Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில்! Photo in

Featured Replies

திருகோணமலை மாவட்டம் சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் கனவான சொந்த மண்ணில் எப்போது குடியேறுவார்கள்?

யுத்தம் முடிந்து எல்லோரும் சிறப்பாக, வசதியுடன் வாழ்கின்றனர் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் வலி வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் இன்றும் இருக்கின்றன.  

sampur-1.jpg

2006ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களை சொந்த நிலத்தில் குடியமர்த்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தேவையான 500 ஏக்கர் நிலத்தை தவிர ஏனைய பகுதிகளிலாவது மீளக்குடியேற வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்.

ஆனாலும், முகாமாக இன்னும் பதிவு செய்யப்படாத கட்டைப்பறிச்சான் முகாம் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் அரச தரப்புத்தான் கூறவேண்டும்.

sampur-2.jpg

சம்பூரை சுற்றிப் பார்க்கவே இத்தனை ஆவலாய் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த நிலமான சம்பூர் நிலத்தில் வாழவேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருக்கும்.

முகாம்களில் உள்ள 266 குடும்பங்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளில் வசிப்பவர்கள் எனக் கூறும் 825 குடும்பங்களையும் (தரவுகள் மூதூர் பிரதேச செயலகம்2014) அலைக்கழிப்பது இதற்கு முதலும் நடந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்க தேவையான நிலத்தை இந்தியா எடுக்கவில்லை என்றாலும் சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அந்த இடத்திற்கு போட்டி போடுகின்றன. இந்தியாவினால் சம்பூர் மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்களும் அல்லற்பட்டிருக்கின்ற நிலையில் 1500 இந்திய வீடமைப்பை வழங்கி சம்பூர் மக்களின் குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறது அரசு.

முதலீட்டு ஊக்குவிப்பு நிலையங்கள் அமைக்க அரசு எடுத்துள்ள காணிகள் மக்களுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா சம்பூர் மக்களுக்காக கருணை காட்டினாலும் பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தீர்வுக்கு வழிகாட்டியாக இருக்குமா என்பதும் சந்தேகமே. சிங்கள மயமாக்கப்பட்டு வரும் இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்வதை விரும்புமா? எனவே, தான் இன்று திருகோணமலைப் பகுதியில் தமிழர் வீதத்தை விட சிங்களவர், முஸ்லிம்களின் வீதம் அதிகரித்துள்ளது.

sampur-3.jpg

திருகோணமலை கடற்கரை மீது உலக நாடுகளுக்கு ஒரு காதல் இருக்கிறது. அந்த அடிப்படையிலும் சம்பூர் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கடற்தொழில் செய்ய முடியாமல் பட்டினி கிடக்கின்றனர். கப்பல் நிறுத்த இயற்கையான புவியியல் காரணிகளை கொண்ட கிழக்கு கடற்கரையோரங்களை தற்போது இலங்கை கடற்படை ஆக்கிரமித்துள்ளது. இருந்தபோதும் சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இந்த கடற்கரையோரத்தை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது.

எது எப்படியாக இருந்தாலும் சொந்த நிலத்தில் வாழவேண்டும் என்றுள்ள சம்பூர் மக்களுக்கு சம்பூருக்குள்ளேயே வாழவழிவகுக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் மீள்க்குடியேற்றத் தீர்வும் அடங்கும்.http://www.pathivu.com/news/33819/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகளினதும் கிழக்கு மக்களின் அக்கறையின்மையும் இதற்கு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாயில் விகாரை.. பண்ணையில் பூங்கா.. யாழ்ப்பாணத்துக்கு புகையிரதம்.. அதாவது தொடரூந்து.. என்றதும் ஓடி வந்தவர்களை எல்லாம்.. இங்கு காணேல்லையே..?????!

 

ஒருவேளை சிங்களத்தின் யதார்த்த முகத்தை அவர்களுக்கே தரிசிக்க தயக்கம் போல..!!

 

யாழ் கள நிர்வாகிகள் இந்தக் கருத்தை அகற்ற வேண்டாம். ஏனெனில்.. சில உண்மை முகங்களை காட்ட இது உதவும்..!!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது? தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசிய அரசியல் செய்வதால் - இப்படியான மக்களுக்கு உதவும் நிலையில் ஒரு நேர்மையான தமிழ் அரசியல் வாதியும் இல்லை.

