Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி! சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்தபோதிலும் கூட, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் அது தவறு என்று தற்போது தெரிய வந்துள்ளது. 

 

முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதைப் போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் மற்ற மனுதாரர்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சந்திரசேகரா தள்ளி வைத்தார். பிற்பகல் இரண்டரை மணியளவில் விசாரணை மீண்டும் தொடங்கியபோது ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை வைத்தார். அதைத் தொடர்ந்து பவானி சிங்கும் வாதிட்டார். அப்போது அவர் ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பு எதிர்க்கவில்லை என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஜாமீன் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படியே வெளியிலும் தகவல்கள் பரவின. ஆனால் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீனை நீதிபதி சந்திரசேகரா நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் ஜெயலலிதா..

 

பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீ்ன் இல்லை என்று முடிவாகி விட்ட நிலையில் அடுத்து உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தரப்பு நாடவுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளன.



 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா இப்பிடி சப்பெண்டு போய்ட்டுது.. :huh: குடுத்த லட்டெல்லாம் வேஸ்டா??

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்ல இன்ரஸ்டிங்காப் போகிது. தமிழ்நாடு சினமா, சஞ்சிகைகள், டீவி சானல்கள், கிரிக்கட், அரசியல் எல்லாம் எனக்கு நல்ல funஆ இருக்கும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிமுக வினரின் விசர் கூத்துகள் முழு தமிழகத்தையுமே முட்டாள் மாநிலமாக காட்டி மற்ற மாநிலகாறனுகள் குடுக்கிற மிச்சசொச்ச மரியாதையையும் காற்றில் பறக்கவிடுகிறது....

 

சுப்ரீம் கோட்டுக்கு போயும் அம்மாவுக்கு ஜாமீன் /பெயில் கிடைக்கவில்லை என்றால்...தண்டனை காலம் முடியுமட்டும் அம்மா உள்ளேயா?

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழகத்தை குழப்பி ஆட்ச்சிக் கலைப்புக்கு பிளான் போடுப்படுகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.