Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகலகலாவல்லி மாலை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன். எங்கள் பாடசாலையில் (யாழ் மத்திய கல்லூரி) ஒரு கிருஸ்தவர்தான் சங்கீத ஆசிரியராக இருந்தவர். அவர்தான் நவராத்திரி விழாவில் இந்த சகலகலாவல்லி மாலை பாடலை பாடுவார். அவர் இதை உருகி பாடும் முறையை பார்தீர்களானால் சொக்கி போவீர்கள். அவ்வளவு நன்றாக பாடுவார்.

கொழும்பு இந்துவில் சாதாரணதரம் கற்கின்றபோது வகுப்பாசிரியராக ஒரு கிறிஸ்தவர் தான் இருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாட்டிற்குப் போகாட்டில் அடிவிழும். ஆனாலும் நாங்கள் போவதில்லை. ஒரு தடவை வகுப்பில் நிற்கும்போது சடார், டொக் என்று சத்தம். வகுப்பில் இருந்த அனைவருக்கும், குட்டும், அடியும் போட்டுத் துரத்திக் கொண்டிருந்தார். நான் அடிவிழக் கூடாது என்பதற்காக மேசைகளுக்குள்ளால் தடக்குப்பட்டு ஓடி... விழுந்து... பேசாமல் அடியே வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.....

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு இந்துவில் சாதாரணதரம் கற்கின்றபோது வகுப்பாசிரியராக ஒரு கிறிஸ்தவர் தான் இருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாட்டிற்குப் போகாட்டில் அடிவிழும். ஆனாலும் நாங்கள் போவதில்லை. ஒரு தடவை வகுப்பில் நிற்கும்போது சடார், டொக் என்று சத்தம். வகுப்பில் இருந்த அனைவருக்கும், குட்டும், அடியும் போட்டுத் துரத்திக் கொண்டிருந்தார். நான் அடிவிழக் கூடாது என்பதற்காக மேசைகளுக்குள்ளால் தடக்குப்பட்டு ஓடி... விழுந்து... பேசாமல் அடியே வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.....

ம்ம்ம்... நம்ம தூயவனும் கொழும்பு இந்து..! எதுக்கும் நான் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டிருக்கிற‌து நல்லம்..!

:D:):unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(பெண்களைப் பார்த்து)... வாயைத் திறந்து வைச்சிருந்தால் தான்பா கொழும்பு இந்து.... தகுதியே இல்லை உங்களுக்கு டங்குவார்..

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி பூஜை

சகலகலாவல்லிமாலை

1.

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்

தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,

உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.

நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்

கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு

களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.

பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.

சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை

கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்

பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பொருள்:

1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை

அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?

2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!

3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை

பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய

செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்

குளிப்பதற்கு என்னால் இயலுமோ?

4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்

சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!

சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!

5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?

6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும

் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்

கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பணி செய்தீர்கள் தூயவன்....."பொருள் விளக்கம் அறிந்து படிக்கும் போது இன்னமும் மனதில் ஆழமாய் பதியும்..

நிச்சயம் நவராத்திரி நாட்களின் போது படியுங்கள். சுருதியை விட பக்தி முக்கியம்.:)

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி என்றாலே இனிய மாணவப் பருவ ஞாபகம் தான் வரும் .

இணைப்புக்கு நன்றி தூயவன் , நுணாவிலான் .

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி என்றாலே இனிய மாணவப் பருவ ஞாபகம் தான் வரும் .

இணைப்புக்கு நன்றி தூயவன் , நுணாவிலான் .

வராத பின்ன எத்தனை பெண்களின் பிரசாதங்களை பறிச்சிருப்போம் தமிழ்சிறி நினைவிருக்கா :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன்! நல்ல பதிவு!!

புத்தகத் துள்ளுறை மாதே, பூவில் லமர்ந்திடு வாழ்வே!

வித்தகப் பெண்பிள்ளை நங்காய், வேதப் பொருளுக்கிறைவி!

முத்தின் குடையுடையாளே, மூவுலகந் தொழுந் தேவி!

செப்பு கவித்தன முலையாய், செவ்வரி யோடிய கண்ணாய்!

முத்து நிறைத்த வெண் பல்லாய், முருக்கம் பூ மேனி நிறத்தாளே!

தக்கோலம் தின்ற துவர் வாயாய், சரஸ்வதி யென்னும் திருவே!

எக்காலும் முனைத் தொழுவோம், எழுத்தறி புத்தி பண்ணி வைப்பாய்!

ஆக்காய் எம் பெரு மாட்டி, அழகிய பூவணை மேதாய்!

நோக்காய் எம்மிடி தீர, நொடிக்கும் பிராம்மணத்தி நோக்காயே!

சாலிநெல் லரிசிகொண்டு, சரஸ்வதி பூசை பண்ணி!

பாலொடு பழத்தை நிரப்பி, பராவித் தொழுவோம் நங்காய்!

நங்காய் நங்காய் நமஸ்து, ஞானக் கொழுந்தே நமஸ்து!

கல்விக் கரசே நமஸ்து, கணக்கறி தேவி நமஸ்து!

சொல்லும் பொருளே நமஸ்து, சூக்கும ரூபிஈ நமஸ்து!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.