Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

eelamurasu.jpg

பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை நீளும் இலங்கை அரசின் கிரிமினல் கரங்களுக்கு எதிராக இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாவதாக ஐரோப்பிய நாடுகளில் சட்ட நடவடிக்கை. ஈழமுரசு ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான ஊடகம் அல்ல. ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான வலுவான சட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வழிமுறைகளும் உண்டு. நாடுகடந்த இலங்கை அரசின் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இயலாத சமூகம், வேறு எதுகுறித்தும் பேசுவதற்கு அருகதையற்றதாகிவிடுகிறது.

இலங்கை அரசைத் தண்டிக்கப்போகிறோம் என ஐந்து வருடங்களாக மக்களை நம்பக்கோரும் ஒவ்வொரு பிரமுகரும் ஒவ்வொரு அமைப்பும் ஈழ முரசின் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இரண்டாவதாக இலங்கை அரசின் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிராக புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்கள் அனைத்தும் இலங்கை அரசிற்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். மீண்டும் ஈழமுரசு பாதுகாப்பு அச்சுறுத்தலின்றி வெளிவரும் வகையில் ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இதற்கான பிரச்சாரங்கள் அனைத்து மட்டத்திலும் ஊடகம் என்ற வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புலம்பெயர் நாடுகளின் முன்னை நாள் புலியெதிர்ப்பாளர்களும், புலிகளின் பிரமுகர்களும் இலங்கை அரசிசுடன் வர்த்தகம், பணமுதலீடு, ஒப்பந்தங்கள் என்ற அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் இச்சம்பவம் கவனத்திற்குரியதாகின்றது. இலங்கை அரசுடன் வர்த்தகத்திலும், பணக்கொள்ளையிலும் ஈடுபட்ட லைக்கா நிறுவனம் தமிழ் நாட்டின் சினிமா மேடையில் தமிழ் உணர்வு என்று கொக்கரிக்கும் கொடிய நிகழ்வுகளைக் காண்கிறோம்.

லைக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாகப் எழுதிய ஈழமுரசு இந்த வர்த்தக முரண்பாட்டினுள் சிக்கிவில்லை என்ற நம்பிக்கையில் மக்கள் மத்தில் போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

சிறீ டெலோ என்ற இலங்கை அரச பினாமி அமைப்பினால் பருதி என்ற முன்னை நாள் விடுதலைபுலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதை இனியொரு வெளியிட்டிருந்தது தெரிந்ததே. வியாபாரச் சகதிகளுக்கு அப்பால் இலங்கை அரசின் தலையீட்டையும் இங்கு மறுக்கமுடியாது.

பிரான்சை தளமாகக்கொண்டியங்கும் ஈழமுரசு ஊடக ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான முழுமையான குரலாக ஒலித்ததா என்ற கேள்விகளுக்கு அப்பால் இச்செயல் கண்டிக்கப்பட வேண்டும்.

விமர்சனம், சுய-விமர்சனம், வெளிப்படைத் தன்மை, மக்கள் பற்று போன்ற அடிப்படை ஊடக விழுமியங்களை ஈழமுரசு கடைப்பிடிக்கவில்லை என்பதெல்லம் அதன் மீதான விமர்சனங்களே தவிர மிரட்டல்கள் அல்ல.

இணைய ஊடகங்களாகட்டும் அச்சு ஊடகஙகாட்டும் மக்கள் சார்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதன் அவசியத்தை ஈழமுரசு மீதான தாக்குதல் தெரிவிகிறது. சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பால் உரிமைக்கான போராட்டத்தின் ஆரம்பப்புள்ளிகள் இவையே.

ஆக, சட்ட நடவடிக்கையும், போராட்டங்களும் காலம் தாழ்த்தாமல் ஆரம்பிக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமான அவசரத் தேவை.

ஈழமுரசு மீட்சி பெறும் வரை சட்ட நடவடிக்கையும் போராட்டஙக்ளும் நடத்தப்பட வேண்டும் என புலம்பெயர் நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் அழைப்புவிடுகிறோம்.

