Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

4 hours ago, யாயினி said:

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கினார்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தார்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்கள் உலகம் அவற்றை பார்த்து "உச்" மட்டும் கொட்டிய அந்நாள்.. 

22 வருடங்களுக்கு முன்னொருநாள். 
அன்று #கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். 
இன்று போலவே அன்றும் #மழை பெய்து கொண்டு இருந்தது. 

விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. #பலாலி #இராணுவ முகாமிலிருந்து #யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற #இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க #புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரப்பு செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ #நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். #குண்டு வீச்சு #விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். #ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

அன்று. பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய #இனவழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான #தென்மராட்சி #வடமராட்சி #வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண #குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். #யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் உலகம் என்ற ஒன்று பார்த்து உச் மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

அந்த நாள் 1995 ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி.
இன்றுடன் 22 வருடங்கள் கடந்து விட்டன :'1f642.png(:'( 1f622.png:'(

நன்றி.
- சாரல் இணையம் -

Image may contain: one or more people and crowd
 
LikeShow more reactions
CommentShare

 

மிகத் துயரமான நாள். இப்போது பெரும்பாலானவர்களுக்கு நினைவிலும் இல்லை.

 

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
October 31,2017 கலோவீன் தினம்...

HAPPY HALLOWEEN

Image may contain: night
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை வந்தாச்சு....1,11,2017"

Image may contain: plant, flower, nature and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதை குளிர்விக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தருணங்கள்

வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு, சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ புகைப்பட முகமையான கெட்டி இமேஜஸ்-இன் கோப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முந்தைய குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.

  • 2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி.HEINZ KLUETMEIER/ GETTY IMAGES

    2010-இல் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவில் கனட பனிச்சறுக்கு வீரர் ஜானி லியால், ஒலிம்பிக் வளையங்களின் வழியே தாண்டிச் செல்லும் காட்சி.

  • 1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.B BENNETT/ GETTY IMAGES

    1980-இல் நடந்த போட்டிகளின் ஐஸ் ஹாக்கியின் அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியன் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க அணி. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டி 'பனி மீது நடந்த அதிசயம்' என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டியில் அமெரிக்கா பின்லாந்து அணியை 4-2 என்று வென்றது.

  • 2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.CAMERON SPENCER/ GETTY IMAGES

    2014-இல் நடந்த சோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸில், அமெரிக்க ஸ்கீயிங் வீராங்கனை எமிலி குக் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம்.

  • யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்.TREVOR JONES/ GETTY IMAGES

    யுகோஸ்லேவியாவில் 1984-இல் நடந்த போட்டிகளில் பிரிதனைச் சேர்ந்த பனி நடனக் கலைஞர்கள் ஜேய்ன் டார்வில் மற்றும் கிறிஸ்டோஃபர் டீன் நிகழ்த்தும் பொலேரோ நடனம்.

  • 2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.JAMIE SQUIRE/ GETTY IMAGES

    2010-இல் நடந்த வான்கூவர் குளிர்கால ஒலிம்பிக்சில், பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்கேடிங்கில் அமெரிக்காவின் எல்லி ஒச்சோவிக்ஸ் உடன் போட்டியிடும் கனட வீராங்கனை ஷன்னான் ரம்பெல்.

  • 1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.GETTY IMAGES

    1988 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், போப்ஸ்லேக் ஃபோர்ஸ் எனப்படும் பனி விளையாட்டின்போது, ஜமைக்க வீரர்கள் டேவன் ஹாரிஸ், டட்லீ ஸ்டோக்ஸ், மைக்கேல் வைட், சாமுவேல் கிளேட்டன் ஆகியோர் பனிச் சறுக்கு தலத்தில் இருந்து விலகி பக்கவாட்டில் இருந்த தடுப்புகளில் மோதிய காட்சி.

  • 1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.PASCAL RONDEAU/ GETTY IMAGES

    1992-இல் பிரான்சில் நடந்த போட்டிகளின்போது ஸ்கீயிங் செய்யும் வீரர் காற்றில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படம்.

