Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியான பெண் சாவகச்சேரியில் விபச்சாரம்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியான பெண் சாவகச்சேரியில் விபச்சாரம்!?

 

 

vipa-300x225.jpgயாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை நேற்று புதன்கிழமை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை சேர்ந்த பெண், பெண்ணை விபசாரத்திற்காக அழைத்து வந்தவர், விடுதி முகாமையாளர், விடுதி உதவியாளர் மற்றும் இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையே கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியிலுள்ள விடுதியொன்றில் விபசார நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் கவனத்திற்கு நேற்று புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, விருந்தினர் விடுதியில் சோதனை நடத்துமாறு கொடிகாமம் பொலிஸாரிற்கு நீதவான் உத்தரவிட்டார்

அதற்கமைய விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார் மேற்படி நபர்களை கைது செய்தனர்.

http://tamilleader.com/?p=43283

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவியில், பம்பலப்பிட்டி தேவி இறக்குமதி செய்யப்பட்டால் என்ன தப்பு?எல்லாம் தேசிய நல்லிணக்கத்தை கட்டிஎழுப்ப எடுக்கும் முயற்சிதான்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்துப் பொம்பிளைகள் ஒருவரும் விபச்சாரம் செய்யாயினம். இறக்கு மதி செய்தான் உண்டு. ஏனென்றால் யாழ்ப்பாணம் கற்புகோட்டை. அங்க வாழுறவை எல்லாம் கண்ணகிகள்.

09 க்கு முதல் யாழில் விபச்சாரமே இருக்கவில்லை. அப்பாவி தமிழ் ஆம்பிளையளை கத்தி முனையில் விபச்சார விடுதிக்கு கூட்டிப்போகுது ஆமி. அப்படி போனாலும் யாழ்பாணத்து கற்ப்பிக்கரசர்கள் ஒண்டும் செய்யாம சும்மா காசை கொடுத்துட்டு வாரவை.

யாழ்தேவியை வரவேற்கும் கூட்டத்துக்கு இது விளங்காது.

வர வர இந்திய பத்திரிகை போல ஈழ செய்திதாள்கள் மாறி வருது ...சூடான தலையங்கம் போட்டு வியாபாரம் .

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலேயே மையவாதம் பொங்கி வழியுது :)

  • கருத்துக்கள உறவுகள்
சாவகச்சேரி நகரில் விபசாரம்- பெண் உட்பட 6 பேர் கைது
b50fa0ce0651a7033a879559c8dec41b.jpg

சாவகச்சேரி நகரில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவரையும் அவருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 பேரையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 
சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் இருந்து பெண் ஒருவரை அழைத்து வந்து விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார் இதற்காக 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டு  பெண்ணுக்கு ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கிறார்.
 
இன்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வாடிக்கையாளர் ஒருவருக்காக மீசாலைப் பகுதியில் அப்பெண் காத்துக் கொண்டிருந்தார்.
 
சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்தப் பகுதியில் நடமாடியதால் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது முழுத் தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
 
இதனை அடுத்து பொலிஸார் அப்பெண்னை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் குறித்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சில இடங்களை சோதனையிட பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.
 
இந்த அனுமதியினைத் தொடர்ந்து 2 விடுதிகளை சோதனையிட்டனர். இதன்போது மூடப்பட்ட விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த பெண்ணை யாழ்ப்பானத்துக்கு அழைத்து வந்த சுன்னாக இளைஞர் . அந்த விடுதி உரிமையாளர் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் அங்கு குறித்த பெண்ணுக்காக காத்து நின்ற யாழ்ப்பாண, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட ஐவரை கைது செய்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=722913612606707983#sthash.UmudYmRU.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலேயே மையவாதம் பொங்கி வழியுது :)

அப்ப இனி சாவச்சேரியில் ஏதும் நடந்தால் ............
செய்தியில் சர்வதேசத்தில் என்றுதான் எழுதவேணும் போல்??? 
 
அப்பத்தான் செய்தி பக்கவாதம் இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். 

தலைப்பிலேயே மையவாதம் பொங்கி வழியுது :)

ரோசக்காவை 80களில தெரியும்போலை.. அதுதான் துள்ளுறியள்!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற சோலியன் 80 களில் சட்டரீதியா எல்லா பொம்பிளியளையும் என்னைத்தூக்கி கொஞ்சுறவை, எனெண்ட்டா அப்ப நான் நிஜாமாலுமே பால்குடி :)

தவிர மையவாதம் எண்டு சொன்னது "தென்னிலங்கை இறக்குமதி" எனும் பதத்தையே. நீங்கள் எப்பவும் போல வாலை விட்டுட்டு தும்பை பிடிக்கிறியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.