Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.
அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்... வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...
அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....
அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்......
  • 2 weeks later...
  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார்.
வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான்.
அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது. அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார்
. அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை இறப்பின் போதும்,இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.
*அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச்சென்றான், சந்தித்தான், விவரம் சொன்னான்*
. அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன். அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை
. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார். இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரல. அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்னு சொன்னார். அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம்னு பட்டது. அதனால நானும் அதை விட்டுட்டேன்" என்றார்
. எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும், அதைத் திரும்பக் கொடுக்குறது தான், அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான்
, நண்பர் நெகிழ்ந்தார். பண்பும் செயலும்தான் ஒருவனை உயர்த்தும். மதமோ சாதியோ,வசதியோ அல்ல. இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இதுதான் வழக்கு மொழியில் சொல்வார்கள், நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை; கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று. ஒருவன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் உருவாகச் சூழ்நிலைதான் பெரும்பங்கு வகிக்கிறது.
தப்புச் செய்யச் சூழல் அமையாதவரை எந்த மனிதனும் நல்லவந்தான் என ஒரு வாக்கியம் உண்டு. சேற்றிலும், செந்தாமரையாக வளர்வதே முக்கியம். தப்பு செய்ய வாய்ப்புக் கிடைத்தும், வாய்மையோடும், சூழல் அமைந்தும் நேர்மையோடும் வாழ முயல்பவனே நல்லவன். மனிதகுலத்தில் நல்லவர்கள் என்ற இனம் அழிந்து வரும் இனமாக அடையாளம் காட்டப் படுவது வேதனையளிக்கிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் ஒரு கிலோ கோதுமை மா 185 ருபாவாக அதிகரிப்பு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசிக்காக கெனரி ருபன் லண்டனிலிருந்து...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தின் வன்னியில், வள்ளுவர்புரம் ஜீவஜோதி முன்பள்ளின் 'சிறுவர் சந்தை 2022'. 11.03.2022 வெள்ளிக்கிழமை.
275380050_3061251697421645_7803230525993
 
 
275175271_3061251760754972_6952361168836
 
 
275496473_3061251804088301_2147791082436
 
 
275592336_3061251854088296_8196317671978
 
 
275386922_3061252014088280_3292660848838
 
படங்கள்:யோ.புரட்சி
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் சந்தையைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிறுவர்களை உழைப்பை நோக்கியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் பழக்கிக் கொண்டு வரவேணும்.அதுதான் நல்ல கல்வி .......இது நன்றாக இருக்கு.......!   👏

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
புன்னகை
நீ
ஈரிதழ் சேர்ந்தெழுதும்
ஒற்றைசொற் கவிதையோ
உதட்டில் மலர்ந்து
உள்ளத்துட்புகும் உவகைப்பூவோ
இதயத்தில் உருவாகி
அதரத்தில் சுரக்கும் அதராமிருதமோ
உறவுகளை இணைக்கும்
முதற்கருவியோ
சினத்தை அடக்கும்
சின்ன அணையோ
வலிகளை மூடி மறைக்கும்
எளிய கவசமோ
வலிகளை மாற்றும் ‌
அற்புத நிவாரணியோ
உன்போல் அழகாய்
எதுவுமுண்டோ உலகில்
புன்னகையே நீ
என்றும் என்னோடு தங்கிவிடு
- நக்கீரன் மகள்
 
22426392_506645796353961_569811406927453
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

 

முதியவர்களுக்கான சிறப்பான அறிவுரைகள்........அப்படியே விசுவின் "சம்சாரம் அது மின்சாரம்" பார்ப்பதுபோல் இருந்தது......நன்றி யாயினி......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
*ஒரு இளைஞன்* *தன் தந்தையை*
*பார்த்து கேட்டான்**
🧲🏁🧲🏁🧲🏁🧲🏁🧲🏁🧲🏁🧲🏁
செல்போன்
டி வி
கம்ப்யூட்டர்
இண்டர்னெட்
ஏ சி
வாஷிங் மெஷின்
கேஸ் கனெக்‌ஷன்
மிக்ஸி
இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்
🌹 நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை
🌹பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை விளையாடினோம்.
டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை*
🌹 *உயிருள்ள* *தோழர்களுடன்* *விளையாடினோம்.*
🌹 இண்டெர் நெட்டில் அல்ல
🌹தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் .
🌹 மினரல் வாட்டர் அல்ல*
*ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை*
*தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை*
*எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.
எந்த பாதிப்பும் வந்ததில்லை*
*எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்*
🌹 *எங்கள் பெற்றோர்கள்* *பணக்காரர்கள் அல்ல* .
🌹 *ஆனாலும் அன்புக்கும்*, *பாசத்துக்கும் பஞ்சம்** *இல்லை.*
🌹 *பெற்றோர்களோடே* *படுத்து உறங்கினோம்.* *ஹாஸ்டல் அறைகளில்* *அல்ல**
🌹உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
*எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்*
*எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல*
**எங்கள்* *தலைமுறையினர்* *எல்லோரும்* *பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.*
*பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்**
சுருக்கமாக சொன்னால்
WE ARE THE LIMITED EDITIONS
ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
**அன்பாக இருங்கள்*
*கற்றுக் கொள்ளுங்கள்**
*நாங்கள்* *இம்மண்ணிலிருந்து மறையும் வரை*.
🙏🌺🙏... படித்ததில் பிடித்தது...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நடிகர் அதிரடி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

