Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காகம் கரைவது ஏன்? 'கா கா' என,

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.
 
'கா கா' என, காகம் கரைவது ஏன்?

ராமன் ,வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான். உணவு தேடி லட்சுமணன் செ ன்றிருந்தான். அப்போது, அங்கு இந்திரனின் மகன் ஜயந்தன் வந்தான்.  சீதையின் அழகைக் கண்டு மயங்கிய ஜயந்தன், ராமன் தூங்கும் தைரியத்தில்,, காக்கை உருவம் கொண்டு, சீதையின் மார்பைக் கொத்தலானான்.

சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல்பட்டது. ராமன் விழித்தான், சீதா  தேவியின் மார்பில் ரத்தம் சிந்துவதை பார்த்து நடந்ததை அறிந்தான். 
ஒரு தர்ப்பை புல்லை எடுத்து, அதில், பிரம்மாஸ்திர மந்திரத்தை பிரயோகித், காகத்தை   நோக்கி ஏவினான்,
அந்த தர்ப்பை, நெருப்பை கக்கியபடி, காகம் வடிவில் இருந்த ஜயந்தனைத் துரத்தியது.

உயிருக்குப்பயந்த ஜயந்தன், "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொ ண்டேசிவன், பிரம்மா, இந்திரன் முதலியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபயம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காகம் , "இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்' என ஜயந்தன் முடிவு செய்தான்."அபயம், அபயம்' என்று ராமனிடமே ஓடினான். ராமன் திருவடிகளில் விழுந்தான்.

சீதையை அபகரித்த ராவணனுக்கே அடைக்கலம் தருவேன் என்ற அருட்கடல், இவனை கை விடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு ராமனிடம் பரிந்துரை செய்தாள்.

ஆயினும் இராமபாணம் வீ ணாகாதே! தவறு செய்தவர்களை ராமன் பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே! அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராமனிடம் திரும்பியது.  

உயிர் தப்பிய ஜயந்தன் காக வடிவம் நீங்கி, இராமனைப் பலவாறு துதி செய்துவிட்டுத் தேவலோகம் சென்றான்.அன்று முதல் தான், காகங்களுக்கெல்லா ம், இரு கண்ணுக்கு ஒரே கண்மணி ஆனது. காகங்களின், இரண்டு கண்களும், ஒரே திசையில் பார்க்கப் பயன்படாது. ஏதாவது ஒரு கண் தான் பார்க்கப் பயன்படும்.

ஜயந்தன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன் தங்கள் இனைத்தையே அழித்து விடாமல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும், பிராட்டியையும் வாழ்த்தின.

பெண்பாலரை "யார்' என்று கேட்பதற்கு வடமொழியில் "கா' என்று கூறுவதுண்டு. ஆண் பாலரை "யார்' என்று கேட்பதற்கு, வடமொழியி ல் "க' என்று கூறுவர்.
தங்களுக்கு அருள்செய்த பிராட்டி யார்?, அருள்பாலித்த தெய்வம் யார் என,  காகங்கள் கேட்பதால் தான்,  கா க என, கத்துகின்றன. காகங்கள் கரையும்போது நீங்கள் நன்றாக கவனித்தால் அவை கா க, கா க என்றுதான் கரையும். காகங்களின் கரைத்தலுக்கு இப்படியும் ஓர் புராண கதை உள்ளது. 

