Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

11149408_10152892378292992_8430790357189

 

 

கனடா- ரொறொன்ரோவின் புதிய பொலிஸ் மா அதிபராக மார்க் சான்டர்ஸ் நியமனம் பெறுகின்றார். இந்த தலைமை பதவியை பெறும் முதல் கறுப்பு இனத்தவர் சான்டர்ஸ் ஆவார்.

-------

 

மிக்க.... மகிழ்ச்சியான செய்தி. :)

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்...

 

10168070_640816725993212_158102052606580

11156207_10152786371412944_4199677591109

 

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடாத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10177478_655973337773773_130026967670003

 

 

965134_777105438969440_91827290396562894

1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு

 

 

 

1554542_751637758203375_4685067900004713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதை இந்த மண்ணும் செய்யும், மரமும் செய்யும்; நாம் மனிதர்கள்...!!!
வெற்றியாளனாய் ஆக முயற்சிக்க வேண்டாம், ஆனால் நல்ல மதிப்பீடுகளை பெற்றவராக முயற்சிக்கவும் ........-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொரன்டோவும் தமிழும் . . . . .

2011ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின் பிரகாரம் ரொரன்டோவில் 60 ஆயிரம் பேர் தமிழை தமது தாய்மொழியாக பதிவு செய்துள்ளனர்.

 

 

 

Tamil in Toronto: 10 neighbourhoods where you're likely to hear it

Screen_Shot_2015-04-20_at_3.05.41_PM___C
Top 10 Toronto neighbourhoods where Tamil is spoken
 
SIDEBAR
InsideToronto.com

Tamil is one of the more popular languages spoken in Toronto, and especially in the east end of the city. According to the 2011 census, there are more than 60,000 people in the city who list it as their Mother Tongue.

 

 

Languages in Toronto's neighbourhoods

Where's English more predominant in Toronto?

10 Toronto Neighbourhoods where you're likely to hear Persian

10 Toronto Neighbourhoods where you're likely to hear Urdu

10 Toronto Neighbourhoods where you're likely to hear Somali

Return to Diversity Our Strength home page

 

Based on that census data, here are the top 10 Toronto neighbourhoods where Tamil is noted as a Mother Tongue. These rankings are based on the number of speakers. You'll see it's a Scarborough sweep!

1. Rouge (Scarborough): 7,140

2. Malvern (Scarborough): 6,240

3. Woburn (Scarborough): 4,665

4. L'Amoreaux (Scarborough): 3,655

5. Dorset Park (Scarborough): 2,955

6. Agincourt North (Scarborough): 2,845

7. Eglinton East (Scarborough): 2,740

8. Bendale (Scarborough): 1,750

9. Morningside (Scarborough): 1,1715

10. Scarborough Village (Scarborough): 1,625

* Mother Tongue is defined as the first language learned at home in childhood and still understood at the time of the census.

NOTE: In one other Toronto neighbourhood (Highland Creek) the number of people listing Tamil as a Home Language was more than any other language except for English.

– Data courtesy City of Toronto via Statistics Canada

 

 

 

http://www.insidetoronto.com/community-story/5566988-tamil-in-toronto-10-neighbourhoods-where-you-re-likely-to-hear-it/;send

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனின் பொறுமையே

உலகையே ஆளும் 

வலிமையான 

ஆயுதம்.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10270830_752261081474376_604682530156344

 

 

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11163767_914190308639808_433215310198446

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்

எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதிலென்ன பாவம்..

எதற்கிந்த சோகம்? கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன்வாசல் வந்தாடும்

இளந் தென்றல் உன்மீது பண்பாடும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு மேல் இந்தப் பக்கம் யாராலும் புரட்டப்படாமலே கிடந்திருக்கிறது நல்ல விடையம்..... யாயினின் பக்கம் வோர் என்று நினைத்து விட்டார்களோ தெரியவில்லை...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு மேல் இந்தப் பக்கம் யாராலும் புரட்டப்படாமலே கிடந்திருக்கிறது நல்ல விடையம்..... யாயினின் பக்கம் வோர் என்று நினைத்து விட்டார்களோ தெரியவில்லை...

 

சீச்சீய்... அப்படி இல்லை.

ஒரு கிழமையா... நீங்க எங்கை போயிருந்தீங்க யாயினி.

காணவில்லைப் பகுதியில்... உங்க பெயர் வந்திருக்கும், தப்பி விட்டீர்கள். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீய்... அப்படி இல்லை.

ஒரு கிழமையா... நீங்க எங்கை போயிருந்தீங்க யாயினி.

காணவில்லைப் பகுதியில்... உங்க பெயர் வந்திருக்கும், தப்பி விட்டீர்கள். :D

 

அடிக்கடி காணமல் போவோர் பட்டியலில்  இடம் பிடிக்கக் கூடாது என்று தான் நானே ஓடி வந்துட்டன்...இயல்பிலயே போசாக்கு குறைந்தவர்கள்அவ்வப்போது காணாமல் போவார்கள். :lol:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11188209_10155563278375637_5965882037895

 

11148497_10155563278320637_7087913914412

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேனீ பூக்களில் உள்ள தேனை அருந்தும் சேகரிக்கும் உலகுக்கு அருமருந்தன்ன தேனை அளிக்கும் ‼️‼️
ஆனால்.........!!

 ஈ தான் கண்ட இடத்தில் அமரும் தேனையும் பருகும் மலத்தையும் உண்ணும் கிருமி சேகரிக்கும் உலகுக்கு நோயைப்பரப்பும்...‼️‼️
 இதே போன்றே நல்ல விடயங்களை தேடிக்கற்று உலகுக்கு நல்ல விடயங்களை நாம் விதைக்கவேண்டும் அதன்படி நடக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான்.
-பெர்னார்டு ஷா -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி

நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்

பொலபொலலெனக் கலகலெனப்

புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர்பிளந்த மரத்துளையில் கால்

நுழைத்துக்கொண்டு

ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!

