Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறட்டுப் பிடிவாதம் எதற்கு? வாருங்கள் வைகோ!

Featured Replies

  • தொடங்கியவர்

அடடா சோழியன் குடுமி சும்மா ஆடாதே என்று நினைத்தேன். பின்வரும் பொன்மொழிகள் அண்ணன் சபேசன் தேர்தலுக்கு முன் சொன்னது....

"நான் அணிந்திருக்கும் "ஈழத் தமிழ் கண்ணாடியை"; கழற்றி வைத்துவிட்டோ, அல்லது நன்றாக துடைத்துவிட்டோ பார்க்கின்ற பொழுது, ஜெயலலிதா வெற்றி பெறுவதே நல்லது என்று சொல்வேன்."

"ஜெயலலிதா வெல்வதே தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது."

"இந்த தேர்தலில் வழமையை விட பெண்கள் அதிகமாக வாக்களித்திருப்பதை பார்க்கின்ற பொழுது ஜெயலலிதா மீண்டும் ஒரு சாதனை படைப்பார் போன்றும் தெரிகிறது."

அடடா.... அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ரேஞ்சுக்கு இருப்பார் என்று தெரிந்திருந்தால் வாயைக் கொடுத்து என் நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டேனே........

ஜெயலலிதாவே தமிழ்நாட்டுக் முதலமைச்சராக வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதே என் கருத்தாக இருந்தது.

ஆனால் தற்பொழுது கலைஞரும் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். அந்த வகையில் என்னுடைய இந்தக் கருத்து தற்பொழுது மாறியிருக்கிறது

தமிழை கட்டாய பாடம் ஆக்கியது, திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு, ரௌடிகளை உள்ளே தள்ளியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வேகம் போன்றவைகள் வரவேற்கத் தக்கவைகள்.

இப்பொழுது கேட்டால் கலைஞர் முதல்வராக வந்தது தமிழ்நாட்டிற்கு நல்லது என்பேன்.

ஆகவே தேர்தல் சமயத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எப்பொழுதும் என்னுடைய கருத்துக்களாகவே தொடர்ந்து இருக்கும் என்ற சொல்ல முடியாது.

அதே வேளை ஈழத் தமிழர் நிலைப்பாட்டில் கலைஞரிடம் மாற்றம் காணாத வரை, கலைஞர் பற்றிய என்னுடைய மற்றைய கருத்துக்கள் மாறாது.

  • தொடங்கியவர்

சரி... சரி.... நம்பிட்டேன்.... :lol::lol::(

அதே வேளை ஜெயலலிதாவின் உறுதியும் தைரியமும் என்னைக் கவர்ந்துள்ளன என்பதையும் நான் மறுக்கப் போவதில்லை.

மொட்டைத் தலை ஜெயேந்திரனை அவர் து}க்கி உள்ளே போட்டது என்னை பிரமிக்க வைத்தது.

லக்கிலுக்! மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்

இப்படி ஒன்றை கலைஞரால் செய்திருக்க முடியுமா?

சபேசன் உங்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? கலைஞர் எப்போதுமே ஈழத்தை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டதில்லை. அவர் ஆட்சியில் இருப்பதால் வெளிப்படையாக சில செயற்பாடுகளை செய்யமுடியாமல் இருக்கலாம்.

ஆனால் கேவலமான அரசியல் நடத்தும் ஜெயலலிதா ஈழம் என்று ஒன்றில்லை என்று தேர்தலுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்தை குளிரவைத்தவர்.

இப்போதும் ஈழத்துக்கு ஆதரவான நிலைதோன்றுகின்றபோது தமிழ்நாட்டில் பயங்கரவாதம்வளர்ந்துவிட்டது என்று அறிக்கைமேல் அறிக்கையாக விடுகன்றார்.

அம்மையாரின் ஆட்சியில் கொலைகளே நடக்கவில்லையா? ஓர் அமைச்சரே தனதுவீட்டில் வைத்து கொள்ளையரால் கொலைசெய்யப்பட்டார் அது பயங்கரவாதமில்லையா? அவருடைய ஆட்சியில் காந்தி கனவு கண்டதுபோல் ஒரு பெண் இராத்திரியில் தன்னந்தனியாக திரிய முடிந்ததா?

அவருடைய ஆட்சியில்தான் பெண்கள் அதிகமாக காவல்நிலையத்தில் வைத்து கற்பழிக்கபட்டனர்.