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

பகிர்வுக்கு மிக்க நன்றி தம்பி.💐

  • கருத்துக்கள உறவுகள்
 
′′ கையா சமஸ்கிருதம் ", கேப்ரியல்லா பர்னல் இங்கிலாந்தில் ஒரு பாடகர் மற்றும் சமஸ்கிருத ஆசிரியர். 5. வயதில் சமஸ்கிருதம் கற்க ஆரம்பித்தாள். பிறகு 8. வயதில் தத்துவம் கற்க ஆரம்பித்தாள்.
′′ சமஸ்கிருதம் கற்பது எனக்கு வேத ஓதும் முறையை பற்றிய ஆழமான புரிதலை அளிக்கிறது, மற்றும் தத்துவ அமைப்பைக் கூட ′′ என்று அவள் சொல்கிறாள். இந்தியாவில் சமஸ்கிருத மற்றும் துருபத் இசையைக் கற்றுக்கொண்டாள். துருபத் என்பது பழங்கால பாடல்களின் கலை.
அவள் மேலும் சொல்கிறாள், ′′ யூகேவில் சமஸ்கிருதத்திற்கு பெரிய பசி இருக்கிறது. நிறைய பேர் அதை படிக்க விரும்புகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்தியா காவலில் வைத்திருக்கும் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் பலர் தங்கள் வாழ்வில் புகுத்த விரும்புகின்றனர்.
எழுத்துக்களைப் பயிற்சி செய்கிறார்கள், ஸ்லோகாக்களை ஒலிக்கிறார்கள், தேவநகரி ஸ்கிரிப்ட் எழுதக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆக, ஆம், பிரிட்டனில் இந்தியாவில் உள்ள கலாச்சாரங்கள் பெரிதும் பிரபலமாகிவிட்டன."
Gaiea Sanskrit ஒரு பிரிட்டிஷ் பாடகியும் சமஸ்கிருத ஆசிரியையும் ஆவார். கபிரியேலா பர்னல் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் தனது ஐந்தாவது வயதில் சமஸ்கிருத மொழியைக் கற்கத் தொடங்கினார். இந்தியாவுக்கு வந்து சமஸ்கிருதமும் சங்கீதமும் பயின்றார். துருபத் என்பது பாடல்களைப் பாடும் ஒரு பழமையான பாணி. அந்த முறையை இவர் கற்றுக்கொண்டார். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் பாடி வெளியிட்டிருக்கிறார்.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள இங்கிலாந்தில் பெருமளவு மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் காப்பாற்றி வந்திருக்கும் வழக்கங்களையும் பண்பாட்டையும் தம்முடைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தேவநாகரி அரிச்சுவடி எழுதுகிறார்கள், ஸ்லோகங்களைச் சொல்கிறார்கள். ஆம், இங்கிலாந்தில் இந்தியக் கலாசாரம் பெருமளவு பிரபலமாகவுள்ளது." என்று அவர் சொல்கிறார்,
இவர் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமிடையே ஒரு "வாழும் பாலம்" ஆகத் திகழ்கின்றார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வெளிப்புறம் 2021 பொங்கல் இரவில் ......
❤
படம்: Kumanan Kana
May be an image of outdoors and temple
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

spacer.png

பகிர்வுக்கு நன்றி 👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of animal and outdoors
 
2h  · 
26.05.2021 News Update
யானைத் தாக்குதல்: கிராமசேவகர்
அவரது மனைவியும் உயிரிழப்பு!
பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது துணைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர்
இந்தத் துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றது.
சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது-50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும் அவரது மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கிராம அலுவலகரின் மனைவியின் இறப்பு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

"கலைவாணர்"என்.எஸ்.கிருஷ்ணன்,சி.எஸ்.பாண்டியன்,டி.ஏ.மதுரம் பங்குபெறும் இந்த நகைச்சுவைக் காட்சி சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலியின்,கொழும்பு சர்வதேச வானொலியில் பதிவு செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கும் அழகி என்பது ஒரு அழகிய இளவரசி மற்றும் ஒரு இளவரசன் பற்றிய செவ்வியல் தேவதைக் கதை ஆகும். 1697 ஆம் ஆண்டில் சார்லஸ் பெரால்ட் வெளியிட்ட "மதர் கூஸ் கதைகள்" தொகுப்பில் இது முதலாவது கதையாகும்.
 
தூங்கும் அழகி - Sleeping Beauty  Prince_Florimund_finds_the_Sleeping_Beauty_-_Project_Gutenberg_etext_19993

இந்தோனேசியாவில் பஞ்சமாசின் நகரில் உள்ள Echa,என்ற பெண் 2017 இல் 13 நாட்கள் தொடர் தூக்கத்திலும் ,ஒவ்வொரு தடவையும் குறைவாக/கூடுதலாகவும் தூங்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.அவரை சோதனை செய்த Ansari Saleh hospital ,அவருக்கு hypersomnia என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
தூங்கும் அழகி - Sleeping Beauty  Echa_2

(Tribunn-இந்தொனேசியா)

கொலொம்பியா,அக்காசியஸ் ஐ சேர்ந்த 17 வயதான Sharik Tovar, என்ற பெண் 48 நாட்கள் தொடர் தூக்கத்திலும் சென்ற ஆண்டு 2 மாதங்கள் தூக்கத்தில் இருந்த இவருக்கு 2 வயதில் இருந்தே Kleine-Levin syndrome என்ற நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.இவர்களுக்கு தூக்கத்திலேயே திரவ உணவை கொடுப்பதாக தாயார் கூறுகிறார்.  (Caracol News)
 