இனியொரு…

http://inioru.com/?p=42134

  • கருத்துக்கள உறவுகள்
பத்திரிகை நின்று போனதற்க்கு என்ன காரணம் சொன்னாலும், மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
 
இன்றைய காலக் கட்டத்தில் அச்சுப் பதிவில் வரும் பத்திரிகைகள் நின்று பிடிக்க முடியாது. மக்கள் காசு கொடுத்து வாங்க தயார் இல்லை.
 
யாழ் போன்ற இணையத் தளத்தில் தேவையான செய்திகளை வாசிக்கக் கூடியதாக இருக்கையில் மக்கள் பத்திரிகை மூலம் தான் செய்திகள் பெற வேண்டிய தேவை இல்லை.
 
விளம்பரதாரர்கள், பெரும் பணம் கொடுக்க தயார் இல்லை. இணையதளங்கள, இலவச தொலைக் காட்சிகள், இலவச வானொலிகள் போட்டி போடும் போது, அச்சப் பத்திரிகை தொடர்ந்து நடாத்த முடியாதது என்பது மறுக்க முடியாத உண்மை. 
  • கருத்துக்கள உறவுகள்

2009 இன் பின் பரீஸ் ஈழ முரசு செய்ததெல்லாம் தமக்கு பிடிக்காதவர்களை

துரோகி என்று முத்திரை குத்தியதே.

இவர்கள் சொல்லும் காரணத்துக்கு அப்பால் எல்லாளன் படை வெருட்டியது

பற்றி வாயைத் திறக்கின்றனர் இல்லை.

எல்லாளன் படை வெருட்டிய பின் தான், பரீஸ் ஈழமுரசு நிறுத்தப்பட்டது.

உவர்கள் நடத்தும் பதிவு, சங்கதி24 ஆகியவற்றையும் நிறுத்தச் சொல்லி எல்லாளன் படை

கேட்டு இருக்கு என்றும் தகவல் சொல்லுது

ஏற்கனவே வாடகைக்காசு, இரயில் பொதி அனுப்பிய காசு என்று கட்டாமல் நட்டத்தில்

ஓடும் போது எல்லாளன் வெருட்ட இதே சாக்கு என்று நிறுத்தி விட்டனர்

பங்கு பிரிப்புகளை கேள்வி கேட்டவர்களை துரோகி என்று முத்திரை குத்தி

தமிழ் தேசிய அமைப்புகளுக்குள் பிழவை ஏற்படுத்திய ஈழமுரசு நிறுத்தப்பட்டது நல்லது தான்.

நந்தகோபனின் உத்தரவு அதாவது கோத்தாவின் உத்தரவுக்கு இணங்கவே இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.இதன் பின்னால் நடந்த பேரம் பேசல்களையும் கொழும்பிலுள்ள சொத்துக்களை காப்பாற்ற நடந்த முயற்சிகளையும் பிரெஞ்சு காவல்துறை தெரிந்துவைத்திருக்கிறது என்பது தான் எனக்கு கிடைத்த தகவல்;பிரெஞ்சு அரசாங்கத்தக்கான வரி ஏய்ப்பு பிரெஞ்சு அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரியவர்களுக்கு உளவியல் அச்சுறுத்தலை ஏற்படுத.தும் விதத்தில் செய்பட்டது. என்று பல கோணங்களில் இது பார்க்கப்படுகிறது.அநாமதேய மிரட்டல் பத்திரிகைகளை வெளியிட்டவர்களுக்கு ஏன் எல்லாளன் படை என்ற போலி கடடிதத்தை தயாரிக்க முடியாது என்ற கோணத்திலும் பிரெஞ்சு காவல்துறை இதை பார்ப்பதாகவும் அறிந்தேன்.

