Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12038000_10207989084069879_2617114259184

12105814_10207989084669894_6343863509268

11201194_10207989084949901_6456211994895

12063559_10207989085149906_8250751266350

  • 3 weeks later...
  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply

சில வாரங்களாக யாயினியின் பதிவுகளை காணவில்லை...  rolleyes.gif

தொடருங்கள் யாயினி!

 

Edited by தமிழினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழினி said:

சில வாரங்களாக யாயினியின் பதிவுகளை காணவில்லை...  rolleyes.gif

தொடருங்கள் யாயினி!

 

தேடியமைக்கு மிக்க நன்றி தமிழினியக்கா..அம்மாவின் உடல் நலமின்மை காரணமாக வீட்டில் அதிகம் நிற்பதில்லை.வைத்தியசாலையோடு தான் அதிக நேரம் போகிறது..நேரம் கிடைக்கும் போது மீண்டும் பதிiவிடுவேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் தாயார் நலம் பெற்று , நேரமும் கிடைக்க வாழ்த்துகின்றேன்...!

14 hours ago, யாயினி said:

தேடியமைக்கு மிக்க நன்றி தமிழினியக்கா..அம்மாவின் உடல் நலமின்மை காரணமாக வீட்டில் அதிகம் நிற்பதில்லை.வைத்தியசாலையோடு தான் அதிக நேரம் போகிறது..நேரம் கிடைக்கும் போது மீண்டும் பதிiவிடுவேன்.
 

நன்றி யாயினி. உங்கள் அம்மா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2015, 11:42:13, suvy said:

தங்களின் தாயார் நலம் பெற்று , நேரமும் கிடைக்க வாழ்த்துகின்றேன்...!

 

On 11/10/2015, 6:43:42, தமிழினி said:

நன்றி யாயினி. உங்கள் அம்மா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

 

மிக்க நன்றி சுவியண்ணா மற்றும் தமிழினியக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு....,:- அ.மயூரன்.

               76221_161640063874693_2075068_n.jpg?oh=f

 

                          இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது.   அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

 

74153_161641390541227_1764140_n.jpg?oh=d

    முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.

 

 

   சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமானது இதனால் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில் உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை இந்நாளில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர். 

 

      அந்தவகையில் நவம்பர் 11 திகதி அமுலுக்கு வந்த இந்த சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் யுத்தநிறுத்த தினம் Armistice day  எனவே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர். மாறாக ஜேர்மன் படைகள் ஹிட்லரின் தலைமையில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு 2 வது உலகயுத்தம் தொடங்கப்பட்டமையால் இந்த யுத்தநிறுத்த தினம் கைவிடப்பட்டது. இருந்தும் 2வது உலக மகாயுத்தம் முடிவடைந்த்தன் பின்னர் பிரித்தானிய அரசினால் இந்த யுத்தநிறுத்த தினமானது நினைவு தினமாக (Remembrance Day) ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டபோது அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டன. அன்றிலிருந்து இத்தினம் பொப்பி தினமாக நினைவுகூரப்படுகின்றது. 

 

148359_161643233874376_4539178_n.jpg?oh=

 

       மேலும் அவுஸ்திரேலியாவிலும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பம்சம் என்னவெனில் முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் 35,527 வீர்ர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 35,527 அவுஸ்திரேலிய வீர்ர்களும் அவுஸ்திரேலிய விடிவுக்காகவோ அல்லது அவுஸ்திரேலிய மண்ணிலோ மடியவில்லை. இவர்களது கல்லறைகளும் அவுஸ்திரேலியாவில் இல்லை. இறுதியாக 1993 இல் பிரான்சில் வெஸ்ரேன் புரொன்ரில் (Western Front)  புதைக்கப்பட்ட பெயர் தெரியாத ஒரு அவுஸ்திரேலிய வீரனின் உடல் அகழ்தெடுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் நவம்பர் 11 இல் அரசமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவனது உடலே 35,527 வீர்ர்களின் நினைவுகளுக்கும் சாட்சி.இதேபோல 2007 ஆண்டு 1வது உலகப் போரில் கொல்லப்பட்ட ஜக்ஹண்டர் என்ற அவுஸ்திரேலிய வீரனின் உக்கிய எலும்புகள் மரபணுச் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பெல்ஜியம் போர் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் பிரித்தானியாவும் 2007 இல் இறந்த வீரனை அடக்கம் செய்த்து நினைவிருக்கலாம்.   

