Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: ஆப்கனிடம் திணறி வென்றது இலங்கை
 

இலங்கை - ஆப்கனிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி கட்டத்தில் வென்றது.

233 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, முதல் பந்திலேயே ஆப்கன் அதிர்ச்சி அளித்தது. திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் தில்ஷான் விழ, 6-வது ஓவரில் சங்கக்காராவும் வெளியேறினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்திருந்தது.

 

 

கருணரத்னே 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் ஜெயவர்த்தனே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை இலக்கை நோக்கி பயணித்தது. 41-வது ஓவரில் மேத்யூஸ் 44 ரன்களுக்கு வீழ்ந்தார். ஜெயவர்த்தனே 118 பந்துகளில் தனது 19-வது ஒரு நாள் சதத்தை எட்டினார்.

 

52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. களத்தில் இருந்த பெரேரா, மெண்டிஸ் ஜோடி முதலில் சற்று நிதானித்தாலும் அடுத்த சில ஓவர்களில் தேவைக்கேற்ப அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். முடிவில் 48.2 ஓவர்களில் இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது. பெரேரா 43 ரன்களுடனும், மெண்டிஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்வர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆப்கன் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டானிக்சாய் அரை சதம் எடுத்தார். இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய ஆப்கன் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை எடுத்தது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6921932.ece

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மஹேலவின் நிதான ஆட்டத்துடன் போராடி வென்றது இலங்கை
 

 

உலகக் கிண்ணத் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பலம்வாய்ந்த இலங்கை அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் ‘ஏ’ பிரிவில் டுனெடினில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், 1996ஆம் ஆண்டு சம்பியனான இலங்கை அணி, அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 98 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம்  வீழ்ந்தது.

 

மெத்யூஸ் தலைமையிலான வலுவான இலங்கை அணியின் ஆட்டத்துக்கு, ஆப்கானிஸ்தான் அணி ஈடுகொடுப்பது கடினம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை  தேர்வு செய்தது.

 

முதலில் துடுப்பேடுத்தாடிய முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஓவர்கள் விளையாட முயற்சி செய்தது. எனினும் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணிக்கு 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் அஷ்கார் அதிகப்பட்சமாக 54 ஓட்டங்களை எடுத்தார். 

 

இதனையடுத்து இலங்கை அணி  துடுப்பெடுத்தாடியது. திரிமன்ன, டில்சான் ஆகியோர் முதல் பந்திலே எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

அறிமுக அணியான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு பந்துகளிலே இரண்டு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தது. தவ்லத் ஜட்ரன், ஷாபூர் ஜட்ரன், ஹமித் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். சங்கக்காரவும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு இலங்கை அணியை சற்று எச்சரிக்கும் விதமாகவே காணப்பட்டது. ஆனால் அனுபவம் வாய்ந்த இலங்கையின் நட்சத்திர வீரர் மஹேலவிடம், ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு எடுபடவில்லை.

 

இருப்பினும் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் நெருக்கடி கொடுத்தது. இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. இலங்கை அணியில் ஜெயவர்தன சதம்அடித்து அணியை சரிவு பாதையில் இருந்து மீட்டார். அவர்  ஒருநாள் அரங்கில் தனது 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 118 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 ஆறு ஓட்டம் அடங்கலாக இந்த சதத்தை பெற்றார். உலகக் கிண்ணத் தொடரில் இவர் பெற்ற நான்காவது சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் மெத்யூஸ் 44 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். இலைங்கை அணி 48.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக ஜீவன் மெண்டிஸ் 9, பெரெரா 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ஹமித் ஹசன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/02/22/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் : அக்ரம் எச்சரிக்கை
 

 

உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று நடந்த 10ஆவது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) மேற்கிந்திய தீவகள் மற்றும் பாகிஸ்தானும் மோதின. போட்டியில் பாகிஸ்தானை 160 ஓட்டங்களுக்குள் சுருட்டி மேற்கிந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்து இருப்பதால் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

 

