Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் 9நன்மைகள்/மற்றும் தீமைகள்.20/12/2021

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தற்சமயம் முதல் இரண்டு ஊசிகளும் கலந்து போட்டவர்கள்,அதாவது அஷ்ராசனிக்கா, மற்றும் வேறு ஒன்றை எடுத்து கொண்டவர்களாக இருப்பின் மூன்றாவது ஊசியை 18+வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தகாலம் .

................
ஊசி போடாத *Doctor* ..
சில்லறை கேட்காத *Conductor* ..
சிரிக்கும் *police* ...
முறைக்கும் *காதலி* ..
உப்பு தொட்ட *மாங்கா* ..
மொட்டமாடி *தூக்கம்* ..
திருப்தியான ஏப்பம்...
Notebookன் *கடைசிப்பக்கம்* ...
தூங்க *தோள் கொடுத்த* சக பயணி ....
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* ..
இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ...
கோபம் மறந்த *அப்பா* ..
சட்டையை ஆட்டய போடும் *தம்பி* ..
அக்கறை காட்டும் *அண்ணன்* ..
அதட்டும் *அக்கா* ...
மாட்டி விடாத *தங்கை* ..
சமையல் பழகும் *மனைவி* ...
சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* ..
வழிவிடும் *ஆட்டோ* காரர்...
 *High beam* போடாத லாரி ஓட்டுனர்..
அரை மூடி *தேங்கா* ..
12மணி *குல்பி* ..
sunday *சாலை* ...
மரத்தடி *அரட்டை* ...
தூங்க விடாத *குறட்டை* ...
புது நோட் *வாசம்* ..
மார்கழி *மாசம்* ..
ஜன்னல் *இருக்கை* ..
கோவில் *தெப்பகுளம்* ..
Exhibition *அப்பளம்* ..
முறைப்பெண்ணின் *சீராட்டு* ...
எதிரியின் *பாராட்டு* ..
தோசைக்கல் *சத்தம்* ..
எதிர்பாராத  *முத்தம்* ...
பிஞ்சு *பாதம்* ..
எளிதில் *மணப்பெண்* கிடைத்தாள்.,
வெஸ்ட் இன்டீசை வெல்லவே *முடியாது* .,
சந்தைக்கு போக *பத்து ரூபாய்* போதும்.,
முடி வெட்ட *இரண்டு ரூபாய்தான்*.,
 *மிதி வண்டி* வைத்திருந்தோம்.,
 *எம்ஜிஆர், கலைஞர்*  உயிரோடு இருந்தார்கள்.
 *ரஜினி, கமல்* படம் ரிலிஸ்.
கபில் தேவின் *கிரிக்கெட்* .
குமுதம், விகடன் *நேர்மையாக* இருந்தது.
 *வானொலி* நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
எல்லோரும் *அரசு* *பள்ளிகளில்* படித்தோம்.,
சாலையில் எப்போதாவது *வண்டி வரும்.,*
தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,
மயில் இறகுகள் குட்டி போட்டன, *புத்தகத்தில்* .,
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, *ஆங்கிலம்* .,
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் *டவுசர்* .,
பேருந்துகுள் கொண்டுவந்து *மாலைமுரசு* விற்பார்கள் .,
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் *உட்கார இடம்* கிடைக்கும் பேருந்தில்..,
கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா *அழகி* ...
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத *ஆசிரியர்* ...
கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற *வார்த்தை* ...
7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் *பாட்டி* ..
பாட்டியிடம் பம்மும் *தாத்தா* ...
எல்லா வீடுகளிலும், *ரேடியோவிலும், கேசட்டிலும்* பாடல் கேட்பது சுகமானது
வீடுகளின் முன் *பெண்கள்* காலையில் கோலமிட்டார்கள், *மாலைப்பொழுதுகளில்* வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்
 *சினிமாவுக்கு* செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்
ஆடி 18 *தீபாவளி* பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்
பருவ பெண்கள் *பாவாடை* *தாவணி* உடுத்தினர்.,
சுவாசிக்க *காற்று* இருந்தது., *குடிதண்ணீரை* யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
தெருவில் சிறுமிகள் *பல்லாங்குழி* ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் *நுங்கு வண்டி* ஓட்டுவோம்.,
இதை எழுதும் *நான்* ..
படிக்கும் *நீங்கள்* ..
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
*பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன*....
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன ஏதேதோ சத்தம் கேட்டது.
நமக்கு என்ன நடக்கப் போகிறதோ...!!! என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசலாடியது.
அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது..!!!
வழக்கமாக நாம் பேசும் இறைவனையே கேட்டு விடலாம் என்று குழந்தை இறைவனை பேச அழைத்தது.
*குழந்தை 😗
இறைவா ! என்னை எங்கு அனுப்பப் போகிறாய்? வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!!
*இறைவன்:*
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்.
*குழந்தை 😗
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்.!!
*இறைவன்:*
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் சந்தோசமாகவே இருப்பாய். சென்று வா...ம்..
*குழந்தை 😗
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்கள்...?
*இறைவன்:*
கவலைப் படாதே குழந்தாய்.. அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக எல்லாம் செய்யும், உன் மீது அன்பு செலுத்தும், அந்த அன்பை நீ உணர்வாய்.
*குழந்தை 😗
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய். நான் மிகச் சிறியவன், என்னால் நடக்க முடியாது, என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.
*இறைவன்:*
அது மிகவும் சுலபம். உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.
*குழந்தை 😗
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் இறைவனையே பார்த்தது) ம்ம்ம்…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
*இறைவன் 😗
(மென்மையாக சிரித்து)
நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
*குழந்தை 😗
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்..?
*இறைவன் 😗
(வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
*குழந்தை:*
(மிகவும் சோகமான
முகத்துடன்)
இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா...!!!
*இறைவன் 😗
(குழந்தையை அன்பாக அணைத்து)
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லித்தரும். சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திரும்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க முடியாது.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின...
*குழந்தை 😗
(மிகவும் இறைவனைப் பிரியும் சோகத்துடன்)
இறைவா இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன்...
நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்...
*இறைவன் 😗
குழந்தாய் தைரியமாக சென்று வா... உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் உனக்கு முக்கியமில்லை. ஆனால் அவளை நீ *அம்மா* என்று அழைப்பாய்.
உன்னைப் பார்த்ததும் உடனே தன்னுடைய வலியை மறந்து ...உன்னை உச்சி முகருவாள், பாராட்டுவாள், சீராட்டுவாள், தன் உதிரதத்தையே நீ பசி அறியா வண்ணம் பாலாக தருவாள், தன்னையே தருவாள். உன்னைப் பார்த்து பார்த்து எப்போதும் எந்நேரமும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பாள். அவள்தான் இனி ...நீ அழைக்கப் போகும் "அம்மா".
குழந்தாய் கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன் கவனமாகக் கேள். எந்த சூழ்நிலையிலும் மறந்துவிடாதே...
" நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த *தேவதை அம்மாவின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.* ".
குழந்தை சரி என்று வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….
தாய்மையை போற்றுவோம்.
*"அம்மா "..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டு முடிவிற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கின்றன..👋✍️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
01. யானை 🐘 22 மாதங்கள் கருவை சுமக்கும் !.
02. யானை 🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.!
03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.
04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.
05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.
06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.
09. யானை 🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.
10. யானை 🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.
11. ஒரு யானை 🐘 தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது.
அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி, நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே!.
5 கிமீ தூரத்தில் தண்ணீர்💦💦 இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை!.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
*50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் அவரது மனைவி ஒரு ஜோதிடராக இருந்த மருத்துவ ஆலோசகரிடம் சந்திப்பு எடுத்தார்.*
மனைவி சொன்னாள்:- அவர் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார், அவருடைய ஜாதகத்தையும் பாருங்கள்.
ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்து எல்லாவற்றையும் சரியாகக் கண்டுபிடித்தார். இப்போது அவர் தனது ஆலோசனையைத் தொடங்கினார். அவர் சில தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டு, அந்த மனிதனின் மனைவியை வெளியே உட்காரச் சொன்னார்.
பெரியவர் பேசினார்...
நான் மிகவும் கவலைப்படுகிறேன் ...
சொல்லப்போனால் நான் கவலையில் மூழ்கியிருக்கிறேன்...
வேலை அழுத்தம்...
குழந்தைகளின் படிப்பு மற்றும் வேலை பதற்றம்...
வீட்டுக் கடன், வாகனக் கடன்...
*நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்..*
அப்போது கற்றறிந்த ஆலோசகர் ஏதோ யோசித்து, "நீங்கள் எந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தீர்கள்?"
அந்த மாண்புமிகு பள்ளியின் பெயரைச் சொன்னார்.
ஆலோசகர் கூறியதாவது:-
*"நீங்கள் அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். உங்கள் பள்ளியில் இருந்து உங்கள் 'பத்தாம் வகுப்பு' பதிவேட்டைக் கண்டுபிடித்து, உங்கள் சகாக்களின் பெயர்களைப் பார்த்து, அவர்களின் தற்போதைய நல்வாழ்வைப் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கவும்.*
*எல்லா விவரங்களையும் ஒரு டைரியில் எழுதி ஒரு மாதம் கழித்து என்னை சந்திக்கவும்."*
ஜென்டில்மேன் தனது பள்ளிக்குச் சென்று, பதிவேட்டைக் கண்டுபிடித்து, அதை நகலெடுத்துக் கொண்டார்.
அதில் 120 பெயர்கள் இருந்தன. அவர் ஒரு மாதம் முழுவதும் இரவும் பகலும் முயன்றார், ஆனால் 75-80 வகுப்பு தோழர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியவில்லை.
*ஆச்சரியம்!!!*
*அவர்களில் 20 பேர் இறந்தனர்...*
*7 விதவைகள்/விதவைகள் மற்றும் 13 பேர் விவாகரத்து பெற்றவர்கள்...*
*10 பேர் பேசக்கூட தகுதியில்லாத அடிமைகளாக மாறினர்...*
* 5 பேர் மிகவும் மோசமாக வெளியே வந்தனர், அவர்களுக்கு யாரும் பதில் சொல்ல முடியாது..*
*6 பணக்காரர் ஆனதால் அவரால் நம்பவே முடியவில்லை...*
*சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் முடங்கி, நீரிழிவு, ஆஸ்துமா அல்லது இதய நோயாளிகள்..*
*விபத்துகளில் கை/கால் அல்லது முதுகுத் தண்டுவடத்தில் காயங்களுடன் ஒன்றிரண்டு பேர் படுக்கையில் இருந்தனர்...*
*சிலருடைய பிள்ளைகள் பைத்தியம் பிடித்தவர்களாக, அலைந்து திரிபவர்களாக அல்லது பயனற்றவர்களாக மாறினர்...*
*ஒருவர் ஜெயிலில் இருந்தார்... இரண்டு விவாகரத்துக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இருந்தார்...*
ஒரு மாதத்திற்குள், பத்தாம் வகுப்பின் பதிவேடு விதியின் வேதனையை விவரிக்கிறது.
*ஆலோசகர் கேட்டார்:- "இப்போது சொல்லுங்கள் உங்கள் மனச்சோர்வு எப்படி இருக்கிறது?"*
அவருக்கு நோயும் இல்லை, பட்டினியும் இல்லை, மனது நிறைவாக இருந்தது, நீதிமன்ற\போலீஸ்\வக்கீல்களால் வளர்க்கப்படவில்லை, மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் நல்லவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பதை அந்த மாமனிதர் புரிந்து கொண்டார். அவரும் ஆரோக்கியமாக இருந்தார்...
*உலகில் நிறைய துக்கம் இருப்பதையும், தான் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்ததை அந்த மனிதர் உணர்ந்தார்.*
*மற்றவர்களின் தட்டுகளை எட்டிப்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு, உங்கள் தட்டில் உள்ள உணவை அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உள்ளது.*
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டு முடிவிற்கு மேலும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன...இன்று 29/12/2021 இந்த ஆண்டு எப்படி உங்கள் எல்லோருக்கும் அமைந்து‌. ..அறிய சின்ன ஒரு ஆவல்‌.பகிர முடிந்தால், முடிந்தவரை பகிரலாமே.ஆண்டின் வரவு,செலவு அறிக்கை மாதிரி இல்லாது புரியும் படியாக பதிந்தால் நன்று ✍️😊