நீங்கள் கூறியதுபோல் ஜெயேந்திரரை கைது செய்ததாக வைத்துக்கொள்வோம். ஆனால் கைதுசெய்வதில் காட்டிய வேகம் அம்மையாரின் ஆட்சியிலேயே வழக்கில் காட்டப்படவில்லை. பொய் வழக்கென்றபடியாலா?

அம்மையார் தன் அரசியல் எதிரிகளை அதிகமாக பழிவாங்கினார் என்பதற்கு நல்ல உதாரணம் உங்கள் வை.கோ

வன்னியன்! அழுவதும் சிரிப்பதும் உங்கள் விருப்பம்

ததேகூட்டமைப்பினரைக் கேட்டால் கலைஞரால் அழுத கதையை கதை கதையாகச் சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் உள்ளுராட்சி தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள். அந்தக் கதையை நான் சொல்கிறேன்.

என்ன கதைவிடலாம் என்று யோசனை செய்யப்பொகிறீர்களா?

அம்மையாரின் அரக்கத்தனமான ஆட்சியில் அகதிமுகாம்களில் ஈழத்தமிழர்கள்பட்ட துயர் போதும்சாமி :oops: :oops: :oops:

தயவுசெய்து எனது கருத்து லக்கியின் கருத்தை வெட்டிக்கதைக்க வரவில்லை

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் மற்றையபடி அவர்களின் துயரம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை.

அத்துடன் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர் ஆதரவு நிலைக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. தேவை என்றால் தரவுகளை தரத் தயாராக இருக்கிறேன். தமிழீழத்தில் ஏற்பட்ட மாற்றங்களே தமிழ்நாட்டில் ஏற்பட்ட மன மாற்றங்களுக்கும் காரணம்.

யோவ் லக்கி,வன்னியன்

என்ன சபேசனைக் கலாய்க்கின்றீர்கள். அவரது ஆலோசனைப் படிதான் இந்திய அரசியலே நடக்குது தெரியுமா?? அவரது இணையப் பக்கத்தை படித்துத்தான் கலைஞரே பல அரசியல் முடிவுகள் எடுத்துள்ளார். அது தெரியாமல் நீங்கள் எப்படி?? :roll: :roll:

தீபாவளி நெருங்குவதால் அவர் கொஞ்சம் முதலிலேயே வானவேடிக்கை காட்டுகின்றார். அதைப்போய் நீங்கள் பெரிசு படுத்திக்கோண்டு. :P :lol:

அடடா.... அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ரேஞ்சுக்கு இருப்பார் என்று தெரிந்திருந்தால் வாயைக் கொடுத்து என் நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டேனே........

பன்னீர்ச்செல்வம் பெரிய குளத்தில் ரீக்கடை வைத்திருந்தார் எண்று அண்மையில் எங்கோ படித்த ஞாபகம் உண்மையா..?? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வம்பு உங்கட ஆள் சுவிஸ் ஜெயிலில் இருந்தே வாணவேடிக்கை காட்டத் தொடங்கியுள்ளார் போல இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் லக்கி,வன்னியன்

என்ன சபேசனைக் கலாய்க்கின்றீர்கள். அவரது ஆலோசனைப் படிதான் இந்திய அரசியலே நடக்குது தெரியுமா?? அவரது இணையப் பக்கத்தை படித்துத்தான் கலைஞரே பல அரசியல் முடிவுகள் எடுத்துள்ளார். அது தெரியாமல் நீங்கள் எப்படி?? :roll: :roll:

தீபாவளி நெருங்குவதால் அவர் கொஞ்சம் முதலிலேயே வானவேடிக்கை காட்டுகின்றார். அதைப்போய் நீங்கள் பெரிசு படுத்திக்கோண்டு.

:P :lol:

வெறும் எச்சில் இலை உம்மை ஆட்டுவிக்கிற அந்த குரங்காட்டத்துக்கு மேலாகவா இருக்குது குசும்பு அண்ணாச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியன்

நானும் சபேசனின் கருத்தை ஒத்ததான கருத்தையே கொண்டிருகிறேன்.

தமிழ்நாட்டுதவி எமக்கு வேண்டும். அது எந்த கட்சியாக இருகவேண்டும் என்பது அல்ல அவசியம்.

வை.கோ வின் அரசியல்பண்புக்கு தி மு க தவிர்ந்த ஏனய வழிகள் முரணாகவே இருப்பதை அறிந்து. தி மு க வின் சுயநல அரசியல் அவர் அரசியல் எதிர்காலத்தை வேடையாட முனைந்தமையை மறந்துவிட்டோமா?