தூங்கும் அழகி - Sleeping Beauty  Tidur%2B2%2Bbulan

தூங்கும் அழகி - Sleeping Beauty  0_PAY-CEN-SleepingDisease-04

இப்படியான தொடர் தூக்க நோய் உள்ளவர்கள் 40 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த அழகன் கும்பகர்னன் ஆறு மாதம் தூக்கத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
 
தூங்கும் அழகி - Sleeping Beauty  Large_Kumbhakarna_wake_up_from_sleep-23046
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய வெள்ளி காலை வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sculpture, temple, outdoors, monument and text that says 'யாழி... யாளி அறிந்து கொள்ளுங்கள் தம்பி தமிழ்.'
 
*யாழி(யாளி)*
***************************
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?.
யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது.
அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.....
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்படியானால் இவை போருக்கு பயன் படுத்தப் பட்டிருக்குமா?..
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம்.........
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது..
உருட்டும் கண்களோடும், கோரப் பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்......
இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.....
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்..........
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.........
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? .......
யாழி உருவம் எங்கெல்லாம் பயன் படுத்தப் படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா?.........
யாழியைப் பற்றி புராணங்கள் ...என்ன...? சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை !.... அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? .....
யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? .......
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப் போகிறார்?........
எதற்குமே பதில் இல்லை !!
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி........
அவை போற்றப் பட வேண்டும்.......
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு
 
உலகின் மிகப்பெரிய விலங்கு: யாளி

main-qimg-bec27fe003907db0274dac3c4269a5b1%2B-%2BCopy.png
   நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட மிக பெரிய  விலங்கு நமது குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில் இருந்த உலகிலே   மிக பெரிய விலங்குதான் யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில் பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம்.
maxresdefault%2B-%2BCopy.jpg
    யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில்  பரவலாக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

35999069_235295270605292_4533341189268570112_n%2B-%2BCopy.jpg
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
·         சிம்ம யாளி

·         மகர யாளி

·         யானை யாளி

    சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
 
    ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
   யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
 
   நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய  உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
 
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். 
Yali-mandam.jpg
        ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும் 
images%2B%25282%2529%2B-%2BCopy.jpg
      யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
WlLU_vj0_400x400.jpg
என்னைப்பொருத்தவரை.... 
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி
அவை போற்றப்பட வேண்டும்.
Yale_salient.gif

தமிழ் வேந்தன்

தமிழ் வேந்தன்வேந்தன்.

மிகவும் நன்றி தம்பி.💐

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத் தமிழ்!
 
187827055_4034938509927544_2304010145652
 
யாழ்ப்பாணத்துக்குச் சென்று வந்த எங்கள் தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் கூறினார் . அவர் பிரயாணம் செய்த ரயில் வண்டியில் எதிர் இருக்கை மில் அமர்ந்திருந்த ஒரு யாழ்ப் பாணத்துத் தாய் தன் மடியில் இருந்த சிறு குழந்தைக்கு ஜன்னல் ஊடாக நிலவைக் காட்டி என்ன வடிவான நிலவு அங்கே பார் என்று சொன்னா ளாம் . அவர் அதிர்ந்து போனா ராம் . அழகு என்பதற்கு சரியான தமிழ் வடிவு என்பதே . ஏனெ மன்றால் வடிவம் ஒன்றில் இருந்து தோன்றுவதால் அது வடிவு . அது பண்புப் பெயர் . அந்த உயர் தமிழைத் தாய் பயன்படுத்திய போது மடியில் இருந்த குழந்தை விளங்கிக் கொண்டு நிலவைப் பார்க்கின்றது . நான் வியப்போடு அதைப் பார்த்தேன் என்று என்னிடம் சொன்னார் . உடனே நான் அவருக்குச் சொன்னேன் . அவள் தமிழிச்சி . அவர்கள் தமிழர்கள் . அவர்களின் இலக்கண நூலாசுக் கற்பிற்கப்படுவது தொல்காப்பிய வழி வந்த இலக்கணம் . ஆதனால் அந்த மக்கள் உயர்வான தமிழைப் பேசுகின்றார் கள் என்று சொன்னேன் . இது ஒரு உரையாடலில் தமிழ் அறிஞர் மு.வரதராஜன் அவர்கள் சொன்னது .
நான் ஒரு முறை சமயப் பிரசங்கம் செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தேன் .
அந்த நேரம் பார்த்து என்னை அழைத்தவர் வீட்டு முதியவர் ஒருவர் இயற்கை எய்தி விட்டார் . அதனால் காலையிலே அவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துக் கொண்டு தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன் . அப்போது ஒரு பணியாள் வந்து சுவாமி தோஞ்சாச்சா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று கேட்டார் . எனக்கு விளங்கவில்லை . திரும்பத் திரும்ப அவர் தோஞ்சாச்சா தோஞ்சாச்சா என்று கேட்டார் . எனக்கு ஒன்றுமே புரிய வில்லை . அந்தப் பணியாள் சென்று ஒரு படித்த பெண்மணியை அழைத்து வந்தார் . அந்த அம்மா என்னிடம் சுவாமி துக்க வீட்டுக்கு போய் வந்தீர்களே தோய்ந்து விட்டீர்களா என்று இவன் கேட்கின்றான் . நீங்கள் ஸ்நானம் பண்ணி விட்டீர் களா என்று கேட்டார் . எனக்கு வெட்கமாகப் போய் விட்டது . தோய்தல் என்பதே நீராடுவதற்கு சரியான தமிழ் வார்த்தை . தோய்தல் என்றால் ஒன்றிலே முழுமையாக அமிழ்த்து போதல் என்று பொருள் . அந்தத் தொல்காப்பியத் தமிழை ஒரு வேலைக்காரனே சாதாரணமாகப் பேசுகின்றான் யாழ்ப்பாணத்தில் , தூய தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் அல்ல . அது யாழ்ப்பாண மக்களாலேயே பேசப்படுகின்றது . அங்கு தான் அது வாழ்கின்றது .
 
