Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸி நடப்பு சாம்பியனை.. பிரிச்சு மேயிது. :lol:  :lol:  :D

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தரையில் பட்டு பிடித்த கேட்சிற்கு அவுட் கேட்ட ஷேன் வாட்சன்
 

 

329 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணியின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவுக்கு தரையில் பட்டு எடுத்த கேட்சிற்கு அவுட் கேட்டார் ஷேன் வாட்சன்.

சிட்னி மைதானம் என்றாலே 2008ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் நமக்கு நினைவுக்கு வரும். நடுவர்கள் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய தவறுகள் இழைத்த டெஸ்ட் போட்டி அது. பெரிய சர்ச்சைக்குள்ளானது அந்த டெஸ்ட் போட்டி.

 

இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச 4-வது பந்தை ரோஹித் சர்மா டிரைவ் ஆட பந்து ஸ்லிப்பில் ஷேன் வாட்சனிடம் சென்றது. தெளிவாக தரையில் பட்டு கேட்ச் பிடித்துவிட்டு முறையீடு செய்தார்.

 

கள நடுவர் 3-வது நடுவரை அழைக்க, ரீப்ளேயில் பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. நிச்சயம் வாட்சனுக்கும் தெரிந்திருக்கும் தான் கேட்ச் பிடிக்கவில்லை என்று, இருந்தாலும் ஒரு அவுட் கேட்கின்றனர் ஆஸ்திரேலியர்கள்.

நல்ல வேளையாக நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உமர் அக்மல் பேட் செய்த போது பைல்களை தட்டி விட்டார் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின். ஹிட் அவுட் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் அப்போது.

இப்போது வாட்சன், தரையில் பட்ட பந்தைப் பிடித்து விட்டு கேட்ச் என்று முறையீடு செய்கிறார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article7035416.ece

BCCI அணி 4/142  @  30.1 Ovrs

  • கருத்துக்கள உறவுகள்

161/4 in 33.3 ov.

உலகக்கோப்பை கிரிக்கெட் : BCCI அணி 36.3 ஓவர்களில் 178/5

AM Rahane c †Haddin b Starc 44

  • தொடங்கியவர்

ஒரு ரன்னில் காலியான கோலி: ட்விட்டரில் 'சிக்கிய' அனுஷ்கா
 

 

உலகக் கோப்பை அரையிறுதியில் 329 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தும் நிலையில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. விராட் கோலி 12 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரன்களை குவிப்பார் என்று கோலியை பெரிதும் நம்பி இருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், கோலி ஆட்டமிழந்ததற்கு பாலிவுட் நடிகையும் அவரது தோழியுமான அனுஷ்கா ஷர்மா முக்கிய காரணம் என்கிற ரீதியில் ட்விட்டர்வாசிகள் ஆதங்கமடைந்து பதிவுகளைக் குவித்து வருகின்றனர்.

 

உலகக் கோப்பை போட்டிகளில் மிக முக்கியமான ஆட்டமான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும் இந்த போட்டியைக் காண நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சிட்னியில் முகாமிட்டார்.

 

கிரிக்கெட் போட்டிகளில் அதிர்ஷ்டத்தை நம்பும் சிலர், அனுஷ்கா ஷர்மா சிட்னி மைதானத்தில் தரை இறங்கியதால், கோலியின் ஆட்டம் பிரமாதமாக இருக்கும் என்று பெரிதும் நம்புவதாக பதிவிட்டனர்.

 

ஆனால், எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை தற்போது அனுஷ்கா ஷர்மாவுக்கு எதிராக குவித்து வசைபாடி வருகின்றனர்.

தற்போது அனுஷ்கா சிட்னியில் இருப்பதாலே, கோலி தனது ஆட்டத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்ற வகையில் இவர்களது விமர்சனங்கள் இடம்பெறுகின்றன.

 

அவற்றில் சில...

 

இம்ரான் கான் (‏@imran): அனுஷ்கா ஷர்மாவை திடீரென இந்தியாவின் எதிரி போல பார்க்கிறீர்களே?