எஞ்சிய 4 ஆட்டங்களில் குறைந்தது 3இல் வெற்றி பெற்றால் தான் கால்இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியினை ரசிகர்கள் பெரிதும் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுங்கள், அல்லது முன்னதாகவே நாட்டிற்கு திரும்பிவிடுங்கள் என்று பாகிஸ்தான் அணியின்  முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அணி எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி ஜிம்பாவே அணியினை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றநிலையே உள்ளது. இந்நிலையில் வெற்றி பெறுங்கள் அல்லது விளையாட்டி முடித்துக் கொண்டு நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என்று வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வசிம் அக்ரம் "அவர்களால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது,

 

ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றால் முன்னதாகவே நாட்டிற்கு திரும்பட்டும்,” என்று கூறினார். மைதானத்தில் விளையாட்டை பார்ப்பவர்களையும், நாட்டில் தொலைக்காட்சிகளில் போட்டியை பார்ப்பவர்கள் குறித்தும் அவர்கள் உணரவேண்டும் என்று பெரிதும் காட்டமாக கூறியுள்ளார். 1992-ம் ஆண்டு இதேபோல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் போட்டி நடைபெற்றபோது பாகிஸ்தான் அணியே வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது. அப்போதைய பாகிஸ்தான் அணியில் முக்கிய இடம்பிடித்தவர் வசிம் அக்ரம் பாகிஸ்தான் கிர்க்கெட் அணியின் நிர்வாகத்தையும், அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் விவகாரம் தொடர்பாக நான் கடந்த பலமாதங்களாக கூறி  கொண்டே இருக்கின்றேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து 4 பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகின்றனர். அவர்களது வலுவானநிலையை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகின்றனர். நாம் கூடுதல் துடுப்பாட்ட வீரர்களை கொண்டு விளையாடினால், எதிர்அணியை பின்தொடர முடியும். பின்னர் ஏமாற்றம்தான் இருக்கும், இன்னும் பிரச்சனையில் பாகிஸ்தான் தரையிறக்கும். அவர்கள் விரைவில் அணியை மீண்டும் பலமானதாக கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறிய அக்ரம், அயர்லாந்திடம் தோல்வி அடைந்து அதிரடி காட்டிய மேற்திந்திய அணியே பாகிஸ்தானுக்கு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

பெருஸ்ஸா பேசுனாங்களே... தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு இவ்வளவுதானா....??

 

மெல்போர்ன்: பிட்ச் ஹார்ட ஆக இருப்பதால் டேல் ஸ்டெயினுக்கு இன்று குஷியான நாளாக இருக்கும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு கங்குலி கூறியிருந்தார். ஆனால் இந்தியர்கள் இன்று தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை பிரித்தெடுத்து விட்டனர். டேல் ஸ்டெயின், பிலான்டர் என எந்த வேகப் பந்து வீச்சாளரும் இந்தியாவின் பேட்டிங்கை சீர்குலைக்க முடியாமல் போய் விட்டது.

 

ஆரம்பத்தில் பதுங்கிய இந்தியா பின்னர் புலி போல பாய்ந்ததால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுதான் நிலை குலைந்து போய் விட்டது. முதலில் தவான் - கோஹ்லி அருமையான ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்தனர். அடுத்து தவான் - ரஹானே இணைந்து மிரட்டினர். பெருஸ்ஸா பேசுனாங்களே... தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு இவ்வளவுதானா....?? ஸ்டெயின் தனது முதல் ஓவரை மெய்டனாக்கியபோதிலும் கூட அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போகப் போக பிரித்தெடுத்து விட்டார் ஷிகர் தவான்.

 

இந்தியாவின் முதல் பவுண்டரியை விளாசியவர் தவான்தான். 2வது ஓவரில்தான் தனது கணக்கைத் தொடங்கியது இந்தியா. பிலான்டரின் அந்த ஓவரில் இந்தியா 5 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்து விட்டனர் இந்திய வீரர்கள். குறிப்பாக வேயன் பர்னல், மார்னி மார்க்கல், ஸ்டெயின், இம்ரான் தாஹிர் ஆகியோரின் பந்து வீச்சு கிழித்தெடுக்கப்பட்டது.