 

 

     தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை 27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது.

76810_161641100541256_2644049_n.jpg?oh=0

 

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields  நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae   என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields  போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர். 

 

 

ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்

 

74566_161641223874577_960197_n.jpg?oh=13

 

“Flanders Fields  போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் தங்கள் காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம் வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக் கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields  இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப் பிடியுங்கள். இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் இல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்”.   

 

                அற்புதமான உள்ளார்த்தம் நிறைந்த உயரிய கவிதை வரிகள் எம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் வீழ்ந்தவர்களுக்காக வருடாவருடம் விழா எடுப்பவர்களல்லவா நாங்கள். அழகிய சிவந்த இதழ்களைக் கொண்ட பொப்பிப் பூக்கள் பிரித்தானியாவில் இல்லை. மேலும் இந்தப் பொப்பி மலரானது ஆரம்ப கால் முதல் அபின் எனப்படும் கெரோயினுக்கு முக்கிய பொருளாக அமைகின்றதுடன். பொப்பியின் விதையானது கசாகசா எனப்படும் வாசனைத்திரவியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

       அத்துடன் இப்பொப்பிப் பூக்கள் இலகுவில் உதிர்ந்துவிடக் கூடியன. ஆகவேதான் கடைகளில் கடதாசியால் செய்யப்பட்ட பொப்பி மலர்களை மக்கள் மடிந்தவரை மனதில் எண்ணி வாங்கி அணிவர். இந்த வீர்ர்கள் பிரித்தானியாவை வளமுள்ள நாடாக மாற்றியதற்கு தம்முயிர்களைத் தியாகம் செய்தவர்கள். என மக்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதைக் காணலாம். மாறாக கடந்த சில ஆண்டுகளாக லண்டனுக்குள் வெளிநாட்டவர்கள் அதிகம் வாழ்வதால் இந்நிகழ்வு மக்களில் செல்வாக்குச் செலுத்தாவிட்டாலும் லண்டன் தவிர்ந்த பிரித்தானியாவில் இந்நினைவு கூரல் தவறாது கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 

     அத்தோடு போரில் இறந்த வீர்ர்களுக்கு பிரித்தானியாவில் தனித்தனிக் கல்லறைகள் எதையும் அமைக்கவில்லை மாறாக பொதுவான கல்லறையை மட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரித்தானியா தனது நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வீழ்ந்த வீர்ர்களுக்கு மட்டும் தனித்தனி கல்லறை அமைத்திருந்த்து உதாரணமாக பிரான்ஸில் நோமண்டியிலும், பெல்ஜியத்தில் Flanders Fields பகுதியிலும், தனிக்கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் இலங்கையில் திருகோணமலையில் ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட பிரித்தானிய 228 வீர்ர்களுக்குத் தனித்தனி கல்லறை அமைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

75811_161641847207848_8299985_n.jpg?oh=e

 

         இந்தக்கல்லறைகளை இன்றும் திருகோணமலைக்கு வெளியே திருகோணமலையிலிருந்து நிலாவெளி செல்லும் வீதியில் கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் காணமுடிகின்றது. வேற்று நாட்டுப்படைகள் தம் நாட்டிற்குள் இறந்த்தற்காக கல்லறை அமைப்பதை அனுமதித்திருந்த இலங்கையரசு. தம்நாட்டில் அந்தநாட்டின் விடிவிற்காக வீழ்ந்த எம்புனிதர்களின் கல்லறைகளை அனுமதியாது களைந்திருக்கின்றது இது எந்தவகையில் சரியானது உறவுகளே.