 

ஜியா (‏@jiyalogy): பெண் ஒருவரின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, கவனச் சிதறலும் தான்.

 

காயத்ரி (‏@SGayathrie): அனுஷ்காவை மீது குறை சொல்வதை நிறுத்துங்கள். ஒவ்வொரு வீரருக்கும் மோசமான நாள் இருக்கும். அமைதியாக இந்தியாவுக்கு ஆதரவு அளியுங்கள்.

 

பிரியங்கா (‏@DesiChaai): அனுஷ்கா, நீங்க NH10 படம் நடிச்சீங்க. ஆனா, உங்க விராத் 10 கூட அடிக்கலேயேமா!

 

சிஸி மான் (‏@SuziMann): எனக்கு அப்பவே தெரியும். சிட்னிக்கு அனுஷ்கா சென்றது ரொமப மோசமான ஐடியா.

 

விஷாலி மோத்தா (‏@VaishMahi): நானும் அப்பவே சொன்னேன். கோலியின் கவனம் இன்று சிதறிவிட்டது.

 

கார்த்திகா (‏@karthika): கோலியின் கவனத்தைச் சிதற வைக்க ஆஸ்திரேலியாக்காரங்க வேண்டுமென்றே கேமராவை அனுஷ்கா பக்கம் திருப்புறாங்க.

 

அனுஷ்கா சூப்பர் ஃபேன் (‏@arulovesanu): அனுஷ்காவை திட்டும் உங்கள் அனைவரையும் நான் ப்ளாக் செய்கிறேன். தவறான நோக்கத்தோடு அனுஷ்காவை ட்ரெண்ட் செய்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

 

டான் (‏@Juuism): அனுஷ்கா, இப்போது நீங்க கோலியுடன் ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் போகலாம்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article7035721.ece   :lol: :lol:

சிட்னியில் இந்தியா சட்னி!

  • கருத்துக்கள உறவுகள்

criquet07.gifஇந்திய உலக கோப்பை கனவு தகர்ந்தது :D 

 

k014.giffeuerwerk1.gif d035.gif

  • தொடங்கியவர்

இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!

 

சிட்னி: உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 328 ரன்களை விளாசியது. இதையடுத்து இந்தியா பேட் செய்த இந்தியா 233 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா! டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை எடுத்தது. 329 ரன்கள் விளாசினால் பைனலுக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்தியா விரட்டலை ஆரம்பித்தது.

 

முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது. தவானின் அதிரடியால் ஸ்கோர் சற்று வேகம் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், 12.5வது ஓவரில் ஹசில்வுட் பந்தில், பவுண்டரி எல்லையில் நின்ற மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவான். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 76 ரன்களாக இருந்தது. இதன்பிறகு ரோகித்துடன், கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடி நீடித்து நிற்கவில்லை. 15.3வது ஓவரில், ஜான்சனின் பவுன்சரில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து, கோஹ்லி 1 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அவர் 13 பந்துகளை சந்தித்து தடுமாறியபிறகு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மைதானத்திலுள்ள ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். டிவியில் பார்த்த ரசிகர்கள், பலரும் டிவியை ஆப் செய்தனர்.

 

18வது ஓவரில் இந்தியா 91 ரன்கள் எடுத்திருந்தபோது, ரோகித் ஷர்மா 34 ரன்களில் அவுட் ஆனார். ஜான்சன் வீசிய முந்தைய ஷாட் பிட்ச் பந்தில் அபாரமாக சிக்சர் அடித்த ரோகித், அடுத்த பந்திலேயே பௌல்ட் ஆனார். அணியின் ஸ்கோர் 108 ரன்களாக இருந்தபோது, 7 ரன்களில் ரெய்னா வெளியேறினார். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு, 121 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து டோணி, ரஹானே அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் அவுட் ஆனார் ரஹானே. 38 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்திருந்தது. ஸ்கோர் 208ஆக இருந்தபோது, ஜடேஜாவும், 231ஆக இருந்தபோது டோணியும், ரன் அவுட் ஆனார்கள்.

