Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு.

[Wednesday 2014-09-24 13:00]
mullai-land-200-news.jpg

மீண்டும் போர் ஏற்பட்டால் தாம் கையளிக்கும் காணிகள் தமக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று தம்மிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே, தமது காணிகள் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக, கேப்பாபிலவில் விமானப்படையினரிடம் இருந்து காணி களை மீளப்பெற்ற மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கேப்பாபிலவில் தமிழ் மக்களின் பெருமளவான உறுதிக்காணிகள் போரின் பின்னர் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் அந்த மக்களின் வாழ் வாதாரமாக விளங்கிய வயற் காணிகளும் அடங்கியிருந்தன.

  

கடந்த 18 ஆம் திகதி கேப்பாபிலவு மற்றும் இயன்கன்குளம் ஆகிய பகுதிகளில் 54 பொது மக்களுக்குச் சொந்தமான 139 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. இலங்கை விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளே இவ் வாறு விடுவிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சால் முறைப் படியான அறிவித்தல்கள் வழங்கப்பட்டு அவை மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு முன்னதாக விமானப் படையினரால் படிவம் ஒன்றில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. அந்தப் படிவத்தில், "மீண்டும் போர் ஏற்படுமாக இருந்தால் இந்தக் காணிகளை மீளவும் கையளிக்க வேண்டும். அல்லாதுவிடில் நீதிமன்றத்தின் ஊடாக விமானப் படையினர் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமக்கு வேறு வழியின்றி அந்தப் படிவத்தில் கையொப்பம் இட்டோம் என்று அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். தம்மிடம் காணிகளுக்கான சகல ஆவணங்களும் காணப்படும் நிலையில், விமானப்படையினர் இவ்வாறு கையொப்பம் பெற்றுக் கொண்டுள்ளமை தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு போர் எப்படி ஏற்படுமாம்?? ஆமிக்கு மண்டை கலங்கிப்போட்டுதோ... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனி ஒரு போர் ஏற்பட்டால்.. காணிகளை கையளித்த ஆக்களே அதனை வாங்க இருக்காயினம். ஆனையிறவை விட்டிட்டு ஓடின ஆக்கள்.. அப்படியே ஓட வேண்டிய நிலை தான் வரும். எனிப் போர் வந்தால்.. புலிகள் அடிபட மாட்டார்கள். சில நாடுகள் அடிபடும்..!!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இனியும் எங்கட சனத்துக்காக சனதை நம்பி ஆயுதம் கொண்டு போராட யாராவது வாறதாக இருந்தால் ஏதாவது மறை கழண்டதாக இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கற்ற கருத்தை வாசிக்கேக்க குதிரை கஜனின் "60000 சவப்பெட்டிகள் வரும்" பேச்சும், திருநாவுக்கரசின் "அடுத்தபோர் நிறுத்தத்தை அரசுதான் கோரும்" என்ற பேச்சும், சு.ப வின் " அடுத்த பேச்சுவார்த்தை என்பது எல்லை நிர்ணயம் பற்றித்தான் இருக்கும்" என்ற பேச்சும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இனிப்போர் வரப்போவதில்லை. பலாலி உட்பட உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்த பட்ட எல்லா வழக்குகளிலும் இதே நடைமுறையை பின்பற்றுமாறு தமிழர் தரப்பு நீதிமன்றை கோரலாம். இதையே இந்தியா மற்றும் மேற்க்கு ராஜதந்திரிகளுக்கும் சொல்லாவேண்டும்.

