Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் இமாலயத் தவறு-ஜே.கே. சின்ஹா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லி, ஒக்டோபர் 02

இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான பங்களிப்பைக் கூடுதலாகச் செய்ய முன்வராமல் தவறு இழைத்திருப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு நேர்ந்த இமாலயத் தவறாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் புலனாய்வு முகவர் நிறுவனமான "றோ'வின் முன்னாள் தலைவரான ஜே.கே. சின்ஹா எச்சரித்திருக்கிறார்.

இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருந்ததன் மூலம் பெரும் இராஜதந்திரத் தவறை இந்தியா செய்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

""இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஓரமாக ஒதுங்கியிருந்து பார்வை யாளனாக இருப்பதோடு திருப்தியடைந்து விட்டது. இதற்கு விடுதலைப் புலிகள் பற் றிய ஐயமும், அவநம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்'' என்றும் சின்ஹா குறிப்பிடு கிறார்.

"றோ' எனப்படுகின்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு நிறுவனமே இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவர் நிறுவனமாகும். இதன் தலைவராக ஜே.கே. சின்ஹா கடந்த வருடம் வரை பதவி வகித்து பணியாற்றியி ருக்கிறார்.

"இந்தியன் டிபென்ஸ் றிவியூ' என்ற இந்தியப் பாதுகாப்பு விவகார சஞ்சிகையில் இவர், "தெற்காசிய அயல் பரப்பில் இந்தியா தனது பாதையை இழந்து வருகிறது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையிலேயே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா ஓரத்தில் நின்று பார்வையாளனாக இருப்ப தோடு திருப்திப் படாமல் தீவிர பங்களிப்பைச் செய்திருக்க வேண்டியதன் அவசியத் தைத் தொட்டுக் காட்டியிருக்கிறார். நல்ல நோக்கத்தை வெளிக் காட்டும் நல்வார்த்தை களும், வாய் ஜாலங்களும் இன்று கொள்கைப் பிடிமானத்துக்கும், நம்பகத் தன்மைக்கும் மாற்றீடாகி வருகின்றன என்றும் இவர் கட்டுரையில் ஒரு இடத்தில் அவர் குறிப்பிட்டிருக் கிறார்.

சமாதான முன்னெடுப்புகள் படிப்படியாக சிதைந்து போவதற்கு இந்தியா அனுமதித்து முற்றிலும் ஒரு பார்வையாளனாகவே இருந்து வந்திருக்கிறது.

இலங்கையில் மீண்டும் ஒரு சிவில் யுத் தம் தலைதூக்கும்போது இந்தியா பாரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சின்ஹா தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

""இலங்கையின் கள நிலைமையை இந் தியா முற்று முழுதாக விளங்கிக் கிரகித்துக் கொள்ள இயலாமையும், கடந்த கால கசப் பும், சமாதான சக வாழ்வுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக விடுதலைப் புலி களுடன் தொழில் உறவைப் பேணுவதற்குத் தயக்கம் காட்டுவது போன்றவை எல்லாம் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு இழைக்கப்பட்ட இமாலயத் தவறு என்பதை நிரூபிக்கப் போகிறது'' என்றும் சின்ஹா எச் சரித்திருக்கிறார்.

ஒஸ்லோ

உடன்பாடு

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலி களுக்குமிடையே 2002 ஒஸ்லோவில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு புதுடில்லி தவறிவிட்டது என்றும் சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சைச் சாடியிருக்கிறார். இந்த ஒஸ்லோ உடன்படிக்கையானது, சமஷ்டி ஆட்சியமைப்பு முறையிலான தீர்வொன்றைப் பரிசீலிப்ப தற்கு விடுதலைப் புலிகளை முதல் தடவை யாக இணங்க வைத்திருந்தது. இதனை முன் னெடுத்திருந்தால் அவ்வளவு சிகக்கல்கள் ஏற்பட்டிருக்காது.

ஒஸ்லோ பேச்சில் ஏற்பட்ட ஆக்கபூர்வ மான முன்னேற்றத்தைக் கட்டி வளர்ப்பதற் குப் பதில் புலிகள் மீதுள்ள ஐயம், அவநம் பிக்கை காரணமாக கொள்கை முன்னெடுப்புகள் தொடர்பான செயல்களை மழுங்கடிப் பதற்கு இடமளித்து ஓரமாக நின்று வெறும் பார்வையாளனாக இருப்பதோடு இந்தியா திருப்திடைந்து கொண்டது என்றும் சின்ஹா இந்தியா மீது குற்றஞ்சாட்டுகிறார்.