( திருமுருக கிருபானந்தவாரியார் )
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் தென்பகுதியை ஆக்கிரமித்துவரும் சீனா அதன் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் பலகைகளில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழை நீக்கி சீன மொழியை புகுத்தி வருகின்றது.
இந்த நிலையில் சீனாவின் பிரசன்னத்தால் சினமடைந்த இந்தியா யாழில் உள்ள தனது துணைத் தூதரகத்தின் பெயர்பலகையில் இருந்து இலங்கையின் மற்றுமொரு உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தை நீக்கி தனது மொழியான இந்தியை புகுத்தியுள்ளது.
இது தற்செயலாள மேற்கொள்ளப்பட்டதா அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை காப்பாற்ற இந்தியா முயன்று வருகின்றதா என கொழும்பு வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன
May be an image of text that says 'Home செய்திகள் செய்திகள் பெயர் பலகையில் சிங்களத்தை நீக்கியது இந்தியா By ஆர்த்தி May 30, 2021 का प्रधान कोंसलावास LATE GENERAL OF INDIA துணைத் தாதரகம்'
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரான்ஸில் அன்னையர் தினம்.

Fête des Mères..பிழையாக இருந்தால் திட்ட கூடாது.

😄.🌷🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

இன்று பிரான்ஸில் அன்னையர் தினம்.

Fête des Mères..பிழையாக இருந்தால் திட்ட கூடாது.

😄.🌷🙏

நீங்கள் யாழ் இணையத்தின்  மூலம் பிரெஞ்சு மொழி கற்கும் சிறந்த மாணவி.....நீங்கள் எப்படி பிழையாக எழுத முடியும்......உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகின்றேன்......!  💐  👏

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%

காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்…..
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்……..

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா என்ற அவதாரம்

appa+maan.jpg
 
    சந்த காலத்து வாசல் முனையில் என்னை விட்டு விட்டு கோடைகாலத்திலேயே தங்கி விட்ட என் தந்தையே! கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவனை போல நீ இல்லாத நாளில் உன் அருமையை நினைத்து ஏங்குகிறேன். அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்து விழுந்த என்னை தோள்மீது சுமந்தாயே! உன் சுருள்முடியை பற்றி கொண்டு என் பிஞ்சு கரத்தால் உன் முகத்தில் அறைந்த போதும் என் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தாயே! உன் பரந்த மார்பின் மீது ஏறி நின்று சங்கு சக்கர சாமி என்று குதித்து நான் ஆடிய போதும் என் குதிகால்களுக்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாயே! அத்தனையையும் நான் மறந்து போனது ஏன்?