இது ஒரு நல்ல ராஜதந்திர நகர்வாய் அமையும்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய காணி வேண்டும் என்று அவர்கள் சொல்லும் சாட்டுக்கு - போர் வரும் போது காணியை தருகிறோம் என்று நாம் பதில் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கற்ற கருத்தை வாசிக்கேக்க குதிரை கஜனின் "60000 சவப்பெட்டிகள் வரும்" பேச்சும், திருநாவுக்கரசின் "அடுத்தபோர் நிறுத்தத்தை அரசுதான் கோரும்" என்ற பேச்சும், சு.ப வின் " அடுத்த பேச்சுவார்த்தை என்பது எல்லை நிர்ணயம் பற்றித்தான் இருக்கும்" என்ற பேச்சும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இனிப்போர் வரப்போவதில்லை. பலாலி உட்பட உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்த பட்ட எல்லா வழக்குகளிலும் இதே நடைமுறையை பின்பற்றுமாறு தமிழர் தரப்பு நீதிமன்றை கோரலாம். இதையே இந்தியா மற்றும் மேற்க்கு ராஜதந்திரிகளுக்கும் சொல்லாவேண்டும்.

இது ஒரு நல்ல ராஜதந்திர நகர்வாய் அமையும்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய காணி வேண்டும் என்று அவர்கள் சொல்லும் சாட்டுக்கு - போர் வரும் போது காணியை தருகிறோம் என்று நாம் பதில் சொல்லவேண்டும்.

 

ஏன் யோகேஸ்வரனின் 5000 பேரை தாங்கோ போர் செய்து தமிழீழம் எடுத்துத் தாறன் எண்டது நினைவுக்கு வரேல்லப் போல.

 

தேர்தலில் வெற்றி பெற வையுங்கோ.. இந்த தமிழீழம் என்று அமிர்தலிங்கம்.. முழங்கினது நினைவுக்கு வரேல்லப் போல.

 

நடுக்கடலில் இந்து சமுத்திரத்தில்.. மீன்பிடிப்படகில் ஒரு சிற்றலை ஒலிபரப்பியை வைச்சுக் கொண்டு உமா மகேஸ்வரன்.. இந்தா தமிழீழம் மலருது என்று சிந்து பாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வரேல்லப் போல.

 

இந்தா காரைநகர் விழுகுது இதோட.. தமிழீழம் மலருது என்று பத்மநாபா குழு சொல்லிக் கொண்டு திரிஞ்சது நினைவுக்கு வரேல்லப் போல.

 

இதோ.. தமிழீழம் பிரகடனம் செய்கிறோம் என்று இந்தியப் படைகளோடு சேர்ந்து ஓடிப்போன.. வரதராஜப் பெருமாள் பண்ணினது நினைவுக்கு வரேல்லப் போல..!

 

இப்படி பல.. நினைவுக்கு வருகுதில்ல.. மற்றதுகள் மட்டும் வருகுது என்றால்.. பிரச்சனை வேற எங்கையோ இருக்குது. குறிப்பாக உங்க மூளைக்க..!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் நினைவுக்கு வரவில்லை காரணம்,

1) அமிர் யோகேஸ் சொன்ன போது நமக்கு உச்சா கக்கா போறதே தெரியாத வயசு - எனவே அது நியாபகம் வரவில்லை.

2) உமா சொன்னது - உமாவே நியாபகம் வைக்கவில்லை எனும் போது என்னை மட்டும் குறைசொல்லக்கூடாது.

3) காரைநகர் ஈபி - அது செம காமெடி என்று அவைக்கும் தெரியும், எனக்கும் தெரியும் நேவிக்கும் தெரியும். நகைச்சுவையை ரசிக்கலாமே தவிர நம்பி நியாபகம் வைத்திருக்க முடியாது.

4) வரதர் பண்ணிய பிரகடனத்தை ஒரு கெட்ட கனவா நினச்சு அவரே மறந்தபின் என்னை வைவானேன்?

மேலே நீங்கள் கூறிய அத்தனை பேரும் கோமாளிகளாக, வார்த்தை தவறிய பொய்யர்களாக, கரைசேர்க்கத் தெரியாத ஓடங்களாக தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுப் போனார்கள்.

அதே பட்டியலில் புலிகளும் சேர்ந்தார்கள் என்பதுதான் வரலாற்றுச் சோகம். படிப்பினையும் கூட.