73742_161642080541158_5974235_n.jpg?oh=b

          மேலும் பிரித்தானியாவில் போட்ஸ்மத் (postmouth ) என்னும் கடற்கரை நகரத்தில் உலகப்போரில் வீழ்ந்தவர்களுக்காக டீ-டே மியூசியம் என்னும் நினைவாலயத்தையும் அமைத்து அந்த வீர்ர்களைக் கௌரவித்திருக்கின்றது பிரித்தானிய அரசு.

 

          இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம் இனி இதே கார்திகை மாதத்தில் ஈழத்தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.

 

       இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.

 

76475_161642403874459_5632766_n.jpg?oh=b

 

          “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்”  

 

என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.

 

“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்”  

என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.

 

 “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” 

 

என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.

 

          இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

 

      சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களின் 

 

’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் 

கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’ 

 

என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இராசாயணம் காணப்படுகின்றது. இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக்க் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்த்து. ஆனால் பொப்பி மலரில் போதை மட்டுமே உண்டு. இது கார்த்திகை மலரின் சிறப்பு.

 

76773_161648267207206_3156982_n.jpg?oh=7

 

     ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழரைத்தவிர ஏன் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ  இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு வீரத்தாழாட்டு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது. இன்று அந்த நிகழ்வும் புலம்பெயர வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் கட்டுண்டு கிடக்கின்றது.  

 

       அந்தவகையில் முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1617 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர். அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.

 

           வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள்  இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் புதைக்கப்பட்டனர். இதற்கு மணலாற்றில் உள்ள கமல் முகாம் ஒரு சாட்சியாக அமைகின்றது.    

 

       ஆனால் 1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. புதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு புதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

 

       இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும்.

 

      ஒரு மாவீரனை தலாட்டி சீராட்டி வளர்த்த தாய் சகோதர்ர்கள் தன் மகனின் அல்லது உறவினரின் மரணத்திற்கு வரமுடியாத நிலையில் அந்த வீரனை தகனம் செய்தால் நாளை அந்த தாய் சகோத்தர்களுக்கு எதைக்காட்டப் போகின்றோம். ஒரு மாவீரன் எம்மிடம் கேட்பது ஆறடி நிலம் மட்டுமே. எனவே தான் அந்த வீரனின் தாய் சகோதர்ர்கள் தன் பிள்ளைகளின் உடலைப் பார்க்காது விட்டாலும் அவன் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஆறுதலடையலாம் அல்லவா?.

 

 ஆகவே வீரமரணமடையும் மாவீர்ர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்படமாட்டாது புதைக்கப்படவேண்டும் என முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளின் மிகப்பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கின்றோம். என விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள்.

 

76669_161643083874391_7546152_n.jpg?oh=2

 

    அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டனர். அந்த 1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

   பின் 1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது.

 

முள்ளிவாய்க்காலின் பின்னர். இவ்வீர்ர்களின் இருப்பிடங்கள் யாவும் களையப்பட்டன. இருந்தும் கடல் கடந்து தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் கார்த்திகை மலரின் அழகில் தாயகத்துக்காக தன்னுயிரிழந்த தயாளர்களின் முகங்களைப் பார்த்து இந்தவருடம் கிட்டத்தட்ட 35.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வணங்கப் போகின்றது. 

 

இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை. பௌத்த பண்பாட்டு விழுமிய மலரான நீலோற்பலம் தான் இலங்கைத்தீவின் ஒரே ஒரு பூ என அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது. ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி தினமாகிய இந்நாளில் காந்தள் மலரின் நாயகர்களையும் நினைவேற்றிக் கொள்வதன்மூலம் பொப்பி மலரும் காந்தள் மலரும் கார்த்திகையில் சிறப்பம்சம் பெறுகின்றது. 

