Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி

- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

27 செப்டம்பர் 2014

பதவி பற்போவதனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்கிறார் ராஜித-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையின் மூலம் தமிழக அரசில்வாதி எவ்வளவு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைகளின் போது அடிக்கடி ஜெயலலிதா கருத்து வெளியிடுகின்ற போதிலும் மீனவர்களின் சார்பில் குரல் கொடுப்பதில்லை எனவும் அவர் மெய்யாகபேட படகு உரிமையாளர்களை பாதுகாக்க முயற்சிக்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பதவி விலகுவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பதவி விலகுவதன் மூலம் மீனவர் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112043/language/ta-IN/article.aspx

அப்ப சீமான்,வை கோ,நெடுமாறன்,திருமுருகன் போன்றவர்களை என்ன செய்யலாம்? தற்போதைய தமிழக அரசியல் நிலைமை ஈழத் தமிழர் பிரச்சனையை விடுத்து ஆட்சிக்கு வர முடியாது

வைகோ ஈழ பிரச்சனையை இரண்டாம் பட்சம் ஆக்கி தமிழ்நாட்டு பிரச்சனைகளை முதன்மையாக்கினால் சிலவேளை அடுத்த முதல்வராகவும் வரலாம்...(பா.ஜ.க. வோடு கூட்டணியமைத்து...:))

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் நம்பிக்கையுடன் வந்த பிஜேபி குத்துக்கரணம் அடிச்சு காங்கிரஸ்விட தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்கின்றனர் இந்த கேட்டிலை. ........................ :huh:

பிஜெபி அப்படி என்ன பிழையாக செய்கிறார்கள்?

எடுத்தேன் கவுத்தேன் என்று உடனேயே மண்டையில் போடுவது மாதிரி நாட்டை ஆள முடியுமா..அதுவும் இந்தியா மாதிரி ஒரு பெரும் நாட்டை..?????

பிஜேபி அதுவும் மோடி பிழையாக எதுவும் செய்வது மாதிரி தெரியவில்லை......

  • கருத்துக்கள உறவுகள்

பிஜெபி அப்படி என்ன பிழையாக செய்கிறார்கள்?

எடுத்தேன் கவுத்தேன் என்று உடனேயே மண்டையில் போடுவது மாதிரி நாட்டை ஆள முடியுமா..அதுவும் இந்தியா மாதிரி ஒரு பெரும் நாட்டை..?????

பிஜேபி அதுவும் மோடி பிழையாக எதுவும் செய்வது மாதிரி தெரியவில்லை......

அப்படியா? பொறுத்திருங்கள் .

 

 

s9.jpg

கிரிமினல் வழக்குகளில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடியாது. மேல்முறையீடு செய் தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அரசியலில் நேர்மை குறைந்து, வன்முறையும், ஊழலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கும்படியும், தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்தும்படியும் வலியுறுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.  கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட் டியிடும் தகுதியை இழக்கின்றனர்.

தண் டனைக் காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதி நிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)ல் கூறப்பட் டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக்கும் எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங் களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற்குள் மேல் நீதிமன்றங்களில் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)ல் கூறப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட் டுள்ள இந்த முரண்பாடான சலுகையை சட்டத் திருத்தம் மூலம் நீக்கும்படியும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி களின் பதவியை உடனடியாக பறிக்கும் படியும் மத்திய அரசை தேர்தல் ஆணை யம் கூறி வருகிறது. ஆனால், அரசியலில் தங்களுக்கு வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கு இந்த சட்ட திருத்தத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி, அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக்குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லாவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4),ல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளை பதவியில் நீடிக்க அனுமதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகிவிடும். மேலும், தண்டனை விதிக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனுமதிப்பது, அரசியல் சட்டத் துக்கு விரோதமானது.