– பட்டினத்தார்-

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி காணமல் போவோர் பட்டியலில்  இடம் பிடிக்கக் கூடாது என்று தான் நானே ஓடி வந்துட்டன்...இயல்பிலயே போசாக்கு குறைந்தவர்கள்அவ்வப்போது காணாமல் போவார்கள். :lol:

 

நல்ல, உவமானம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்.....

 

165242_462142070527346_115091199_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அருள்மொழிவர்மன்".

11205107_581999048609780_867235134287206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..

21246_465508943523992_1752466764_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் தொழிலாளர் தினவாழ்த்துக்கள்.மற்றும் தொழிளார்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 

 

16122_107034399628008_741205797081622077

 

 

11178326_917833964942061_296850568819606

 

 

 

 

 

 

 

 

 

 

முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

 

302819_573520996015053_360022535_n.jpg?o

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11130177_838380146216799_116867251222500

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11205125_826471457390417_900323208235973

 

மே தினம்... 8மணி நேர வேலை.

8 மணி நேர மன மகிழ்வு...

8 மணி நேர உறக்கம்.

இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம். 

உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்...பட்ட துன்பங்கள் கணக்கற்றவை. உழைத்துக் களைத்த மனிதனுக்கு சிறப்பு தந்து அவன் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளான உழைப்பாளர் தினத்தை ஒவ்வொரு தேசமும்கொண்டாடுகின்றன. ஐரோப்பாவில்..... மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகாலத்தில் நெருப்பின் தினமாக மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது.

பாதி ஆண்டு இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர். அதாவது, மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம் எனக் கணக்கிட்டனர். இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து நீக்கியது ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டாடிக்கொண்டுதான் இருந்தனர்.

ரோமானியர்கள்... ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான வழிபாடாக கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.

கனடா... பெர்முடா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொழிலாளர் தினத்தை செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் கொண்டாடுகின்றன.

இந்தியா... இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன்I பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.

ஹவாயில்.. ஹவாயில் மே தினம், லீ என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. லீ என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில்... ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

சீனாவில் ஒருவாரக் கொண்டாட்டம்... 1999 இல், தொழிலாளர் தின விடுமுறையானது 1 நாளில் இருந்து 3 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. சீன அரசாங்கம் இந்த 3 நாட்களுக்கு முன்னதான மற்றும் வரவிருக்கின்ற வாரயிறுதிகளை ஒன்றிணைத்ததன் மூலமாக 7 நாள் விடுமுறையாக உருவாக்கியது. தொழிலாளர் தின விடுமுறையானது சீனாவில் பொன்விழா வாரங்கள் மூன்றில் ஒன்றாக இருந்தது, இது மில்லியனுக்கும் மேற்பட்ட சீன மக்களை இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கின்றது.

போலந்து... போலந்தில் மே 1 தேசிய விடுமுறை நாளாக இருக்கின்ற வேளையில், அது தொழிலாளர் நாள் என்பதிலிருந்து எளிமையாக "மாநில விடுமுறை நாள்" என்று 1990 இல் மறுபெயரிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் 4 நாட்கள்... ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது: அக்டோபர் முதல் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய தலைநகரிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்படுகிறது. மார்ச் முதல் திங்கட்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவிலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் மே முதல் திங்கட்கிழமையும் கொண்டாடப்படுகிறது. முன்னாட்களில் ‘எட்டு மணி நேர நாள்' என அழைக்கப்பட்ட மார்ச் இரண்டாவது திங்கட்கிழமை, பின்னாளில் உழைப்பாளர் தினமாக விக்டோரியா மற்றும் டாஸ்மானியாவில் கொண்டாடப்படுகிறது.

நியூசிலாந்து... நியூசிலாந்தில் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல் பார்னெல்ஸ் என்னும் தச்சு வேலை செய்பவர். அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

ஈரான்... 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர், ஈரான் பேரரசில் தொழிலாளர் தினமானது கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதே நாளில் விடுமுறையாக இருந்தது. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் (1979 முதல் தற்போது வரை), தொழிலாளர் தினம் விடுமுறை தினமாக இல்லை, ஆனால் அது சமூகத்தில் முக்கியமான பிரிவினரான தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க மே 1 இல் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகின்றது.

துருக்கி... துருக்கியில், 2009 இலிருந்து மே 1 தொழிலாளர் மற்றும் ஒருமைப்பாடு தினமாகக் கொண்டாடப்படுகின்றது, இது பொதுவிடுமுறை தினமாகும்.

டொபாகோவில்... டிரினிதாத் மற்றும் டொபாகோவில் தொழிலாளர் தினம் ஒவ்வொரு ஜூன் 19 ஆம் தேதியும் கொண்டாடப்படுகின்றது. இந்த விடுமுறை தினமானது 1937 இல் நடைபெற்ற பட்லர் தொழிலாளர் கலவரங்களின் நினைவைக் குறிக்கும் விதமாக இருக்குமாறு 1973 இல் முன்மொழியப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

8 மணிநேர மனமகிழ்வு?? அவனவன் 4 மணித்தியாலம் hwy 401 இல் நிக்கிறான்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

8 மணிநேர மனமகிழ்வு?? அவனவன் 4 மணித்தியாலம் hwy 401 இல் நிக்கிறான்.. :o:D

 

இது தான் அந்தக்கால கடமைக்கும்

இந்தக்கால கடனுக்கும் உள்ள வித்தியாசம்....

 

தொடருங்கள் யாயினி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.