 

நன்றி

அ.மயூரன்.

 

 

இதுதான் அந்த உலகப் புகழ் பொப்பி மலர் கவிதை ..

1468513_10202134219258187_665044728_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் வாழ் யாழ் கழ உறவுகள் அனைவரும் நலமாக இருக்கிறீங்களா..???அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
 

12208774_10201022381759616_3321680643407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • BBmZ7G0.img?h=250&w=300&m=6&q=60&u=t&o=t
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11219233_910386945721404_107335231254106

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா- ரொறொன்ரோ உட்பட உலகம் பூராகவும் உள்ள நாடுகள் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பிரான்சின் அடையாள சின்னமாக விளக்குகளை ஏற்றி பரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஒற்றுமையாக தங்களது அனுதாபத்தை தெரிவித்தன.
நாடுகள் நகரங்கள் முழுவதிலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் அனைத்தும் தங்கள் வெளிச்சங்களை பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடியின் நிறமாக மாற்றி தங்கள் அனுதாபத்தை தெரிவித்துள்ளன. கொடூர சாவுகளை ஏற்படுத்திய இத்தாக்குதல் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் பிரான்சில் ஏற்பட்டிருக்கும் முதலாவது கொடூரமாகும்.

world9

worldworld1

ரொறொன்ரோ CN Tower:

world2
சிட்னி:

world3
பிரேசில்:

world4
சான்பிரான்சிஸ்கோ,உலக வர்த்தக மையம்,எம்பயர் ஸ்டேட் கட்டிடம்:world5world6world10
world7

இதே நேரம் Eiffel Tower இருளடைந்த நிலையில் காணப்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலதி மைத்ரியின் கவிதை ஒன்று

“கல்லறைகளை களவாடியவள்“

முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட 
பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும்
பிறப்பைச் சபித்து வெறுத்த 
மகள்களின் கனவுப் பெருங்காட்டின்
ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள்
சூரியனைப் போல் பிரகாசித்தன
உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை
தொடுவானத்திற்கும் அப்பால் பயணித்தது
பின்கட்டுத்தளைகளின் கண்ணிகள் கழன்று
அடைபட்ட வாசல்கள் அரைவிழிப்பென திறந்தது கொண்டன
அச்சமற்ற வீதியில் நடந்து புழுதி கிளப்பிய 
தெருவே அறியாத மென்பாதங்கள்
பல்கலையின் படிக்கட்டில் ஒய்வெடுத்தன
இலக்கை அடைந்து முற்றுகை தகர்த்து
கந்தக நெடியுடன் உருகருகிக் கரைந்தபோது
நகரத்தின் அழகு நிலையங்களிருந்து
வெளியேறிய மெழுகு உடல்கள் 
காதலர்களின் தழுவலுக்குள் கட்டுண்டு கிடந்தன
கண்துஞ்சா கனமழைக்குள் காவலரணில்
சாரலின் சரடில் இளமையின் கனவுகளைக் கோர்க்க
தலைமுறையும் தாண்டி நீள்கிறது கொடும்வலி
முன்நெற்றி வேர்வையென 
நினைவு கசிந்துச் சொட்டும் கதகதப்பான
சொற்களை மின்மினியாக்கிக் கூரைக்குள்
பதுக்கினாய் காதலின் நினைவாக
நிரந்தரமாக உன்னை
பதுங்குக்குழிக்குள் கையளித்துவிட்டு
எல்லைகள் கடந்து எல்லா காலங்களிலும்
நான்கு சுவர்களுக்குள் மென்குளிரூட்டப்பட்ட
களிவிருந்தில் தஞ்சமடையும் 
நகரத்து நங்கை தன் காதலர்களுக்கு
மின்மினிகளை பரிசளிக்கவும்
பேரம் பேசவும் உடன்படிக்கைகள்
கைச்சாத்திடவும் கற்றுத் தேர்ந்தாள்
போராளிகளின் கல்லறையிலிருந்து 
விடுதலையைக் களவாடியவள்
ஆயிரமாயிரம் சகோதரிகளின் 
சரித்திரத்தைக் கொள்ளையடித்தவள்
அண்ணாந்து உமிழ்கிறாள் தற்போது…

-மாலதி மைத்ரி

http://www.oodaru.com/?p=9313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாவீரர் நாள் ஆரம்பம்....