எனவே, நீதிமன்றங் களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரினர். நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடியாது. தண்டனை விதிக்கப் பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப்புக்கு முன்பாக தண்டனை பெற்று, மேல்முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கும், கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்க்கப் போனால் மத்திய அமைச்சர வையைச் சேர்ந்தவர்களின் கெதி என்ன? என்பது முக்கிய கேள்வியாகும். இதோ அந்தப் பட்டியல்:

பிரதமர் நரேந்திர மோடி -  குஜராத் கலவரவழக்கு முதல் மனைவி பெயரை மறைத்தது, மற்றும் வாக்குச்சாவடியில் தேர்தல் சின்னத்தை விதிமுறையை மீறிக் காண்பித்தது தொடர்பான பல்வேறு வழக்குகள்  1. ராஜ்நாத் சிங் - பாபர் மசூதி இடிப்பு வழக்கு

2. அருண் ஜேட்லி - நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு(குஜராத் போலி என் கவுன்டர் வழக்கில் தலையீடு)

3. சுஷ்மா ஸ்வராஜ் - பாபரி மசூதி இடிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு)

4. வெங்கய்ய நாயுடு - அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் சட்ட விரோத நில ஆக்ர மிப்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு

5. நிதின் கட்கரி -  134  135 143, 341, 186, 448, 506 ,188 வரியேய்ப்பு, தொழிற்துறை நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றுதல், மற்றும் போலியான தகவலில் வங்கிக்கடன் வாங்கியது, (தனது கார் ஓட்டுநர் தோட்ட பாராமரிப்பாளர் பெயரில் கூட கம்பெனி பதிவு செய்து வைத்துள்ளார், நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தை தனது அலுவலக முகவரியாக கொடுத்துள்ளார்.) இவருக்கு 7 ஆண்டு  முதல் 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

6. மேனகா காந்தி -  394,  506 பிரிவின் கீழ் வழக்கு.

7. கல்ராஜ் மிஸ்ரா -  120 பி, 153, 153 எ, 153பி, 147, 148, 149, 436, 395, 302 போன்ற பிரிவுகளில் வழக்கு

8. நஜ்மா ஹெப்துல்லா -  அரசு அதி காரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தது,

9. ஆனந்த் குமார் - ஊழல் வழக்கு இவர் பல குற்ற வழக்குகளுக்கு ஆளானவர்.

10. ரவிசங்கர் பிரசாத் - வன்முறையைத் தூண்டியதாக வழக்கு

11. உமா பாரதி - இவர் தான் குற்ற வாளிகள் பெயர் லிஸ்டில் முதலிடம் இவர் மீது 61 கடுமையான வழக்குகள், 12 பொதுக்குற்றவழக்கு, மற்றும் 108 சாதாரன குற்றவழக்கு 12. அசோக் கஜபதி ராஜூ - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மற்றும் கலவரத்திற்கு தூண்டுகோலாகப் பேசியது, 13. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - கணவர் மனைவி இருவர் மீது குற்ற வழக்கு உள்ளது. 14. நரேந்திர சிங் தோமர் - இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு கடுமையான குற்றவழக்குகள் ஆகும்

15.  ஜூவல் ஓரம் -  143, 341, 283, 341 பிரிவுகளில் வழக்கு.

16. ஹர்ஷ வர்த்தன்- 147, 149, 186, 323, 325, 332, 353, 427 போன்ற பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17. ஸ்மிருதி இரானி - போலியான தகவல்கொடுத்த வழக்கு, டில்லி நாடாளு மன்றக் காவல் நிலையம் வழக்கு நிலு வையில் உள்ளது. 18. ராதா மோகன் சிங் - கணவன் மனைவி இருவர் மீதும் சேவை நிறுவனத் தில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு

19. தாவர்சந்த் கெலாட்-  ஊழல் வழக்கு குவாலியர் காவல்நிலையம் (சிறைவாசி யாக இருந்தவர்)

20. சதானந்த கவுடா - எடியூரப்பா ஊழல் வழக்கில் இவருக்கும் பங்கு உண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கேபினெட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், 21. ஜெனரல் வி.கே.சிங்  185, 353, 147, 148, 149, 34 பிரிவுகளில் வழக்கு.