நீங்கள் மேலே காட்டிய கொக்கரிப்பு வரலாறில் இருந்து சிலர் பாடம் படிப்பதில்லை என்பதை புடம் போட்டுக் காட்டியது.

இதே பட்டியலில் நாளை நெடுக்கரும் நெடியவனும் இருப்பார்கள் என்பதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் இருக்கலாம். நெடுக்கர் அப்படியான ஒரு வரலாற்றை படைத்தார் என்று.. இருக்க மாட்டார். வங்கதேசத்தை பிரிக்க போர் செய்தது.. வங்கதேச முஸ்லீம்கள் அல்ல...!!!!! :icon_idea:

 

புலிகள் சொன்னதை சாதித்துக் காட்டியவர்கள். அதை காப்பாற்ற முடியாமல் போனமைக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல... நீங்கள் நாங்கள் என்று எல்லோரும் காரணம். அவர்களோடு பொய்யர்களை அரசியல் புளுகர்களை ஒப்பிட முடியாது. ஆனால் வெளி வந்த வார்த்தைகளை வரலாறு பதிவு செய்தே உள்ளது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒமோம் வங்கத்தில் முக்தி பாகினி தலைமையில் போராடிய ஆயுததாரிகள் எல்லாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த ஆங்கிலேய கிறீஸ்தவர்கள்தான். உங்கள் குல தெய்வம் கூகிள் ஆண்டவர் இப்படிச் சொல்லுறார்

(http://en.m.wikipedia.org/wiki/Mukti_Bahini).

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த அமைப்பு இந்திய உத்வியில் கெரில்லா எதிர்ப்பை காட்டியது. வஙகத்தை பிரிக்க இந்திய தலையீட்டுக்கு அது ஒரு முன்னோடியாக இந்தியாவால் பாவிக்கப்பட்டது.கூகிளை சரியாக படிக்க பழகுங்க. :)

Edited by nedukkalapoovan

உதுகள் எல்லாம் சொல்லிக்கொண்டில்லை

 

ஆனால் தலைமைகளில் சனம் வெகு கவனமாக இருக்கும் (படிப்பு ,கொலை ,கொள்ளை எல்லாம் கருத்தில் எடுப்பார்கள் ,படித்த பாடம் அப்படி )

  • கருத்துக்கள உறவுகள்

அது எல்லார்க்கும் தெரிஞ்ச கதை. நீங்க சொன்னது வங்கத்தை பிரிக்க வங்கதேச முஸ்லீம் போராடவில்லை என்பது. அது தவறான கூற்று. முக்தி பாகினி (இந்திய மறைமுக ஆதரவுடன்) போராட வெளிகிட்ட பின், பாகிஸ்தான் இந்தியா மீது குண்டு வீச அதன் பின்பே இந்தியா நேரடியாய் தலையிட்டது.

இதுதான் வரலாறு. இதுக்கு கூகுளுக்கு போகவேண்டிய அவசியம் எனக்கில்லை.

மேலும் வங்கத்தை இந்தியா பிரிக்க - இந்திய-பாகிஸ்தான் ஜென்ம பகை காரணமாகியது. இலங்கைக்கு அப்படி ஜென்ம விரோதிகள் யாருமில்லை. பலம் கொண்ட வெளிநாடுகள் யாரையும் ஜென்ம விரோதிகளாக்கும் அளவுக்கு நம்மை போல் சிங்களவர்கள் முட்டாள்களுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு.....

 

 

சிங்களவன் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டுதான் திரியிறான் போலை கிடக்கு....ஏனெண்டால் அவனுக்குத்தான் முள்ளிவாய்க்கால் கடைசி நிலவரத்தின் உண்மைபொய் தெரியும்.
 

 

உலக அரசியல் சூழ்நிலைகளினாலேயே எமது போராட்டம் ஒருசில நாடுகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டது.அதை இங்குள்ள ஒருசில அறிவாளிகள் புரிந்து கொள்ளாமல் சும்மா பினாத்துகின்றார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.