அரசோடு நிப்பவர்களுக்கு அவர்கள் சுயநலமே முக்கியமாக தெரிகிறது.

முசுலீம்களை பொறுத்த மட்டில் பதியுதீன் போன்றவர்கள் இப்படிப் பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.

தமிழ் மக்களை பொறுத்த மட்டில் அவர்களின் உரிமைக்காக அரசுடன் பரிந்து பேச அப்படி யாரும் இல்லை.

இதை ஆங்கிலத்தில் catch 22 என்பர். தமிழ் அரசியல்வாதிகள் அரசோடு ஒண்டினால் இப்படியான மக்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம் - ஆனால் சமஸ்டி சுயநிர்ணயம் எல்லாம் படுத்துவிடும்.

சமஸ்டிக்கும் சுயநிர்ணயதுக்கும் தேசியத்துக்கும் கொடி பிடித்தால் - மக்களின் அன்றாட அவலங்களை கூட தீர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவெள்ளிகளே எங்கே போய்விட்டீர்கள். நீங்கள் சிங்களப் பாசறை ஏகியது தெரியாமல் மக்காள் இன்னும் திண்டாடுகிறார்களே.

 

வடக்கின் வசந்தவான்களே எங்கே போய் விட்டீர்கள். நீங்கள் சிங்களக் குகை போய் 3 தசாப்தங்கள் ஆகியும்... மக்காள் உங்கள் இருப்பிடம் தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

 

இத்தோடு.. எல்லா தமிழர்களையும்.. சிங்களவர்களாகவும் அழைக்கிறார்கள். வசதி எப்படி..???! இதுவே சம்பூர் நிலப்பறிப்புக்கு தீர்வாகுமாம்..! இது அவர்களின் கோரிக்கையும் கூட..! மக்காள் விழிச்சு எழும்புங்கோ. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்,

உங்கள் ஆராய்ச்சிக்கு, அதன் எடுகோளுக்கு, இந்த திரியில் நல்ல ஆதாரம் கிடைக்குமாப்போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

தயவுசெய்து இதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

 

யாழ் களத்திலிருந்து எங்களுக்குள்ள அடிபடாம, இந்த செய்திகளை ஆதாரங்களுடன் நாம் வசிக்கும் நாட்டின் பத்திரிகைகளிக்கு அனுப்பலாம், freelance பத்திரிகையாளார்கள் blog எழுதுபவர்களுக்கு அனுப்பலாம், reddit போன்ற தளங்களில் பதியலாம். உதாரணம் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட செய்தி reddit politics இணைக்கப்பட அது எத்தனை மக்களை சென்றடைந்தது என்று இந்த திரியில் பார்க்கலாம்.  (http://www.reddit.com/r/worldnews/comments/18t3wx/photographs_have_emerged_depicting_the_execution/). இலங்கை யுத்தம், புலிகளின் போர் முறை போன்ற பல விடயங்களை அங்கே வெளிநாட்டவர்கள் விவாதிக்கிறார்கள். சிங்களவர்கள் பலர் அங்கே தமிழர்களுக்கு எதிரான செய்திகள், பரப்புரைகளை செய்கிறார்கள். 
 
சும்மா தமிழில பந்தி பந்தியா வியாக்கியானம் எழுதுவது மட்டுமே தேசியத்திற்கு நாம் செய்யும் கடமை என்று நாம் இருந்தா எதுவும் நடக்காது. 
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் களத்திலிருந்து எங்களுக்குள்ள அடிபடாம, இந்த செய்திகளை ஆதாரங்களுடன் நாம் வசிக்கும் நாட்டின் பத்திரிகைகளிக்கு அனுப்பலாம், freelance பத்திரிகையாளார்கள் blog எழுதுபவர்களுக்கு அனுப்பலாம், reddit போன்ற தளங்களில் பதியலாம். உதாரணம் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட செய்தி reddit politics இணைக்கப்பட அது எத்தனை மக்களை சென்றடைந்தது என்று இந்த திரியில் பார்க்கலாம்.  (http://www.reddit.com/r/worldnews/comments/18t3wx/photographs_have_emerged_depicting_the_execution/). இலங்கை யுத்தம், புலிகளின் போர் முறை போன்ற பல விடயங்களை அங்கே வெளிநாட்டவர்கள் விவாதிக்கிறார்கள். சிங்களவர்கள் பலர் அங்கே தமிழர்களுக்கு எதிரான செய்திகள், பரப்புரைகளை செய்கிறார்கள். 
 