மேற்கண்ட இ.பி.கோ.படி அமைச்சர் களின் மீது குற்றவியல் வழக்கு உள்ளது. 59  பாஜக எம்பிகள் மீது பயங்கர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஆட் கடத்தல், கலவரத்திற்கு திட்டமிடுதல், மற்றும் கலவரத்தை தூண்டுதல் என பல் வேறு வழக்குகள்,  இந்த வழக்கு எல்லாம் சரியான படி நடந்தால் ஆயுள் தண்டனை முதல் கடுமை யான கடுங்காவல் வரை கிடைக்கும்.

என்ன நடக்கப் போகிறது? நாடே எதிர்ப்பார்க்கிறது.

http://viduthalai.in/headline/88308-bjb.html

 

Read more: http://viduthalai.in/headline/88308-bjb.html#ixzz3EYppdoiz

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு மூக்கு போனால் மற்றவன் என்ன செய்கிறான் அவனுக்கும் மூக்கு அறுக்கனும் இது தொடக்கம்...................

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப் பற்றற்ற முதல்வர் ஜெயாவினால் பெயர் குறிப்படப்படும் ஒருவர் உத்தியோகபூர்வ முதல்வராகிறார்:-

 

– சென்னையில் அதிமுக அவசர கூட்டம்-

cm_CI.jpg

 

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், நீதிமன்ற  அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக அதிமுக தரப்பில்  பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பின், இவர்கள் நாளை  காலை சென்னை திரும்ப உள்ளனர்.

அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடி புதிய முதல்வர் பெயரை இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (28.09.14) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். அதன் பிறகு இது குறித்த தகவல் கவர்னர் ரோசையாவுக்கு தெரிவிக்கப்படும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற பட்டியல் அறிவிக்கப்படும். அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு அதே இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, சிலர் புதிதாக அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. நாளை  கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் சென்னை விரைந்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/112045/Default.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
சுப்பிரமணியம் சாமி போட்ட முடிச்சு.. சிக்கிக் கொண்ட ஜெயலலிதா!
 
 
 
கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கியக் காரணம், சுப்பிரமணியம் சாமிதான். காரணம், இவர் தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவி்ப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார்.
 
இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. இவர் ஆக்கப்பூர்வமான செயல்களை விட பலரைப் பாதிக்கும் வகையிலான அரசியலைத்தான் இவர் பெரும்பாலும் நடத்தி வந்திருக்கிறார்.
 
அத்தி பூத்தாற் போல இவரால் சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன - முல்லைப் பெரியாறு அணை வழக்கை உதாரணமாகச் சொல்லலாம்.
 
நிச்சயம் சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள்.
 
யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான்.
 
கிட்டத்தட்ட தமிழக அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே இவர் சிம்ம சொப்பனாக திகழ்ந்து வருகிறார். திமுக தொடங்கி அதிமுக வரை யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ம் ஆண்டு திமுக அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான்.
 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி.
 
உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த திமுக அரசு வழக்கைப் போட்டது. அந்த வகையில் சாமிக்குத்தான் திமுக நன்றி சொல்ல வேண்டும். அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை ஆதாரங்களுமே ஜெயலலிதா வழக்கை மேலும் சிக்கலாக்கி விட்டது என்பதே உண்மை.
 
உண்மையில் ஜெயலலிதா மீதான பிற வழக்குகளை திமுக அரசுதான் போட்டது. அதை சாமி போடவில்லை. எனவே அந்த வழக்குகளில் ஜெயலலிதா எளிதாக வந்து விட்டார். ஆனால் சாமி போட்ட முடிச்சை அவிழ்க்கத்தான் அவரால் முடியாமல் போய் விட்டது.
 
ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது நட்பாகத்தான் இருந்தார் சாமி. ஜெயலலிதாவும் கூட திமுகவுக்கு எதிராக சாமியைத்தான் பயன்படுத்தி வந்தார்.
 
ஆனால் பின்னர் திடீரென எதிரியாகி விட்டனர் இருவரும். டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் அனுமதி வாங்கிய சாமியைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். அதுதான் சாமிக்கும் பெரிய ஹைலைட்டான அரசியல் வெற்றியாகும்.
 