 

சுதந்திர தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்துக்கு உருத்தந்து விதையாகிப்போன அத்தனை வீரமறவர்களுக்கும்  வீரவணக்கம் ..

 

10271476_4621876882817_50040661020091661

 

12227822_10153329013128507_1251651459941

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

498225031_640.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12234884_10204250277610699_1720907286067

12274757_10156252175060717_8337619140286

12238288_933540896738660_107681869410647

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12294792_934411199984963_138950210718304

கல்லறை ஓரம்
காது வைத்து கேட்கின்றேன்..!

கால் இழந்ததை பற்றி என்
மகன் என்னோடு பேசுகிறான்...!

தெரிகிறதா உங்களுக்கு..?

கண்ணீர் கசியும் என் கண்களை
கல்லறைக்கு
உள்ளிருந்து கை நீட்டி
துடைக்கிறான்...!

தெரிகிறதா உங்களுக்கு...?

கதை சொல்லி சோறூட்டி
மார் மீது தாலாட்டி தமிழனாய்
வழர்த்ததை பேசுகிறான் என் மகன்..!

தெரிகிறதா உங்களுக்கு...!

அம்மா தங்கை தம்பி அக்கா
உற்றார் உறவினர் நலம்
கேட்க்கும் என் மகனை நான்
காண்கிறேன்...!

தெரிகிறதா உங்களுக்கு...?

கல்லறையை கண்ணீரால்
கழுவுகின்றேன் கவலை
இன்றி என் மகனே நீ உறங்கு..!

நாட்டுக்காய் நீ உழைத்தாய்
நடு தெருவில் நான் மட்டும்
நாதியற்று...!

உசிரோடு நான் இருந்தால்
உன் கல்லறைக்கு நான்
வந்து ஊர் கதை பேசுகிறேன்
நிம்மதியாய் நீ உறங்கு...!

(குடும்பத்தையே இழந்த தந்தையின் புலம்பல்)

போர் தந்த பேரவலம் யார்
தீர்ப்பார் இத்துயரம்...?

- ஆச்சியின் கவித்துளிகள்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் யாழ் கோப்பாயை சேர்ந்த மாணவன் செந்தூரனின் தற்கொலை செய்தி பேரதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. யுத்தம் மற்றும் இனச்சிக்கல் ஏற்படுத்திய ஆறாத வடுக்களின் விளைவே இந்த தற்கொலை. ஒரு சின்னச் சிறு சிறுவனின் நெஞ்சில் இத்தகைய எண்ணம் உருவாகிறது என்பது இந்த நாடும் இந்த நாட்டின் ஆட்சியும் எப்படி இருக்கின்றன என்பதை தெளிவாக்குகிறது.

செந்தூரன் தன் மரண சாசனத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஈழத்திற்கு ஒளி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் நல்லாட்சி அரசின் அணுகுமுறைகள் வருத்தம் அளிக்கின்றது என்பதையும் எழுதியுள்ளான். அரசியல் கைதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அணுகுமுறைகள்தான் இந்தச் சிறுவனின் மரணத்திற்கு காரணம்.

தமிழ் மண்ணின் சிறுவர்களின் நெஞ்சம் வடுக்களால் நிறைந்திருக்கிறது. செந்தூரனின் மரணம் மாத்திரமல்ல வடக்கில் பல சிறுவர்கள் தங்கள் மன வடுக்களை - மன அழுத்தத்தை பல்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களின் முன்னர் வன்னியில் நடந்த விளையாட்டுப் போட்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆவியாக விநோத வேடம் பூண்டிருந்தான்.

