Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் , வளலாய் : அக்கரை பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்ற நடவடிக்கை

Featured Replies

photo%201(13).JPG
-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட வளலாய், அக்கரை பகுதியை 20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் தளமாக மாற்றவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட மேற்படி பிரதேசம் கடந்த மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அப்பிரதேசத்தில் 50 குடும்பங்கள் வரையில் மீளக் குடியேறியுள்ளனர். இம்மக்கள் அங்கு பிரதானமாக மீன்பிடித் தொழிலை, மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் வீச்சு வலை மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி பிரதேச கடற்கரை பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருப்பதுடன், விடுவிக்கப்பட்ட பின்னர் அதிகளவானவர்கள் அங்கு வந்து செல்வதையும் கருத்திற்கொண்டு அந்த கடற்கரைகளை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில், கடற்கரை அண்டிய பகுதிகளில் சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதற்காக பிரதேச சபையின் 20 இலட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வாசிகளுக்கு வேலைவாய்பையும் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். மேலும், பிரதேச சபைக்கு வருமானமும் கிடைக்கப்பெறும்.

இது தொடர்பில் ஆராயும் பொருட்டு, வியாழக்கிழமை (28) அப்பகுதிக்கு விஜயம் செய்து, ஆராய்ந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இவ்வருட இறுதிக்குள் சுற்றுலாத்தளமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
photo%203(18).JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/124316-2014-08-28-06-25-45.html

  • கருத்துக்கள உறவுகள்
இறுதிக்குள் சுற்றுலாத்தளமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருட கடைசியில சிட்னி பீச்சை விட திறம் பீச்சா மாத்தி போடுங்கோ ....நான் வந்து ஒரு சுப்பர் நீச்சல் போடப்போறன்.....அத்துடன் சிட்னி யாழ்கள உறவுகள் ஒன்றுகூடல் நடத்தப்போகிறோம்... :D
  • கருத்துக்கள உறவுகள்

வி டோண்ட் லைக் சிட்னி போட் பீப்பிள் கமிங் து வளலாய் :)

  • கருத்துக்கள உறவுகள்

வி டோண்ட் லைக் சிட்னி போட் பீப்பிள் கமிங் து வளலாய் :)

 

வை....வை.....நாங்களும் டமிழ் புயுபிள்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வி டோண்ட் லைக் சிட்னி போட் பீப்பிள் கமிங் து வளலாய் :)

கோசான், சுண்டல் கோவிக்கபோகிறார் .... நீங்கள் அவரியும் boat people category இல் சேர்த்தற்கு......

உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்கவும்...இல்லையேல் அவர் அழுதிடுவார்....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் தமிழ் தெரிந்த அபொர்ஜினியப்பா. அவுஸ்ரேலியாவுக்கே சொந்தக்காரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.