நந்தகோபனின் உத்தரவு (அதாவது கோத்தாவின் உத்தரவு)க்கு இணங்கவே இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.இதன் பின்னால் நடந்த பேரம் பேசல்களையும் கொழும்பிலுள்ள சொத்துக்களை காப்பாற்ற நடந்த முயற்சிகளையும் பிரெஞ்சு காவல்துறை தெரிந்துவைத்திருக்கிறது என்பது தான் எனக்கு கிடைத்த தகவல்.பிரெஞ்சு அரசாங்கத்துக்கான வரி ஏய்ப்பு இபிரெஞ்சு அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரியவர்களுக்கு உளவியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் செய்பட்டது. என்று பல கோணங்களில் இது பார்க்கப்படுகிறது.அநாமதேய மிரட்டல் பத்திரிகைகளை வெளியிட்டவர்களுக்கு ஏன் எல்லாளன் படை என்ற போலி கடிதத்தை தயாரிக்க முடியாது என்ற கோணத்திலும் பிரெஞ்சு காவல்துறை இதை பார்ப்பதாகவும் அறிந்தேன்
இந்த பத்திரிகை நிறுத;தத்துக்கு பின்னாலான அரசியலையும் நாம் பார்க்க வேண்டும்.தமிழ்தேசிய நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்தப்பத்திரிகை முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தன்னை ஒரு தனிப்பிரிவாக அறிவித்துக்கொண்டது.தமிழ் தேசிய கட்டமைப்பில் உள்ளவர்கள் தலையிடக் கூடாது என்று கூறி வந்ததுடன் தமிழ் தேசிய கட்டமைப்பை பிளவு படுத்தவதிலும் பலருக்கு துரோகி பட்டம் கொடுப்பதிலும் முன்நின்றது.
பல தடவை தமிழ் தேசிய கட்டமைப்பை சோந்தவர்கள் அதை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயன்ற போது அதற்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் அந்த முயற்சிகளை மேற்கொண்டவர்களை துரோகிகளாக சித்தரிக்கவும் தயங்கவில்லை.
தற்போதும் கூட எல்லாளன் படை மிரட்டியது என்ற  காரணத்தைகூறி  பத்திரிகையை மூடப்பட்டுள்ளது;.இனி தமிழ் தேசியர்கள் எவராது அந்த பத்திரிகையை மீள ஆரம்பிக்க முனைந்தால் அவர்கள் எல்லாளன் படையினர்.வன்முறையாளர்கள் அச்சுறுத்தல் விடுப்பவர்கள் என்று காட்ட முனைந்திருக்கிறது.அதேவேளை விடுதலைப்புலிகள்  எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்சில் செயற்படகிறார்கள் என்பதை காட்ட வேண்டும் என்பது தான் சிறீலங்கா அரசின் நோக்கம் .பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகள் இந்த விடயத்தை மொழி பெயர்ப்பாளர்களை வைத்து படிப்பார்களாக இருந்தால் இந்தப் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியர் என்ற வகையிலும் இதன் தற்போதைய செயற்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் நான் சாட்சியமளிக்க தயாராக இருக்கிறேன்.

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

பயமுறுத்தல்  காரணமாக மூடப்பட்டது என்பதற்கு அப்பால்

இது ஒரு சாட்டாக அமைந்திருக்கலாம் என்பதே உண்மை

புலத்தில் ஒரு பத்திரிகையை இலவசமாக கொண்டு நடாத்துவது என்பதும்

எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாது

சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை வருடம் உழைப்பார்கள் என்பதும் எளிதா என்ற கேள்வி  எம்மிடம் முதலில் வேண்டும்.

ஈழமுரசைப்பொறுத்தவரை

அது ஆட்டம் காணத்தொடங்கி  பலவருடமாகிறது...

இது எல்லோருக்கும் தெரியும்

அதை  தடுக்க நாம் என்ன  செய்தோம் என்ற கேள்வியே

இன்றையநிலையில் முக்கியம்...

முள்ளிவாய்க்காலில் எனது இனம் அழிந்து நின்றபோது

எனக்கு ஒரே ஒரு நிம்மதி  கிடைத்தது

அது எம்மால் முடிந்தளவுக்கும் மேலாக பங்களிப்பு செய்தோம் என்பதே அது.

அதே நிம்மதிதான் ஈழமுரசின் அழிவிலும்...

எம்மால் முடிந்தளவு விளம்பரஉதவி செய்தோம்..

(புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் சார்பில் 

ஈழமுரசுக்கு வருடத்துக்கு 1000 ஈரோவிலிருந்து 2000 ஈரோவரை  தொடர்ந்து செய்து வந்துள்ளோம் இன்றுவரை....)

  • கருத்துக்கள உறவுகள்
நிதி நெருக்கடி காரணமாக லண்டன் உயிரோடைத் தமிழ் (ILC Tamil Radio)
நின்று விட்டது.

2009 மே யின் இன் பின்  தமிழர்களுக்கு இடையில்

பிரிவினையை ஆழப்படுதிய,

தமக்கு பிடிக்காதவர்களுக்கு எல்லாம் துரோக முத்திரையை குத்திய

ஒரு மோசமான ஊடகத்தை ஊக்குவித்ததுக்கு

நீங்கள் வெட்கப்பட வேண்டும் அண்ணே.

பாத்திரம் அறிந்து பிச்சை கொடு என்பது

நம் முன்னோர்கள் சொன்ன வாக்கு

Edited by வைரவன்

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் இனம் அழிந்தபோது, அந்த அழிவுக்கு முடிந்தளவிற்கும் மேலால் பங்களிப்புச் செய்த விசுகு ஐயாவுக்கு நிம்மதி கிடைத்தது என்று வாசித்தது கொஞ்சம் திடுக்கிட வைத்தது! அதே நிம்மதி ஈழமுரசின் அழிவிலும் வருவது நியாயம்தானே!

உங்களுக்கு நான் சொல்லவருவது  புரியவில்லை  என்று எடுக்கப்போவதில்லை

நித்திரை மாதிரி........ :(

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே யின் இன் பின்  தமிழர்களுக்கு இடையில்

பிரிவினையை ஆழப்படுதிய,

தமக்கு பிடிக்காதவர்களுக்கு எல்லாம் துரோக முத்திரையை குத்திய

ஒரு மோசமான ஊடகத்தை ஊக்குவித்ததுக்கு

நீங்கள் வெட்கப்பட வேண்டும் அண்ணே.

பாத்திரம் அறிந்து பிச்சை கொடு என்பது

நம் முன்னோர்கள் சொன்ன வாக்கு

நான் அப்படி நினைக்கவில்லை

நிலத்தில் நிற்பவனுக்கே அதன் வலி  சுமை தெரியும்

ஈழமுரசு பற்றிய  விமர்சனங்களை நான்  தவிர்க்கவில்லை

பலரது முகமூடிகளை  கிழித்ததும் ஈழமுரசு  தான்

சிலருக்கு துரோகிப்பட்டம் கொடுத்ததும்  ஈழமுரசு தான்

இவை இரண்டுக்காகவும் அவர்களுடன் விவாதித்துள்ளேன்

எனது 

மக்களது கருத்தை நேரே வைத்துள்ளேன்..

இன்று அதல்ல பிரச்சினை என்பதை நானறிவேன்

உங்களிடமும்  இங்கு பொழிவோரிடமும் ஒரு கேள்வி

ஈழமுரசின் பழைய  நிர்வாகம் முடியாது என்றபோது

ஏன் அதை பூட்டணும்???

ஏன் வேறு ஒருவரும் அதை நடாத்த முன்வரவில்லை

நீங்கள் எவராவது தயாரா???

இல்லையென்றால் ஏன்???

இதற்கு பதில் தெரிந்தால்

எல்லாம் புரியும்....