 

பெருஸ்ஸா பேசுனாங்களே... தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு இவ்வளவுதானா....?? பர்னல் 9 ஓவர்கள் வீசி 85 ரன்களை அள்ளிக் கொடுத்தார். மார்க்கலின் பங்கு 10 ஓவர்களுக்கு 59 ரன்களாகும். ஸ்டெயின் பங்கு 10 ஓவர்கள், ஒரு மெய்டன், 55 ரன்கள். பிலான்டர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். மார்னி மார்க்கலுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. ஸ்டெயின், தாஹிர், பர்னல் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-destruct-sa-bowling-attack-221487.html

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

SA 153/6(33.4)

SA 153/7(34)

  • கருத்துக்கள உறவுகள்

SA 177 (40.2)

  • தொடங்கியவர்

130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா படு தோல்வி

  • தொடங்கியவர்

சபாஷ்... சாதனையுடன் தெ. ஆப்பிரிக்காவை முதல் முறையாக உலகக் கோப்பையில் வீழ்த்தியது இந்தியா! 

 

 

மெல்போர்ன்: புதிய சாதனையுடன் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியுள்ளது இந்தியா. இதுவரை உலகக் கோப்பையில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்காவை இன்று அடித்து உதைத்து தூக்கிப் போட்டு விட்டனர் இந்தியர்கள். 130 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்தியா இன்று பெற்றது. பேட்டிங்கைப் போலவே பந்து வீச்சிலும்ஸ பீல்டிங்கிலும் பிரமிக்க வைத்து விட்டனர் இந்திய வீரர்கள்

 

. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை தேவையான இடைவெளியில் இந்தியா வீழ்த்தியதால் தென் ஆப்பிரிக்க வீரர்களால் நிமிரவே முடியவில்லை. சபாஷ்... சாதனையுடன் தெ. ஆப்பிரிக்காவை முதல் முறையாக உலகக் கோப்பையில் வீழ்த்தியது இந்தியா! தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் வீழ்ந்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்த அம்லா, 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா வீசிய பந்தை தூக்கி அடித்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இது முக்கியத் திருப்பமாக அமைந்தது. அடுத்து கேப்டன் ஏப் டிவில்லியர்ஸும், டுபிளஸ்ஸிஸ்ஸும் இணைந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர். இந்த ஜோடியை அருமையான ரன் அவுட் மூலம் கேப்டன் டோணியும், மோஹித் சர்மாவும் பிரித்தனர். சபாஷ்... சாதனையுடன் தெ. ஆப்பிரிக்காவை முதல் முறையாக உலகக் கோப்பையில் வீழ்த்தியது இந்தியா! ஏப் டிவில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுபிளஸ்ஸிஸ்ஸை ஷிகர் தவான் கேட்ச் செய்து அனுப்பி வைத்தார்.

 

டுபிளஸ்ஸிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஜேபி டுமினியும் ஆட்டமிழந்தார். ஒரு என் எடுத்திருந்த ஸ்டெயினும் போய் விட்டார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்த தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 177 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. முக்கியமான அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளஸ்ஸிஸ், மில்லர், அம்லா, டுமினி ஆகியோரை இந்திய பவுலர்கள் சரியான சமயத்தில் வீழ்த்தியதே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

 

 ஷிகர் தவானின் அபார சதம், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானேவின் சிறப்பான ஆட்டம், கேப்டன் டோணியின் கடைசி நேர அதிரடி காரணமாக இந்தியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரி்க்காவின் பந்து வீச்சை மிக சாதுரியமாக இன்று சந்தித்தது இந்தியா. ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய இந்தியா பின்னர் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சை பிரித்து மேய்ந்து விட்டார்.

 

ஸ்டெயின், பிலான்டர், மார்னி மார்க்கல் என அனைவரையும் அடித்து நொறுக்கினார். வேயன் பர்னல் பந்து வீச்சு சின்னாபின்னமானது. சுழற்பந்து வீச்சையும் அவர் விட்டு வைக்கவில்லை. சபாஷ்... சாதனையுடன் தெ. ஆப்பிரிக்காவை முதல் முறையாக உலகக் கோப்பையில் வீழ்த்தியது இந்தியா! ரோஹித் சர்மா டக் அவுட் ஆன பிறகு கோஹ்லியும், தவானும் ஜோடி சேர்ந்தனர். கோஹ்லி 46 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி விட்டார். தொடர்ந்து ஷிகர் தவான் அதிரடியாக ஆடினார். 137 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.

