ட நிலையில் இருக்கிறார்கள்... அவர்களுக்கு பீதியை கிளப்ப வேணும் எண்டுதான் செய்து இருக்கிறார்கள்... அப்போதான் மேலதிகமான உதவிகளை புலிகளுக்கு செய்ய மாட்டார்கள் எண்று நம்புவது போல இருக்கிறது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் விட்டபொழுதிலிருந்து பயந்து தான் மக்கள் வாழ்கிறார்கள்.

தமிழ் மக்களை முடிந்த அளவு வெளியேறவும் என்று ஏற்கனவே புலிகள் அறிவித்துவிட்டார்கள். இதை சிங்களவன் சொல்லித்தான் அவர்கள் பண்ணனும் என்று இல்லை.

ஆனால் இதனால் தமிழ் மக்கள் பயப்பிடுவார்கள் என்பது முட்டாள்தனமான எண்ணம். புலிகள் மீது இது வெறுப்பை கொண்டுவராது. இராணுவத்தினர் மீதும் ஒட்டுக்குளுக்கள் மீதும் தான் வெறுப்பை கொண்டுவரும். இன்னும் ஏன் புலிகள் மௌனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி அதிகரிக்கும். புலிகள் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று மக்களாக முன் வருவார்கள். அதன் பின்னர் சர்வதேசம் எதுவும் செய்ய முடியாது.

நீங்கள் சொல்லுவது போல இதை யாரும் கனக்கெடுக்கப்போவது இல்லை

இதைவிட எத்தனையோ துண்டு பிரசுரங்கலை ஆமிக்கும்பலும் தாடிக்கும்பலும் வெளியிட்டுடீனம்

எம் பெண்களின் சேலையை கட்டிக் கொண்டு தாண்டிக்குள அடியில் வவனியாவிற்கு ஓடியதும். ஆனையிறவை விட்டு தலைதெரிக்க ஓடியதும் மறந்து விட்டாதா இந்த முட்டாள்களுக்கு. எங்கள் பெண்களை பலாத்காரமாகத்தான் அடைய முடியும ஆனால் சிங்களவனே உன் வீட்டு பெண்ணை? வெள்ளை வானில் வந்து ஆயுதம் தரித்தவர்களையா பிடித்துக் கொண்டு போகிறான். அதுவும் பத்துப் பதினைந்து பேராக வந்து துப்பாக்கி முனையில். கேவலங்கள். இவர்கள் இது மட்டுமா தமது வரலாற்றைத் தெரியாமல் தமிழரை கொச்சைப்படுத்துகின்றார்கள். விரைவில் பதில் கிடைக்கும். அமைதிக்குப் பின் மறைந்திருப்பது பயமல்ல இராஐதந்திரம் விரைவில் புரியும் அடி முட்டாள் சிங்களவனிற்கு.

ஈழத்திலிருந்து

ஐhனா

ஜயோ அசின் மேல சத்தியமாக நான் இதை எழுதி கொடுக்கவில்லை :P

வடிவேலு அண்ணனும் எழுதி கொடுத்து இருக்க மாட்டார் இது யாரோ புத்திஜீவிகள் எழுதி கொடுத்தௌ போல இருக்கு :idea: :P

எமது பெண் போராளிகளுடன் நின்று நேருக்கு நேர் போராட தெரியாத கோழை ஒட்டுன்னிகள் தான் இபப்டி செய்யும் :twisted:

ஒரு இன அழிப்பு தற்பொழுது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு என்ன செய்யலாம் என்று ஆதாரத்துடன் கூறுவதால் ஒருவருக்குள் உண்டாகும் உணர்ச்சிகளிற்கும் அவை சார்ந்த நிர்பந்தங்களிற்கும் கடந்த வருடம் அல்லது சில வருடங்களிற்கு முன்னர் இப்படி ஒரு இன அழிப்பு நடந்ததாம் இவை தான் ஆதாரங்கள் விபரங்கள் என்று கூறுவதால் ஒருவருக்குள் உண்டாகும் உணர்ச்சிகளிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு
.

தெளிவான கருத்து.

நேற்று எனக்கு ஓரு எதியோப்பிய முஸ்ஸிம் ஒருவருடன் பேச வேண்டிய சூழ்நிலை... அவருக்கும் இலங்கை பிரச்சனை தெரிந்திருக்கிறது. அவர் அறிந்து கொண்ட தகவல்கள் தவறானவை என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு போராட்டத்தில் சில கட்டங்களில் வெற்றியும் வேறு சில கட்டங்களில் தோல்வியும் கிடைக்கலாம். சில சண்டைகளிலோ அல்லது பெரும் யுத்தங்களிலோ ஒரு இனத்தின் விடுதலை தீர்மானிக்க படுவதில்லை. அந்த இனத்தின் முற்றுமுழுதான எழுச்சியே அதை தீர்மானிக்கிறது. தோல்விகள் மீதுதான் பல வெற்றிக் காவியங்கள் எழுதப்பட்டது என்பதை யாரும் மறந்து விட கூடாது. எங்களில் இல்லாதது ஒற்றுமை அதுதான் தமிழர்களினது அவசர தேவை.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.