 

இந்திய தரப்பில் டோணிதான் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். வேறு பேட்ஸ்மேன்கள் யாரும் அரை சதம் கூட அடிக்கவில்லை. ஜேம்ஸ் பால்க்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்: முன்னதாக, முதல் 10 ஓவர் பேட்டிங் பவர் பிளேயில், ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 56 ரன்களை எடுத்தது. ஆனால் ஸ்மித் மற்றுன் பின்ச் 3வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தனர். அதை உமேஷ் யாதவ் 35வது ஓவரில் உடைத்தார். உமேஷ் யாதவ் வீசிய 35வது ஓவரின் முதல் பந்தில் 105 ரன் எடுத்திருந்த ஸ்மித், ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நீண்ட நேரமாக போராடி அந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. இதன்பிறகு அதிரடி காண்பித்த மேக்ஸ்வெல்லை அஸ்வின் நடையை கட்ட செய்தார். அவர் 23 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா ஸ்கோர் 232 ரன்கள். இதற்கு அடுத்த ஓவரில் அதாவது 39வது ஓவரில், உமேஷ் யாதவ் பந்தில் ஆரோன் பின்ச் அவுட் ஆனார். 1

 

16 பந்துகளை சந்தித்து கட்டைபோட்டு அவ்வளவு நேரம் நின்று சதத்தை நெருங்கிய நேரத்தில், 81 ரன்னில், உமேஷ் யாதவின், ஷாட் பிட்ச் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 234 ரன்களாகும். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் புதிய பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். பார்ட்னர்ஷிப் அமைந்துவிடாமல் இவர்களையும் பிரித்தால், இந்திய அணியால், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில், மோகித் ஷர்மா பந்து வீச்சில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து, கிளார்க் 10 ரன்னில் நடையை கட்டினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 248 ரன்னாக இருந்தது. இதன்பிறகு, பால்க்னர் களமிறங்கினார். அவர் 21 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார்.

 

50 ஓவர்கள் இறுதியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு, 328 ரன்களை எடுத்தது. ஜான்சன் 27 ரன்களுடனும், ஹாடின் 7 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக, பேட்டிங்கிற்கு சாதகமான சிட்னி மைதானத்தில், வெற்றி, தோல்விக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இரு அணிகளிலுமே கடந்த காலிறுதியில் ஆடிய அதே வீரர்கள் உள்ளனர். எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டேவிட் வார்னரும், ஆரோன் பின்ச்சும், தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரில் 2 ரன்களே கிடைத்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் ஆஸ்திரேலியா 12 ரன்களை எடுத்தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் 1 ரன் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. இதனிடையே யாதவ் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் அவுட் ஆனார். பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கோஹ்லியிடம் கேட்சானது. வார்னர் ஏழே பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பின்ச்சுடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில், ஸ்மித் ஓரளவுக்கு அதிரடியாக ஆட, பின்ச் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

முதல் 10 ஓவர்கள் கட்டாய பேட்டிங் பவர் பிளே எனப்படும். இந்த ஓவர்களில், ஃபீல்டர்களுக்கு கட்டுப்பாடு உண்டு. எனவே அதிரடியாக ஆட பேட்ஸ்மேன்கள் முயல்வார்கள். ஆயினும் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 56 ரன்களை எடுத்தது. அதேநேரம் பிற அணிகளுக்கு எதிராக முதல் பத்து ஓவர்களில் மேலும் டைட்டாக பந்து வீசிய இந்திய வீரர்கள் இம்முறை சற்று அதிக ரன்களை கொடுத்து விட்டனர். எனவே இரு அணிகளுக்கும் இது பப்பாதி வெற்றிதான். அடுத்த 10 ஓவர்களில் ஸ்பின்னர்களான ஜடேஜாவும், அஸ்வினும் அதிக ஓவர்கள் வீசினர். மோகித் ஷர்மா கணிசமாக பங்களித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 105 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. எனவே விக்கெட் வீழ்ச்சிக்காக இந்தியா ஏங்கியது. முதல் 20 ஓவர்களுக்குள் 6 பவுலர்களை டோணி மாற்றியது இதற்கு சான்றாகும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/australia-win-the-toss-elect-bat-223369.html

பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்த ஆஸ்திரேலியாவிற்கு வாழ்த்துக்கள் !!!