ஆனால் அதன் பின்னர் அதே வேகத்தில் பல்டி அடித்து மீண்டும் ஜெயலலிதாவுடன் நட்பானார் சாமி. அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் மாறினார் சாமி. வாஜ்பாய் அரசில் ஜெயலலிதா இணைய சாமிதான் முக்கியக் காரணமும் கூட.
 
தனக்கு எதிராக செயல்பட்டவர் என்பதையும் பாராமல், சாமியின் பிறந்த நாளன்று அவரது கட்சி அலுவலகத்துக்கே நேரில் போய் வாழ்த்தியவர் ஜெயலலிதா. சாமிக்கு போர்ட் ஐகான் காரைப் பரிசாகவும் கொடுத்தார்.
 
அதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் சாமியை நிறுத்தி வெற்றி பெறவும் வைத்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தவர் சாமி. உண்மையில் சாமியை அரசியல் ரீதியாக வளர்த்து விட்டவர் ஜெயலலிதா என்பதில் சந்தேகமே இல்லை.
 
ஆனால் வாஜ்பாய் ஆட்சியை மிகக் குறுகிய காலத்தில் கவிழ்த்த ஜெயலலிதா மீது கோபம் கொண்டார் சாமி. மீண்டும் இருவரும் எலியும் புலியுமாக மாறினர்.
 
ஜெயலலிதாவுக்கு எதிராக அதன் பின்னர் தீவிரமாக செயல்பட்ட சாமியை, அதிமுகவினர் போகும் இடமெல்லாம் தூற்றி தாக்க முற்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சாமியை, அதிமுக மகளிர் அணியினர் புடவையைத் தூக்கி கொடுத்த வரவேற்பு அப்போது அந்த இடத்தில் இருந்தவர்களால் இன்றைக்கும் மறக்க முடியாது.
 
இந்த வழக்கு குறித்து தீர்ப்புக்கு முன்பு ஏஎன்ஐக்கு சாமி அளித்த பேட்டியில்,
 
இந்த வழக்கிலிருந்து நிச்சயம் ஜெயலலிதா தப்ப முடியாது. காரணம், இதில் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
 
முதல்வர் ஜெயலலிதா தவறு செய்திருப்பது உண்மை. இந்த வழக்கில் எல்லாமே தெளிவாக உள்ளன. எதையும் மூடி மறைக்க
முடியாது. அவரால் இனியும் யாரையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் சாமி.
 
மொத்தத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த சாமி காரணமாகி விட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
 
தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்த நீதிபதி
 
 
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.
 
இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது.
 
1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
 
1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக் கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும் தான் காரணம். மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன் றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக் களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக் கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவரு டைய இரு நாள் ஊதியத் தை(ரூ.1.2லட்சம்) அபராதமாக விதித்தார்.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறி ஞருக்கு அபராதம் விதித்த‌து அதுவே முதல்முறை.
 
காலை 8.15 மணிக்கே வந்து விடுவார்
 
டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார்.
 
அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். தினமும் மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு திரும்புவார்.வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரித்தனர்.
 
அவர்கள் மேலும் கூறும்போது “நேற்று காலை 7.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு நேரடியாக சென்று இருந்தோம்.பெங்களூர் சிறப்பு நீதிமன்ற கட்டிடத்தில் யாரும் தென் படவில்லை. ஆனால் காலை 8.15 மணிக்கு நீதிமன்ற கட்டி டத்தில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே இருந்த குறுகலான பாதையில் நுழைந்தார். தன்னை யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வழியை டி'குன்ஹா தேர்ந்தெடுத்துள்ளார்.
 
காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் வழக்கமாக தட்டச்சு செய்பவரை பயன்படுத்தவில்லை.தான் நீதிபதியாக பணியாற்ற தொடங்கிய காலத்தில் இருந்து பழக்கமான ஒரு பெண்ணையே தட்டச்சு செய்ய அனுமதித்துள்ளார்.
 
அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்” என்றனர்.
 
நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.