 

முன்னதாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் ரன்களைக் குவித்து வந்த ஷிகர் தவான் - விராத் கோஹ்லி ஜோடி 127 ரன்கள் சேர்த்து பிரிமந்தது. 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரா் தாஹிர் பந்து வீச்சில் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடுபொடியாக்கி இந்த ஜோடி பிரமாதமாக ரன் குவித்தது. தவானும், கோஹ்லியும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 127 ரன்களைக் குவித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறிப் போய் விட்டனர்.

 

சபாஷ்... சாதனையுடன் தெ. ஆப்பிரிக்காவை முதல் முறையாக உலகக் கோப்பையில் வீழ்த்தியது இந்தியா! 27.1வது ஓவரில் தாஹிர் வீசிய கோஹ்லி அடிக்க, அதை டூபிளஸிஸ் கேட்ச் செய்து கோஹ்லியை வெளியேற்றினார். ரோஹித் சர்மா ரன் அவுட் சற்று பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விராத் கோஹ்லியுடன் இணைந்து ஷிகர் தவான் சிறப்பாக ஆடி வந்தார். சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி பிரிந்த இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

 

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அச்சுறுத்தும், பயமுறுத்தும் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் அதை தவானும், ரஹானேவும் நையப்புடைத்து விட்டனர். தவான் போன பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. ரஹானே அதிரடியாக ஆடி வந்த நிலையில் அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. டோணி மட்டும் சற்று அதிரடியாக ஆடி 18 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தொடர்ச்சியாக அவர் 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

 கடைசி நேர சொதப்பல் காரணமாக இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை எடுத்தது. ஷிகர் தவான் ஆட்ட நாயகன் 137 ரன்கள் எடுத்து இந்தியாவை பேட்டிங்கில் நிமிர வைத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-win-toss-bat-first-versus-south-africa-221467.html

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்க அணியை தவிக்கவைத்த இந்திய 'சிகிச்சை'
 

 

மெல்போர்னில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா எதிர்பார்த்ததை விடவும் எளிதாகவே வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும்.

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கவை 130 ரன்களில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

 

இந்தப் போட்டிக்கு முன்னதாக, உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 3 முறையும் தோற்றது என்று கூறி, இந்திய அணியை ஒரு மாதிரி கேலி பேசினர். ஆனால், இன்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்திய அணியின் வெற்றி.

 

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைப் பற்றிய அதிமதிப்பீடும் தவிடு பொடியானது. இயன் சாப்பல் கூறியதை நாம் நேற்று குறிப்பிட்டிருந்தோம், அதாவது, "இந்த இந்திய பேட்டிங் வரிசை தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்க முடியும்" என்று இயன் சாப்பல் கூறியதை நாம் நேற்று குறிப்பிட்டுருந்தோம். | வீடியோ பார்க்க - தென்னாப்ரிக்காவை வீழ்த்துமா இந்தியா? - சிறப்புப் பார்வை | அதுதான் நடந்தது இன்று.

 

ஷிகர் தவனின் 'தொடர்ச்சி'

தொடக்கம் முதலே அருமையான செட்டிங். துணைக்கண்டம் போன்ற பிட்ச், மைதானம் முழுதும் இந்திய ரசிகர்கள். நல்ல வெயில். டாஸில் வெற்றி என்று இந்திய அணிக்கு அனைத்தும் சாதககமாகவே அமைந்தது.

 

தொடக்கத்தில் ஷிகார் தவண், ரோஹித் சர்மா நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 6 பந்துகளில் ரன்கள் இல்லை. ஆனால், அவர் தேவையில்லாத ரன் அவுட் என்றே கூற வேண்டும். நீண்ட தூரம் அவர் ஓடிவிட்டார். மிஸ் ஃபீல்டிற்கு எப்போதும் ரன் ஓடக்கூடாது என்பதே நியதி. ஏனெனில் அது முழுதான மிஸ் பீல்ட் அல்ல. பந்தும் ஃபீல்டர் கையில் பட்டு நீண்ட தூரம் செல்லவில்லை. இப்படியாக ஒரு அதிரடி வீரர் ரன் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அனுகூலத்தை அளித்திருக்கும்.