  • தொடங்கியவர்

கொஞ்சம் கூட காரசாரம் இல்லாத இந்தியாவின் சேஸிங்... கேவலம்!

 

சென்னை: இந்தியாவை முடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் படு பர்பெக்ட் ஆக செய்து, அதை ஒரு இம்மி கூட அதிலிருந்து அவர்கள் பிசகவில்லை. ஆனால் இந்தியா என்ன செய்தது... தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்த அந்த உணர்வு, வேகம், துடிப்பு கூட சற்றும் இல்லாமல் போய் விட்டது இந்தியாவிடம். பேய்த்தனமாக, வெறித்தனமாக ஆடியிருக்க வேண்டிய ஒரு போட்டியை, உத்வேகத்துடன் நடத்தியிருக்க வேண்டிய ஒரு சேஸிங்கை ஏதோ ஜஸ்ட் லைக் தட் போல இந்தியா நடத்தியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.

 

 இந்தியா இந்தப் போட்டியில் செய்த தவறுகள் நிறைய...

டாஸ் வெல்ல முடியாமல் போனது, முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போனது இயற்கை செய்த தவறு.

 

பீல்டிங்கின்போது இந்தியாவின் பந்து வீச்சு சுத்தமாக திருப்திகரமாக இல்லை.

 

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக கருதப்படும் இந்த பிட்ச்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டனர்.

 

அஸ்வி்ன், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சில் ரன்கள் குறைவாக கொடுத்தார்களே தவிர மொத்தமே ஒரு விக்கெட்தான் கிடைத்தது.

 

சுழற்பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது வரலாற்று சோகம்.

 

இருப்பினும் அஸ்வினின் பந்து வீச்சு காரணமாகவே ஆஸ்திரேலியாவை சற்று மட்டுப்படுத்த முடிந்தது. இல்லாவிட்டால் 350க்கு மேல் போயிருக்கும் ஸ்கோர்.

 

ஆஸ்திரேலியாவின் பின்ச், ஸ்மித் பெரிய பார்ட்னர்ஷிப் போட நமது பந்து வீச்சாளர்கள் அனுமதித்தது பெரிய தவறு.

 

பின்ச் நீண்ட நேரம் தடுமாறியபடி இருந்த நிலையில் அவரை அவுட்டாக்க நமது பந்து வீச்சாளர்களால் முடியாமல் போனது இன்னொரு தவறு.

 

அஸ்வினை சற்று முன்னதாகவே பந்து வீச அழைத்திருக்கலாம்.

 

அதிகம் நம்பிய ஜடேஜா தன் மீது கேப்டன் டோணி வைத்த நம்பிக்கையை நிறைவேற்றத் தவறி விட்டார்.

 

வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் ரன்களை வாரிக் கொடுத்தது நிச்சயம் தவறு.

 

உமேஷ் யாதவ் முதலில் அதிக ரன்களை வாரிக் கொடுத்தது நிச்சயம் தவறு..

 

அதுதான் பெரிய தவறும் கூட. இதற்கு முன்பு நடந்த சுற்றுப் போட்டிகள், காலிறுதிப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் இன்று மொத்தமாக ஏமாற்றி விட்டனர். பீல்டிங்கில் செய்ததை விட இரண்டு மடங்கு தவறுகளை சேஸிங்கில் செய்தது இந்தியா.

 

சேஸிங்கில் அவர்கள் செயல்பட்ட விதத்தை யாராலும் ஜீரணிக்கவே முடியாது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான்,

 

ரோஹித் சர்மா இருவரையும் குறை சொல்ல முடியாது. இருவருமே ஓரளவு நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர்.

 

விராத் கோஹ்லிதான் முதல் மிகப் பெரிய தவறு. பொறுப்பே இல்லாமல் ஆடினார் கோஹ்லி.