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
DAN TV குழுமம் வழங்கும் சாதனைத் தமிழர் விருது இந்த ஆண்டு (2021) முல்லைத்தீவு தொழிலதிபர் சாஜிராணிக்கு வழங்கப்படுகிறது. இதனையொட்டி இன்றைய ஈழநாடு 31.12.2021 பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை
டான் சாதனைத் தமிழர் விருதாளர் சாஜிராணி
.............
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - இன்று எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லைக் காண் என்று கும்மியடி என்றார் மகாகவி. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தானும் திகழ்ந்து தனது ஊழியர்களையும் தன்வழியில் ஊக்குவிக்கின்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுயதொழில் முனைவர் சாஜிராணி கிருஸ்ணதாஸ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை வழங்குவதில் டான் குழுமம் மகிழ்வடைகின்றது.
தொடக்க வாழ்வு
..................
22.06.1979 இல் முல்லைத்தீவு குமிழமுனையில் பிறந்த இவர் குடும்பத்தில் உள்ள ஐந்து பெண்பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளை. தந்தை குணநாதன் 1980களின் பிற்பகுதியில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இறந்துவிட – தாய் சின்னம்மா கச்சான் வியாபாரம் மேற்கொண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும் நிலைமைக்குள் சாஜிராணியின் குடும்பம் சிக்குண்டது. போர் நிலைமைகளால் சாஜிராணி குடும்பத்தினர் குமிழமுனைனயில் இருந்து புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 10 ஆம் ஆண்டுவரை கல்வி கற்ற சாஜிராணி தொடர்ந்து கல்வியைத் தொடர முடியாத வறுமைச் சூழலில் படிப்பை நிறுத்திக் கொண்டார். திருகோணமலையைச் சேர்ந்த கனகலிங்கம் கிருஸ்ணதாஸ் என்பவரை மணந்து ஒரு ஆண்பிள்ளையையும் பெற்றெடுத்தார். கணவர் கிருஸ்ணதாஸ் 2009 இல் இந்த மண்ணிற்காக மரணிக்கும் சூழ்நிலைக்கு உள்ளானார்.
போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வை எதிர்கொண்டு வவுனியா ஆனந்தகுமாரசாமி முகாமில் தஞ்சமடைந்த சாஜிராணி தனது வாழ்வாதாரத்திற்காக சிறிதளவில் அப்பம் சுட்டு விற்பனை செய்யத் தொடங்கினார்.
அதற்காக அவர் அப்பச் சட்டியையும் ஏனைய மூலப் பொருள்களையும் மிகவும் கடினப்பட்டே பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றார். தனக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களைத் தான் பயன்படுத்தாது விற்பனை செய்தமையால் பெற்ற பணமே அப்பத் தொழிலுக்கான முதலீடாக அமைந்தது.
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை
மீண்டும் புதுக்குடியிருப்பில் மீளக்குடியேறிய பின்னர் உணவுப் பார்சல் தயாரித்து விற்பனை செய்ய முயன்றார். அதிலும் போதிய வருவாய் ஏற்படாத நிலையில் – ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்து வணிக முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தலைப்பட்டார். மற்றையர்களைவிட வித்தியாசமாகச் சிந்திப்பவர்களிடமே வெற்றி எளிதாகும் என நம்பினார்.
வல்லாரை இலைகளைப் பயன்படுத்தி குழந்தைகளிடம் பிரபலமான ரிபிரிப் (Tipi Tip) தயாரிக்கலாம் என முயன்றார். ஆனால் அதற்குரிய பொறிமுறைத் தொழினுட்பம் தெரியாத நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு நிலையில் வல்லாரையில் ரிபிரிபி தயாரிக்கும் பொறிமுறையைத் தானாகவே கற்றுக் கொண்டார். இதுவே பின்னர் வல்லாரைப் பப்படம், வல்லாரை சத்துமா என பல்வேறு தயாரிப்புகளாக பரிணாமம் பெற்றது.
2014 இல் கண்டியில் இடம்பெற்ற கைத்தொழில் கண்காட்சியில் சாஜிராணியின் சதுஸ்ரார் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினரின் வழிகாட்டலில் சாஜிராணி இதில் பங்கேற்று வல்லாரைப் பப்படத்திற்காக முதற்பரிசைப் பெற்றுக்கொண்டார் இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அமெரிக்க பயணப் பரிசை நிராகரித்துத் தனது தொழில் முயற்சிக்காக புதுக்குடியிருப்பில் நிலம் வழங்கி உதவுமாறு மேடையிலேயே வேண்டிக் கொண்டார். அந்த வேண்டுகோள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவால் உடன் நிறைவேற்றப்பட்டது.
முன்மாதிரியான தொழிலதிபர்
.........
இன்று தனது தொழில்முயற்சியில் வளர்ச்சி பெற்று தன்னை ஒத்த 17 பெண்தலைமைத்துவ மற்றும் மாற்று வலுவுள்ள மகளிருக்கு வேலை வாய்ப்பை வழங்கி தனது நிறுவனத்தை ஒரு முன்மாதிரியான நிறுவனமாக வளர்த்தெடுத்துள்ளார். இவரது 60 வகையான உற்பத்திகளில் 15 இற்கும் மேற்பட்டவை புலம்பெயர் தேசங்களுக்கு ஏற்றுமதியாகின்றன என்பதும் பெருமைகொள்ளத்தக்கதாகும். இவரது உற்பத்திகளின் பெருமைகளை உணர்ந்த இந்தியப் பிரபல தொழிலதிபர் அம்பானி இந்த ஆண்டு இவரை அழைத்து தொழில் விரிவாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
உற்பத்தியில் தொழிலாளர் - விநியோகத்தில் லொறிச் சாரதி - இயந்திர இயக்கலில் பொறியாளர் - எனப் பன்முகப்பட்ட ஆளுமையுடன் திகழ்கிறார் சாஜிராணி. புலம்பெயர் உறவுகளைக் கடந்து வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்கான ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெறுவதற்குத் தற்போது எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கின்றார் இந்தச் சாதனை மங்கை.
வாழ்க்கையில் உயர்ச்சி பெற்றுச் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் முன்மாதிரியாக விளங்கும் சாஜிராணிக்கு இந்த ஆண்டுக்கான சாதனைத் தமிழர் விருதைக் கையளிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம். ஏற்கனவே இந்த விருதை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ( 2018 ) கலாநிதி மரியசேவியர் அடிகள் (2019) பேராசிரியர் சி.மௌனகுரு (2020 ) ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- சாதனைத் தமிழர் விருதுக்குழு சார்பில்
செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன்
270174340_10161576087730744_687086487157
 