 

ஆனால், ஷிகார் தவண் சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கார்டிஃபில் சதம் எடுத்த அதே இன்னிங்ஸின் தொடர்ச்சி போலவே இன்றும் ஆடினார்.

விராட் கோலி வழக்கம் போல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தவே ஃபீல்டிங்கில் மிகவும் 'டைட்' ஆக இருந்த தென் ஆப்பிரிக்கா சற்றே சோடைப் போகத் தொடங்கியது.

 

தவணும் கோலியும் ஸ்கோரை 14-வது ஓவரில் 56 ரன்களுக்கு உயர்த்தினர். அதில் தவண் 38, கோலி 18. கூடுதல் ரன்களை தென் ஆப்பிரிக்கா அளிக்கவில்லை அவ்வளவு ஒழுக்கமான பந்துவீச்சாக அமைந்தது.

 

ஆம்லா செய்த மிகப் பெரிய தவறு... ஆட்டத்தின் முதல் திருப்புமுனை:

ஷிகர் தவண் தனது அரைசதத்தை 73 பந்துகளில் பூர்த்தி செய்தார். அதில் 8 பவுண்டரிகள். இதில் மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெயின், வெய்ன் பார்னெல், பிலாண்டர் ஆகியோர் பந்து வீச்சில் அடித்த பவுண்டரிகள் அபாரம்.

 

அவர் 53 ரன்கள் எடுத்து மிகவும் பலமாகச் சென்று கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 20-வது ஓவரை பார்னெல் வீச, முதல் பந்து ஷாட் ஆக விழ, தவண் அதை கட் செய்தார். பந்து காற்றில் பேக்வர்ட் பாயிண்ட் திசைக்குச் சென்றது. ஆம்லா வலது புறம் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். இரு கைகளையும் கொண்டு சென்றும் பந்தைப் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் முதல் திருப்பு முனை.

 

அதன் பிறகு பார்னெல் பந்தை விளாசத் தொடங்கினார். முதலில் 2 பவுண்டரிகள் விளாசினார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ஒழுக்கம் குலைந்து ஷாட் பிட்ச், லெக் திசைப் பந்துகள் என்று தவணுக்கு எளிதான பந்துகள் வந்து விழுந்தன. தவண் விடப்பட்ட கேட்சுக்குப் பிறகு பலமாகச் செல்ல விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் வீசிய அரைக்குழி பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம். ஆனால் நேராக ஷாட் மிட்விக்கெட்டில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவண், கோலி இணைந்து 24 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்து அருமையான ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

 

தவண், ரஹானே ஆடிய அபார ஆட்டம்:

கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னாவை இறக்கிய நிலையில், இம்முறை ரஹானேயை களமிறக்கினார் தோனி. இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். நேற்று நாமும் முன்னோட்டத்தில் இதையே கூறினோம். காரணம் ரெய்னாவை ஷாட் பிட்ச் போட்டு எடுத்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவரும் அப்படித்த்தான் அவுட் ஆனார்.

ரஹானே களமிறங்கி அனாயசமாக ஆடினார். வெய்ன் பார்னெல் பந்து வீச்சு மிக மோசமாக அமைந்தது. அவரை 2 பவுண்டரிகள் அடித்துத் தொடங்கினார் ரஹானே. தொடர்ந்து பார்னெல் ரன்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் டுமினியையும் ரஹானே விளாசி எடுத்தார்.

 

தவண் சதம்:

ஆட்டத்தின் 35-வது ஓவரில் கடைசி பந்தில் பார்னெல் வீசிய பந்தை பாயின்ட்டில் பவுண்டரி அடித்து ஷிகர் தவண் 122 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் என்று தனது அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 183/2.

 

பவர் பிளேயில் அதிரடி!