உண்மையில் அந்த வேடத்தில் விநோதம் இல்லை. எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சில் எத்தகைய வடுக்கள் நிலைத்திருக்கின்றன என்பதைத்தான் அச் சிறுவன் உணர்த்தியிருக்கிறான். அவன் கைகளில் எழுதி வைத்திருந்த தாளில் நான் முள்ளிவாய்க்காலில் அநியாயமாக அழிக்கப்பட்டேன். நான் ஏன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டேன்? எனக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்களை எழுதியிருந்தான்.

இதைப்போல சமீபத்தில் ஒரு மாணவன் தன் பாடக்குறிப்புப் புத்தகத்தில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்து கிடக்ககும் காட்சியை வரைந்து தனது தாயை கொன்ற இராணுவம் கொல்லப்பட வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான். இவ்வாறு பல்வேறு சம்வபங்கள் போரினாலும் இனச்சிக்கலாலும் ஏற்பட்ட மன வடுக்களை வெளிக்காட்டுகின்றன.

மாபெரும் யுத்தத்தை சந்தித்த ஒரு இனத்தின் மாபெரும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் மாபெரும் இன அழிப்பை சந்தித்த ஒரு இனத்தின் மனக்காயங்களை ஆற்றாமல் தன்னை காப்பாற்றும் தந்திரங்களால் இலங்கை அரசு நல்லிணக்கம் செய்வதாக காட்டிக்கொள்வதன் விளைவாகவே இத்தகைய இழப்புக்கள் ஏற்படுகின்றன.

தமிழ் மண்ணின் எதிர்காலத்தின் நெஞ்சம் இப்படி வடுக்களால் நிறைந்திருப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இந்த வடுக்களை இல்லாமல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். இத்தகைய கொடும் போரின் பின்னர் பாதிக்கப்பட்ட இனம் மீட்சி பெறும் வகையில் மெய்யான உளப்பூர்வமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவில்லை. வெறுமனே சம்பிரதாய பூர்வான உளவள ஆலோசனைகளால் மாத்திரம் இத்தகைய நிகழ்வுகளை தடுத்து விட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த மண்ணில் உண்மையான அமைதியும் சுதந்திரமும் ஏற்படுவதன் ஊடாகவே இந்த வடுக்கள் நிரந்தரமாக ஆற்றப்படும். இந்த மண்ணின் உக்கிரமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதன் ஊடாகவே இந்த மாதிரியான வடுக்களை ஆற்ற முடியும். போரில் கடுமையாக நொந்து வடுக்களுக்கும் காயங்களுக்கும் உள்ளான இனத்தை தொடர்ந்தும் நெருக்கடியில் தள்ளும் செயல்களே தொடர்கின்றன. பொல்லாத ஆட்சியில் இழைக்கப்படும் அநீதிகளைவிடவும் நல்லாட்சியில் இழைக்கப்படும் அநீதிகள்தான் இத்தகைய விளைவுகளை உருவாக்கின்றன.

காயங்களையும் வடுக்களையும் ஆற்றாமல் நல்லிணக்கம் என்றும் நல்லாட்சி என்றும் பூசி மெழும் அரசியல் இராஜதந்திரங்களை இலங்கை அரசு கைவிட வேண்டும். தற்கொலை என்ற தவறான முடிவை சிறுவன் செந்தூரன் எடுத்திருந்தாலும் இந்த அரசின்மீது இந்த அரசின் ஆட்சியின்மீது இந்த அரசின் தமிழ் மக்கள்மீதான அணுகுமுறையின்மீது அவன் வெளிப்படுத்திய எதிர்ப்பு அதன் உண்மையை முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இனியும் இதுபோன்றதொரு நிகழ்வு இடம்பெறாமல் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் எவ்விதமாக பதில் அளிக்கிறது என்பதையும் நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அதுதான் இலங்கை அரசாங்கம் உயிர்களுக்கு அளிக்கும் மதிப்பு. இழப்புக்களால் இலங்கை அரசு இரங்கிவிடாது என்பதை நாங்கள் உணர வேண்டும். எங்கள் உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்ற வலிமையைப் பெற வேண்டும்.

http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx

 

Theepachelvan Pratheepan's photo.
Theepachelvan Pratheepan's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று கார்த்திகை 27

தாயக மண் மீட்பிற்காக தமது உயிர்களை ஆகுதியாக்கிய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் வீர வணங்கங்கள்!!!