  • 1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.ALEX LIVESEY/ GETTY IMAGES

    1998-இல் ஜப்பானில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், டவுன்ஹில் எனப்படும் போட்டியில் எதிர்பாராமல் கீழே விழுந்து தன் காலை முறித்துக் கொள்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஜெர்மன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்பிட்ஸ்.

  • 1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்.CENTRAL PRESS/ GETTY IMAGES

    1964-இல், ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியைக் காணும் 80,000 பார்வையாளர்கள்.

  • 2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.SHAUN BOTTERILL/ GETTY IMAGES

    2010-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்கும் நார்வே வீரர் ஓல் எய்னார் ஜோர்தலென்.

  • ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.GETTY IMAGES

    ரஷ்யாவில் 2014-இல் நடந்த போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் போல்சோய் பனி குவிமாடம் மீது எரியும் காட்சி.

http://www.bbc.com/tamil/sport-41834487

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
லைக்கா (Laika, ரஷ்ய மொழி: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. லைக்கா (பெண் நாய்)
விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.
லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசுப்புட்னிக் 2:

புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ் விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும்.

இக் கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் லைக்கா வைக்கப்பட்டது.

பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன.

by.wiki

No automatic alt text available.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


1959 களில் உருமேனியா என்னும் நாடு லைக்காவை தனது நாட்டின் அஞ்சல் தலையில் பொறித்துக் கொண்டது.

Image may contain: text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் என்னை விழுங்கி விடுகிறது..24 மணி நேரம் போத வில்லை சில பணிகளை செய்து முடிப்பதற்கு!:rolleyes::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Don't forget to set your clocks back,
 
 
Daylight Saving Time Ends
2:00 AM
Sunday
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

First time I made crab curry.

Image may contain: food and indoor
 
Image may contain: food and indoor
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

First time I made crab curry.

Image may contain: food and indoor
 
Image may contain: food and indoor

நண்டு கையைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் இன்னும் உயிர் இருக்கிற மாதிரிக் கிடக்கு.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்டூனிஸ்ட் பாலா கைது 

தனது கேலிச்சித்திரத்தின் ஊடாக அதிகார வர்க்கத்தை தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா கைதாகியுள்ளார்.

கார்டூனிஸ்ட் பாலா லைன்ஸ் மீடியா (www.linesmedia.in) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வருகின்றார் .

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கார்டூனிஸ்ட் பாலா கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை (இணைக்கப்பட்டுள்ளது) பதிவேற்றியிருந்தார்.

குறிப்பிட்ட கேலிச்சித்திரம் தன்னை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

safe_image.php?d=AQCQxJqKSptisqYS&w=476&
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Montreal நகரபிதாவிற்கான தேர்தலில் வால்ரே பிளான்டே (Valérie Plante) வெற்றி பெற்றுள்ளார். Montreal நகரின் முதலாவது பெண் நகரபிதா என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Valérie Plante becomes first woman mayor of Montreal. She has made history, becoming the first woman to be elected in Canada's second largest city.

safe_image.php?d=AQDLxQJj0sGl_rD9&w=476&
Valérie Plante made history on Nov. 5, 2017 as the first woman to be elected in the City of Montreal.
NATIONALOBSERVER.COM
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

மருத்துவத் துறையின் மைல்கல் - உலக எக்ஸ்-ரே தினம் இன்று!

xray_14273.jpg

நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.

இன்றைய மருத்துவ உலகில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை கண்டுபிடிப்பானது, அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன. 

மேலும் பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்கும் என பல செயல்பாடுகளுக்கும் இக்கதிர்கள் பயன்படுகின்றன.

இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’ கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘எக்ஸ்-ரே’ கண்டுபிடிப்பு

1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ரான்ட்ஜென் ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், ‘பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையை வைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். 'எக்ஸ்-ரே' கண்டு பிடிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ம் தேதி 'எக்ஸ்-ரே' தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெயர் வந்த கதை
இதற்கு எக்ஸ்-ரே என ரான்ட்ஜென் பெயரிட்ட காரணம் விசித்திரமானது. பொதுவாக, கணிதத்தில் தெரியாத ஒரு எண்ணை ‘X’ என வைத்துகொள்வது போல, இந்தக் கதிர்களின் பண்புகளை உடனடியாக அறிந்திராத நிலையில் ரான்ட்ஜென் ‘எக்ஸ்-ரே’ எனப் பெயரிட்டார். எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால், இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார். அதற்காக, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவியின் கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார். அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. ஆக மனித உடல்களின் மெல்லிய திசுக்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் இக்கதிர்கள், எலும்பு போன்ற கடினமான பொருள்களின் வழியாக ஊடுருவிச் செல்லாது என்பதை கண்டறிந்தார்.
காப்புரிமை வாங்காத ரான்ட்ஜென்
தனது அரிய கண்டுபிடிப்பால் மருத்துவ உலகின் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரான்ட்ஜென், தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரவில்லை. ‘எக்ஸ்-ரே ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு காப்புரிமை தேவையில்லை. அதை ரான்ட்ஜென் கதிர்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என பெருந்தன்மை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

‘எக்ஸ்-ரே’ பற்றிய தகவல்கள்

* முதன் முதலாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டவர், ரான்ட்ஜெனின் மனைவி.
* ரான்ட்ஜெனுக்கு இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ம் ஆண்டில் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ரான்ட்ஜென் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால், 'எக்ஸ்-ரே' கதிர்வீச்சு அதற்கு காரணம் அல்ல. மிகவும் பாதுகாப்பான முறையில்தான் அவர் அந்த ஆய்வை மேற்கொண்டார். ஆனால், மேரி கியூரி காரீயத் தடுப்புகள் பயன்படுத்தாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
* எக்ஸ்-ரே மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு முதல் ஏழு வாரங்களில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கவே கூடாது.
* குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, ‘எக்ஸ்-ரே’ பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது.

Image may contain: one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பயணியை தாக்கிய சம்பவம் இன்று நடந்திருந்தது... அதை பார்த்த மற்ற போட்டி விமான நிறுவங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது. 

டைமிங் 1f602.png?1f60d.png? dot


முகிலன்.எஸ்வி · 

No automatic alt text available.
No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
Image may contain: text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