 
270461219_10161576088430744_121856611389
 
 
270538822_10161576090020744_518526968238
 
 
270486290_10161576090170744_577907060176
 
 
270458475_10161576090270744_570821480580
 

Laleesan Laleesan is with லலீசன் லலீசன்......பக்கத்திலிருந்து..

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எழுத்தாளர் அம்பை அவர்களின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்பிற்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது,
 
.
269923263_4548298678551604_5516576176712
 
 
270258942_4548298765218262_3969104974667
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020- பரிசுபெற்ற குறுநாவல்கள்:
 
யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல போட்டியில், போட்டிக்கு வந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குறுநாவல்களில், இறுதிநிலைக்கு வந்து, பரிசுபெற்ற பத்து குறுநாவல்கள் இவை. இடம்பெறும் குறுநாவல்கள் தரவரிசையின்படி இல்லை. எல்லாமே சமமான பரிசை வென்றிருக்கின்றன.
 
பத்து பாத்திரங்கள் - சுரேஷ் பிரதீப்:
Name Place Animal Thing என்பது சிறுவயதில் விளையாடி நாம் மறந்த விளையாட்டு. இதே பெயரில் அந்த விளையாட்டை வைத்து, ஒரு ஆங்கில நாவல் சமீபத்தில் வெளியாகியது. அதில் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு சுரேஷ் விளையாடும் விளையாட்டு இது.
 
ஒரு நிமிடத்தில் திறமையைக் காட்ட வேண்டும் என்று போட்டியில் சொன்னால், பாடகர் முழுத்திறமையை அந்த நேரத்தில் காட்டுவது போல சுரேஷ் இதில் காட்டியிருக்கிறார்.
 
என்வரையில் அவரது வெளிவந்த படைப்புகளில் Best இது.
 
கதைசொல்லியும் சேர்த்து, பத்து கதாபாத்திரங்களை அருண் என்பவன் எதிர்கொள்ளும் தருணங்களே கதை. அதன் மூலம் அருணை நாம் பூரணமாகப் புரிந்து கொள்கிறோம், அல்லது புரிந்து கொண்டதாக நம்பத் தொடங்குகிறோம். இதில் ஏசுவும் ஒரு கதாபாத்திரம். பிறந்தவர், பிறக்கப்போகிறவர் எல்லோர் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் செய்துவிட்ட ஏசு இதில் அருணிடம் வேறொன்றைச் சொல்கிறார். அருணின் நண்பன் சந்திரனுக்கு குறைந்தது எண்பது வயது ஆயுள் என்பதைப் படிக்கும் போதே அறிந்து கொண்டேன். கலைச்செல்வி அருண் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் பெண்வடிவம். மானுடம் பேசித்தீராத தத்துவார்த்தம் கதையில் இடையிடை வருகின்றது. கதை, உரையாடல்கள் தாண்டி, Subtilityக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கதை. நுணுக்கமாகவே வந்திருக்கிறது. சுரேஷின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
 
காயாவனம் - வா.மு.கோமு:
George Orwellன் Animal Farm ஒரு முழு Allegory novel. ரஷ்யப்புரட்சிக்கு முன்னும், பின்னுமான சாமான்யர் வாழ்வை, விலங்குப்பண்ணை என்ற Utopian worldஐ உருவாக்கிச் சொல்வது. கோமுவின் காயாவனம் என்ற இந்த நாவல், பாட்டியின் வாய்மொழி கதைபாணியில் சொல்லப்படுகிறது.
 
குறுநாவலில் கவர்ந்த ஒரே விசயம், கொங்கு வட்டார வழக்கு. அதை விட்டால், இதை சிறார் நாவல் பிரிவில் சேர்ப்பதற்குண்டான முழுத்தகுதியும் இதற்கு இருக்கிறது. கதையில் நாமாக இதற்கு அவர் இல்லை அவள் என உருவகப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையை யாருக்கும் தராத வகையில் கதை கவனமாக எழுதப்பட்டுள்ளது. பிரதியே பேச வேண்டும், எழுத்தாளர் இரண்டாம் பட்சம். அது தமிழ் சூழலில் மாறாதவரை, பெயருக்காகப் பரிசும், பெயருக்காகப் பாராட்டும், பெயருக்காக ஒரு வாசகர் கூட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
 
நாற்பது நாட்கள் - மலர்வதி:
 
குறுநாவலின் நீளத்தைக் குறைத்து, Repetitionகளை வெட்டியெறிந்தால், இந்தக் கதையை பள்ளிமாணவர்களுக்குப் பாடமாக வைக்கலாம். அதே போல் பதினாறாவது அத்தியாயம் இதை பிரச்சாரக்கதையாக்கி இருக்கிறது. அந்த அத்தியாயத்திற்கு முன்பே கதை முடிந்துவிடுகிறது.
Dating மற்றும் பல நண்பர்களுடன் பழக்கம் என்று பின் ஒருவரைத் தேர்ந்தெடுக்க காலம் எடுத்துக்கொண்டு செய்யும் திருமணங்களே,
மேலைநாடுகளில் நிலைக்காமல் போகையில், Sexual Poverty இருக்கும் தேசத்தில் காதல் மணங்களும், Arranged marriagesம் வேறுவேறு பிரச்சனைகளைக் கொண்டு வருகின்றன. அறியாப் பருவத்தில் காதலில் விழுந்து, பிறந்த வீட்டிலும் ஏற்காமல், வாழவும் முடியாமல் காலத்தைக் கழித்த பெண்கள் எத்தனையோ பெயர். அவர்களில் ஒருத்தியின் கதையை, அழகான கன்னியாகுமரித் தமிழில் சொல்லியிருக்கிறார் மலர்வதி.
 