ஐயா விசுகு
 
ஈழமுரசை உருவாக்கி அதற்காக உயிர் கொடுத்தவன் தம்பி கஜன். அவனது வீரமரணத்துக்கு பின்னர் நாங்கள் அவனது படத்தை ஈழமுரசு ஆசிரியர் பக்கத்தில் உண்மைக்கு முன்னால் நடுநிலை இல்லை என்ற சுலோகத்துடன் பிரசுரித்து வந்தோம்.ஈழமுரசுக்குள் புகுந்த ஒட்டகம் படிப்படியாக ஈழமுரசை உருவாக்கி அதை வளர்த்தெடுத்த எல்லோரையும் படிப்படியாக வெளியேற்றி அல்லது திட்டமிட்டு வெளியேறும் சூழ்நிலையை உருவாக்கி தன்னுடைய வால்களை அதற்குள் புகுத்தியதுடன் கஜனுடைய படத்தையும் தூக்கியது.
அதற்கு அந்த ஒட்டகம் சொன்ன காரணம் ஈழமுரசை உருவாக்கிய நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.புதிய நிறுவனத்தில் கஜனுடைய படத்தைப் போட்டு பத்திரிகையை வெளியிட்டால் பிரெஞ்சு அரசாங்கம் பிரச்சனை தரும் என்பதாகும்.
ஈழமுரசு என்ற பெயரை பாவித்தால் பிரச்சனை இல்லை. கஜன் என்ற பெயரை பாவித்தால் பிரச்சனை வரும்  என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
ஈழமுரசுக்குள் நடந்த பல அசிங்கமான உள்விடயங்கள் பற்றி நான் இங்கே வெளிப்படையாக பேச வரவில்லை.
ஈழமுரசை தொடர்ந்து நடத்த முன்வந்த பலரை தனது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறார்கள் என்று இந்த ஒட்டகம் காவல்துறையில் முறைப்பாடுகளை செய்ததும் எனக்குத் தெரியும்.
புங்குடு தீவு மக்கள் தமிழ் தேசியத்துக்கு நிறையவே உதவி செய்திருக்கிறார்கள்.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிறையவே உதவிகளை செய்ததையும் நான் அறிவேன்.
ஆனால் ஈழமுரசு விடயத்தில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்பது தான் எனது அபிப்பிராயம்
 
நம்ம  பல்லைக்குத்தி.............??

வேண்டாமண்ணா

இப்ப  எனது கேள்விக்கு பதில்

ஏன் ஈழமுரசு  பூட்டப்பட்டுக்கிடக்கு...

அவரை விட்டால்

ஒருத்தரும் இல்லையோ???

தற்போதும் கூட எல்லாளன் படை மிரட்டியது என்ற  காரணத்தைகூறி  பத்திரிகையை மூடப்பட்டுள்ளது;.இனி தமிழ் தேசியர்கள் எவராது அந்த பத்திரிகையை மீள ஆரம்பிக்க முனைந்தால் அவர்கள் எல்லாளன் படையினர்.வன்முறையாளர்கள் அச்சுறுத்தல் விடுப்பவர்கள் என்று காட்ட முனைந்திருக்கிறது.அதேவேளை விடுதலைப்புலிகள்  எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்சில் செயற்படகிறார்கள் என்பதை காட்ட வேண்டும் என்பது தான் சிறீலங்கா அரசின் நோக்கம் .

Edited by navam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா வெளுத்தலெல்லாம் பால் என்று ஆகவும்தான் அப்பாவியாக இருக்கின்றார்! உள்வீட்டு விசயங்கள் என்றால் எப்படியும் பூசி மெழுகலாம்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா விசுகு
 