12313763_1237241149636087_60064401763014

12250105_10156262270180717_5542784684288

11988520_939772962726719_449801791244845

12246849_1055674567796924_14504977993720

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்..

12313654_862827667170333_368753317100185

12241295_861511453968621_804876287968456

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்க இலக்கிய மலர்கள் (குறிஞ்சி பாட்டு மலர்கள் 99)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.
 
556560_247686882011938_1971551018_n.jpg?
270965_247687665345193_1221274542_n.jpg?
 
544693_247689342011692_263577533_n.jpg?o
542924_247689905344969_1092957085_n.jpg?
582479_247690705344889_266469834_n.jpg?o
 
556958_247691318678161_453298164_n.jpg?o
250989_247691808678112_482692304_n.jpg?o
481285_247692285344731_563636865_n.jpg?o
223980_247692858678007_1870246695_n.jpg?
533145_247694155344544_1617934949_n.jpg?
 
 
 

547629_247694862011140_1772521317_n.jpg?

524924_247695495344410_97110046_n.jpg?oh

547840_247696698677623_125177088_n.jpg?o

556618_247697628677530_2009265560_n.jpg?

525127_247698432010783_2001976266_n.jpg?

551786_247705532010073_1962765647_n.jpg?

562072_247706805343279_1560278125_n.jpg?

205264_247707302009896_1473114523_n.jpg?

421491_247707978676495_536543950_n.jpg?o

269337_247709315343028_809500526_n.jpg?o

554474_247709782009648_444599313_n.jpg?o

576577_247710432009583_1349050778_n.jpg?

182781_247711022009524_1273804839_n.jpg?

182553_247711672009459_504195797_n.jpg?o

547729_247712285342731_1689077882_n.jpg?

550993_247713268675966_1358013198_n.jpg?

576734_247713738675919_718266165_n.jpg?o

248041_247714255342534_189771426_n.jpg?o

542507_247714762009150_1945100856_n.jpg?

545032_247715165342443_346626540_n.jpg?o

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

552824_247715862009040_268572760_n.jpg?o

401861_247716868675606_172576594_n.jpg?o

224910_247717375342222_2085428587_n.jpg?

556381_247717862008840_1606304215_n.jpg?

581184_247718295342130_57593916_n.jpg?oh

253327_247719378675355_921740830_n.jpg?o

560627_247719932008633_9032635_n.jpg?oh=

545086_247720798675213_1547833835_n.jpg?

559973_247721622008464_2110587982_n.jpg?

562605_247722245341735_1427668721_n.jpg?

532711_247722848675008_452583645_n.jpg?o

601438_247723388674954_899914185_n.jpg?o

283597_247724788674814_1556121538_n.jpg?

223915_247725338674759_1159250818_n.jpg?

553639_247726815341278_640387561_n.jpg?o

166594_247727938674499_772296315_n.jpg?o

550863_247728582007768_1141955766_n.jpg?

168847_247729288674364_97462226_n.jpg?oh

252379_247734578673835_1004270131_n.jpg?

282702_247735788673714_1148393973_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழினி அக்காவின் 31ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது இல்லத்தினர் வெளியிட்ட 'தமிழினி நினைவாக...' மலரில் 'தலைவியை இழந்த வானம்' கவிதை

 

12311113_10153477949773801_5339299403944

12304338_10153477949953801_5259593077690

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
12311198_10207514907527212_8493836167584
 
 
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12310474_10153733580595775_6852580683660

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.
இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.
நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.