Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவராத்திரி கொண்டாட்டம் - IV & V

Featured Replies

வந்திட்டிங்களா?

கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

(கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது)

முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை!

அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக்காட்சியிலேயே காட்டினார்களே!

"குப்பை"

சரி என்று வேறு சில கடைகளுக்கு போனால், அங்கும் அசைவம் எடுப்பது கடினமாக இருந்தது. ஏன் எனில் சரஸ்வதி பூஜை ஆயிற்றே!

கந்தப்புவின்ற மனிசியும், களத்தில இருக்கிற சில சிட்னி வாழ் அன்பர்களுடைய மனைவிமாரும் சேர்ந்து கடலை, அவல் தான் சாப்பாடு.

இதில் சுண்டலை பாராட்ட வேண்டும். சிலரை மக்டோனல்ஸ்கு அழைத்து கொண்டு போனவர். ஆனால் திரும்பி வரும் போது பெடியின்ட க்ரடிட்காட் காலி!

அனைவரும் வந்திறங்கி சாப்பிட்டு முடியவே விடிகாலை 4 மணி. ஆக அனைவரும் படுத்து உறங்கி........ 3 மணியளவில் ஓபரா கவுஸ் செல்வதாக திட்டம்.

என் வீட்டில் சிலர், "உங்கள் அன்பன்" கான பிரபா அண்ணா வேட்டில் சிலர், சுண்டலின்ட வீட்டில வயதானவர்கள் (நம்பிக்கை அவ்வளவு தான்), அரவிந்தன் வீட்டில் சிலர், கந்தப்பு வீட்டில் தமிழ் அணி, புத்தனுக்கு ஏது வீடு (யூனியில எங்கட ஆக்கள இருக்க சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அய்யனார் சாமி (அது தாங்க மொடரேட்டர்ஸ்) எல்லாம் மோகன் அண்ணாவின் "பதுங்கி பாயும் " திட்டம் தான்!

திரைக்கு பின்னால்

வந்தவையில சிலர் படுக்க போய்ட்டினம். அதில சி*5 முக்கியம். இவை படுக்கிறதே சிறந்த உதவி.

மற்றவர்கள் யார் யார் என்ன வேலை நாளை செய்ய விரும்புகின்றார்கள் என சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

1. க்ளிக் புகைப்படக்கருவி - குளம்ஸ்

2. வீடியோ கருவி - அஜீவன் அண்ணா

3. வெண்ணிலா - சின்ன பிள்ளைகளை தான் பார்க்கிறேன் என்றார் (லொலி பப்புடன் இவரால் தான் முடியும்)

4. சுண்டல் - வரவேற்பு மேசையில் நிற்பது

5. கந்தப்பு

6. பெண்கள் அணி - சகலகலாவல்லி மாலை

7. நித்தி - சட்டம் சம்பந்தமாக எந்த பிரச்சனையும் வராமல் பார்ப்பது.

8. ஆச்சி மார் - பூஜைக்கு வேண்டியதை செய்வது

9. அப்புமார் - பேசாமல் ஒரு இடத்தில் இருப்பது

10. கனா பிரபா அண்ணா - நிகழ்ச்சி தொகுப்பாளர்

11. ஆதி - பூஜை முடிந்ததும் சர்கஸ் செய்வார்

12. ரசிகை - எள்ளுச்சமல்

13. மோகன் அண்ணா - தலை வலி மாத்திரைகளை தொடர்ந்து போடுவார்

14. சின்ன குட்டி - தற்சமயம் விளக்குகள் அணைந்தால் ஒளி குடுப்பார்

15. சாத்திரி - பூஜை செய்வார்

16. விஸ்ணு & கரி அண்ணா - பாடல்கள் ஒலிபரப்பு (சவுஸ் சிஸ்டம்)

17. குறுக்காலம் போவான் - கள உறவுகள் எங்கும் குறுக்கா போகாமல் பார்ப்பார்

18. சோழியன் - ஓடி ஓடி வந்தவர்களை உபசரிப்பார்

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

மற்றும் படி வாகனம், செலவு எல்லாம் தூயவன் & தூய இளிச்சவாய் க்ரூப் & கம்பனி

அனைத்தும் ஆயத்தம்... இனி ஓபரா கவுஸ் தான்....

  • தொடங்கியவர்

விழா ஆரம்பம்

மாலை 3 மணி, கள உறவுகள் எல்லாரும் வந்திறங்கும் நேரம். ஆனால் சிட்னி வாழ் கள உறவுகள் முன்னரே வந்து வேலைகள், அலங்காரங்கள் செய்துகொண்டிருந்தனர்.