ஈழமுரசை உருவாக்கி அதற்காக உயிர் கொடுத்தவன் தம்பி கஜன். அவனது வீரமரணத்துக்கு பின்னர் நாங்கள் அவனது படத்தை ஈழமுரசு ஆசிரியர் பக்கத்தில் உண்மைக்கு முன்னால் நடுநிலை இல்லை என்ற சுலோகத்துடன் பிரசுரித்து வந்தோம்.ஈழமுரசுக்குள் புகுந்த ஒட்டகம் படிப்படியாக ஈழமுரசை உருவாக்கி அதை வளர்த்தெடுத்த எல்லோரையும் படிப்படியாக வெளியேற்றி அல்லது திட்டமிட்டு வெளியேறும் சூழ்நிலையை உருவாக்கி தன்னுடைய வால்களை அதற்குள் புகுத்தியதுடன் கஜனுடைய படத்தையும் தூக்கியது.
அதற்கு அந்த ஒட்டகம் சொன்ன காரணம் ஈழமுரசை உருவாக்கிய நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.புதிய நிறுவனத்தில் கஜனுடைய படத்தைப் போட்டு பத்திரிகையை வெளியிட்டால் பிரெஞ்சு அரசாங்கம் பிரச்சனை தரும் என்பதாகும்.
ஈழமுரசு என்ற பெயரை பாவித்தால் பிரச்சனை இல்லை. கஜன் என்ற பெயரை பாவித்தால் பிரச்சனை வரும்  என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
ஈழமுரசுக்குள் நடந்த பல அசிங்கமான உள்விடயங்கள் பற்றி நான் இங்கே வெளிப்படையாக பேச வரவில்லை.
ஈழமுரசை தொடர்ந்து நடத்த முன்வந்த பலரை தனது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறார்கள் என்று இந்த ஒட்டகம் காவல்துறையில் முறைப்பாடுகளை செய்ததும் எனக்குத் தெரியும்.
புங்குடு தீவு மக்கள் தமிழ் தேசியத்துக்கு நிறையவே உதவி செய்திருக்கிறார்கள்.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிறையவே உதவிகளை செய்ததையும் நான் அறிவேன்.
ஆனால் ஈழமுரசு விடயத்தில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்பது தான் எனது அபிப்பிராயம்
 
சின்ன திருத்தம் சிவா ..கஜனது மரணம் வீர மரணம் அல்ல குறுக்கால வந்ததால் போடப் பட்டவர் அது உங்களுக்கும் தெரியும் .அந்த வழக்கு நடந்தபோது திலகர் நாட்டுக்கு போய் விட்டார் அடுத்ததாகஈழமுரசு  ஆதித்தன் பொறுப்பு ஆதித்தனும் விசாரிக்கப் பட்டபோது கஜனின் படத்தை எடுத்து விட்டு  தான் தப்புவதுக்கு பல பெயர் மாற்றங்கள் செய்தார்அதுக்கு வகீசனும் உதவினார்.இதெல்லாம் நான் முன்னரே எழுதியதுதான் ஆனால் இவர்கள் தேசியத்தின் பெயரால் இயக்க சொத்துக்களை பங்கு போடுவதில் கவனத்தை செலுத்தினார் களே  தவிர யாரும் உண்மையாக தேசியத்தை நேசிக்கவில்லை பலரை துரோகி முத்திரை குத்தினார்கள் ..இப்போ பங்குகள் பிரிக்கப் பட்டு விட்டது ஒதுங்குகிறார்கள் ..ஆனாலும் இது முடிவல்ல ..இவர்களின் பின்னலான துரத்தல்கள்  தொடரும் ... கடந்த வாரம் உங்களை நேரில் சந்தித்தபோது சில விடயங்களை சொல்லியிருந்தேன் .தேசியத்தின் பெயரால் சுருட்டப் பட்ட சொத்துக்களை கையில் வைத்துக் கொண்டு சிலர் சோத்துக் கையால் காக்கை விரட்டுகிறார்கள் அதில் விழும் பருக்கைகள் ஊருக்கு போகிறது அதை வைத்து தம்பட்டம்  நடக்கிறது ...நடக்கட்டும் **** ..ஆனால் தேசியத்தின் பெயரால் சுருட்டியவர்களின் மீதான துரத்தல் தொடரும் ..நான் அடிக்கடி யாழ் இணையத்தில் கருத்து வைக்க விரும்பவில்லை எனது வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் நன்றி

Edited by இணையவன்
*** ஆதாரமில்லாமல் கள உறவு ஒருவரைத் தாக்கி எழுதியது நீக்கப்படுகிறது.

உண்மை சாத்திரியார் ..

வாரகாசுக்கும் கணக்கு இல்லை போற காசுக்கும் கணக்கு இல்லை கேட்டு கேட்டு களைச்சு  போட்டங்கள் கேட்க போனால் நீ துரோகி அவன் அனுப்பிய ஆளா வெளியில் போ அண்ணை வரட்டும் நான் அவரிடம் கணக்கு காட்டுவன் உங்களுக்கு சொல்லவேண்டிய தேவை இல்லை என்றுதான் துள்ளுவார் ஆள் என்று கேள்வி கடைசியா கொண்டுபோய் காட்டி எது விருப்பம் என்று முடிவு எடு என்று சொன்னபிறகு இரண்டு கிழமை கம் என்று இருந்திட்டு பிறகு ஐயகோ என்று அறிக்கை வேற ..