Image may contain: flower, plant, sky, cloud, nature and outdoor
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு
ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில் ”படித்தல்”, ”வாசித்தல்” என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியம்.
படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படி” என்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான் ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது. ”ஒரு புத்தகத்தை இருவரால் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. அப்படி வாசித்து விட்டால் புதிய வரலாறே பிறக்கிறது” என்கிறார் ஜிப்ரில். இப்படியான மாறுப்பட்ட எழுச்சியை வாசகனுக்குள் கிளர்த்தக் கூடிய வலிமை இருப்பதாலயே படைப்பிலக்கியத்திற்குள் நுழையும் போதே ”படிப்பு” என்பது ”வாசிப்பு” என்ற நிலைக்கு வந்து விடுகிறது. இந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் முகமாகவே படைப்பிலக்கியம் சாராத நாளிதழ் போன்றவைகளை வாசித்துக் கொண்டிருப்பவரைப் பார்க்கும் போது அனிச்சையாகவே பேப்பர் வாசிக்கிறீர்களா? எனக் கேட்காமால் பேப்பர் படிக்கிறீர்களா? எனக் கேட்கிறோம்.
படிப்பைப் போல வாசிப்பை வலிந்த மூர்க்கத்தனமான நிகழ்வின் வழி நிகழ்த்த முடியாது. அது தன்னிச்சையாக நிகழ வேண்டிய விசயம். இந்த இயல்பைக் கட்டுடைக்க எத்தனிக்கும் போது வாசிப்பின் மீது ஒருவித சலிப்பும், அயர்ச்சியுமே மிஞ்சும். புறக்கணித்து விட்டுப் பயணிக்கவே மனம் எத்தனிக்கும். இதன் காரணமாகவே வாசிப்பிற்குச் சூழலும், மனநிலையும் முக்கியம் என அறிவுறுத்துகின்றனர். ஒர் ஆரம்ப கட்ட வாசிப்பாளன் எத்தகைய நூல்களை தன் முதல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளலாம் என ஆளுமைகள் ஆலோசனைகள் தருகின்றனர்.
மிகத் தீவிர, தேர்ந்த வாசிப்பனுவம் கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ”ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்” என்ற சொல்லை இன்று சர்வ சாதாரணமாகப் பலரும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படிச் சொல்லிக் கொள்வது ஒரு பேஷனாகி (FASHION) வருகிறது. உண்மையில் இப்படியான வாசிப்போடு பகிரப்படும் கருத்துகளும், எழுதப்படும் விமர்சனங்களும் சம்பந்தப்பட்ட படைப்பை இன்னும் சிலருக்கு அறிய வைக்க வேண்டுமானால் உதவுமே ஒழிய படைப்பின் மீது ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்க ஒருநாளும் உதவாது. நுனிப்புல் மேய்ந்து செல்வதை வாசிப்பாகக் கொள்ளாமல் படைப்பை உள்வாங்கி அது தனக்குள் கிளர்த்தியதின் வழி ஏற்றும், முரண்பட்டும் நின்று அதன் பிறகு அந்தப் படைப்பு குறித்துப் பேசுபவனே நல்ல வாசிப்பாளனாகவும், அவன் மூலம் வரும் விமர்சனமே ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். இருக்க முடியும். அப்படியான வாசிப்பே நல்ல வாசிப்பனுபவத்தையும் அதன் ஊடாகப் புதிய தேடல்களையும் தரும். இவை எதையும் தராத ஒன்றைச் செய்து விட்டு வாசிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். இப்படி நினைப்பதும் முகநூலில் எழுதப்படும் தூள், சூப்பர், அற்புதம், அருமை, டக்கர் என்ற பின்னூட்டங்களும் ஏறக்குறைய ஒன்றே எனலாம்.
அச்சிடப்பட்ட எழுத்துக்களை அப்படியே மனதளவில் கடந்து செல்வதற்குப் பெயர் வாசிப்பல்ல. துரதிருஷ்டவசமாக அப்படிக் கடந்து போவதையே வாசிப்பு என நினைத்துக் கொண்டு அதையே செய்து கொண்டும் இருக்கின்றோம். அதனால் தான் அவ்வப்போது படைப்பிலக்கியங்களை வாசிக்கின்ற ஒருவனின் மனநிலையையும், பார்வைக் கோணங்களையும் நாள்தவறாது நாளிதழ்கள் வாசிக்கும் ஒருவனால் பெற முடிவதில்லை, வாசிப்பு நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள உதவுகிறது. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. அப்படி இட்டுச் செல்வதன் வழி நம்மை உடைத்து மறுகட்டுமானம் செய்கிறது. அவநம்பிக்கையோடு துவங்கும் நடையை நம்பிக்கையோடு கூடிய ஓட்டமாக மாற்றித் தருகிறது. அறுதியிட்ட கற்பனா சக்தியின் வழியாக இழந்த காலத்தை எதிர்காலத்தில் மீட்டெடுக்கச் செய்கிறது. இவையெல்லாம் வாசிப்பின் பலம். வாசிப்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதாலயே வாசிப்பு இயக்கங்களை அரசாங்கங்கள் ஊக்குவிக்கின்றன.