முதலில் கந்தப்புவீட்டில் இருந்தவர்கள்:

அமைதியே உருவாக

வெள்ளை வேட்டி , சட்டை

தமிழில் உரையாடல்

சிலர் நெற்றியில் விபூதி

*ஓபரா கவுஸை எப்படி தமிழில் அழைப்பது என விவாதம் நடந்தது.

அடுத்து சுண்டல் வீட்டில் இருந்தவர்கள்:

- சின்னப்பு , முகத்தார் குழு

மடிச்சு கட்டின வேட்டி

ஒட்டகத்தில் வந்திறங்கிய முகத்தார்

கையில் போத்தல்

பெண்கள் அழகாக சேலை உடுத்து

ஆங்கிலத்தை தமிழில் கதைத்த படி சி*5

அடுத்து கானா பிரபா அண்ணா வீட்டில் இருந்தவர்கள்:

- ப்ளொக் குழு

கொண்டாட்டத்தை எப்படி தத்தமது ப்ளொக்கில் எழுதலாம் என யோசித்த படி

லக்கி ஓபரா கவுஸ் படிகளை கண்டதும் ஆனந்த கண்ணீர்? பின்ன அவர்ட கமல் ஆடின இடமாச்சே!

அடுத்து எனது வீட்டில் இருந்து பெண்கள் அணி:

சேலை

தாவணி

பொட்டு

பூ

அமைதி (பதுங்கி தாக்குவதற்கு)

தமிழில் உரையாடல்

சிலரை கண்டால் போட்டு தள்ளுவதாக திட்டம்

ரசிகை மட்டும் பரபரப்பாக - எள்ளு எரிந்துவிட்டதோ??

அடுத்து அரவிந்தன் வீட்டில் இருந்து:

- பெரும் படை

பல புதியவர்கள் இருந்ததால், அவர்களை வரவேற்கும் பொறுப்பு நாரதர் அண்ணா, சியாம் அண்ணா, வசம்பர் (சில வம்பர்களை வரவேற்க), ஆதி (சில நல்லவர்களை வரவேற்க):

கையில் டட்டூ

தலை முடி கலர் கலரா

ஆங்கிலம் அப்போ அப்போ

சத்தமாக பாட்டு

ஆளுக்கொரு எம்.பி.3 ப்ளேயர்

இவர்களை கண்டதுமே இளைஞன் அண்ணா தயாராகிவிட்டார்.

பூஜை ஆரம்பம்

ஒரு மாதிரி எல்லாரும் வந்து, பூசை ஆரம்பமாகிவிட்டது. சாத்திரி பெரிய கெட்டப்பில....மாலை எல்லாம் போட்டு, பட்டு வேட்டி, சால்வை... என்ன அப்பப்போ முனியம்மா சொல்ல முகம் கலவரம் ஆனது வடியா தெரிந்தது.

ஆஸ்திகர்களும், நாஸ்தீகர்களும் இருந்ததால்..பூஜையை சின்னதா முடிச்சிட்டம் (உண்மை என்ன என்றால், பூசை செய்ய வந்த்த சாத்திரிக்கு சரியா தேவாரம் கூட தெரியலை)

பெண்களை சகலகலாவல்லி மாலை பாட கேட்டால், நிலா மட்டும் இறுதியில் பாட மாட்டேன் என்று சொல்லிட்டா. அவக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை தேவையாம்.

பெண்கள் பாடி கொண்டிருக்கும் போது, இடையில் அவசர அவசரமாக ஒரு பெண்..சேலையில் அழகாக...வந்து பாட தொடங்கினார்.

யார் அந்த பெண்?

எல்லாருக்கும் அந்த பெண் யார் என்பதே நினைவாக இருந்தது..இதனால் கடவுள்களிடம் இருந்து வாங்கிகட்டிகொள்ள போவது உறுதியோ இல்லையோ? கல்யாணம் ஆனவர்கள் வீட்டில் வாங்க போவது உறுதி!

இன்னொரு விடயம் கறுப்பி! ஆள் கறுப்பென்றாலும் கொள்ளை அழகு! இவரை கிண்டல் செய்யலாம் என வந்தவர்களுக்கு பயங்கர ஏமாற்றம்!

பூஜையின் பின்னர், உணவு, பாட்டுக்கு பாட்டு, நடனம், பட்டிமன்றம், கவிதைகள், நாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

அத்துடன் பல வேறு நகைச்சுவையான விடயங்களும் நடந்தது...

இனி வர இருப்பவை விழாவில் அங்கங்கே நடந்த விடயங்கள், உரையாடல்கள், வெட்டு குத்துகள்..............

ஜனனி உணவகத்தில் சாப்பாடா எனக்கு வேணாம் சாமி :lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

அது தான் வேணாம்னு விட்டுட்டம்ல!