புலி சொத்து மக்கள் சொத்து ஆட்டை போடநினைப்பது தப்பு ராசா தப்பு . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக இல்லம் என்கிற பெயரில் உள்ளே நடந்தது சீட்டு தான்  சீட்டை எடுத்துவிட்டு அவசரமாய் ஆயுதம் வாங்க காசை நாட்டுக்கு அனுப்பிட்டன் என்றுஆதித்தன் ஆட்டையை போட்டதெல்லாம் நடந்ததது  இதெல்லாம் இங்கு ஆதித்தன் உள்ளை போன பின்னர் எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிவாஜியின் நினைவு நாள் . :icon_mrgreen: .அதி உச்ச தேசியம் என்பது நடிப்புத்தான் .

பலருக்கு புதிதாக இருக்க்கு நமக்கு பழகி போன விடயம் இது .கனடாவில் மலையை விழுங்கி விட்டு இப்பவும் மக்கள் முன்னால் ஏப்பம் விட்டுக்கொண்டு திரிகின்றார்கள் .நீங்களும் கொஞ்சம் முகர்ந்து பாருங்கோ என்று .

கடந்த  வாரம் கனடா வந்த பொது கேள்விப் பட்டேன்.
 
ஒரு பெரிய புடவை நிறுவனமாம். இயக்கம் சேர்த்த காசில் ஆரம்பித்ததாம்.
 
பொறுப்பாக விடப் பட்டவர் முழுசா ஆட்டையைப்  போட்டு விட்டாராம். பங்கு கேட்டு போற ஆக்களுக்கு, ஐயோ இது இயக்க சொத்து, அண்ண, தலைமறைவு வாழ்க்கை முடிந்து வெளிய வரும் வரை பாது காத்துக் கொடுப்பது என்ற லட்சியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்று கதை விட்டு கொண்டிருக்கிறாராம்.
 
இந்த மாதிரி ஐடியா வுடன் வருகீறீர்களே? நீங்கள் நாட்டுப் பற்று இல்லா மனிதர்களானது எப்போ என்று 'பிரசங்கம்' வேறு கொடுக்கிறாராம்.
 
(எனக்கு  உந்த அரசியல் தெரியாது. ஆர்வமும் இல்லை. அந்த கடைக்கு துணி வாங்க  அழைத்து சென்ற நண்பர் குடும்பம் காதுக்க கிசுகிசுத்தது....)
 
உண்மையோ?  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில றேகன் மேக்தா பார்த்தி  கைதானதும் அடுத்ததாக பொறுப்பெடுக்க பிரான்சில எல்லாரும் பயந்த நேரம்  கஸ்ரோ என்னிடம் கேட்டதுக்காக டென்மார்க்கில இருந்து குட்டி( மயூரன் அல்லது விடுதலை ) கொண்டுவந்து விட்டு அறிமுகங்கள் கொடுத்தது நான்தான் எந்த தேசிய *************** மறுக்கட்டும் பாக்கலாம் அதுக்கு பிறகு பிரான்ஸ்சில் ஒரு கருப்பு golf காரில் இறுதி யுத்தத்துக்கான பணம் பரிமாறப்பட்டது விசுகு தொடக்கம் யாராவது பகிரங்கமாக விவாதிக்க விரும்பினால் யாழ் இணையம் அதற்கு ஒழுங்கு பண்ணி தரவும்  அல்லது யாரும் இங்கு தேசிய இரட்டை வேடம் போட கூடாது 

Edited by nunavilan

அந்த நிர்வாகத்தில் நின்றா எல்லோருக்கும் இப்ப சொந்தமா கடை இருக்கு என்றால் பாருங்கோவன் ஆனால் வந்த நாளில் இருந்து வேலையில்லை .. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

1- விசுகு ஐயா வெளுத்தலெல்லாம் பால் என்று ஆகவும்தான் அப்பாவியாக இருக்கின்றார்!