லக்கியின் கருத்துக்கள் ஈழத்தமிழர் அக்கறையை மிஞ்சி கட்சி விசுவாசம் மேன்மைப்பட்டு நின்றதை விளங்கமுடியவில்லையா?

தி மு க செய்த புண்ணியம் அ தி மு க என்ற அரசு, இதனோடு ஒப்பீடு செய்துதான் அவர்களது உதவி பெரியவனாகிறது.

தன் சக்தியின் எல்லைக்குள் நின்றே எமினத்தின் கண்ணீரைத்துடைக்க கலைஞ்ஞருக்கு முடியும். அரசியற் சுயநலன்கள் அதைத் தடுக்கிறது.

தேவன் எங்களைப்பொறுத்தவரை யார் அதிகம் செய்கின்றார்கள் என்பதே.அப்படிப் பார்க்கும்போது தராசில் அ.தி.மு.கவின் பக்கம் உயர்ந்துதான் தெரிகிறது. ஜெயலலிதா தலைமைப்பொறுப்பில் இருக்கும்வரை எங்களுக்கு அவர்கள் பக்கம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

கிடைப்பதை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் எங்களைப்பொறுத்தவரை யார் அதிகம் செய்கின்றார்கள் என்பதே.அப்படிப் பார்க்கும்போது தராசில் அ.தி.மு.கவின் பக்கம் உயர்ந்துதான் தெரிகிறது. ஜெயலலிதா தலைமைப்பொறுப்பில் இருக்கும்வரை எங்களுக்கு அவர்கள் பக்கம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

கிடைப்பதை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

உண்மை மறுக்கவில்லை ஆனால் தி மு க விசுவாசிகள் தம் விசுவாசத்தை எங்கேயாவது வைத்து விற்க்கட்டும் ஆனால் தமிழ் உணர்வின் வாசலுக்கு வந்து வை கோ வை இளக்காரம் செய்யாமல் இருந்தால் சரி அவரின் அரசியல் புறச்சூழ்நிலைகள் புரிந்தவர்கள் நாம் பச்சை இருக்குமட்டும் தான் உறவு ஈரம் காட்டும் தாசித்தனம் கொண்டதல்ல ஈழம்.

(விசுவாசிகள் என்று உங்களைக் கூறவில்லை வன்னியன்)

எம்மவர்கள் கலைஞர் குறித்து சரியாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது மிகவும் கவலை அளிக்கின்ற விடயம்.

கல்லக்குடியில் தண்டவாளத்தில் படுத்த துடிப்புள்ள கலைஞர் தற்பொழுது இல்லை. முக்கியமாக தமிழ் தேசியவாதி கலைஞர் இல்லவே இல்லை.

ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் இந்திய தேசியவாதத்திற்குள் உள்வாங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டன.

இந்திய வெளியுறவுக் கொள்கை எதுவோ, அதன்படியே கலைஞர் நடந்து கொள்வார். இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக கலைஞர் ஒரு போதும் நடக்க மாட்டார்.

90;ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் அதற்கு விளக்கமும் சொன்னார்.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாக விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது.

இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டவரும், தனது சொந்தங்களை மத்தியிலே அமைச்சராகக் கொண்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியில் ஆதரவில் சிறுபான்மை அரசை நடத்திக் கொண்டிருப்பவரும் ஆகிய கலைஞரிடம் அதிகமாக எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அவரால் தமிழ்நாட்டில் வாழும் அகதிகளுக்கு சில ருபாய்கள் அதிகமாகக் கிடைக்கும். அதுவும் தமிழ்நாட்டு அரசின் நிதியில் இருந்து வழங்க மாட்டார். மத்திய அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்காக ஒதுக்குகின்ற பணத்தில்தான் கொடுப்பார்.

இதை விட கலைஞரால் தமிழினம் விடிவு பெறும் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்

  • தொடங்கியவர்

உண்மை மறுக்கவில்லை ஆனால் தி மு க விசுவாசிகள் தம் விசுவாசத்தை எங்கேயாவது வைத்து விற்க்கட்டும் ஆனால் தமிழ் உணர்வின் வாசலுக்கு வந்து வை கோ வை இளக்காரம் செய்யாமல் இருந்தால் சரி அவரின் அரசியல் புறச்சூழ்நிலைகள் புரிந்தவர்கள் நாம் பச்சை இருக்குமட்டும் தான் உறவு ஈரம் காட்டும் தாசித்தனம் கொண்டதல்ல ஈழம்.