தீதிலர்- பிகு:
புதிதாக எழுத வந்திருப்பவர் இவர். அதைக் கணக்கில் எடுக்கையில் இவர் முதல் குறுநாவலிலேயே தேறிவிட்டார். சமகாலத்தில் நடக்கும் பிரச்சனையை எழுதும் போது, அதிர்ச்சி மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் வரும் பத்திரிகைச் செய்தியை தவிர்த்திருக்கலாம். சுஜாதா இதே போன்று இளநீர் என்று சிறுகதை எழுதியிருப்பார்.
வளர்ந்த ஆணும், பெண்ணும் ஒன்றாகச் செல்வதோ, ஒன்றாக இருப்பதிலோ Moral Policeஓ இல்லை வேறு எவருமோ தலையிடுதல் சட்டப்படி மட்டுமல்ல எல்லா வகையிலும் குற்றம். ஆனால் பாதுகாப்பில்லாமல் Misadventureல் இறங்குவதும் அதே போன்ற குற்றம். பிகுவுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால், IT துறையைப் பற்றி, அகமதாபாத்தில் நடப்பதாகக் கதை எழுதினால் இரண்டும் குறித்த ஆய்வு முக்கியம்.
 
புயா! முன்னா! இதி! - மணி.எம்.கே.மணி:
திரைத்துறையின் உள்விவகாரங்கள், பாசாங்குகள், வஞ்சனைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் இன்னபிற பற்றி சமீபகாலத்தில் புனைவில் அதிகம் கொண்டு வந்தவர் மணி.
Success has many-fathers, failure is an orphan என்பது சினிமாத்துறைக்கே நூறு சதவீதம் பொருந்தும். எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சினிமாத்துறையில் தொடர காரணம், அதுவும் ஒரு போதை. சினிமா ஒரு வழிப்பாதை. வெளியில் வந்து விட்டோம் என்று நினைப்பவர்கள் திரும்ப உள்ளே செல்லும் நேரம் அதிககாலம் இல்லை. கனவுலகுத் தாரகைகளுக்குப்பின் எவ்வளவோ கதைகள். வெற்றிபெற்றவனுக்கு அதைத் தக்க வைத்துக் கொள்ள ஜுவமரணப் போராட்டம். அதனால் தான் அவன் சகமனிதனை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அடுத்தவரது கதைகள், கற்பனைகளைத் தனதாக்கிக் கொண்டு, குற்றஉணர்வில்லாது பாராட்டைப் பெற்றுக் கொள்வதும் காலங்காலமாகத் திரைத்துறையில் இருப்பதே. Mani at his best.
 
முப்போகம்- மயிலன் ஜி சின்னப்பன்:
 
இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாகக் கலந்து கதை நகர்த்துகையில் ஒரு காலமயக்கம் வாசகருக்கு ஏற்படும்.
 
Alex Michaelidesன் முதல் நாவல் The Silent Patient இந்த யுத்தியை முழுமையாகப் பயன்படுத்தி வாசகர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கும். ஒருவகையில் எழுத்தாளர் வாசகரை Tease செய்யும் யுத்தி. மயிலன் இந்தக் குறுநாவலில் அதே யுத்தியைக் கையாண்டிருக்கிறார்.
தன் குடும்பத்தைச் சாய்க்கும் அளவிற்கு எந்தப் பெண்ணோ அல்லது ஆணோ Worth கிடையவே கிடையாது. காதலில் விழுவோருக்கு அது ஏனோ புரிவதில்லை.
 
பாலியல் வறட்சியில் கிடைத்ததை விடக்கூடாது என்று தவிப்பதா இல்லை Loveஐ Glorify செய்து வைத்திருப்பது காரணமா தெரியவில்லை. மேலைநாடுகளிலும் Breakupக்குப் பிறகு இரண்டு மூன்று மாதம் பித்துப்பிடித்து அலைகிறார்கள் ஆனால் அதன்பிறகு Normal வாழ்க்கை ஆரம்பித்து விடுகிறது. அடுத்தது Eloping. ஒன்றல்ல இரண்டு. அதற்குப் பின்னான வாழ்க்கையில் முடிச்சுக்கள் போட்டுக்கொண்டே சென்று கடைசியில் துளி நீட்டிக் கொண்டிருக்கும் நூலை இழுக்கிறார் மயிலன், மொத்த முடிச்சும் அவிழ்ந்து போகிறது. கதையில் அங்கங்கே ஏன் என்று வாசகர் கேட்காவிட்டால் நழுவிப் போகும் தருணங்கள், சமூக உளவியல் அத்துடன் இந்தக்கதை மொத்தத்தையும் ஆட்டிவைக்கும் Murphy Law என்று நிறைவாக வந்திருக்கும் குறுநாவல்.
 
யாகத்தின் பெருநெருப்பு - மோகனா:
 
புராணங்களை மீட்டுரு செய்கையில் வித்தியாசமான கோணத்தைக் கொண்டு வராவிட்டால் அது எந்த தாக்கமும் இல்லாது மறைந்துவிடும். புராணக்கதையை நனவோடையாகவும், புராணப்பாத்திரத்தை நிகழ்காலத்தில் உயிர் கொண்டதாகவும் வைத்துக் கதை அமைத்திருக்கிறார் மோகனா.
 
