Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர் (கட்டுரை )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sling_David-680x365.jpg
 
 

புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம்.

இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும்.

ORD_Excalibur_155mm_GPS_Shell_lg.jpgஇரும்புக் கூரையின் உருவாக்கம்

எவுகணை மற்றும் எறிகணை போன்றவற்றிற்கு எதிரான ஒரு முறைமை யை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக் கரு 2004-ம் ஆண்டே இஸ்ரேலில் உருவானது.

ஈரான் தான் தயாரித்த எறிகணைகளில் பெருமளவற்றை லெபனானில் செயற்படும் சியா முசுலிம்களின் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கும் பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பிற்கும் வழங்கியது.

2006-ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் நடந்த போரின் போது குறி தப்பாமல் இஸ்ரேலின் மீது ஒரு மாதத்தில் 4,000 எறிகணைகளை வீசியது. இது இஸ்ரேலியர்களை ஒரு உலுப்பு உலுப்பியது. அவர்களின் உள்ளத்தின் வலுவை பெரிதாகப் பாதித்ததுடன் இஸ்ரேலியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்தான் இஸ்ரேலை ஒரு எறிகணைப் பாதுகாப்பு முறைமை உருவாக்கும் நிலைக்குத் தள்ளியது. இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

irondome.jpgIsrael’s ‘Iron Dome’ Missile Defense System Shoots

இதன் பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரும்புக்கூரை (Iron Dome) என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறைமையை உருவாக்கின. இதை உருவாக்கும் பொறுப்பு  Rafael Advanced Defense Systems Ltd என்னும் இஸ்ரேலிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்காக இரு நாடுகளும் பல பில்லியன் டொலர்களைச் செலவழித்தன. 2008-ம் ஆண்டு ஆரம்ப நிலைச் சோதனைகள் செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டு பல தடவைகள் ஹமாஸ் அமைப்பினரின் கஸ்ஸாம் எறிகணைகளை போன்ற எறிகணைகளை இஸ்ரேல் உருவாக்கி அவற்றின் வீச்சுக்கு எதிராக இரும்புக்கூரையை சோதித்துப் பார்த்தது.

2012-ம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேல் மோதல்

2012 நவம்பர் மாத நடுப்பகுதியில்  இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில் இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது.

இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் வெளியில் வைத்து அழித்தது. இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது.

சில படைத் துறை வல்லுனர்கள்  இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது இரும்புக் கூரை 90% வெற்றி என்றது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை.

காஸாவில் மோசமாம மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கப் பாராளமன்றம் ஏவுகணைப்பாதுகாப்பு முறைமைக்கு தமது பங்களிப்பாக 225 மில்லியன் டொலர்களை அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது. பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு இஸ்ரேலின் அரசியல் பரப்புரைஞர்களின்(lobbyists) வலிமையை எடுத்துக் காட்டுகின்றது.

iron-dome-tamil.jpg

இரும்புக் கூரை வேலை செய்யும் முறை

இரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன.

ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது

இனம் காண் நிலையம் (Radar Unit)

இனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.

95174198-israel-has.jpgகட்டுப்பாட்டகம் (Control Centre )

இனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும்.

தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இலக்கு பற்றிய தகவல்களை வழங்கும்.

RIM-116_Rolling_Airframe_Missile_Launche

ஏவுகணை வீசிகள் ( Missile Launchers)

ஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும்.

இரும்புக்கற்றை

மிகச் சிறிய எறிகணைகளை அழிப்பதற்கு இரும்புக்கற்றை(Iron Beam) என்னும் லேசர் கதிர் வீசிகளையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ளன. இவை இரும்புக் கூரை முறைமையால் இனம் கண்டு தாக்கியழிக்க முடியாத சிறு எறிகணைகள் மீது லேசர் கதிர்களைப் பாய்ச்சி அழிக்கும். இதுவும் இரும்புக்கூரையைப் போல் ஒரு தானியங்கி முறைமையாகும்.

சோதனைக் களம்

அமெரிக்காவைப் பொறுத்தவரை அரபு இஸ்ரேல் மோதல் அதனது படைவலுவிற்கு ஒரு சோதனைக்களமாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும் (2014-ஜூல முதல்) இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்குமான போரில் ஈரானிய ஏவுகணைகளையும் தனது சொந்தத் தயாரிப்பு ஏவுகணைகளையும் ஹமாஸ் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கின்றது.

அவை அழிக்கப்படுகின்றன என்று அறிந்தும் ஹமாஸ் நாள் ஒன்றிற்கு நூற்றுக் கணக்கில் ஏவுகணைகளை வீசுகின்றது. இது இஸ்ரேலின் இரும்புக் கூரை பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் இருக்கலாம்.

இரும்புக் கூரை பற்றிய தகவல்கள் ஈரான், சீனா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு பெறுமதிமிக்கவையாகும். சீனா இணைய வெளியூடாக இரும்புக்கூரை தயாரிக்கும் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Defense Systems Ltd இன் கணனிகளை ஊடுருவி இரும்புக் கூரை தொடர்பான இரகசியங்களைத் திருடிவிட்டதாக நம்பப்படுகின்றது.