 

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வெளுக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்குப் பலனே இல்லை என்று சவடால் பேசியிருந்த கோஹ்லி இன்று கேவலமாக ஆடினார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் ஒரு ரன்னில் அவுட்டானது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

 

இந்தியாவின் தொடர் வெற்றி நடைக்கு கோஹ்லிதான் முதல் கோணலாக அமைந்தார் என்பது வேதனையானது.

 

கோஹ்லியைத் தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சரியாக நின்று ஆடவே முயலவில்லை. சுரேஷ் ரெய்னா நம்பிக்கை அளித்தார்.

 

ஆனால் வீழ்ந்தார். ரஹானே போராடிப் பார்த்தார் முடியவில்லை. கேப்டன் டோணி தனி மனிதராக கடுமையாகப் போராடினார்.

 

பேட்டிங் பவர் பிளேயில் இந்தியா முதல் முறையாக இன்று விக்கெட்டைப் பறி கொடுத்தது. அதிக ரன்களையும் குவிக்க முடியாமல் போனது.

 

அவரது போராட்டத்தில் ஒரு கால்வாசியையாவது முந்தைய வீரர்கள் செய்திருந்தால் நிச்சயம் இந்த ஸ்கோரை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்திருக்க முடியும்.

 

இதேபோன்ற பெயரிய ஸ்கோரை இந்தியா சேஸ் செய்துள்ள நிலையில் இன்று முன்னணி வீரர்களான கோஹ்லி, ரெய்னா ஆகியோரது அவுட்தான் இன்றைய வெற்றியைக் கெடுத்து விட்டது. ஆஸ்திரேலியா திட்டமிட்டு பேட்டிங் செய்தது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு சமாளித்தது பவுலிங்கிலும் திட்டமிட்டபடி அழகாக பந்து வீசினர். ஷார்ட் பந்துகள், பவுன்சர்கள், விக்கெட்டைக் குறி வைத்து பந்து வீசுவது என சிறப்பாக செயல்பட்டனர்.

 

உலகக் கோப்பைத் தொடரில் முதல் முறையாக இந்தியா ஆல் அவுட் ஆகியுள்ளது.முதல் முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அவுட்டாகியுள்ளது... அது அதன் வெளியேற்றமாக அமைந்து ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது.

 

முதல் முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அவுட்டாகியுள்ளது... அது அதன் வெளியேற்றமாக அமைந்து ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அன்று வெறியுடன் ஆடியதே, வேங்கையாக போராடியதே, அதற்கு பதிலடியாக நியூசிலாந்து வெறி கொண்டு ஆடியதே.... அதுதான் ஆட்டம்.. அதுதான் வேகம்.. அதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்ததும் கூட.. ஆனால் டோணி அன் கோவின் சேஸிங்கை எந்த வகையிலும் சேர்க்க முடியவில்லை...!

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-fail-live-up-the-mark-223423.html

  • கருத்துக்கள உறவுகள்

e040.gifc050.gif டணக்கு, டணக்கு..... டண், டணக்கா....feuerwerk1.gif f030.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை பைனல்... முதல்முறையாக கைநழுவிப் போன ஆசியாவின் “கெளரவம்”!

 

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வந்துள்ள நிலையில் அந்தப் பெருமையை இந்தியா இன்று கைநழுவ விட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வருகிறது.

 

உலகக் கோப்பை பைனல்... முதல்முறையாக கைநழுவிப் போன ஆசியாவின் “கெளரவம்”! 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையை ஆசிய அணியான பாகிஸ்தானும், 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையை இன்னொரு ஆசிய அணியான இலங்கையும் வென்றன. இதன் பிறகு 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான், 2003 ஆம் ஆண்டு ஆசிய ஜாம்பவான் இந்தியா, 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அங்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தன.

 

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் இறுதிச்சுற்றில் சந்தித்தது அதுவே முதல் முறையாகும். அப்போட்டியில் இந்தியா மகுடம் சூடியது. நடப்பு உலக கோப்பை திருவிழாவில் பிரதான ஆசிய அணிகளில் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் கால்இறுதியுடன் கிளம்பி விட்டன.