எழுத்துக்களின் வழியாக பின்னப்பட்டிருக்கும் நாம் அறிந்த – அறிந்திராத உலகத்திற்குள், மாந்தர்களுக்குள், வாழ்வியலுக்குள் நம்மை நுழைத்துக் கொள்ளும் வாசலாக இருக்கும் வாசிப்பை படிப்பின் வழியாக ஒருநாளும் பெற முடியாது. உணர்ந்தும், கலந்தும், காட்சிப்படுத்தியும், முரண்பட்டும், சிலாகித்தும் பயணிக்க வேண்டிய ஒரு வாசிப்பனுபவத்தை எழுத்துக்களுடன் நிகழ்த்தும் வெறும் உரையாடல்கள் வழியாகப் பெற முடியாது. வாசிப்பை அத்தனை எளிதான விசயமாக நினைத்துக் கொண்டதன் விளைவு வாசிப்பவர்களை விட எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி விட்டதைப் போல எழுத்தை விடவும் அதிக உழைப்பைக் கோருவது வாசிப்பு என்ற எதார்த்த நிலையால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.
வாசிப்பின் வழியாக மட்டுமே படைப்பாளியாக உருவாக முடியும் என்பதாலயே இளம் மற்றும் ஆரம்ப காலப் படைப்பாளிகளுக்குத் தரப்படும் பல அறிவுரைகளில் அச்சரம் பிசகாமல் ”நிறைய வாசியுங்கள்” என்ற அறிவுரை நிச்சயம் இருக்கும். சமீபத்தில் புதிய எழுத்தாளர்களுக்கென நடந்த பயிலரங்கில் நாவல் என்ற படைப்பிலக்கியத்தை வாசிப்பின் வழியாக அணுகக் கூடிய முறை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினேன். ”வாசிப்பதற்கு என்ன வழிமுறை வேண்டியிருக்கு”? என்ற தொனியிலேயே பலரும் எதிர் கேள்வியைக் கேட்டனர். ”புத்தகத்தைப் பிரித்து வாசிக்க வேண்டியது தானே” என்பதாகவே அவர்களின் பதில்கள் இருந்தது. உண்மையில் இது ஆரோக்கியமற்ற வாசிப்பின் அறிகுறி எனலாம். வெறுமனே நிறைய வாசியுங்கள் என்று சொல்வதை விடவும் எப்படி வாசிப்பின் வழியாக ஒரு படைப்பை அணுக வேண்டும்? என்று சொல்லித் தருவது முக்கியம். வாசிப்பின் வழி நாம் எதை எல்லாம் கண்டடைய முடியும்? எதையெல்லாம் கண்டடையத் தவறுகிறோம்? என்பதைச் சுட்டிக்காட்டி அதை எப்படி கைக் கொள்ளலாம் என்பதைக் கற்றுத் தரும் வழிமுறைகளின்றி வெறுமனே வாசித்தால் போதுமென்பது சிறந்த வாசிப்பாளனாய் ஆக்கிக் கொள்ள ஒரு நாளும் உதவாது.
இப்படித் தான் படிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல இப்படித் தான் வாசிக்க வேண்டும் என்று எந்த வரைமுறைகளையும் யாரும் எவருக்கும் சொல்ல முடியாது. அதை வாசகனின் மனநிலையே முடிவு செய்கிறது. ஆனால், வாசிப்பின் போது சில விசயங்களைக் கவனத்தில் கொள்ளச் செய்வதன் மூலமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தைப் பெற வைக்க முடியும். அப்படிப் பெறுவது என்பது
வாசிப்பிற்கு முந்தைய முன் முடிபுகள் ஏதுமின்றியும் -
வாசகனுக்காகப் படைப்பில் இட்டு நிரப்பத் தரப்பட்ட இடங்களை கண்டறிந்து அதில் நிரப்பிக் கொண்டும் –
வாசிப்பிற்காகக் கூடுதல் உழைப்பைப் படைப்பு கோரும் பட்சத்தில் அதற்கான நேரத்தைக் கொடுத்தும் –
வாசிப்பின் வழியாக ஊடேறும் நிகழ்வுகளின், சம்பவங்களின் தாக்கங்கள் மீது அறுதியிட்ட வகையில் இல்லாமல் ஒட்டு மொத்த பார்வையைச் செலுத்தியும் - 
வாசித்துச் செல்லும் போதே முரண்பட்டு நிற்காமல் வாசிப்பிற்குப் பிந்தைய மனநிலையில் அந்த முரண்பாடுகளின் மீது உள்முகமாக மீள் உரையாடல்களை நிகழ்த்தியும் –
ஒப்பீட்டளவில் இல்லாமல் தனித்தன்மை உணர்ந்தும், ஈடுபாட்டோடும் -
வாசிப்பை முன் நகர்த்திச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆரம்பக்கட்டத்தில் இது கொஞ்சம் சிக்கலான விசயமாகத் தெரியலாம். மனம் உடன்படாமல் முரண்டு பிடிக்கலாம். ஆனால் அதைக் கைவரப் பெற்று விட்டால் அதன் பின் வாசிப்பு உங்களை தனக்குள் இருத்தி வைத்துக் கொள்ள ஆரம்பித்து விடும். இந்த நிலையில் தான் தன்னுடைய கற்றலின் வழியாகவும், வாசிப்பனுபவத்தின் துணையோடும் வாசிப்பாளனாக இருப்பவன் எழுத்தாளன் என்ற புதியதொரு பரிணாமத்தை எடுக்க ஆரம்பிக்கிறான். அதன் தொடர்ச்சியாக வாசிப்பு – எழுத்து என்ற சக்கரம் அவனுக்குள் நிகழ்த்தும் சுழற்சியில் தனக்குரிய இடத்தைத் தானே கண்டடைந்தும் கொள்கிறான்.
வாசிப்பின் சுவை அறியாத, வாசிப்பனுபவம் இல்லாத ஒருவரால் ஒருநாளும் சுமாரான படைப்பாளியாகக் கூட உருவாக முடியாது என்ற எதார்த்த நிலையையும் –
கற்றுக் கொடுத்தலின் மூலம் படைப்பாளிகள் உருவாக்கப்படுவதில்லை மாறாக, அவர்கள் சரியான நிலைகளில் இருந்து பயணப்பட வைக்கப்படுகிறார்கள் என்ற நிஜத்தையும் - உணர்ந்து பயணிக்கும் போது மட்டுமே சராசரி வாசகன், தேர்ந்த வாசிப்பாளனாகவும், தேர்ந்த வாசிப்பாளன் ஒரு படைப்பாளியாகவும் பரிணாமம் செய்து கொள்வது இயல்பாக நடக்கும்.. இயல்புக்கு மீறிய எதுவுமே வளர்ச்சிக்குக் கேடு என்பது விதி. அந்த விதி படைப்பிலக்கியத்திற்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன்.
நன்றி : தி சிராங்கூன் டைம்ஸ்

