Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் - ​ வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Featured Replies

5930_content_tree%20planting.jpg

 

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக்குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

 

 வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையொட்டி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ள, வளியில் அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சுவதற்கும் மரங்கள் அவசியம்.

 

 ஆனால், துரதிர்~;டவசமாக எமது இயற்கைக்காடுகள் பல்வேறு காரணங்களால் மிகப் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன. இலங்கைத் தீவில் பிரித்தானியர்கள் காலடி பதித்தபோது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு அளவில் செழித்திருந்த இயற்கைக்காடுகள் இன்று 23.87 விழுக்காடுகள் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டிருக்கிறது. போராட்ட காலத்தில் பாதுகாக்கப்பட்ட வடக்கின் காடுகள்கூட இன்று தோல் இருக்கச் சுளை பிடுங்கும் கதையாகப் படைப்பலம் மிக்க அதிகாரவர்க்கத்தால் கபளிகரம் செய்யப்படுகிறது.  இலங்கையின் வரண்ட வலயமான வடக்கில் காடழிப்பின் காரணமாகவே வெம்மையின் கொடுமையை தற்போது நாம் கூடுதலாக அனுபவிக்கவேண்டியுள்ளது.

 

இதனால் இயற்கைச்சூழலின் சமநிலையைப் பேணுவதற்கும், இதனூடாக வடக்கில் எமது எதிர்காலச் சந்ததிகளின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் மரநடுகையை ஒரு பேரியக்கமாகவே மேற்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம். வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் முன்னெடுப்பதற்குத் தன்பெயரிலேயே ‘கார்’ என்று மழையின் பெயரைக்கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமான மாதமாகும். இம்மாதப்பகுதியிலேயே வடக்கில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், தமிழர்கள் தம் வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாளையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளதால் தமிழர்களின் புனிதமான மாதமாகவும் கார்த்திகை கருதப்படுகிறது.

 

இதன் பின்னணியிலும் மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழ்மக்களுக்கு மரநடுகையை மேற்கொள்ள மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே வடக்கு மாகாணசபை, கார்த்திகை 01 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியை வடமாகாண மரநடுகை மாதமாகத் தேர்வு செய்துள்ளது.

 

பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக் கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம். ஆளுக்கொரு மரம் நடுவோம்; நாளுக்கொரு வரம் பெறுவோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 http://thinakkural.lk/article.php?local/7kyjgwgyje6609bea6cfd50b19148vlypt4f5e3c735a972cf0eb8450konow#sthash.USIC31xu.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மரம் வளர்ப்பு மற்றும் அதன் பராமரிப்பு இன்றியமையாதது. நன்றி அமைச்சர் ஐங்கரநேசனுக்கு.. செய்தியின் உட்கருத்தையும் விளங்கிக்கொண்டோம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தொண்டைமனாறு தொடக்கம் நாவற்குழி வரையான பகுதிகளில் நீண்டதொரு மரம் நடுகையைச் செய்யலாம். இங்கே சில தடவைகள் மரம்நடுகைக்குச் சென்றிருக்கின்றேன். ஒரு மரத்துக்கும், இன்னுமொரு மரத்துக்குமான இடைவெளி, நீர் ஓடும் வாய்க்கால் பக்கமாக நடவேண்டிய மரங்கள் என்று நிறைய விடயங்கள் ஆராய்து நடுவார்கள். யாழ்ப்பாணத்தில் இப்பகுதி மழை நீர் தேங்கும் பகுதி, மற்றும் மிருதுவான உவர்நீர் கொண்ட பகுதி என்பதால் அது சார்ந்த மரங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கின்றேன்.