சந்திரிகா மீதும்

குற்றச்சாட்டு

தனது இந்தக் கட்டுரையில் அவர், முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை யும் சாடியிருக்கிறார்.

வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிர் வாக சபை ஒன்றை நிறுவுவதற்கான யோசனை ஒன்றை விடுதலைப் புலிகள் ரணில் விக்கி ரமசிங்கவின் அரசிடம் 2003ஆம் வருட பிற்பகுதியில் சமர்ப்பித்து ஒரு சில நாள் களுக்குள் ரணிலின் அரசை ஆட்டம் காண வைத்து கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுத் ததற்காகவே சந்திரிகா குமாரதுங்கவை அவர் சாடியிருக்கிறார்.

ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்கு சந்தி ரிகா குமாரதுங்க அரசியலுக்கு ஒவ்வாத அகௌரவமான, அரசியலமைப்புக்கு விரோத மான முறையில் நடக்க முற்பட்ட பொழுது, இந்தியாவும், சர்வதேச சமூகமும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய அத்தனையையும் செய்திருக்க வேண்டும்; செய்யத் தவறிவிட்டன.

விடுதலைப் புலிகள் தொடர்பான இந் தியாவின் மாறுபட்ட போக்கும் சமாதான முன்னெடுப்புகளுக்குப் பின்னால் நின்று அதற்கு ஆதரவான முறையில் செயற்படத் தவறியமையும், இந்தியாவுக்குப் பாரிய செலவைத் தரப் போகிறது. இந்தியா பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் எழும் உணர்வலைகள் காரணமாக, விடுதலைப் புலிகளைத் தோற் கடிப்பதற்கு இலங்கை அரசக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்க முடியாது.

இதேவேளை, புலிகள் விடயத்தில் அவர் களுக்கு எதிரான அறிக்கைகளை படாடோப மாக வெளியிட்டு வந்தமையால் சமாதானப் பேச்சு மூலம் தீர்வை முன்னெடுப்பதற்கு இருந்த வழிகளை மறைத்து விட்டிருக்கிறது என்றும் சின்ஹா எழுதியிருக்கிறார்.

இலங்கை அரசையும் சின்ஹா விட்டு வைக்கவில்லை.

இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் வலுக்கட்டாயமாக வெளி யேறச் செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து சதிசெய்த இலங்கை அரசு, இப் பொழுது விடுதலைப் புலிகளுக்குக் கடிவாளம் போட்டு அதிகாரம் செலுத்துவதற்கு புது டில்லி அரசுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அதேநேரம், நிலையான சமாதானம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பிராந்திய வல் லரசு என்ற பங்களிப்பை வழங்குமாறும் கேட்டு நிற்கிறது என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அணுகுமுறையும் முன்னாள் `றோ' தலைவரின் கருத்தும்

இந்தியாவின் வெளிவிவகார புலனாய்வு நிறுவனத்தின் (றோ) முன்னாள் தலைவரான ஜே.கே.சின்ஹா இலங்கை நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அண்மைக்கால அணுகுமுறைகள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த விமர்சனங்கள் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான 2002 போர் நிறுத்த உடன்படிக்கை சீர்குலைய ஆரம்பித்த கால கட்டத்தில் `றோ'வின் தலைவராகப் பதவி வகித்தவர் சின்ஹா. இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு என்ற சஞ்சிகையின் பிந்திய இதழில் `தெற்காசிய அயலகத்தில் இந்தியா அதன் பாதையைத் தவறவிடுகிறது' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலேயே அவர் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

சின்ஹாவின் பார்வையில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் கூடுதலான அளவுக்கு தீவிர ஈடுபாட்டுடனான பங்கை ஆற்றுவதற்கு தவறியதன் மூலம் இந்தியா அதன் வெளியுறவுக் கொள்கையில் கவனக்குறைவின் விளைவாக பாரிய தவறைச் செய்துவிட்டது. `விடுதலைப் புலிகள் தொடர்பான அவநம்பிக்கை காரணமாக இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஓரமாக நிற்பதில் இந்தியா திருப்தி கண்டது. நம்பகத்தன்மையானதும் பயனுறுதியுடையதுமான கொள்கையொன்றைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நல்லெண்ணத்தை வெளிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு வெற்று ஆரவார அறிக்கைகளையே இந்தியா வெளியிட்டது. சமாதான முயற்சிகள் படிப்படியாக சீர்குலைவதற்கு இந்தியா அனுமதித்தது. இலங்கை விவகாரத்தில் உண்மையில் இந்தியா வெறும் பார்வையாளராகவே இருக்கிறது. இலங்கை மீண்டும் உள்நாட்டுப் போருக்குள் அமிழும் நிலையில், இந்தியா பெரும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். இலங்கையில் உள்ள யதார்த்த நிலைமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தியாவினால் இயலாமல் போனமையும் கடந்த காலத்தை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளுடன் விவகாரங்களைக் கையாளத் தயங்கி, இணக்கத் தீர்வொன்றை வகுப்பதற்கு உதவி செய்ய முடியாமல் போனமையும் அதன் பாரிய ஒரு வெளியுறவுக் கொள்கைத் தவறாக அமையக்கூடும்' என்று சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