No automatic alt text available.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடிசனுக்கு அவர் தாய் கற்றுக் கொடுத்த அந்த ஒரு குணம்!

இரவை ஒளியால் நிரப்பிய அற்புத மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிவியல் மீதான அதீத ஆர்வமும் விடா முயற்சியுமே உலகமே கொண்டாடும் மனிதராக அவரை மாற்றியது. அவரின் வாழ்க்கையை பலரும் முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்துவருகின்றனர். அப்படியான அவரின் வாழ்வில் நிகழ்ந்த ஆச்சர்யமான சம்பவம் ஒன்று தெரியுமா?

எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாளில், அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார் ஆசிரியர். அந்தக் கடிதத்தை அம்மா மட்டுமே படிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் அவரின் ஆசிரியர். அதன்படி அம்மாவிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் படித்த எடிசனின் அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என எடிசன் கேட்டபோது, "உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவரின் அறிவுக்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை. அதனால் எடிசனை வீட்டிலிருந்தே படிக்க வையுங்கள்" என்று அம்மா உரக்க படித்ததைக் கேட்டு எடிசன் உற்சாகமாக சத்தமிட்டார்.

ஆண்டுகள் படு வேகமாக கடந்தன. தாமஸ் ஆல்வா எடிசன் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்து வந்தார். பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருநாள் எடிசனின் அம்மாவும் இறந்துபோனார். அதன்பின் சில நாட்கள் கழித்து எடிசன் வேறு ஏதோ தேடுகையில், சின்ன வயதில் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது. தன்னைப் பற்றி உயர்வாக எழுதிய கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படித்தார். ஆனால் கடிதத்தில் இருந்த வரிகள் அம்மா வாசித்தவை அல்ல.

