Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

go bag அதற்குள் பிஸ்கட் , தண்ணீர் போத்தல் முதலுதவி பொருட்கள் ................

 

11261913_1104246736257349_43821945607669

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் 20ம் திருவிழாவிலிருந்து சில படங்கள்.......

 

11999070_1172291169452905_9042889834262611988330_1172291166119572_4775279720971811921778_1172291179452904_4146815581286411988601_1172291132786242_9028480740925711958261_1172291112786244_4647545124103310633434_1172291162786239_58891917361628

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக எழுத்தறிவு நாள்

 

12006187_182835435381237_691010030936698

 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி  தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்....

 
 
ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.
அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;
 
நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...
 
Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.
 
The+Queen+in+Green.jpg
 
 
Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.
 
Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.
 
Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.
 
Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)"ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.
 
Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.
 
Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.
 
Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.
 
Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.
 
Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.
 
Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 
Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.
                
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இழந்துபோன நம் எச்சம் "பிராம்பனான் கோயில்"!!

இந்தோனேசியாவின் ஜாவாப் பகுதியில் அமைந்துள்ள "பிராம்பனான் கோயில்" இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்துக் கோயில் ஆகும். நம் தமிழிலக்கியங்களில் "சாவகம்" என்று அறியப்படும் ஜாவாவை, கி.பி 850களில் ஆண்ட சஞ்சய வம்சத்து சைவ மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இது! பின்னாளில் அச்சிவன் கோயிலின் இருபுறமும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஆலயங்கள் கட்டப்பட்டு இன்று "மும்மூர்த்திகள் கோயில்" என்றே பிராம்பனான் அறியப்படுகின்றது.

மும்மூர்த்திகளுக்கு மட்டுமன்றி, சுற்றிவர 250இற்கும் மேல் பரிவாரங்களுக்கு சிற்றாலயங்கள் கட்டப்பட்டு, இன்று, அவையெல்லாம் சிதைந்தொழிந்து போய் வெறும் அத்திவாரங்களாகக் கிடக்கின்றன. அண்மையில், யுனெஸ்கோவால் அது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக (World Heritage Site)அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரமாண்டுகளுக்கு முன், இந்தோனேசியா கூட சைவம் செழித்து நின்ற பூமி என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? வெறும் பெருமூச்சு மட்டுமே எஞ்சுகின்றது. 

 

 

11987162_1672687049618218_64063070078469

 

 

frown emotic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

"Happy Birthday to You" பிறந்தநாள் பாடல் தோன்றிய வரலாறு....!!!

 
உலகம் முழுவதும் பலரால் பாடப்படும் பாடல் எது என்று தெரியுமா?... "Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல்தான். இந்தப் பாடலினை 1893ம் ஆண்டு அமெரிக்க ஆசிரியைகள் இருவர் தங்களது மாணவிகளுக்காக இயற்றினார்கள்.

இந்தப் பாடலினை இயற்றியது சகோதரிகளான மில்ட்ரெட் ஜே.ஹில்[Mildred J. Hill] மற்றும் பட்ரி ஸ்மித் ஹில்[Patty Smith Hill]ஆகியோராவர். இவர்கள் அமெரிக்காவின் கென்டெக்கி மாநிலத்தில் லூயிஸ்விள்ளே நகரில் பிறந்தவர்களாவர்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடலுக்கான இராகமானது மில்ட்ரெட் ஜே.ஹில்லினால் இயற்றப்பட்டதுடன், பல்லவியானது பட்ரி ஸ்மித் ஹில்லினால் எழுதப்பட்டதாகும்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல் 1893ம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தப் பாடலுக்கு 1935ம் ஆண்டுதான் காப்புரிமை பெறப்பட்டு, 1963ம் ஆண்டு இந்த காப்புரிமை புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1988ம் ஆண்டு Birch Tree Group,Ltd என்கின்ற நிறுவனமானது இந்தப் பாடலின் உரிமையினை Warner Communications என்கின்ற நிறுவனத்துக்கு 25மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு[ஏனைய எல்லா சொத்துக்களும் உள்ளடங்களாக]விற்பனை செய்தது.
 

பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஹாப்பர் கறிவேப்பிலை பொதி செய்து விட்டார் (உபயம் Kerala Food) 

12004793_10153199965922992_5549383654656

 

காப்பு பார்த்தாயிற்று,கறிவேப்பில்லை கட்டியாயிற்று அடுத்து என்ன.....??? wait and see......:)

11705523_183186738679440_668841544595008
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 21ம் திருவிழா.தங்கரதம் ..

11350677_1172749972740358_1059200054494212004119_1172749942740361_7785700361125911998958_1172749976073691_472945808632491902747_1172750039407018_20742382587798711936502_1172750056073683_4273616560198010255061_1172750036073685_6586732158522512004802_1172750146073674_8779202720618711951480_1172750116073677_4180149007752011921779_1172750156073673_1167403053723811952708_1172750176073671_9016840567075912002868_1172750226073666_6975703468263911150756_1172750256073663_7061939016784311014908_1172750252740330_5591670469313911958098_1172750292740326_5168082569620311754920_1172750319406990_5268469601274511222887_1172750359406986_7801533169251111922985_1172750362740319_74154638607726

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11036836_945179282187228_629059787052441

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லூர் சப்பறம் .