கெளரவ அமைச்சர் ஐங்கரநேசனின் பணிகள் பாராட்டுக்குரியவை.திரு ஐங்கரநேசன் தெற்கு ஆசிய நாட்டு புத்திஜீவிகள் போல்லாமல் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அறிவு ஜீவிகள் போல்  தனது நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்த முற்போக்கு சிந்தனைகளை கொண்டுள்ளார். பல திட்டங்களை தூர நோக்க்குடன் நடைமுறைபடுத்த முயற்சிக்கிறார். இவரை போன்ற அறிவுஜீவிகள் எமது அரசியலில் ஆரம்ப காலங்களில் இருந்திருந்தால் எமது நாடுஎவ்வளவு முன்னேறி இருக்கும். இவரை போல தூரநோக்குடன் சிந்திக்கும் அறிவு ஜீவிகள் பலர் அரசியலுக்கு வந்து குள்ளநிரிகளான  வக்கீல் புத்திசீவிகளின் கையில் இருக்கும்  எம் நாட்டு அரசியலின் தரத்தை உயர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும்... மரம் நாட்டக் கூடிய, வசதி இருக்காது.... என்பதால்,
புலம் பெயர் தேசத்தில், உள்ளவர்கள் குடும்பத்திற்கு, மூன்று பிள்ளைகள்  பெற்று....
தமிழனின் அண்மைய... வீழ்ச்சி விகிதாசாரத்தை, அதிகரிக்க வேண்டும்.
பிறந்த பிள்ளைகள்... அதிக மரம், நாட்டுவார்கள் என்பது, எனது நம்பிக்கை.
 

5930_content_tree%20planting.jpg

 

 

படத்தில இருக்கிற இந்த வயசு போன பாட்டியம்மா சொல்றத எல்லாரும் கேளுங்கோ..   :D

 

  • தொடங்கியவர்
வரலாற்றை மறக்காது நாம் மரம் நாட்டிப் பேணுவோம்! வடக்கு முதலமைச்சர் உரை 
 
cm%20857465896455958.jpg
 
எங்கள் வரலாற்றில் இம் மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டிப் நாம் பறைசாற்றுகின்றோம். இந்த விசேடகாலத்தில் பன்னிருகரனின் பதம் பார்த்துப் பணிகின்றோம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடமாகாண மரநடுகை மாதத்துக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நாரந்தனை கணேச வித்தியாலத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
இன்று முக்கியமான ஒரு கைங்கரியத்தினுள் உள் நுழைகின்றோம். மழைக்காலம் வந்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசிமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். கடந்த சில வருடங்களாக மழை வீழ்ச்சியில் பின்னடைவைச் சந்தித்து வந்துள்ளோம். அதற்கான முக்கிய காரணம் எம்மால் தறித்து, வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட பல நீண்ட கால மரங்களே. முன்னெல்லாம் ஏ 9 வீதியால் நாங்கள் வரும் போது அடர்ந்த காடுகள் தெருவின் இரு பக்கமும் இருப்பதைக் காணலாம்.
 
வானளாவும் மரங்களைக் கண்டு எம் மனங்கள் குதூகலிப்பன. இப்பொழுதோ நிலைமை மாறிவிட்டது. மரங்கள் பல தறித்து வெட்டி எடுத்துப் போயாகிவிட்டன. போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ 9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அந்நியர்களும் குடியிருக்கின்றார்கள். குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் அவர்கள். எனவே நாம் எமது வனச் செறிவை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
 
அரசாங்கம் நவம்பர் 15ஆம் திகதியை தேசிய மரம்நாட்டு நாளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. நாமோ இந்த மாதம் முழுவதையுமே மரம் நடுகை மாதமாக அறிமுகப் படுத்தியுள்ளோம். எம் வரலாற்றில் இம்மாதத்திற்குரிய பக்குவத்தை மரம் நாட்டிப் பறைசாற்றுகின்றோம். பன்னிருகரனின் பதம் பார்த்துப் பணிகின்றோம். மறைந்த மனிதர்கள் போலாம் மறுத்தொதுக்கப்பட்ட மரங்களும். மறுபடியும் மரங்கள் யாவும் மிகுந்திருக்க மரநடுகையில் மதர்த்து நிற்கின்றோம்.
 