"உங்களின் மகன் மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் படிக்க தொடர அனுமதிக்க முடியாது"

இந்தக் கடிதத்தைப் படித்ததும் எடிசன் உறைந்துவிட்டார். இந்த விஷயம் தனது சின்ன வயதில் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு மனதளவில் முடங்கிபோயிருப்போம் என்பதை ஒரு நிமிடம் நினைத்து தன்னை உதறிக்கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதே பெரிய விஷயமாக இருந்தது. தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த அம்மாவை மனதார நன்றியோடு நினைத்துக்கொண்டார்.

ஒருவர் தன்னைப் பற்றிய விஷயங்கள் முழுவதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதே தனது பழக்க வழக்கங்களில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வரமுடியும் என்பார்கள். ஆனால் ஒருவருக்கு தன்னைப் பற்றிய சில விஷயங்கள் தெரியகூடாதவை என்பதும் இருக்கிறது. அதுவும் அவரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதைத்தான் எடிசனுக்கு அவரது தாய் மறைமுகமாக கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தை எடிசன் படிக்கவே கூடாது என அவரின் தாய் நினைத்திருந்தால் அதை தீயில் எரித்திருப்பார். ஆனால் அதை பின்வரும் காலத்தில் எடிசன் படிப்பது சரிதான் என நினைத்ததாலே அதைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கக்கூடும். குழந்தை வளர்ப்பின் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனத்துடன் நகர்த்த வேண்டும் என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.

குழந்தைகள் வளர வளர பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றனர். அவற்றைக்கொண்டு கூடுதலாக யோசிக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது எதிர்கொள்பவற்றை புதிய கோணத்தில் பார்க்கின்றனர். அதேபோல பழைய விஷயங்களை முதிர்ச்சியோடு அசைப்போடுகின்றனர். அதனால் பெற்றோர் தங்கள் பொறுப்புகளை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியிருக்கிறது.

எடிசன் தன் அம்மாவை நெகிழ்ச்சியோடு நினைவுக்கூர்வதுபோல தங்கள் பிள்ளைகளும் நினைவு கொள்ளவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக இருக்கும்.

- வி.எஸ்.சரவணன்.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும் 
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு 
துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Antibiotic awareness week nov 13-19.

வணக்கம் யாயினி,

உங்கள் பதிவுகளிலிருந்து பயனுள்ள பல்வேறு வகையான அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் வாசிக்கவில்லை, ஆனால் வாசிக்க முயற்சி செய்கிறேன். தொடர்ந்து நீங்கள் வாசிக்கும் நல்ல விடயங்களை எங்களுடன் பகிந்து கொள்ளுங்கள். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக சகிப்புத்தன்மைதினம் #Internationaldayfortolerance

 

உலகில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும் வியந்து பாராட்டி ஏற்றுக்கொள்வதையே சகிப்புத்தன்மை என்கிறோம். இதைப் பற்றி கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

நோக்கம்

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் நவம்பர் 16 அன்று யுனெஸ்கோ நிறுவனத்தால் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் யுனெஸ்கோ நிறுவனத்தின் 50-ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம் வருங்காலத் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு அகில உலக அளவில் இந்நாள் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் 1995-ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படியே ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது வெறும் நன்னெறி, கோட்பாடு மட்டும் அல்ல. இது சட்ட திட்டங்களாக அரசியல் கோட்பாடுகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினத்தில் மக்களிடையே சகிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் மற்றவரின் அடிப்படை உரிமை, கருத்துகள், சுதந்திரம், கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இவ்வகையான சகிப்புத்தன்மை ஏற்பட தனிமனிதன் மட்டுமின்றி ஒவ்வொரு அரசின், அரசியல் தீர்வும் முக்கியம். இதற்கு நமது தேசப்பிதாவான மகாத்மா காந்தியை உதாரணமாகச் சொல்லலாம்.

மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாவது நம்மிடையே இருக்க வேண்டும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

Image may contain: one or more people and text

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.