வயல்காட்டு வரப்பின் மீது உன் விரல்பிடித்து நடப்பேன் இளகிய மண்ணிற்குள் என் இளம்பாதம் பதிந்து சேற்றை வாரி பூசியபோதும் உன் தோள்மீது என்னை உட்காரவைத்து என் கால் சேற்றை உன் கன்னத்தில் பூசிகொள்வாய் பறக்கும் தும்பியை பிடித்து வால்நுனியில் நூல்கட்டி பறக்க விட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதற்கு நெருஞ்சி முட்கள் காலில் தைத்த போதும் ஒற்றை கையால் முள்ளை பிடுங்கி எரிந்து விட்டு தும்பி பிடிக்க தாவி நடப்பாய் கிடைத்த தும்பியையும் விட்டு விட்டு அடுத்த தும்பி வேண்டுமென்று அடம்பிடித்து நான் அழுதாலும் அதட்டலாக எதுவும் பேசாமல் என் ஆசையை தீர்க்க எத்தனிப்பாய்.

வெள்ளிகிழமை சந்தைக்கு நீ போய்விட்டு நடுசாமத்தில் வந்தாலும் தூங்கும் என்னை எழுப்பி உட்கார வைத்து இனிப்பு மிட்டாயை வாயில் திணிப்பாய் ஊரெல்லாம் சுற்றி ஓடி ஓய்ந்து போய் வீட்டுக்கு வந்து உண்ணாமல் குடிக்காமல் உறங்கி நான் போனால் அம்மா உருட்டி தரும் சாத உருண்டையை மடியில் என்னை சாத்தி கொண்டு கைநிறைய நீ எனக்கு ஊட்டி விடுவாய். உறக்கத்தில் நான் உன் வேஷ்டியில் சிறு நீர் கழித்தால் கூட ஆடை மாற்றாமல் என்னை சுத்தம் செய்வாய் சித்திரை மாதத்து கொடும் வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் நான் நெளிந்து நெளிந்து படுத்தால் விடியும் வரைக்கும் விழித்திருந்து விசிறியால் காற்று வீசுவாய் ரோமங்கள் அடர்ந்த உன் மார்பில் என்னை சாய்த்து கொண்டு தட்டி கொடுப்பாய்.

மணலில் விரல்பிடித்து அச்சரம் எழுத துவங்கினால் என் விரல் கன்றி போய்விடுமென்று தவிட்டின் மீது எனக்கு எழுத சொல்லி கொடுத்தாய் பள்ளிக்கூடம் சென்று கற்க முடியாத பாடங்களை கிணற்று மேட்டில் என்னை உட்க்கார வைத்து தினசரி போதிப்பாய் ராபர்ட் கிளைவையும், கஜினி முகமதுவையும் மட்டுமே சொல்லி தந்த பாடபுத்தகங்களை தாண்டி விக்கிரமாதித்தனையும் வீர சிவாஜியையும் நீயே எனக்கு அறிமுகம் செய்தாய் வகுத்தல் கூட்டல் கணக்குகளை தாண்டி வாழ்க்கை கணக்கை வழிபிரளாமல் வகுத்துக்கொள்ள வழியும் சொன்னாய்.

கோவிலின் உள்ளே கொலுவிருக்கும் விக்கிரகங்கள் வழிபடுவதற்கு மட்டுமல்ல வடித்த சிற்பியின் கலைத்திறமையை ரசிப்பதற்கும் என்று யாருமே திறக்காத மூன்றாவது கண்ணை எனக்கு நீ திறந்து விட்டாய் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று ஆன்றோர்கள் பாதையையும் கலித்தொகை தொடங்கி அகநானூறு வரையிலும் இலக்கிய சாரளத்தையும் எனக்கு காட்டினாய் எழுத்து கூட்டி வாசிக்க தெரியாத என்னை கவிதைகள் படைக்க ஆர்வமூட்டினாய் நான் எழுதி கொடுத்த வார்த்தை கிறுக்கல்களை முதல்முதலாக படித்து பேஷ் பேஷ் என தட்டி கொடுத்தாய். திக்கி திணறி பேசவே தயங்கும் என்னை மேடையில் ஏற்றி பேசவைத்து கைகளை தட்டினாய்