 

12002414_1173923435956345_2642090101197611990653_1173923645956324_5041905602604011954749_1173923422623013_4163294343270810351389_1173923652622990_5861363605026211216800_1173923722622983_2563362235991211951652_1173923779289644_7283107002218612002426_1173923775956311_1579792301471611987106_1173923809289641_3030556479118211934501_1173923859289636_6347651842183911958254_1173923875956301_1057594100198610468226_1173923905956298_3780159913475411144429_1173923929289629_1843010857519111221508_1173923932622962_3961078177974112011349_1173924015956287_1883186841095211216800_1173924105956278_84460323170512

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 -----
பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.//

சிலரின் பிறந்த நாட்கள், ஊரில் சாமத்திய சடங்கு மாதிரி.... முன்று, நான்கு நாட்கள் தொடர்ந்தும் நடை பெறுவதுண்டு. :grin:
அரிய தகவல்களுக்கு, நன்றி யாயினி.:)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.
 -----
பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.//

சிலரின் பிறந்த நாட்கள், ஊரில் சாமத்திய சடங்கு மாதிரி.... முன்று, நான்கு நாட்கள் தொடர்ந்தும் நடை பெறுவதுண்டு. :grin:
அரிய தகவல்களுக்கு, நன்றி யாயினி.:)

நன்றி ....

 

10650060_1485161111734667_25893470705032

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதையாய் , , , ,
பாரதத் தீயும்
குளிர் நிலவும் , , ,
வாழ்க பாரதி,

11986494_171488506518322_852151695281607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Victims' families to gather at ground zero on anniversary of Sept. 11 attack

12004946_184953911836056_838984365889064

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12004018_1494388120871398_28400726408215

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஓவியப் புல்வெளி...

 

11921824_10205210967178149_1094430855087

12014989_10205210967778164_5656820640788

 

11934521_10205210970098222_8064400889709

12010554_10205210972018270_5535437054601

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11907185_10207215407297615_1507565459230

11898632_10207215407457619_6274830841141

11960145_10207215407617623_6238792038054

11822524_10207234204647537_1710524855555

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரியல் எனும் சீரழிவு !
1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறுசெய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12).ஆபாசமாக பேசுவது எப்படி?
மற்றும் கொலை, கொள்ளை, ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,கள்ள காதல் ,விபச்சாரம்,அநியாயம்,அக்கிரமம்,பொய்,திருட்டு இப்படி எல்லாவற்றையும்அழகாக, தெளிவாக சொல்லியும் கற்றும் தருவதுதான் இந்த நாடகம் எனும் "சீரியல்"
காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த சீரியலுக்கு அடிமையாக பலர் இருக்கிறார்கள் குறிப்பாக "பெண்கள்"
குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இந்த சீரியல்கள்தான்!
பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!
நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம்.
தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும்.
சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு"
எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம் !!!
சிறந்த சமூகத்தை உருவாக்கிடுவோம்!!!

12006177_911312765607245_246647170131454

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13).அடுப்பிலை வைச்ச சட்டி பத்தி எரிஞ்சாலும் சீரியலை பாத்த விழி பதறாமல் இருப்பது.

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற கவிப்பேர ரசு நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் பதிப்பிக்கப்படுகிறது.
 

11227900_1175229999160552_84080065437862

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5ம் தர புலமைப்பரீட்சை மாணவர்களுக்கு சிவனொலிபாத மலையானால் வந்த சிக்கல்.

மாணவர்கள் பரீட்சைகளுக்கு தயாராகும் போது, அங்கீகரிக்கப்பட்ட நூல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறிபாலி பீடாதிபதி பேராசிரியர் டியுடர்; வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் எழுந்த சிக்கல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில், சிவனொளிபாத மலை எந்த மாகாணத்துக்குரியது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அளவையியல் திணைக்களத்தின் படி இது சப்ரமகமுவ மாகாணத்துக்கு உரியது.

எனினும் வரைபடங்களின் படி இது மத்திய மாகாணத்துக்கு உரியதாக கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இது குறித்து எமது செய்திப்பிரிவுக்கு விளக்கமளித்த பரீட்சைகள் ஆணையாளர், இரண்டு விடைகளுக்கும் மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உண்மையில் சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கே உரியது.
எனினும் சில ஆசிரியர்கள் கூகுள் மெப் ஐ பார்த்து, அது மத்திய மாகாணத்துக்கு உரியது என்று மாணவர்களுக்கு புகட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாணவர்களின் நலனுக்காக இந்த வினாவுக்கு இரண்டு பதில்களுக்குமே புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள் (15-09-1987).

 

11990611_1071768212836132_32171555335351

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12002194_987500917977422_429968052792365

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12011278_10153334105053801_8974413034410

யாழ் நல்லூரில் முன்னொரு காலத்தில் வைக்கப்பட்டு சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்ட தியாகி திலீபனின் நிழலுருவம்!

12039595_10153329813158801_1392244573335

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிவு தெரியாத நம் வாழ்க்கையில்,நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்வை மாற்றிக் கொண்டே இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.