மன்னர் காலத்தின் படையெடுப்புகளில் இருந்து, அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். உடன்கட்டை ஏறியது கூட, எல்லா சுகபோக வாழ்வும் முடிந்தபிறகு இனி உயிரோடு இருந்து எதைச் சாதிக்க என்று உலகுக்குச் சொல்வது தான். கோயிலில் இருந்த திரௌபதி தனக்கு நேர்ந்த அநீதிக்கு இன்னும் பொறுமிக் கொண்டிருக்கிறாள். கலியுகத்தில் பெண்ணுக்கு நேரும் அநீதியைப் பார்த்து விட்டு, தனக்கு நேர்ந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். வித்தியாசமான பார்வை ஆனால்லகதை சொல்லலில் மோகனா அடிக்கடி கதைக்குள் வந்து நான் தான் இந்தக்கதையை எழுதுவது என்கிறார். கதை எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பிய உடன் எழுதியவரிடமிருந்து பலமைல்கள் விலகி விடுகிறது. எழுதியது ஒரே கதை என்றாலும் பன்னிரண்டு வயதுப் பெண்ணும், ஐம்பது வயது ஆணும் ஒரே கதையைப் படிப்பதில்லை.
 
ஜப்பான் - பாலாஜி பிரசன்னா:
 
இதற்கு முன் ஒரு சிறுகதையை மட்டுமே எழுதியிருப்பவர் என்பதே வெளியில் தெரியாது இவரது மொழிநடை சரளமாக இருக்கிறது. உள்ளடக்கமும் நாளை மற்றும் ஒரு நாளேயைப் போன்றது.
இது ஒரு வாழ்க்கை. மதுரையில் பிறந்தவர்கள் பலமுறை பார்த்த வாழ்க்கை இது. பிறரை அடிக்கவும் தயங்காது, அடிவாங்குதலில் அவமானமும் அடையாது திரியும் கூட்டம். கஞ்சா ராஜபோதை, அது கற்பனை உலகத்தில் மிதக்கவைத்து அப்படியே அமிழ்த்தி விடும். குடியில் இருந்து தப்பிப்பவரும் கூட கஞ்சாவிடம் தப்பிப்பது கடினம். எந்த பிசிறும் இல்லாமல் கச்சிதமாக எழுதப்பட்ட குறுநாவல். பாலாஜி தொடர்ந்து எழுத வேண்டும்.
மைனிகள் -எம்.எம்.தீன்:
 
உறவுகள் அருகி வரும் காலத்தில் சிறுவயது நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது இந்த நாவல். பதின் பருவத்தில் அண்ணன்களின் மனைவிகள், பாலியல் குறித்து பூடகமாகப் பேசிச் சிரிப்பதைக் கேட்டிருந்தவர்கள் இந்தக்கதையுடன் அவ்வளவு ஒன்றமுடியும். அண்ணிகள் கொழுந்தனிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை, உடல்ரீதியானதில்லை, கணவனின் சின்ன வடிவமாக, கணவனை போல் அதிகாரம் செய்யாமல், தன்னை வியந்தோதும் சிறுவனைப் பார்த்து வரும் பாசம்.
 
ஒரு சிறிய பயணம் இரண்டு அண்ணிகளுடன், அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், மைனிகள் சொல்லும் குட்டிக்கதைகள் இவ்வளவே இந்தக் குறுநாவல். அதற்குள் ஒரு அழகான உலகத்தை நமக்குக் காட்டுகிறார் தீன். இஸ்லாமியக் குடும்பத்தின் நம்பிக்கைகள், கட்டுப்பாடுகள் கூடவே வருகிறது.
 
எல்லாவற்றையும் விட அண்ணி என்ற உறவு காட்டும் பிரியம், அவள் தொடுகையில் ஏற்படும் குறுகுறுப்பு இரண்டுமே மனதில் நிற்கிறது. நிறைய எழுதுங்கள் தீன்.
 
மென்முறை- நாராயணி கண்ணகி:
 
வாதி எழுதியவருக்கும் இதற்கும் ஒரே பெயர் என்று சொல்லாவிட்டால் யாருக்குமே தெரியாது. நிர்வாணநகரத்தின் சிவராஜூ போல் கொஞ்சமாக பயந்த ஒருவன், வாடகைவீடு மாறி, புதுவீட்டுக்கு எதிரிலிருக்கும் ரவுடியைப் பார்த்துப் பயந்து போவதே கதை.
 
தற்காலிக வேலையில் இருப்பவனின் பிரச்சனைகளில் ஆரம்பிக்கும் கதை, மனைவி மீது கொஞ்சம் மையல் என்று மாறி, புதுவீட்டுக்குக் குடிபோவது என்றவுடன் ஐந்தாம் கியரில் கதை ஓட ஆரம்பித்து விடுகிறது. வாய்விட்டு சிரிக்காமல் படிக்க முடியவில்லை. எந்தக் குறையும் சொல்லமுடியாத Perfect presentation. இதை விடப் பொருத்தமான Endingம் இருக்க முடியாது. பிரேமாவும் செல்வியும் அடிக்கும் லூட்டியிலும் கதையை Trackஐ விட்டு நகராமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியமான கதைசொல்லல். நாராயணி கண்ணகியின் இனிவரும் நூல்களைத் தவறவிடக்கூடாது என மனதில் குறித்துக் கொண்டேன்.
பிரதிக்கு:
 
யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல் பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ. 750.
No photo description available.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு 2022: நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள்

  • ஜோ. மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
 
 

நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர்நோக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர்நோக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

கிராமப்புற திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் என்றால் கட்டாயம் கலை நிகழ்ச்சிகள் இருக்கும். குறிப்பாக மக்களிசையாக போற்றப்படும் நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசும் ரசிகர்கள் கூட்டமும் இ(எ)ப்போதும் உண்டு. கிராமப் புறங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் நாட்டுப்புற கலை நிகழ்வுகளுக்கு வரவேற்பு உள்ளது. ஆனால். கொரோனா பெருந்தொற்றால் கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், மேடை நாடகம் மற்றும் இசைக் கலைஞர்கள் மேடை ஏறும் வாய்ப்பை பெருமளவு இழந்துள்ளனர்.

"2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு பல்வேறு துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டது. இது கலைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கிராமிய, நாட்டுப்புற கலைஞர்கள். தொடர்ந்து 2021ம் ஆண்டில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே வாய்ப்பிருந்தது. பொருளாதாரம் முடங்கியே இருக்கிறது என்கிறார்கள்," கிராமப்புற கலைஞர்கள்.