இனநெருக்கடிக்கு ஒரு சமஷ்டித் தீர்வைக் காண்பது குறித்து ஆராய்வதற்கு முதற்தடவையாக விடுதலைப் புலிகள் இணங்கிக் கொண்ட 2002 ஒஸ்லோ இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கு தவறியமைக்காக புதுடில்லியை சின்ஹா கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 2003 அக்டோபரில் விடுதலைப் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்த உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சீர்குலைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவை கடுமையாகச் சாடியிருக்கும் சின்ஹா, சமாதான முயற்சிகளை குந்தகப்படுத்திய அந்த நடவடிக்கையில் திருமதி குமாரதுங்க இறங்குவதைத் தடுப்பதற்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் சாத்தியமான சகலதையும் செய்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான இந்தியாவின் இருமனப் போக்கும் சமாதான முயற்சிகளுக்குச் சாதகமாக இலங்கையில் அழுத்தத்தைப் பிரயோகிப்பதில் அதற்கு இருக்கும் இயலாமையும் இந்தியாவுக்கு பெரும் பாதகமாக அமைந்துவிட்டதென்பதே முன்னாள் `றோ' தலைவரின் அபிப்பிராயம். இலங்கை நெருக்கடியில் தான் ஆற்றக் கூடிய பங்கு தொடர்பில் கொண்டிருக்கும் சுய சந்தேகங்கள் காரணமாக தீவிர ஈடுபாட்டைக் காண்பிக்கத் தயங்குகின்ற இந்தியா, சர்வதேச சமூகம் தீர்க்கமான பங்கை ஆற்றுவதற்கு முனையும் போது ஐயுறவுடன் நோக்குகின்றது என்று இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் நம்புவதாக சின்ஹா குறிப்பிட்டிருக்கிறார். சமாதான முயற்சிகள் படிப்படியாகச் சீர்குலைந்தமையும் மீண்டும் மோதல்கள் மூண்டமையும் இந்தியாவுக்கு இலங்கை தொடர்பான அதன் பாதுகாப்பு அக்கறைகளைப் பொறுத்தவரை பாரிய பின்னடைவு என்பது அவரின் முடிவு.

சின்ஹாவின் விமர்சனங்கள் இந்திய வெளியுறவு அமைச்சு இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பில் கையாண்ட அணுகுமுறைகள் மீதான தாக்குதல்களே என்பதில் சந்தேகமில்லை. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு `றோ' தலைவரின் கருத்துகள் என்று நோக்கும் போது அவற்றுக்கு இருக்கக் கூடிய கனதி குறித்து அனேகமாக ஒருவித அலட்சியம் தோன்றுவதும் பதவியிலிருந்த போது அவர் என்ன செய்தார் என்று கேள்வியெழுப்புவதும் இயல்பானதே. ஆனால், `றோ'வின் தலைவராக பதவி வகித்த வேளையில் சின்ஹா இப்போது முன்வைத்திருக்கும் விமர்சனங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்திருப்பார் என்று உறுதிபட எவராலும் கூறமுடியாது. இலங்கை தொடர்பான புதுடில்லியின் அண்மைக் கால அணுகுமுறைகள் குறித்து இந்திய உயர் அதிகார மட்டத்தில் கணிசமான சுய விமர்சனங்கள் கிளம்புகின்றன என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாக சின்ஹாவின் கருத்துகளை நோக்க முடியும் என்பது எமது அபிப்பிராயம்.