இரும்புக்கூரையின் களநிலைச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் சீனாவிற்கு தேவைப்படும். இதை பெறுவதற்காக ஹமாஸ் தொடர்ந்து எறிகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றதா?

David_sling_missile.jpgDavid_sling_missile

இரும்புக் கூரையை அடுத்து மந்திரக் கோல்

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David’s Sling என்னும் நீண்ட தூர ஏறிகணைகளையும் குறுந்தூர ஏவுகணைகளையும் (long-range rockets and short-range missiles)இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளன.

டேவிக் கோலியாத் கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை நிறுவனமான Rafael Advanced Defense Systemsமும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம் இணைந்து David’s Slingஐ உருவாக்கியுள்ளன.

மதிரக்கோல் எனப்படும் David’s Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

242591-an-arrow-ii-missile-interceptor-iஅம்பு முறைமை(Arrow systems) எனும் பல தட்டுப் பாதுகாப்பு முறைமை

இரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David’s Sling நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது. தொலைதூர ஏவுகணைகளுக்கும் வழிகாட்டி ஏவுகணைகளுக்கும் (cruise missiles ) எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் அம்பு முறைமை(Arrow systems)யை உருவாக்கிவருகிறது.

மந்திரக்கோல் எனப்படும் David’s Sling 2014-ம் ஆண்டு அல்லது 2015-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும் என்கிறது இஸ்ரேல்.

அம்பு முறைமை – 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David’s Sling விரைவாக வரும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.

 

http://ilakkiyainfo.com/

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம்.... சோனகன்,  தினம் செத்தாலும், எனக்கு சந்தோசம். :)

Edited by தமிழ் சிறி

இந்த ஆண்டு  இடம்பெற்ற இஸ்ரேல்  ஹமாஸ் யுத்தம்  இதை மற்ற நாடுகளுக்கு விளம்பரபடுத்தும் ஒன்று என கட்டுரை ஒன்றில் படித்தேன்

 

 இது பற்றிய மேலதிக தகவல்களை தேடி கொண்டிருந்தேன்  

 

இணைப்புக்கு நன்றி பெருமாள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு  இடம்பெற்ற இஸ்ரேல்  ஹமாஸ் யுத்தம்  இதை மற்ற நாடுகளுக்கு விளம்பரபடுத்தும் ஒன்று என கட்டுரை ஒன்றில் படித்தேன்

 

 இது பற்றிய மேலதிக தகவல்களை தேடி கொண்டிருந்தேன்  

 

 

அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems

 
Phalanx.jpg

ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் அமெரிக்காவிற்கு சீனாவிற்கு இடையில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் படைவலுப் போட்டியின் ஓர் அம்சமாகும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலைமுறை முந்தியவையாகும். அமெரிக்காவின் வலிமை மிக்க கடற்படையைச் சமாளிக்க சீனா பலவழிகளின் முயல்கின்றது.

முதலாவதாக சீனா தனது நீர்முழ்கிக் கப்பல்களை அதிநவினப்படுத்தி வருகின்றது. சீனாவின் நீர்முழ்கிக் கப்பல்களின் தரம் வலு ஆகியவை படு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது.

இரண்டாவதாக சீனா அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை முடக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளது. அத்துடன் இணையவெளியில் ஊடுருவி அமெரிக்கக் கடற்படையின் தொடர்பாடல்களை அழிக்கும் வலிமையும் சீனாவிடம் உண்டு.

மூன்றாவதாக நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோர்ப்பீடோக் குண்டுகளை சீனா மேம்படுத்தி வருகின்றது.

நான்காவதாக அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றது. இவை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் எனப்படும் 

இவற்றில் சீனாவின் நான்காவது ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது. 

சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதே வேளை அமெரிக்கா 2008-ம் ஆண்டின் பின்னர் தனது பொருளாதாரப் பிரச்சனைகளால் தன் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் தமது படையின் திறனை குறைந்த செலவில் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் 

சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய WU-14 ஏவுகணைகள் சீனா தனது கடற்படையை அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி உயர்த்தி விட்டதாக அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் பாதுகாப்புத் துறைக் குழு அறிவித்தது. 

சீனாவின் WU-14  ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems 

அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று அழைக்கப்படுகின்றது.  இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப்படுகின்றது. 

லேசர் மூலம் அழிக்கும் முறைமை 

உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும்

infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆகியவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும் 

அமெரிக்கக் கடற்படையின் மற்ற எல்லாப் பாதுகாப்பு முறைமைகளையும் முறியடித்துக் கொண்டு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க வரும் ஒலியிலும் பார்க்கப் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளையும் பறந்து வரும் விமானங்களையும் அமெரிக்கா தற்போது உருவாக்கும் Phalanx பாதுகாப்பு முறைமை தனது லேசர் கதிர்களால் கருக்கி அழிக்கும்.

 

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.