Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் தமிழ் மக்களுக்கு வழக்கறிஞர்கள் விடுக்கும் அறிவுறுத்தல்.

Featured Replies

அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள்.

01. அம்போ (avis d’impot)

02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள்

03. வித்தல்காட் (carte d’vitale)

04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள்

இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல்.

இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இணைக்கப்படுகின்றன.

பல லட்சம் ரூபாய்களை கட்டி உயிரை காப்பாற்ற வெளிநாடு வந்து விசா மறுக்கப்பட்டு இலங்கை திருப்பி அனுப்பினால் என்ன பயன் நாங்கள் 4 ம் மாடியிலா வாழ்க்கை நடத்துவது என்று பலரும் புலம்புகிறார்கள்.

நாங்கள் நாடு நிராகரிக்கப்பட்ட அகதிகளே எந்த சந்தர்ப்பத்திலும் பிரான்ஸின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு செய்யமாட்டோம் என்றும் கூறுகின்றனர்.

ஊடகத்துறையும் நாங்களும் இதுக்காகவே இரவு பகலாக பாடுபடுகின்றோம்.

new-visa-news-full.jpg

http://yarlfmradio.com/?p=13532

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் என்றால் அடைக்கலம் கிடைக்கும் இடத்தில் அமைதியா இருந்திடனும்.  அதை விட்டிட்டு.. பாஸ்பேட் கிடைச்சதும்.. எங்க பெனிபிட் அதிகம் என்று நாடு நாடா ஓடுறது.. ஊருக்கு சீன் போடப் போறது.. ரோட்டில நின்று கத்துறது.. குத்திறது.. வெட்டி முறியுறது... உள்ளூர் பொலிஸ்.. மற்றும் அமைப்புக்களோடு கேமக் கேட்கிறது.. சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரம் செய்வது.. கள்ளக் காட் போடுறது.. விசாவுக்காக போலித் திருமணம் செய்வது.. இதெல்லாம் எதுக்கு..??! இவற்றையும் தவிர்க்கனும்..!!! :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

எந்த லூசுப்பயல் இந்த செய்தியை எழுதியது

  • கருத்துக்கள உறவுகள்
தம்மை சந்தைப் படுத்தும்,  எந்த வழக்கறிஞருடைய அறிவுறுத்தல்?
 
ஏனெனில் பொலிசாரின் பார்வை உங்கள் மீது விழ முடியாதவாறு, நீங்கள் சட்டத்தினை மதித்து நடப்பவராயின் எதுவுமே தேவை இல்லை.
 
தான் உண்டு, தன வேலை உண்டு என்று பொது இடங்களில் செல்லும் எவரையும் பொலிசார் மறித்து அலுப்புக் கொடுத்ததாக நான் அறியவில்லை.  :icon_idea:
 
பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப் படுபவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது வகையில் சட்டத்தினை மீற வெளிக்கிட்டு, பின்னர், நாட்டு பிரச்னை, நாலாம் மாடி என்று கூப்பாடு போட்டு திருப்பி அனுப்பப் படாமல் இருக்க முயற்சி செய்பவர்கள்.
 
இங்குள்ள சட்டப்படி, அவர்கள் செய்த திரு விளையாடல்களை அரசு அதிகாரிகள் வெளியே சொல்ல முடியாது. இதனால் அவர்கள் தாம் அப்பாவிகள் போலவும், தம்மை அநியாயத்துக்கு பிடித்து அனுப்புகிறார்கள் என்றும் கூச்சல் போடுவார்கள்.
 
இலங்கையில், ஒரு மாகாண முதலமைச்சரின் மகன், மாணவராக வந்து, 'drunk and drive' பிடிபட்டு 48 மணி நேரத்தில் விமானம் ஏத்தி அனுப்பி விட்டார்கள். அவரோ, 'எனக்கு நாடு பிடிக்கவில்லை, அதுதான் திரும்பி வந்தேன்' என்று அங்கு கதை விட்டு உள்ளார். 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

முகநூலில் இந்த இணைப்பை பார்த்தேன். இங்கும் இணைத்தேன். மேலதிக தகவல்கள் தெரியாது.

இந்த இணைப்பை சென்று பாருங்கள். http://www.yarl.com/forum3/index.php?/topic/147194-முக்கிய-அறிவித்தல்/?p=1048864

இதனால் தற்காலிகமாக விடப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
மாணவர்கள் பலர் மறதியில் அல்லது கவனக் குறைவால் நேரத்துக்கு 'விசா நீடிப்பு' விண்ணப்பம் செய்யாமல் பின்னர், தமது இருப்பு சிக்கலாகிய பின்னர், அகதி விண்ணப்பம், இங்கு குடியுரிமை உள்ள பெண்களை பதிவு கலியாணம் (போலியாகவோ, உண்மையாகவோ) செய்வது போன்ற திருவிளையாடகளை செய்தும் பிரயோசனம் இல்லாமல் ஆச்சோ, போச்சோ, குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுவார்கள். 
 
இவர்கள் அதிகாரிகள்  பல ஆயிரக் கணக்கானவர்களின் அனுபவத்துடன் உள்ளனர் என்பதை மறந்து,  தாம் தான் புத்தி சாலித் தனமாக நடந்து கொள்வதாக நினைத்து இவ்வாறு முட்டாள் தனமாக நடக்க, நமது புறகிறாசிகள், வேற ஐடியா கொடுக்கின்றனர்.
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இந்த இணைப்பை பார்த்தேன். இங்கும் இணைத்தேன். மேலதிக தகவல்கள் தெரியாது.

இந்த இணைப்பை சென்று பாருங்கள். http://www.yarl.com/forum3/index.php?/topic/147194-முக்கிய-அறிவித்தல்/?p=1048864

இதனால் தற்காலிகமாக விடப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம்.

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி துளசி.
 
இந்த அறிவித்தல் படி, பெரிய பெட்டி அல்லவா தூக்கி கொண்டு திரிய வேண்டும்.
 
இங்கே பல ஆண்டுகளுக்கு முன் அலுவலகம் வைத்து நடத்திய சில நம்மூர் புறகிறாசிமார் (இவர்கள் இப்போது அனுமதிப் பத்திரம் இழந்து விட்டார்கள்), பத்திரிகைகளில் விளம்பரத்துக்கு பதில், (ஆள் வைத்து எழுதிய) கட்டுரைகளை வெளியிடுவார்கள்.
 
அபத்தங்கள் நிறைந்த அந்த, குடிவரவு, அகதிகள் சம்பந்தமான அந்த விபரங்களை வாசித்து, இவர் ஆள் விஷய காரர் என்று ஓடின ஆக்கள் பலர் கேஸ் தோத்து, நொந்து போய் இருந்ததை பார்த்து இருக்கிறேன்.
 
ஆங்கிலம் ஒழுங்காக எழுத வாசிக்க தெரியாத ஒருவர் கூட, அந்த மாதிரி கட்டுரை எழுதி ஏமாத்தி இருந்தார். நல்ல காலமாக இவர்கள் இப்போது தொழிலில் நிலைக்க முடியாதவாறு, அரசு 'Legal Aid' என்னும் இலவச (அகதிகளுக்கு) நடைமுறையினை நிறுத்தி விட்டது.
 
எம்மவர்களும் காசு கொடுக்க வேண்டும் என்றால் ஏன், முறையான, தரமான ஆக்களை பிடிக்கக் கூடாது என்று நினைக்கத் தொடங்கி உள்ளதும் ஒரு நல்ல விடயம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.