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் என்னை மாதிரி கறுப்பா அகிலன் சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் என்னை மாதிரி கறுப்பா அகிலன் சார்

:roll: :roll: :roll: :roll: கறுப்பி எதுக்கு அப்பிடிக்கேட்டனீங்க? சும்மா தேவையில்லாத விசயத்தை எல்லாம் யோசிச்சு தாழ்வுமப்பான்மையை வழக்காமல் :evil: , ஆக்க பூர்வமா சிந்தித்து வாழ்கையில முன்னேறப்பாருங்கோ, சரியா உடன் பிறப்பு :idea: :idea:

எனக்கு வேட்டி கட்டத்தெரியாது, ஜீன்ஸ் இற்கு மாத்திவிடுங்கோ ;-)

  • தொடங்கியவர்

எனக்கு வேட்டி கட்டத்தெரியாது, ஜீன்ஸ் இற்கு மாத்திவிடுங்கோ ;-)

அவை அவைக்கு அவை அவைட பிரச்சனை. கானா பிரபா அண்ணாக்கு வேட்டி பிரச்சனை :lol:

  • தொடங்கியவர்

என்னை பேர் அளவில போட்டு அதோட விட்டதுக்கு நண்றி. எனக்கு ஆக்களுக்கு முன்னாலை வர தாள்வுமனப்பாண்மையும் கூச்சமும் இருக்கு. அதால என்னை சேர்க்க வேண்டாம். சரீங்களா.? :wink: 8) 8) 8)

பார்த்திங்களா...உங்களை பற்றி தெரிந்து தான் நான் அதிகமாக உங்களை வேலையில் இழுக்கவில்லை :lol:

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P அசத்துறீங்க பபா

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தூயா

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நிலாக்குட்டி & கந்தப்பு :lol:

19. அருவி - சாப்பாட்டுக்கு காவல் (நம்பிக்கையான ஆள்)

20. ஈழவன் - நிதர்சன் சாப்பாட்டு பக்கம் வராமல் அவருக்கு காவல்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

  • தொடங்கியவர்

ஓ இது வேற நடந்து இருக்கா? வரட்டும் இருவரும்..பார்த்துகொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

அதான சொல்லி சொல்லி அழுதீங்களோ, "ஐயோ நம்பிக்கையான பெடியன் என்று என்ன இதில விட்டிட்டு போனதுகள், இப்ப ஒன்டையும் நான் விட்டு வைக்கல்ல" என்று :wink: பிறகு நானும் ஈழவனும் தானே நாங்க தான் எடுத்தது என்று சொன்னம்..

:twisted: அட இத பப்பிளிக்கில சொல்லீட்டன் :lol:

  • தொடங்கியவர்

ஆகா ....ம்ம்ம் ஈழவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்

நன்றாக இருக்கிறது தூயா. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மிக்க நன்றி அரவிந்தன் :lol:

நல்ல காலம் அவல் சட்டியோட போட்டுது.

இதே அடுப்பில கிடக்கிற பொங்கல்ப்பானையா இருந்திருந்தா???????

:shock: :shock: :shock:

  • தொடங்கியவர்

ஆதி பயத்திலயே சுத்துறிங்க ;)

இதனைவிட நிதர்சனையே பக்கத்தில் விட்டிருக்கலாம். இரண்டு பேரோடயும் நான் பட்டபாடு இருக்கே அதனை யாரிட்ட சொல்லி அழுவது :lol:

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

உனக்கு தெரிந்த விடயங்களை நீயே வைத்திரு வெளியில சொன்னால் நீ படிக்கும் போது செய்த அட்டகாசங்கலையெல்லாம் அவுட்டு விட்டுருவன் சரியோ :lol::lol:

ஆதியில்ல அருவி... :wink: :P

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

ஆகா துயா யாரை நம்பி சாப்பட்டு காவலுக்கு அருவியையா நிதர்சன் மட்டுமல்ல நாம் எல்லோரும் பாவம் அருவியின் சாப்பாட்டு ஆசையை எனக்கு நல்லாகத்தெரியும் இடியப்பமும் சம்பலுமெண்டால் அருவிக்குப்போதும் பாடசாலைக்கு ஒரே இடியப்பம்தான் ஆனால் குறை சொல்லக்கூடாது அருவியின் அம்மா நல்லா சமைப்பா ஏன்னெண்டு எங்களுக்கு தெரியுமெண்டா கேக்கிறீங்க பாடசாலை இடைவேலைக்கு முன்னமே அதை முடிக்கிரது நாங்கதானே :lol: :lol: :lol::):lol:

இடைவேளைக்கு முன் சாப்பாட்ட முடித்தால்தானே இடைவேளைக்கு வெளியபோய் விளையாடலாம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.