Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் தமிழன் ...(சாட்டை சுழருது)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வந்து வாழும் நாயக்கர் சாதிக்காரங்களை குறிவைத்தே இந்த தெலுங்கன் எனும் புரளி கிளப்படுகிறது.

இஸ்லாமியரை அரபிகள் என்று சொல்வதற்கு நிகராரான புரட்டு இது. சீமான் போன்றவர்கள் வேண்ட்மென்றே தமிழனை சாதிவாரியாக பிர்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிக்கலாம். அது தப்பில்லை. ஆனால் அந்த மொழிக்குரியவன்தான் ஆளத் தகுதியானவன் என்று சொன்னால் அவன் ஃபாசிஸ்ட். :D

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணையோ அல்லது கோசானோ கூறும் விடயங்கள் எந்த ஆதாரமும் அற்ற வெறும் ஊகக்கதைகளே... தமிழன் தமிழ்மொழி என்ற எங்கள் உயிரான விடயங்களை யாரும் கவனியாது எந்த திராவிட மாநிலத்தவனும் ஏற்றுக்கொள்ளாத உண்மையில் யதார்த்தில் இல்லாத ஒன்றின்மீது தமிழர்களின் உணர்வுகளை திசைமாற்றி (இதில் பயணம் செய்யும் பல இன உணர்வுள்ள தமிழர்கள் மன்னிக்கவும். நீங்களும் திராவிடமாயை புரிந்துகொண்டு வெளிவரவேண்டும் என்பது இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் விருப்பு) அரசியல் நடத்திய திராவிட கட்சிகளில் உள்ள சிலர்தான் தாமாக வெளிவந்து தம்மை தெலுங்கர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் சொல்லிக்கொண்டு நாம்தமிழர் மீதும் சீமான் மீதும் தமது அரசியல் இருப்பு குறித்த பயத்தினால் வசைபாடுகிறார்களே அன்றி நாம் தமிழர் யாரையும் அடையாளப்பரிசோதனை செய்யவும் இல்லை இதுகுறித்த நிகழ்வுகளும் இல்லை.. இதுகுறித்து எப்பவோ ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். குறித்த காணொளியும் உள்ளது.. அரசியலில் நியாயமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதும் தவறு என்றால் திருத்திக்கொள்வதும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது..ஆனால் வேண்டுமென்று சொல்லப்படும் செவிவழி மற்றும் முகப்புத்தக தூற்றல்கள் செயல்பாட்டில் உறுதியாகவும் திறமையாகவும் உள்ள ஒரு அமைப்பை பலவீனப்படுத்தப்போவதில்லை..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  சுபேசுக்கு  வணக்கம்

 

 

 

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும் 

இன்றைய  உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

 

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி  மறவாதிருப்போம்  தம்பி....

 

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசுக்கு வணக்கம்

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும்

இன்றைய உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி மறவாதிருப்போம் தம்பி....

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

அண்ணா.. சீமானுக்கு முன்னமே வைகோ எமக்காக பேசியவர் பேசிக்கொண்டு இருப்பவர். அந்த நல்லமனிதனை ஈழத்தமிழினம் ஒருபோதும் மறவாது. அதேபோல் எமக்காக பேசும் சீமானும். சீமானும் வைகோவும் எமக்காக எப்பொழுதுமே கைகோர்ப்பவர்கள் ஒன்றாக. அவர்களிடம் அந்தபுரிதல் இருக்கிறது.. ஆனால் எம்மவர்களிடம்தான் அந்த புரிதல் இல்லை. வைகோவின் தம்பிகள் அவர்களது அரசியலை அங்கு அவர்கள் நாட்டில் பேசும்போது ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அவற்றை காவிவந்து தமிழ் மொழிக்கும் சீமானுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் முடிச்சுபோட்டு எழுதும்போதே இவற்றை எல்லம் வெளியில் இருந்து பார்க்கும் நாமும் மனசாட்சியின் குத்தல் தாங்கமுடியாமல் எழுதவேண்டி இருக்கிறது நமக்குதெரிந்த புரிந்துகொள்ளும் உண்மைகளை..மற்றும்படி யாரையும் புண்படுத்தவோ எழுதுபவை அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல.

இன்றைக்கு நாம் தமிழர் என்பது ஒரு அமைப்பு முழுமையான அரசியல் கட்சியல்ல. இனிவரும் காலத்தில் எப்படியோ...! ம.தி.மு.க ஒரு பிரதான அரசியல் கட்சி. அது தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை பெற இரு பெரும் திராவிட கட்சிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பதவிகளில் இல்லாத ஒரு கட்சி அமைப்பு ரீதியாக பலவீனமாகவே காணப்படும். அதற்கு நல்ல எ.கா ம.தி.மு.க வே. ஈழ தமிழர் நலன்சார்ந்து போரடி வருபவர் நெடுமாறன் ஐய்யாவும், வைகோவும் அன்றிலிருந்து. இன்றைக்கு நெடுமாறன் ஐய்யா வயோதிப.பருவத்தில் உள்ளார். இன்றளவும் வைகோ நிலையான இடத்தை பெற போராடிவருகிறார்.