 

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா 23 ஆண்டுகளாக ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் சிறப்பை இழந்துள்ளது. 1987க்குப் பின்னர் ஆசிய அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்குள் நுழையாதது இதுவே முதல் முறையாகும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-fail-keep-the-honour-223426.html

எனக்கென்னமோ இது சூதாட்டம் போல தோணுது. இந்திய அணியின் துடுப்பாட்டம் வெற்றி பெறுவதற்காக ஆடியது போன்றே தெரியவில்லை. 

  • தொடங்கியவர்

இன்னும் தெம்பாதான்யா இருக்கேன்.. அதுக்குள்ள ஓய்வுக்கு என்ன அவசரம்.. டோணி நறுக் அறிவிப்பு!

 

சிட்னி: உலக கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்று அறிவித்துவிட்டார் இந்திய அணி கேப்டன் டோணி. ஆஸ்திரேலியாவுடனான, அரையிறுதி தோல்விக்கு பிறகான பரிசளிப்பு விழாவில் பேசிய டோணி "எனக்கு 33 வயதுதான் ஆகியுள்ளது. நன்கு ஓட முடிகிறது. ஃபிட்டாக உள்ளேன். எனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தேவையில்லை. இன்னும் தெம்பாதான்யா இருக்கேன்.. அதுக்குள்ள ஓய்வுக்கு என்ன அவசரம்.. டோணி நறுக் அறிவிப்பு!

 

2016ல் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டிகளுக்கு பிறகு அதுகுறித்து யோசிக்கலாம். ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் அடிக்கவிட்டு தவறு செய்துவிட்டோம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அரையிறுதியில் தோற்றாலும் உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாகவே விளையாடியது.

 

உலக கோப்பை தொடங்கும்போது, இந்தியா இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடும் என்று யாரும் நம்பவில்லை. நாக்-அவுட் கட்டம் வந்த பிறகு இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாகவே தொடர்ந்து இந்திய அணிக்கு சப்போர்ட் செய்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-ruling-this-is-his-last-world-cup-223428.html

  • தொடங்கியவர்

இந்திய தோல்விக்கு காரணங்கள் இவைதான்.. இரண்டே வரிகளில் சொன்ன சச்சின்!

 

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற என்ன காரணங்கள் முக்கியமானவை என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். "இந்தியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. இருப்பினும் தோல்வியை சகித்துக்கொள்வது கஷ்டமானதுதான்.

 

இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தோல்விக்கு காரணங்கள் இவைதான்.. இரண்டே வரிகளில் சொன்ன சச்சின்! ஸ்டீவ் ஸ்மிஸ்தின் சதம், பின்ச் கொடுத்த கம்பெனி மற்றும் ஜான்சனின் பினிஷிங் பந்து வீச்சு ஆகியவை இணைந்து இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டன" என்று சச்சின் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sachin-tendulkar-congratulates-australia-223429.html

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை: இந்தியா வெற்றி பெற வேண்டி நாக்கை அறுத்துக் கொண்ட வேலூர் ரசிகர்.

 

வேலூர்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.

 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்தனர்.

 

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. டோணி நின்று விளையாடி அணியின் ரன்கள் கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவினார். அவர் அவுட்டான பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டது.

 

முன்னதாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இன்றைய ஆட்டத்தை டிவியில் பார்த்துள்ளார்.

ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்ததை பார்த்த அவர் கவலை அடைந்தார்.

 

உடனே அவர் இந்தியா வெற்றி பெற உதவுமாறு கடவுகள்களை வேண்டிக் கொண்டு கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொண்டார். வலியால் துடித்த அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்

கிண்ண கனவை கலைத்தது ஆஸி. : போராடி வெளியேறியது நடப்பு சம்பியன்
 

 

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

11ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. புதிய உலக சாம்பியன் யார்? என்பதை அடையாளம் காட்டுவதற்கு இன்னும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

 

முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் சிட்னியில் இன்று அரங்கேறிய 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் முதல் நிலை அணியான அவுஸ்திரேலியாவும்  மோதின.

இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. இரு அணிகளிலும் எந்தஒரு மாற்றமும் செய்திருக்கவில்லை.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் வோர்னரை இழந்தது. ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 12 ஓட்டங்களை எடுத்த வோர்னர், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கோலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதனையடுத்து பிஞ்சுடன் கைகோர்த்த சுமித் பொறுப்பாக ஆடி அவுஸ்திரேலியாவின் ஓட்ட கணக்கை உயர செய்தார்.

 

சுமித்- பிஞ்ச்
சுமித்- பிஞ்ச் பொறுப்பான ஆட்டம் மூலம் வலுவான ஜோடியாக உருவெடுத்தனர். சுமித் தனது பொறுப்பான ஆட்டம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கான நெருக்கடியை குறைத்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

 

ஆனால் உமேஷ் யாதவ் சூப்பர் சுமித்தை வெளியேற்றினார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பிடி கொடுத்து சுமித் ஆட்டமிழந்தார்.

34.1-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை சுமித் அடிக்கையில் பந்து ரோகித் சர்மா கையில் சிக்கியது. அதிரடி காட்டிய சுமித் வெளியேறினார். 93 பந்துகளை எதிர்க்கொண்ட சுமித் 105 ஓட்டங்களுடன் வெளியேறினார். சுமித் 11 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார்.

அவுஸ்திரேலியாவின் ஓட்ட கணக்கை துரிதப்படுத்திய சுமித் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து மெக்ஸ்வெல் களமிறங்கினார்.

 

அவுஸ்திரேலியா 35-வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை எடுத்து இருந்தது. பிஞ்ச் 73 ஓட்டங்களுடனும், மெக்ஸ்வெல் 5 ஓட்டங்களுடனும் விளையாடினர்.
மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் என அதிரடியாக களமிறங்கிய மெக்ஸ்வெல்லை அஸ்வின் வெளியேற்றினார்.

37.3 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை மெக்ஸ்வெல் ரகானேவிடம் பிடிகொடுத்து வெளியே சென்றார்.

இதனைதொடர்ந்து சதம் அடிக்கும் நோக்கில் விளையாடிய பிஞ்சும் அரங்கு திரும்பினார். 116 பந்துகளை எதிர்க்கொண்ட பிஞ்ச், 81 ஓட்டங்களை(7 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) பெற்றார்.

அவுஸ்திரேலியா 40-வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களை எடுத்து இருந்தது. வொட்சன் 2 ஓட்டங்களுடனும், கிளார்க் 3 ஓட்டங்களுடனும் விளையாடினர்.

தொடர்ந்து வொட்சன் 28 ஓட்டங்களில் மோகித் சர்மா பந்துவீச்சிலும், கிளார்க் 10 ஓட்டங்களில் மோகித் சர்மா பந்துவீச்சிலும், பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 328 ஓட்டங்களை அடித்து இந்தியாவிற்கு 329 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது .

இதனையடுத்து 329 ஓட்டங்கள் இலக்குடன்  இந்தியா துடுப்பாட்டத்தை நிதானமாக தொடங்கியது  அணியின் ஓட்ட எண்ணிக்கை, 76 ஓட்டங்களாக இருந்தபோது, 45 ஓட்டங்களுடன் தவான் ஆட்டமிழந்தார்.

 

அணி மேலும் 2 ஓட்டங்களே சேர்த்திருந்த நிலையில் கோலியும் 13 பந்துகளை சந்தித்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அவரை தொடர்ந்து ரோகித் ர்மாவும் வெளியேறினார்.  18வது ஓவரில் இந்தியா 91 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, ரோகித் சர்மா 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது, 7 ஓட்டங்களுடன் ரெய்னா வெளியேறினார். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு,  இந்தியா 161 ஓட்டங்களை  எடுத்து தடுமாறியது.