சும்மா தமிழில பந்தி பந்தியா வியாக்கியானம் எழுதுவது மட்டுமே தேசியத்திற்கு நாம் செய்யும் கடமை என்று நாம் இருந்தா எதுவும் நடக்காது. 

 

நல்லதொரு  விடயத்தை சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்..

 

ஆனால் உங்களை நாலு விரல் காட்டுதே ஐயா.. :(

தேசியம் பேசுபவர்கள் தான் அதையும் செய்யணும் என்பது விதியா??? :(  :(

நல்லதொரு  விடயத்தை சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்..

 

ஆனால் உங்களை நாலு விரல் காட்டுதே ஐயா.. :(

தேசியம் பேசுபவர்கள் தான் அதையும் செய்யணும் என்பது விதியா??? :(  :(

 

பந்தியா வியாக்கியானம் எழுதுவது மட்டுமே தேசியத்திற்கு நாம் செய்யும் கடமை என்று நாம் இருந்தா எதுவும் நடக்காது. 
 
"எழுதுவது மட்டுமே" என்பதை நீங்கள் கவனிக்க மறந்த்துவிட்டீர்கள். நானும் செய்கிறேன் நீங்களும் செய்யுங்கள் என்பது தான் எனது கோரிக்கை.  யாழ் களத்தினுள் நாம் மாறி மாறி வசைபாடுவதால் எதுவும் நடந்து விடாது என்பதை தான் கூற வந்தேன். இங்கு சிலரின் பதிவுகள் அப்படித்தான் இருக்கின்றன,
 
எமது விவாதங்கள் சர்வதேசத்தை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.   

உங்கள் நாட்டவர் அதிகம் வாசிக்கும் இணையதளங்களில் இவ்வாறான செய்திகள் இடம்பெற செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளையும் அவ்வாறே செய்ய தூண்டுங்கள். இணையதளங்களில் வரும் செய்திகள் பலவற்றில் comments sections இருக்கும். உதாரணத்திற்கு காஸா பற்றி ஒரு செய்தி வந்தால் அதன் comments section இல் இலங்கை இறுதி யுத்தத்திலும் இவ்வாறே நடந்தது என்று channel 4 இணைப்பை பதியலாம். அது எமது யுத்தம் பற்றி எதுவும் தெரியாத ஆனால் மனித உரிமை விடயங்களில் ஆர்வம் உள்ள மக்களை சென்றடைய வாய்ப்புகளை உருவாக்கும். இதை தான் நான் செய்து வருகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

 

பந்தியா வியாக்கியானம் எழுதுவது மட்டுமே தேசியத்திற்கு நாம் செய்யும் கடமை என்று நாம் இருந்தா எதுவும் நடக்காது. 
 
"எழுதுவது மட்டுமே" என்பதை நீங்கள் கவனிக்க மறந்த்துவிட்டீர்கள். நானும் செய்கிறேன் நீங்களும் செய்யுங்கள் என்பது தான் எனது கோரிக்கை.  யாழ் களத்தினுள் நாம் மாறி மாறி வசைபாடுவதால் எதுவும் நடந்து விடாது என்பதை தான் கூற வந்தேன். இங்கு சிலரின் பதிவுகள் அப்படித்தான் இருக்கின்றன,
 
எமது விவாதங்கள் சர்வதேசத்தை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.   

 

 

 

நன்றி  ஐயா

 

எமது இன்றைய  நிலையிலிருந்து மீளத்துடிக்கும் உறவுகளுக்கு

எம்மால் ஆனதைச்செய்யணும்

பேச்சல்ல செயலே இருக்கணும்

நூறுவீதம் உடன்படுகின்றேன்..

 

நானும் எனது பிள்ளைகளும் நிச்சயம் அதன்படி நடப்போம் என்பதை உறுதி  கூறுகின்றேன்

முடிந்தவரை

மற்றவரையும்  அவ்வாறு இருக்கவேண்டுகின்றேன்

என்னால் முடிந்தவரை

எல்லோரையும் அரவணைத்து அதன் வழி நடக்கமுயல்கின்றேன்

வெளியிலும் இங்கும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.