தற்போதைய அணுகுமுறையையே தொடர்ந்தும் கடைப்பிடித்தால் இலங்கை நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியிலுமே உருப்படியான பங்களிப்பை இந்தியாவினால் செய்ய முடியாது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் அணுகு முறைகளின் அடிப்படைகளில் மாற்றம் தேவையென்று இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற வேளையில், உருப்படியான பங்களிப்பை இந்தியாவினால் செய்ய முடியாமல் போனதற்கு அடிப்படையாக அமைந்த அணுகுமுறைகள் குறித்து சின்ஹா செய்த விமர்சனங்கள் கவனத்தில் எடுக்கப்படக்கூடியவை. இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் சுயாதிபத்தியத்தை பேணுவதில் அசைக்க முடியாத பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் பேச்சுவார்த்தைகள் மூலமாக இலங்கைச் சமுதாயத்தின் சகல பிரிவினரதும் நியாயபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய கூடுதல் பட்ச அதிகாரப் பரவலாக்கல் தீர்வை காண வேண்டுமென்றும் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது.இந்த `வாய்ப்பாட்டை' வெறுமனே இந்தியா ஒப்புவித்துக் கொண்டு மாத்திரம் போதாது. இலங்கையில் நிலைவரங்கள் மேலும் படுமோசமாக சீர்குலைந்து போகக்கூடிய நிகழ்வுப் போக்குகளை தடுத்து நிறுத்த உருப்படியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டிய தருணமிது.

-தினக்குரல்

ஈழப்பிரச்சினையில் இந்தியா எப்போதும் இமாலயத் தவறு தான் செய்து வருகிறது..... நண்பன் யார் - எதிரி யார் என்று இந்தியாவின் வடக்கில் இருக்கிறவர்களுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.....

இதைத் தானே நாங்கள் இங்கே பக்கம் பக்கமாகச் சொல்லுகிறோம் லக்கி, பாக்கிஸ்த்தான் பம்பாயில் மட்டும் அல்ல இனி தமிழ் நாட்டுக்குள்ளும் ஊடுருவும் சாத்தியம் தான் அதிகாமாக இருக்கிறது.முசாராப்பின் அண்மைய கருதுக்களும்,சீனா,பாக்கிஸ்த்

இதேபோலத்தான், இஸ்லாமியர்கள் போராடினால் முஸ்லீம் பயங்கரவாதிகள் என்பது போல, புலிகளை இந்து தீவிரவாதிகள் எண்று அழைப்பதில் தவறு இல்லை எண்றும் அமெரிக்காவில் முசராப் பேசியுள்ளார்...!

இது அவர் இலங்கையில் வைத்திருக்கும் கண்ணைத்தான் காட்டுகிறது... உலகம் தீவிரவாதம் எண்று இஸ்லாமியர்களை நோக்க அவர் அதற்க்குள் புலிகளையும் சேர்த்து மதச்சாயம் போடுகிறார்... ஆதலால் இலங்கையில் பாக்கிஸ்தானிய படையினர் யாராவது வந்து இறந்துபோனால் பாக்கிஸ்தான் மக்களுக்கு இந்துக்களுக்கு எதிரான போரில் இறந்தார்கள் எண்று விளக்கம் சொல்ல இப்போதே அடித்தளம் போடுகிறார் போலத்தான் இருக்கின்றது....!

இலங்கையில் இறங்குவதை அவர்களால் கற்பனை செய்யலாம் அன்றி வேறொன்ரும் செய்யமுடியாது அவ்வாறு வந்தால் அதுவே இலங்கையரசு தமிழிழருக்கு செய்யக்கூடிய முதல் உதவியாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.பல்மதங்களை கொண்டவர்களை சேர்ந்த மதச்சார்பற்ர அமைப்பு புலிகள் அமைப்பு அவர்களை இந்து தீவிரவாதிகள் எண்டு சொன்னதில் இருந்து முசாரப்பு ஒரு கேனையன் எண்டுதான் நினைக்கின்ரேன் என்னதான் இலங்கையில் இந்தியபடைகள் அட்டூழியம் செய்தாலும் அதனை இங்கு விமர்சித்து எழுதினாலும் கார்கில் போர் நேரம் இந்தியா தொக்க வேண்டும் எண்டு என் மனதால் கூட நினைத்ததில்லை ஏன் ஈழத்தவர் ஒருவர் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை ஏனேனின் இந்தியா எம் உறவு நாடு.அதைப்போல இந்தியர்களும் நினைப்பார்களா என்பது எனக்கு தெரியாது ஆனால் நாம் படும் துன்பம் கண்டு தமிழ்நாட்டு உறவுகள் குரல் கொடுக்கும் போது ஒரு பெருமிதமும்,ஒரு இனம் புரியாத நம்பிக்கையையும் அர்படுவது உண்டு அது எம் சகோதரர்கல் எம்மை கைவிடார் என்ற ஒரு உணர்வே

முல்லைத்தீவு படுகொலைகளில் குண்டுவீசிய விமானங்கள் வெளிநாட்டு விமானிகளால் செலுத்தப்பட்டது என்று பேனா விபச்சாரி எழுதியிருந்தவர். அது எந்த நாடு என்று கொஞ்சம் யோசித்தால்.... அவர்களிற்கு கிடைக்கும் அனுபவங்கள் சந்தர்ப்பங்கள் என்ன வழிகளில் பயன்படக்கூடியது என்றும் சிந்தித்தால்...