1.பால் தேனீர் $100 rupee

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

 

இதையெல்லாம் வாக்கு போடும்போது யோசித்திருக்கணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விலை ஏற்றங்களினால் உலாத்த போனவர்கள் மறுபடியும் இருப்பிடம் திரும்புவதும் நடை பெறுகிறது..படிகியாக சொல்ல வர இல்லை..அன்றாடம் காதில் விழும் செய்திகள் தான்..வயது போனவர்ககள் மற்றும் வருத்தக் காரர்கள்    தற்கால சூழ்நிலையில் அங்கு போனால் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்..அந்தரத்துக்கு சுடு தண்ணி தருவார்களோ தெரியாது..அப்படி நிலைமை மாறிக்கொண்டு வருவதாக அறிய முடிகிறது....புலம் பெயர்ந்தவர்களுக்கு தாயகம் தான் தற்சமயம் புலம் பெயர்ந்த மண் போலாகி விட்டது.புலத்தில் இருப்பவர்கள் பணம் காய்க்கும் மரங்களாக இருக்கும் மட்டும் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.✍️🖐️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
பணமே உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்...
அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்...
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்...
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்...
கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்...
திருமணத்தில் வரதட்சணை என்றும்...
திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்...
விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு என்றும்...
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
தர்மம் என்றும்...
நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம் என்றும்...
திருமண வீடுகளில் பரிசாக மொய் என்றும்...
திருப்பித் தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால் அது
கடன் என்றும்...
திருப்பித் தர வேண்டாம் என
இலவசமாகக் கொடுத்தால் அது
அன்பளிப்பு என்றும்...
விரும்பிக் கொடுத்தால்
நன்கொடை என்றும்...
நீதிமன்றத்தில் செலுத்தினால்
அபராதம் என்றும்...
அரசுக்குச் செலுத்தினால்
வரி என்றும்...
அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி என்றும்...
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்...
தினமும் கிடைப்பது கூலி என்றும்...
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம் என்றும்...
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
லஞ்சம் என்றும்...
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
அசல் என்றும்...
வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி என்றும்...
தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு என்றும்...
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம் என்றும்...
குருவிற்குக் கொடுக்கும் போது
குருதட்சணை என்றும்...
ஹோட்டலில் நல்குவது
டிப்ஸ் என்றும்...
இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக
வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...
சிலர் அன்பை இழக்கின்றனர்...
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்...
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...
படித்ததில் உண்மை இது...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாயினி said:

இந்த விலை ஏற்றங்களினால் உலாத்த போனவர்கள் மறுபடியும் இருப்பிடம் திரும்புவதும் நடை பெறுகிறது..படிகியாக சொல்ல வர இல்லை..அன்றாடம் காதில் விழும் செய்திகள் தான்..

😂எனக்கும் இப்படி செய்திகள் காதில் விழும் அவர்கள் இப்போ இலங்கையில், இவர்களும் holidays இலங்கை போய்விட்டார்கள். இலங்கையில் நிலைமை மோசம் என்றார்கள் இவர்கள் வேறு ஒரு இலங்கைக்கு தான் போனார்களோ என்று நினைப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து தவகரனின் பாலைவன பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்
கவியரசர் கண்ணதாசனிடம்,
‘என் மகனை, வக்கீலுக்கு படிக்க வைக்க விரும்புகிறேன்.
அவனோ, கதை, கவிதை என்று, தமிழ் இலக்கியம் படிக்கப்
போவதாக சொல்கிறான்…’ என்றார், அவரது நண்பர்.
வருத்தப்பட்ட நண்பருக்கு, ஆறுதலாக
, ‘ஒருவனது உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோ,
அதே வழியில் அவனை விட்டுவிட வேண்டும்.
ஆட்டுக்கு, இலை, தழைகள் பிடிக்கும்.
‘மாட்டுக்கு, வைக்கோல், புண்ணாக்கு பிடிக்கும். குரங்குக்கு,
வாழைப்பழம் பிடிக்கும்.
புண்ணாக்கு தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது.
அதைப்போல, அவன் விரும்பும் படிப்பை படிக்கட்டும்…’
என்றார், கண்ணதாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.