நன்கொடையாளர்களின் உதவிகளை மறக்க முடியாது

தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்ற நிறுவனத் தலைவர் வளப்பகுடி வீரசங்கர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஆண்டிற்கு 4 மாதங்கள் தான் எங்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான், 12 மாதங்களையும் சமாளிக்க வேண்டும்," என்றார்.

"கஜா புயல், கொரோனா என தொடர்ந்து 3 ஆண்டுகளாக போதிய வாய்ப்பில்லை. பலரும் அத்தியாவசிய செலவிற்கே வழியின்றி அல்லல்படுகின்றனர். தமிழ்நாடு அரசு நலவாரியத்தின் மூலம் ஒரு முறை ரூ. 2000 கொடுத்தது பெரும் உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வாழ்க்கையை நடத்த நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்."

 

நாட்டுப்புற கலைஞர்கள்

சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், பல்வேறு தனியார் அமைப்பினர், தன்னார்வலர்களின் நன்கொடையால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 19 ஆயிரம் கலைஞர்களுக்கு உதவியுள்ளோம். நன்கொடையாளர்கள் பணம் மட்டுமல்ல, அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் என்று கொடுத்து உதவினர். அவர்கள் உதவியால் பல கலைஞர்கள் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில், இது போன்ற உதவிகளை என்றைக்கும் மறக்க முடியாது" என்கிறார்.

கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர்

 

நாட்டுப்புற கலைஞர்கள்

பட மூலாதாரம்,T. LAKSHMI

 

படக்குறிப்பு,

மதுரை லட்சுமி, நாட்டுப்புற கலைஞர்

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர், மதுரை லட்சுமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு பிறந்ததும், மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் போது, புதிய திரிபான ஒமிக்ரான் பரவல் ஒரு அச்சத்தை தருகிறது. தொடர்ந்து விழாக்கள் நடைபெறாத நிலையில், கடைகளுக்கு முன்பாக நின்று காசு கேட்கும் நிலை ஏற்பட்டது," என்றார்.

 

நாட்டுப்புற கலைஞர்கள்

"புத்தாண்டிலாவது யாராவது சாப்பாடு தருவார்களா? என்று காத்திருக்கும் நிலை மாறும். வீட்டில் உள்ள வறுமை போய், மீண்டும் வீட்டில் விளக்கு எரியும் என்று காத்திருக்கிறோம். இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரகாட்ட கலைக்காக எனக்கு விருது கொடுத்து அங்கீகரித்தார்கள். ஆனால், இதைக் கொண்ட்டாட கூட இயலவில்லை. சக கலைஞர்கள் அனைவரும் மகிழும் நாள், 2022ம் ஆண்டு கொடுக்கட்டும்." என்கிறார் லட்சுமி.

புத்தாண்டில் நல் வழி பிறக்கும் என்று நம்பிக்கை

இவரைப்போலவே புத்தாண்டாவது நல்வழி காட்டும் என்கிற நம்பிக்கையோடு பல கலைஞர்கள் காத்திருக்கிறார்கள்.

 

ராஜீவ் காந்தி

பட மூலாதாரம்,RAJIV GANDHI

 

படக்குறிப்பு,

ராஜீவ் காந்தி

நாட்டுப்புற கலைக்குழு நடத்தி வரும் ராஜீவ்காந்தி, "மேடையில் திறமைகளைப் வெளிப்படுத்தி, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நாட்டுப் புற கலைஞர்களுக்கு 2022ம் ஆண்டாவது இயல்பு நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம். தமிழ் மாதத்தில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டுமே தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாதங்களில் ஒன்றிரண்டு வரும், அதுவும் எல்லாருக்கு கிடைக்காது. ஆகையால், 2018 ஆம் இறுதியில் கஜா புயலைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் தொடர்ந்து 3 ஆண்டுகள் கலைஞர்களுக்கு கஷ்டம்தான். ஆனால், கச்சேரி வாய்ப்பில்லாமல் தினக் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்த துயரத்திலும் பலர் பண உதவி, பொருள் உதவி என்று செய்து வருகிறார்கள். அவர்களின் மனிதநேய உதவிகள்தான், எங்களை இப்போது வாழ வைத்துள்ளது," என்கிறார்.

 

நாட்டுப்புற கலைஞர்கள்

மேடைகளில் மக்களால் கொண்டாடப்படும் கலைஞர்கள் பலரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் நாட்டுப்புறப் பாடகி ஆரூர் அம்பிகா.

 

நாட்டுப்புற கலைஞர்கள்

பட மூலாதாரம்,AMBIKA

 

படக்குறிப்பு,

ஆரூர் அம்பிகா

அவர் கூறுகையில், "வாழ்வில் மிகக் கொடுமையான கால கட்டம் இது. கடந்த ஆண்டு வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு கிடைத்த சில வாய்ப்புகளும் ரத்தாகின. இதனால், அன்றாட செலவு, குழந்தைகளின் கல்வி செலவு மட்டுமல்ல வயிற்றுப் பசி போக்குவதே பெரும்பாடு என்கிற நிலை. சேமித்து வைத்திருந்த கொஞ்சத்தையும் விற்று விட்டு கடனாளிகளாக உள்ளோம். அரசு நலவாரியத்தின் மூலம் ₹ 2 ஆயிரம் கொடுத்தார்கள். அந்த தொகையும் என்போன்ற பலருக்கும் கிடைக்கவில்லை." என்கிறார்.

தொடக்கம் நம்பிக்கை அளிக்கிறது

 

நாட்டுப்புற கலைஞர்கள்

பட மூலாதாரம்,VEERASANKAR

 

படக்குறிப்பு,

வளப்பகுடி வீரசங்கர்

திரைத்துறையில், சின்னத்திரைகளில் வாய்ப்பு பெற்று கவனத்திற்கு உள்ளாகி, பிரபலமாகியுள்ள சிலர் உட்பட பெரும்பான்மையான கலைஞர்கள் பொருளாதாரத்தில் பெரிதும் நலிவடைந்துள்ளனர்.