இந்தா பேனா விபச்சாரி விடையத்தில் இன்னும் ஒன்றை அண்மைக்காலங்களில் கவனிக்கலாம். மகிந்த மிதவாதப் போக்கை கையாழுகிறார் இனப்படு கொலை செய்கிறார் கிழக்கிலிருந்து தமழர்களை விரட்ட முயற்சிக்கிறார் இராணு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது இடங்களிற்கான உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அரங்கேற்றப்படுகிறது என்றெல்லாம் எழுதிறார். ஆனால் உவர் அப்பட்டமாக புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது மாத்திரம் தான் பிரித்தானியா பிபிசியும் கனடா சிபிசியும் இலங்கை ஆய்வாளர் (Sri Lankan Analyist) என்று கருணா விவகாரத்தில் கருத்துக்கள் கேட்டவை. இப்ப உள்ள நிலமைகள் பற்றி இவரிடம் Canada based Sri Lanka Analyist என்று கருத்து கேக்கினமோ?

இது இந்த செய்தி நிறுவனங்களின் கபடத்தின் இன்னொரு வெளிப்பாடு தானே? அது மாத்திரமல்ல அந்த பேனா விபச்சாரிக்கு விளங்கிறதுக்கும் 1 இருக்கு. அவர் புலி எதிர்பு புராணம் படித்தால் தான் அந்த புராணம் தேவையான காலகட்டங்களில் அவர் ஒரு Canada based Sri Lanka Analyist தெரிவார் மற்றப்படி அவர் பூச்சியம் தான்.

என்னதான் இலங்கையில் இந்தியபடைகள் அட்டூழியம் செய்தாலும் அதனை இங்கு விமர்சித்து எழுதினாலும் கார்கில் போர் நேரம் இந்தியா தொக்க வேண்டும் எண்டு என் மனதால் கூட நினைத்ததில்லை ஏன் ஈழத்தவர் ஒருவர் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை

ஏன் நான் இந்தியாவின் வெற்றியை எமது வெற்றியாக தான்

ஆன்ந்தம் அடைந்தேன்.

இந்தியா பாகிஸ்தானிடம் மட்டும் இல்லை வேற எந்த நாட்டுடனும் தோல்வி என்பதை எம்மால் ஏற்று கொள்ள முடியாது,,,,,,,,,,,,

இதேபோலத்தான், இஸ்லாமியர்கள் போராடினால் முஸ்லீம் பயங்கரவாதிகள் என்பது போல, புலிகளை இந்து தீவிரவாதிகள் எண்று அழைப்பதில் தவறு இல்லை எண்றும் அமெரிக்காவில் முசராப் பேசியுள்ளார்...!

இது அவர் இலங்கையில் வைத்திருக்கும் கண்ணைத்தான் காட்டுகிறது... உலகம் தீவிரவாதம் எண்று இஸ்லாமியர்களை நோக்க அவர் அதற்க்குள் புலிகளையும் சேர்த்து மதச்சாயம் போடுகிறார்... ஆதலால் இலங்கையில் பாக்கிஸ்தானிய படையினர் யாராவது வந்து இறந்துபோனால் பாக்கிஸ்தான் மக்களுக்கு இந்துக்களுக்கு எதிரான போரில் இறந்தார்கள் எண்று விளக்கம் சொல்ல இப்போதே அடித்தளம் போடுகிறார் போலத்தான் இருக்கின்றது....!

மன்னிக்கவும் தலை. எனக்கு தெரிந்த ஈழத்தமிழர்களே சிலர் கூட ஈழப்பிரச்சினையை மதப் பிரச்சினையாகத் தான் சொல்லுகிறார்கள்..... தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள்.....

இனத்துக்கும், மதத்துக்கும் வித்தியாசம் காணமுடியாதவர்களால் குழப்பம் தான் எல்லாருக்கும் மிஞ்சுகிறது..... :lol:

இல்லை லக்கி அது களயதார்த்தம் தெரியாத மூடர்களின் கதை புலிகள் இயக்கத்தில் முஸ்லீம்கலூம் கிறீஸ்தவர்களும் இந்துக்களும் இருக்கிரார்கள்.பாதிக்கப்பட்

இல்லை லக்கி அது களயதார்த்தம் தெரியாத மூடர்களின் கதை புலிகள் இயக்கத்தில் முஸ்லீம்கலூம் கிறீஸ்தவர்களும் இந்துக்களும் இருக்கிரார்கள்.பாதிக்கப்பட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.