(விசுவாசிகள் என்று உங்களைக் கூறவில்லை வன்னியன்)

ஆமாம். ஒரு புத்திசாலி சொல்லிட்டாரு. எல்லோரும் கை தட்டுங்கோ..... :lol::lol::lol:

யோவ் லக்கி

உதுக்கேல்லாம் கை தட்டினால் தட்டுறவனுக்கு தட்டீற்றுது என்றல்லோ நினைப்பார்கள். :roll: :lol: :roll: :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் லக்கி

உதுக்கேல்லாம் கை தட்டினால் தட்டுறவனுக்கு தட்டீற்றுது என்றல்லோ நினைப்பார்கள். :roll: :lol: :roll: :o

குசும்பு அண்ணாச்சி

பொய்தானே சொல்லுறீங்க

உங்களுக்கு முத்தீட்டுது என்றுதானே எல்லாரும் கதைக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote=

ஆமாம். ஒரு புத்திசாலி சொல்லிட்டாரு. எல்லோரும் கை தட்டுங்கோ..... :

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் இரு அரசியல் துருவங்கள் நீங்கினால், சில வேளை ஒட்டுமொத்த தமிழருக்கு விடிவு காலத்திற்கு சாத்தியங்கள் ஏற்படலாமா? தமிழகத் தமிழர்கள் விழ்ப்புணர்ச்சி பெறுவதை தடுப்பதில் இன்னும் தமிழகத்தில் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி தமிழக தற்போதைய "சனிமா" வும் முன்னணியில் நிற்கின்றது!

இந்த இரு அரசியல் "தொல்லை"களும் பழிவாங்கும் படலங்களையே தமிழகத்தில் தொடருகின்றன! தமிழகத்தில் தமிழன் ஒன்றுபட்டால்,

அதிமுகவும் திமுகவும் இணவதே ஒட்டுமொத்த தமிழருக்கு நன்மையை தரும்!

தமிழகத்தில் இந்திய மத்திய அரசின் ஆதிக்கத்தை நிலப்படுத்த இந்த இரு கட்சிகளையும் மத்திய அரசு நன்றாகப் பயன் படுத்துகின்றது!

=============================

"தமிழனுக்கு என்று ஒரு புத்தி உண்டு...." என்று காலாகாலமக நாங்கள் சொல்லிக் கொண்டுத் தான் வருகிறோமே தவிர... அதிலிருந்து விடுதலைபெற்றதாகவோ அதிலிருந்து விடுதலையைச் செய்யும் முயற்ச்சியில் யாரும் வெற்றிக் கண்டதாகவோ தெரியவில்லை...

ஒன்றில் மாத்திரம் பெயர் பெற்றவர்களாய் இருக்கின்றோம் - சினிமாவில்

இந்தச் 'சினிமா' என்னும் சனியன் தமிழனைப் போட்டு வாட்டி வதட்டிக் கொண்டிருக்கிறது

இந்த சினிமா என்னும் சாக்கடைக்குள் விழுந்து புரண்டு தொடர்ந்துச் சீரழியும் இந்த அஷ்டமத்துச் சனியனிலிருந்து... யார் விடுதலையைக் கொண்டுவருவார்?

இதே சினிமா எனும் மாயையில் ஊன்றியவர்களும் அதன் குருமுடி குடிகளுமே தமிழனை ஆட்சி செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அலலது அந்த மயையிலே ஊன்றி போயுள்ள தமிழ் சமுதாயத்திற்குத் தான் அதை உணராவண்ணம் சனியன் பிடித்துள்ளதா?

(இரு) அரசியல் கட்சிகள் ஒரு கொள்கைக்காக ஒன்று சேர்வது இயல்பானது தான்...

அனால் தமிழனின் வரலாற்றில் அது சிறப்பாக நடந்ததாக எந்த வரலாறும் இல்லை என்று கண்ணீரோடு சொல்வது அவசியமாகிண்றது.

மாயத்தையே வாழ்வாகக் கொண்டு மாயைக்கே வழி நடத்துகிறவர்களிடத்தில் எப்படி ஐயா இதை எதிர்பார்க்கலாம்?

தமிழருடைய அரசியல் எப்பொழுது இந்த மாயஜால சிற்றறிவாளர்களிலிருந்து விடுதலை பெருகிறதோ அன்றுத் தான் தமிழனுக்கு உண்மையான விடுதலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.