2009க்கு பிறகு தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையானது குறிப்பிடதக்க அளவில் மாற்றமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இளையோரிடத்தில். இப்படியான சூழ்நிலையில் ஈழ அரசியலை கையில் எடுத்து கொண்டார் சீமான். மற்றவர்களை காட்டிலும் அதில் தீவிரமாக ஈடுபாட்டை கொண்டுள்ளார். அவரது வருகை பலரால் ஏற்றுகொள்ள முடியவில்லை, என்னாலும்கூட முழுமையாக ஆதரிக்கபடவில்லை. அவரது ஆரம்பகால அரசியல் செயற்பாடுகளும் வாய்மூல வாக்குமூலங்களும் அவ்வறு இருந்தன. ஆனால் சொல்லத்தக்க அளவில் மாற்றங்களும் வந்தன. அதுவரை தேசிய தலைவரின் படங்களை பாவிக்க முடியாத சூழலை மாற்றினார். ஒரு முறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்த நேரத்தில் பெரிய அளவில் தேசிய தலைவரின் பதாகை வைக்கப்பட்டிருந்தை காண மட்டற்ற மகிழ்ச்சி உண்டானது.

எனது ஊகத்தின்படி சீமானின் கட்சியில் உள்ளவர்கள் முழுவதுமாக அவரை நம்பி இணைந்திருப்பார்கள் என தோன்றவில்லை. அவர் மற்றவரை காட்டிலும் மக்களிடம் துணிந்து தலைவரை எடுத்து செல்வதால் இருக்கலாம். ஏனெனில் இப்போதுள்ள தெரிவுகள் சிலவே. காலமாற்றத்தில் அவரது செயற்பாடுகளே அவரை முன்னிருத்தும் அல்லது தூக்கி எறியும். ஆனால் இன்றைய தேவை இளைஞர்களிடையே வெற்றிடத்தை ஏற்படுத்திவிடாதிருக்க வேண்டும். அதற்காவது சீமான் தேவையாயுள்ளார். அவரது அண்மைய செயற்பாடுகள் ஒரளவு திருப்திகரமானதாக உள்ளது.

இனத்தின் அவலங்களை மற்ற இந்திய தேசிய இனங்களுக்கு கொண்டு சென்றது பாரட்டதக்கது. அவரால் ஒரளவு நமதினத்தின் அவலங்களும் தேசிய தலைவரும் விடுதலை போரட்டமும் ஒரளவு எடுத்து செல்லப்படுகிறது என்ற யதார்த்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் சீமானோ மற்ற எவருமோ எக்காலத்திலும் ஒரு மாவீரரின் புகழையோ புனிதத்தையோ பெற முடியாது. புலத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது.

இன்று குர்திஸ்தான் பலநாடுகளாலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களைவிட பன்மடங்கு ஆயுத பலத்துடன் இருந்த நாம் அங்கிகரிக்கப்படாததற்கு காரணம் நமது போரட்டத்தின் தார்மிக காரணங்களை எடுத்து செல்லாததே. ஏதோ ஒருவகையில் எடுத்து செல்லப்படுகிறது சீமானால். அது ஒருவகையில் ஆதாயமே. திருமுருகன் காந்தி நல்ல செயற்பாட்டாளராக தெரிகிறார் இவரிலும். காலம் மாறும் காட்சிகளும் மாறும். அப்போது உரியவர் உரிய இடத்திலிருப்பார். எது எப்படியோ தேசிய தலைவரை தலைவராக ஏற்று கொண்ட ஒருவரை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்காமல் இருக்கவே விரும்புகிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யார் தமிழன் ..2

 

Edited by அஞ்சரன்

  • தொடங்கியவர்

தம்பி  சுபேசுக்கு  வணக்கம்

 

 

 

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும் 

இன்றைய  உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

 

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி  மறவாதிருப்போம்  தம்பி....

 

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

அண்ணே கீபோட்டில நாடே பிடிக்கிறமாம் ...மற்றவனுக்கு துரோகி பட்டம் கூட இருந்த இடத்தில கொடுக்கிறமாம் கருத்து எழுதுவது எல்லாம் ஒரு பிரச்சினையா .

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல.

எங்களுக்கு என்ன நன்மை அதுதான் எங்களுக்கு முக்கியம் சுபேஸ் ...மத்திய அரசு மாநிலத்தை மதிப்பதே இல்லை அப்படி இருக்க என்ன மாற்றம் வந்திடும் என்று சொல்லுறியள் ..

 

 

பிரபாகரனை  உலகத்துக்கே தெரியும் அப்படி இருக்க இது என்ன சீமான் தான் தமிழ்நாட்டில் இப்ப கொண்டு சென்று சேர்க்கிறார் என்றால் முப்பது வருட போராட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாமல் இருந்ததா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.