2- உள்வீட்டு விசயங்கள் என்றால் எப்படியும் பூசி மெழுகலாம்தானே!!

வணக்கம் கிருபன்

உங்களுக்கான பதிலுடன்  எல்லோருக்குமான பதிலாக இது இருக்கட்டும்

1-  ஒரு  தாயக உறவாக எமக்கான ஊடகமொன்று தேவை என்ற ரீதியில் தான் எனது கேள்வி இருந்தது

அதற்கு எம்மால் ஆன உதவிகளைச்செய்ததால் அதன் இழப்பு வலித்தது

அவ்வளவு தான்

மற்றும்படி  அதிலுள்ள சரி பிழைகள் எனக்கு நூறுவீதம் சரியாக தெரியாத போது எழுதுவதில்லை

 அதேநேரம் ஈழமுரசுக்கோ

அதன் பழைய  நிர்வாகத்துக்கு கூட நான் சார்பாக எதையும் எழுதவில்லை

தொடர்ந்து எவராவது நடாத்தாமல்  பூட்டுவதே எனது கவலை.

2- இப்பொழுதெல்லாம்

படித்தவர்கள்  இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். பொது நலன் சார்ந்த கேள்விகளுக்கு

ஓ  உங்களுக்கும் பங்குண்டோ என்பது தான் பதிலாக வருகிறது....

இதனாலேயே  பலரும் ஒதுங்கி ஓடுதல் தொடர்கிறது

GTV க்கு கூட நான் தொடர்ந்து  வருட சந்தா கட்டி வருகின்றேன்

காரணம் எமக்கென்று ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்பது தான்

அது மூடப்பட்டாலும் வலி எனக்குத்தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன்

நாலு பேரைச்சேர்த்துக்கொண்டு

சில நல்ல காரியங்களைச்செய்தால்

அதைப்பொறுக்காத சிலர் என்னவெல்லாம் செய்வர்

என்னவெல்லாம்  எழுதுவர்

எவ்வாறு எல்லாம் தடுப்பர் என்பதற்கு

இங்கு விசுகு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் பட்டங்களும் 

நல்லதொரு உதாரணம்.....

அவற்றிற்கு எனது செயல்கள் பதில் சொல்லும்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கிருபன்

உங்களுக்கான பதிலுடன்  எல்லோருக்குமான பதிலாக இது இருக்கட்டும்

1-  ஒரு  தாயக உறவாக எமக்கான ஊடகமொன்று தேவை என்ற ரீதியில் தான் எனது கேள்வி இருந்தது

அதற்கு எம்மால் ஆன உதவிகளைச்செய்ததால் அதன் இழப்பு வலித்தது

அவ்வளவு தான்

மற்றும்படி  அதிலுள்ள சரி பிழைகள் எனக்கு நூறுவீதம் சரியாக தெரியாத போது எழுதுவதில்லை

 அதேநேரம் ஈழமுரசுக்கோ

அதன் பழைய  நிர்வாகத்துக்கு கூட நான் சார்பாக எதையும் எழுதவில்லை

தொடர்ந்து எவராவது நடாத்தாமல்  பூட்டுவதே எனது கவலை.

2- இப்பொழுதெல்லாம்

படித்தவர்கள்  இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். பொது நலன் சார்ந்த கேள்விகளுக்கு

ஓ  உங்களுக்கும் பங்குண்டோ என்பது தான் பதிலாக வருகிறது....

இதனாலேயே  பலரும் ஒதுங்கி ஓடுதல் தொடர்கிறது

GTV க்கு கூட நான் தொடர்ந்து  வருட சந்தா கட்டி வருகின்றேன்

காரணம் எமக்கென்று ஒரு தொலைக்காட்சி வேண்டும் என்பது தான்

அது மூடப்பட்டாலும் வலி எனக்குத்தெரியும்

"ஆதாயமில்லாமல் செட்டி ஆத்தைக் கட்டி அளக்கமாட்டான்" என்று நினைத்துக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.