அனைவருக்கும் அரசு உதவ வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத, அனைத்து கலைஞர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பிறக்கும் 2022ம் ஆண்டு தொடக்கத்தில், "சென்னையில் ஊர்த் திருவிழா என்று திட்டமிட்டுள்ளார்கள். இதில், சற்றேறக்குறைய 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது நல்ல தொடக்கமாக தெரிகிறது. இது தொடர வேண்டும்" என்கிறார் ஊர்த்திருவிழா அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் வளப்பகுடி வீரசங்கர்.

நம்பிக்கையோடு காத்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல் வழி பிறக்கட்டும் புத்தாண்டில்...

bbc.com
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கியூபெக்கில் ஊரடங்கு அமுலுக்கு வருகின்றது. உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். பாடசாலைகளை மீளத்திறத்தல் தள்ளிவைக்கப்படுகிறது.

 

https://montamil.ca/?p=15346

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” 
 
வெள்ளிக்கிழமை 31/12/2021 ஆண்டின் இறுதி நாள்.. அனைவருக்கும் இனிய நாளாக, பொழுதாக அமையட்டும் 🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டின் இறுதி கணங்கள் ஊரில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து வாழும் ஒரு வயோதிபருக்கா மருத்துவ செலவுக்கான உதவிக் கரம் நீட்டியதோடு நிறைவுக்கு வருகிறது.இந்த உதவி கரம் நீட்டும் பணி எனக்கு சுய நினைவு இருக்கும் வரை தொடரும் 👋✍️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கே பதியப்படும் எனது கட்சி பதிலாக கூட இருக்கலாம்.. எனக்கு என்னவோ இந்த ஆண்டோடு இவ்விடத்தில் இருந்து நகர்ந்து விடுவதே நன்று என்று மனதுக்கு படுகிறது.இவாக்கு போவதும்,வருவதும் தான் வேலை என்று சொல்லாமல் சொல்வதும்,ஆங்காங்கே பதிவதும் எனக்கு விளங்காமலும் இல்லை.. இதுவரைக்கும் நான் யார் மனதும் நோகும்படியோ அல்லது யாருக்கும் முரனாகவோ நடந்தவள் அல்ல.. அனைவரும் நலமோடு இருங்கள்.நன்றி.🙏✍️👋

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

இது இங்கே பதியப்படும் எனது கட்சி பதிலாக கூட இருக்கலாம்.. எனக்கு என்னவோ இந்த ஆண்டோடு இவ்விடத்தில் இருந்து நகர்ந்து விடுவதே நன்று என்று மனதுக்கு படுகிறது.இவாக்கு போவதும்,வருவதும் தான் வேலை என்று சொல்லாமல் சொல்வதும்,ஆங்காங்கே பதிவதும் எனக்கு விளங்காமலும் இல்லை.. இதுவரைக்கும் நான் யார் மனதும் நோகும்படியோ அல்லது யாருக்கும் முரனாகவோ நடந்தவள் அல்ல.. அனைவரும் நலமோடு இருங்கள்.நன்றி.🙏✍️👋

 

 

 

சரி சரி 
அடுத்த வருடம் சந்திப்போம்.
புதுவருட வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்..
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்.
ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.
துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.
சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.
பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.
ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.
அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எப்போது படித்தாலும் இனியது  
*"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது.*
*மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.*
*கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....*  
*இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"*
*என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.*
*எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....*
*"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"*
*'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'*
*"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"*
*'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'*
*பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.*
*தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.*
*தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.*
*கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.*
*' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.*
*கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:*
*'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'*
*'நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.*
*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.*
*'நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.*
*பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,*  
*'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'*
*ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம்' னு...*
*வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
தொடங்கிய புள்ளியிலேயே மீண்டும்...
.
புள்ளி இட்டேன்.
சுற்றிச்சுற்றி வைத்தேன்
நேர்த்தியாக .
வரிசையாக...
மேலும் சில புள்ளிகள்..
கீற்றிட்டு கோலமிட்டேன்
அத்துனை வடிவு.
இப்படி அப்படி
என எண்ணி எண்ணி
பின்னிப் பின்னி வடித்தேன்
வெண்ணிற அரிசி மாவில்..
மிளர்ந்தது கோலம்
அத்துனை அழகு...
வண்ணங்களைக் கொண்டு
நிரப்பினேன் அதை
அத்துனை மாதுர்யம்..
மின்மினிக்களைப் பிடித்துப் பொருத்தினேன்..
அத்துனை மினுக்கல்..
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
சுற்றிச் சுற்றியே
சுற்றும் முற்றியே
அடவு கட்டினேன்..
அத்துனை அழகு.
ஓரக்கால்களில்
செம்மண்ணிட்டேன்
புனிதமேற்றியது
அத்தனை தெய்வீகம்...
மலர்களைத் தூவிப்
பூப்பந்தலிட்டேன்
கோலம் ஒளிர்ந்தது..
அத்துறை தேவாம்சம்..
ஆ..ஹா...
நின்றேன்
வியந்தேன்
பெருமிதம் கொண்டேன்
கூத்தாடினேன்
கொண்டாடினேன்
தாளமிட்டேன்
தலைகனத்தும் போனேன்..
சிரித்து முடிக்கவில்லை
ரசித்தும் முடியவில்லை
சட சடவென காற்றடித்தது
படபடவென மழைப் பொழிந்தது
திடு திடுவென இடிஇடித்தது
பளபளவென மின்னல் வெட்டியது
எல்லாம் கலைந்தது..
யாவும் கரைந்தது
வண்ணக் கோலம்
வாடியே நகர்ந்தது மழைநீராக
எனை நோக்கிய உதிர்த்தது விழிநீராக.
விதிர்விதிர்த்தேன்
விக்கிப் போனேன்
உக்கியே நின்றேன்
எனக்கு நானே
பகையானேன்
உறைந்து போன
சிலையானேன்
உயிர் பிரிந்த
சவமானேன்..
கோலமிட்ட இடத்தில்
மிச்ச மாய்
கொஞ்சமாய்
கண்ணீர் வரிகள் மட்டுமே
விட்டுப் போன கோலத்தின்..
கொட்டிக் தீர்த்த என் விழியிடத்தின்
மீண்டும் துவங்கினேன்
தொடங்கிய புள்ளியின்
நுனியில்...
.272962690_631655944833831_26912947655422
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.