மருத்துவன் காட்டிய பத்திய உணவை தினமும் தின்று நாக்கு செத்து போன போது உச்சி வெயிலில் தோள்களில் என்னை சுமந்து கொண்டு அறுசுவை உணவை நான் அருந்தி பார்க்க பர்லாங்கு தூரம் நடந்து செல்வாய். எனது கற்பனை சிறகுகள் விரிந்து பறக்க பலவண்ண ஓவியங்களையும் உருவ பொம்மைகளையும் பரிசாக கொடுப்ப்பாய். ஒரு சிற்பி எப்படி சிலையை செதுக்குவானோ அப்படி என்னை செதுக்கி பார்த்த என் ஞான தந்தையே! எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்ற நான் உனக்கு தந்தது என்ன? உச்சி கால வேளையிலும் நிலா உலா வரும் பொழுதிலும் எண்ணி பார்க்கிறேன் எண்ணி கொண்டே இருக்கிறேன். உனக்கு தந்தது என்னவென்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மரங்கள் வந்து பாராட்டும் என்றா மேகம் மழையை தருகிறது? வண்டுகள் வந்து சாமரம் வீசும் என்றா மலர்கள் தேனை தருகிறது?. மீன்கள் கூடி கால்பிடித்து விடும் என்றா நதி நீரை தருகிறது? சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவது பூமியின் பாராட்டு வார்தைகளுக்காகவா? நீ பாலை வனத்தில் மழையை தந்த மேகம்!. மதுவை பிரதிபலன் பார்க்காமல் வாரி வழங்கும் மலர்! தாகம் தனிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த நதி! உயிரை வாழவைக்கும் ஆதவ மதி!.

ஏனோ தெரியவில்லை காலகாலமாக அம்மாவை மட்டுமே புகழ்கின்ற நாக்குகள் தகப்பனின் தியாகத்தை கண்டுகொள்வதில்லை தனது பிள்ளைகளின் உடல் நோகாமல் பாதுகாக்கும் பஞ்சு மெத்தைகளாக அப்பாமார்கள் அனைவரும் கட்டிலில் மீது அசையாமல் கிடக்கிறார்கள். சுடும் மணலில் தனது கால்களை புதைத்து உடலில் நிழலை பிள்ளைகளுக்கு கொடுத்து கால வெயிலில் பொசுங்கி கிடக்கிறார்கள். அம்மா கொடுத்த ரத்தம் வளர்ந்து செழிப்பதற்கு அப்பா கொடுக்கும் தழை உரம் ஏனோ அங்கிகாரம் இல்லாமல் மூலையில் கிடைக்கிறது.

அறிஞர்களின் அறிவும் தியாகிகளின் தியாகமும் அவர்கள் காலத்திற்கு பிறகு தான் கவனத்திற்கு வருமாம் அதே போலவே என் தந்தையே! நீ இல்லாத போது நீ கொடுத்த நிழலின் அருமை தெரிகிறது.நீ ஓடிய உழைப்பின் பெருமை புரிகிறது. நீ வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய துண்டு துணியை கூட கொடுக்காத என்னை வாழ்த்தி நின்றாயே அந்த அர்ப்பணமே நீயே இறைவன் என்று எனக்கு அடையாளம் காட்டுகிறது. என்ன செய்வது கடவுளை நாங்கள் சிலைகளாகவே பார்க்கிறோம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தாலியின் சரித்திரம்

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாகத் தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.

'புலிப்பல் கோத்த புலம்பி மணித்தாலி' (அக நானூறு)
'புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார்' (புற நானூறு)
'இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவுகோத்து' (திருத்தொண்டர் புராணம்)

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் தாலிகளில் சிறு தாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.

ஒரு சாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் 'காரைக்கயிறு' எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோயில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரிப் பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.

இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 1968 இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுய மரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.

கடைசியாக ஒரு செய்தி - சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல. பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கூட பேசப்படவே இல்லை.தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்று கொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

ஒரு நூற்றாண்டு முன் வரை சில சாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாத போது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வலதடியைக் (வளரியை) கொண்டு போய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது.

மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்க விடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.

நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக் காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954 இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளந்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மட்டுமே.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.

தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ் வழக்கம் மிக அண்மைக்காலம் வரை கூட நீடித்தது. இவ்வாறு ஐந்து பொருள்களை பிள்ளைகளின் அரை ஞான் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் ஐம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக் காலம் வரையிலும் கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.

நந்தனின் சேரிக் குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு உள்ளது.

எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

6c70e5fda0ef61c37695839eb286877e.jpg

பலாக்கொட்டை சுட்டுச் சாப்பிட்ட சுவை....🕺

பலாக்கொட்டை சுட்டு சாப்பிடுவது .... அவித்து தேங்காய்பூசர்க்கரை சிறிது மிளகு சேர்த்ததுவையல் .....ஒவ்வொன்றும் தனிச்ச்சுவையே மாலைநேரம் தேநீருடன் சுவைத்தல் தனியின்பமே .

Edited by அன்புத்தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.