நாங்கள் மரம் நாட்டுகையில் சில பல விடயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்பேர்ப்பட்ட மரம் ஒரு குறிப்பிட்ட நிலத்திற்குஞ் சூழலுக்கும் பொருத்தமாகும், எந்த மரத்தை வளர்ப்பதால் அங்கு வாழும் மக்களுக்கு அது மிக அதிக நன்மை பயக்கும், பழவகை மரங்களா, நிழல் தருமரங்களா அல்லது விறகுக்கு உதவுந் தருக்களா உசிதமானது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின்னர் நாட்டிய மரத்தைப் பராமரிப்பது எப்படி, யார் நீரூற்றுவது, நாடிச் செல்லும் மாட்டுக் கூட்டங்களிடம் இருந்து அதனைப் பாதுகாப்பது எப்படி, அம்மரத்தின் விபரங்கள் விவரப் பட்டியலில் விவரிக்கப் பட்டுள்ளதா போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்த்து முறையான தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டும். மேலும் சூழல் மாசுபட்டுப் போவதைத் தடுக்கவும் மரங்கள் வேண்டியுள்ளன.
 
அதுமட்டுமல்ல. எமது கோளின் மிக முக்கிய வளமான வனமர இருக்கைகள் உலகின் சுமார் 2 சதவிகித நிலத்தை மட்டுமே மூடி நிற்கின்றன. இவ்வுலகில் காணப்படும் ஜீவன்களில் பாதிக்கு மேற்பட்டவை இவ்விடங்களையே தமது வாழ்விடங்களாக வைத்துள்ளன. ஆகவே எம்மைச் சுற்றியுள்ள தாவரங்களாவன பறவைகள், மிருகங்கள், மற்றும் ஜந்துக்கள் பலவற்றிற்கு வாழ்விடங்களாக அமைவதை நாம் மறத்தல் ஆகாது. மனிதன் மரந் தறித்து, நிலத்தில் மண் நிரப்பி, மாட மாளிகைகள் அமைப்பதால் அவன் சுயநலத்துடன் வாழலாம். ஆனால் சுற்றுச்சூழலுக்கு அவன் பகைவன் ஆகின்றான் என்பதை நாம் மறத்தல் ஆகாது.
 
இதனால்த்தான் பலர் பல்வித பாரிய தொழில் அகங்களைத் தோற்றுவிக்க எம்மை நாடி வந்திருந்தாலும் நாம் மிகக் கவனமாக அவதானமாக அவற்றின் சுற்றுச் சூழல் பாதிப்பைப் பற்றிக் கவனித்துப் பார்த்தே உள்வர உதவுகின்றோம். பாரிய தொழில் அகங்கள் பலருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவன என்பது உண்மைதான். ஆனால் குறுகிய கால நலன்களையே குறியாக வைத்து வருங்காலச் சந்ததியினரை நாம் வருத்தத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. ஏற்கனவே எமது நிலங்கள், சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் ஆகியவை மாசடைந்துள்ளன. உதாரணத்திற்கு மின்சாரம் வேண்டுமென்றதால் பாரிய எண்ணைத் தேக்கக் கிடங்குகளைச் சுண்ணாகத்தில் வடிவமைத்ததால் இன்று எண்ணையானது நிலத்தினுள் கசிந்து சென்று சுண்ணாகத்தில் மட்டுமல்ல மல்லாகத்திற்கு அப்பாலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் இது பற்றி நான் யப்பானிய தூதுவருக்கு விபரித்தேன். உடனே போதிய தொழில் நுட்பத் திறன் தற்காலத்தில் உண்டு என்று கூறித் தம் அரசாங்கம் எமக்கு உதவ முன்வரும் என்றார்.
 