 

நிதானமா ஆடி வந்த டோனி - ரஹானே ஜோடி 36.2 ஓவரில் ரகானே 44  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடரந்து  டோனி  65 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

 

இதன்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 231 தொடர்ந்து மொகிந்தர் சர்மாவும் யாதவும் ஓட்டங்கள் எதுவு எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 
233 ஓட்டங்களுக்கு இந்தியா அனைத்து விக்ககெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூழம் அவுஸ்திரேலியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சுமித் தெரிவு செய்யப்பட்டார்.

சமி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை

இந்தியா வெற்றிக்காக வேகப்பந்து வீச்சாளர்முகமது ஷமி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. எனினும் பயனளிக்கவில்லை.

 

சுமித்
சுமித் இந்தியாவுடன் கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்( 162ழூ, 52ழூ, 133, 28, 192, 14, 117, 71, 47, 50 ) இன்றை போட்டியில் பெற்ற சதம் மூலம் ஒரு நாள்  போட்டியில் 7-வது அரை சதம் மற்றும் 5வது சதத்தை பதிவு செய்தார்.

 

300 இலக்கு
இதுவரையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நொக் அவுட் சுற்றில் எந்த ஒரு அணியும் 300க்கும் அதிகமான ஓட்டங்களை தொட்டது கிடையாது. இந்தியா இதுவரையில் ஒருநாள் போடிகளில் 15 முறை 300க்கும் அதிகமான ஓட்டங்களை தொட்டு வெற்றி பெற்றுள்ளது.  ஆனால் பிற அணிகள் 8 முறையே இதனை செய்து உள்ளது. இருப்பினும் இந்தியா இவற்றை உலக கிண்ணத்தில் செய்யவில்லை.

 

அனுஷ்கா சர்மா
இன்றைய  போட்டியை நேரில் பார்க்கவும், கோஹ்லியை ஊக்குவிக்கவும் அவரின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா சிட்னிக்கு வந்திருந்தார். எனினும் அவரும் ஏமாற்றமடைந்தார்.

http://www.virakesari.lk/articles/2015/03/26/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
 

11083848_10203697067453322_770630610540711026326_431366863696078_239954497301948

உலகக் கோப்பை: இந்தியா வெற்றி பெற வேண்டி நாக்கை அறுத்துக் கொண்ட வேலூர் ரசிகர்.

 

வேலூர்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.

 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலரும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுத்தனர்.

 

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. டோணி நின்று விளையாடி அணியின் ரன்கள் கணிசமாக அதிகரிக்க பெரிதும் உதவினார். அவர் அவுட்டான பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துவிட்டது.

 

முன்னதாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இன்றைய ஆட்டத்தை டிவியில் பார்த்துள்ளார்.

ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்ததை பார்த்த அவர் கவலை அடைந்தார்.

 

உடனே அவர் இந்தியா வெற்றி பெற உதவுமாறு கடவுகள்களை வேண்டிக் கொண்டு கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொண்டார். வலியால் துடித்த அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

 

 

11076149_675102262602186_42520453_n.jpg?

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி... கேப்டன் டோணி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

 

ராஞ்சி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டதையடுத்து இந்திய அணியின் கேப்டன் டோணியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் கேப்டன் டோணி மற்றும் முன்னணி வீரர்களின் வீடுகளை ரசிகர்கள் தாக்கக் கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி... கேப்டன் டோணி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் கேப்டன் டோணி மற்றும் அவரது சகோதரர் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் கோஹ்லி உள்ளிட்ட பிற வீரர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்பும் தகவலையும் ரகசியமாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிற கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/security-beefed-up-outside-dhoni-s-house-as-indian-hopes-diminish-223431.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அணி கோப்பை ஆசை வைக்க முதல் அடிச்சு விரட்டப்பட்டுள்ளது.

 

ஹிந்திய அணி.. கோப்பை.. ஆசை வைக்க வைச்சு அடிச்சு விரட்டப்பட்டுள்ளது.

 

இரண்டு தென்னாசிய கொடூரர்களையும் பாக்கிகளையும் வீட்டுக்கு அனுப்பிய அணிகளுக்கு மிக்க நன்றிகளும்.. வாழ்த்துக்களும்.  :icon_idea:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.