வேலைப் பளுவில் நான் மறந்து விட்டாலும் எமது வேட்டிகட்டும் வேளாண்மை அமைச்சர் எனக்கூடாக அந்த வேற்று நாட்டுத் தூதுவரின் உதவியைப் பெற ஆவன செய்வார் என்று நம்புகின்றேன். நிலத்தின் அடியில் மாசுடன் வாழ்வது நிந்தைக்குரிய ஒரு நிலை. நிபுணர்கள் உதவியுடன் ஒரு நிரந்தரத் தீர்வு இந்த நிலத்தடி மாசுக்கு நாம் காண வேண்டும். மரங்களை நாட்டுவதால் நாம் அடையும் பயன் பல இருக்கின்றன. சுற்றுச் சூழலில் உள்ள ஒலி இரைச்சலைத் தணிக்க வல்லன மரங்கள். இதுகாறும் எம்மை வாகன ஓசைகள் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இப்பொழுது வாகன இரைச்சல் மாசானது மெல்ல மெல்ல யாழ்ப்பாண நகரப் புறத்தைக் கவ்வி வருகின்றது. மரங்களைப் போதுமானதாக நாட்டி வைப்பது வாகன இரைச்சல் காதைத் துளைப்பதைக் கட்டுப் படுத்தும். மரங்கள் உயிரியமான பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்துகின்றன. சுகமான சூழலை உண்டு பண்ணுகின்றன. சுழன்று வரும் பேய்க்காற்றைத் தடை போட்டு நிறுத்துந் தகைமை மரங்களுக்குண்டு. மேலும் மழைக்காலங்களில் மண் அரிப்பைத் தடை செய்வதும் மரங்களே. எமது இந்து மதமானது ஒவ்வோர் தெய்வத்திற்கும் ஒரு விருட்சத்தை உடன் நிறுத்தி வைத்தார்கள்.
 
இந்தத் தெய்வத்திற்கு இந்த மரம் அல்லது செடி அல்லது மலர் இடமாகும் என்றார்கள். தாவரங்களுடன் எமக்கிருக்கும் அந்நியோன்யத்தை, அண்மித்த நிலையை அவர்கள் அறிவித்திருந்தார்கள். எமது முன்னோர்கள் மட்டுமல்ல இந்நாளில் நாங்கள் கூட மரங்களை மனமுவந்து வணங்குகின்றோம். வேம்பு, துளசி போன்றவை மக்களின் மரியாதையை இன்றும் பெற்ற மரங்கள். றோமர்கள் கூட மரங்களைத் தெய்வமாக வழிபட்டார்கள். மரங்களாவன மாசைத்தரும் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை மண்ணிலிருந்து பெற்று அவற்றைப் புறக்கணித்து அதேநேரத்தில் தனியாகத் தம் வசஞ் சேர்த்து வைக்கும் பாங்கை உடையவை.
 
சில நேரங்களில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நல்லவையாக மாற்றவல்லன. எம் கழிவுப் பொருட்கள் அவற்றின் உரமாக மாறுகின்றன. கரிமத்தைத் தன்னுள் கரிசனையாய் வைத்திருந்து மரங்கள் மனித குலத்தைப் பாதுகாக்கின்றன. இன்று எம் மக்களுக்கு வேண்டிய மிகப்பெரிய ஆற்றல் அல்லது ஆளுமை தன்னலம் மறந்து தரணி நலம் பேணல். அதுவும் தம்மக்கள் தடையறாது வாழ்ந்த இந்தத் தமிழ்ப் பேசுந் தரணி நலம்பேண! எம் வடமாகாணம் பலவித சோதனைகளையும் சோர்வுகளையும் சோகைகளையும் எதிர் நோக்கியிருக்கின்றது. அவற்றை எல்லாம் போக்கவல்லது நாம் சுயநலம் களைந்து பொது நலங் கருதி வாழும் வாழ்க்கை. அவ்வாழ்க்கைக்கு உரமூட்டக் கூடியது இந்த மரம் நடும் மாண்பாகும்.- என்றார். -
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.