36-வது ஓவர் பவர் பிளே. முதல் ஓவரிலேயே டுமினியை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரஹனே. பிறகு 39-வது ஓவரில் ரஹானே மீண்டும் மோர்கெல் பந்தை இரண்டு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று பவுலர் தலைக்கு மேல், இன்னொன்று மேலும் அலட்சியமாக கவர் திசையில் பவுண்டரி.

பவர் பிளேயின் கடைசி ஓவரை டேல் ஸ்டெய்ன் வீச, ஷிகார் தவண் லென்த்தில் விழுந்த பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சருக்கு தூக்கினார். ஆட்டத்தின் முதல் சிக்ஸ் அது. அடுத்த பந்து ஷாட் பிட்ச், காத்திருந்து விக்கெட் கீப்பர் பின்னால் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார் ஷிகர் தவன்.

 

பவர் பிளேயில் இந்தியா 5 ஓவர்களில் 44 ரன்கள் அடித்து விக்கெட்டுகள் இழக்கவில்லை என்பது மிக முக்கியமானது. அடுத்ததாக மோர்கெல் வீசிய ஓவரில் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக் திசையில் தவன் அடித்த சிக்ஸ், இந்த போட்டியின் மிகச்சிறந்த ஷாட்.

 

இதற்கிடையே, ரஹானே தனது அரைசதத்தை 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் எடுத்தார். அதன் பிறகு பார்னெல் பந்தில் ஒரு சிக்ஸ், இம்ரான் தாஹிர் பந்தில் ஒரு சிக்ஸ்.

அதன் பிறகு ஆட்டத்தின் 44-வது ஓவரில் தவண் 146 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 137 எடுத்து பார்னெல் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 53 ரன்களில் தவணுக்கு கேட்ச் விட்ட ஆம்லா இப்போது எல்லாம் முடிந்த பிறகு அதே தவனுக்கு கேட்ச் பிடித்தார். தவணும் ரஹானேயும் இணைந்து சுமார் 16 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 125 ரன்களைச் சேர்த்தனர்.

 

தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் இந்த காலக்கட்டத்தில் மேலும் நெருக்கடி காரணமாக சொதப்பத் தொடங்கியது. ரெய்னா கொடுத்த கேட்சை ரூசோ தவற விட்டார். ஆனால், ரெய்னா அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே ஓவரில் மோர்கெலின் இன்னொரு ஷாட் பிட்ச் பந்துக்கு வெளியேறினார்.

45-வது ஓவரில் இந்தியா 269/4. அதன் பிறகு ரஹானே இன்னொரு சிக்சரை அடித்து 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசினார். தோனி 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 38 ரன்களையே எடுக்க முடிந்தது.

 

தென் ஆப்பிரிக்க தரப்பில் வெர்ன பிலாண்டருக்கு 4 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை. பார்னெலை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக போய் முடிந்தது. அவர் 9 ஓவர்களில் 85 ரன்கள் விளாசப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் பிஹார்டீனைத் தேர்வு செய்திருக்க வேண்டும், இது அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே. இம்ரான் தாஹிர் மட்டுமே 10 ஓவர்களில் சிறப்பாக வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

இந்திய நெருக்கடியில் சரிந்த தென் ஆப்பிரிக்கா:

308 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீது பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 280 ரன்களே போதுமானது... தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாது என்று வர்ணனையாளர்கள் பலரும் கூறினர். ஷேன் வார்ன் இந்தப் பிட்ச் ஒரு ரன் குவிக்கும் பிட்ச் என்றார். இதனால் டிவிலியர்ஸ், ஆம்லா, டுபிளேசி, டுமினி, மில்லர், டி காக் என்று பலமான வரிசையைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இலக்கை எதிர்த்து ஒரு மோது மோதும் என்றே எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு, பீல்டிங், அனைத்துக்கும் மேலாக தொடர்ந்து கொடுத்த நெருக்கடி ஆகியவை தென் ஆப்பிரிக்காவை மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பை முக்கிய போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.

 

இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே குவிண்டன் டி காக் விக்கெட்டை ஷமியிடம் இழந்தது. ஷமி வீசிய பந்தை ஃபுல் லென்த் பந்து என்று நினைத்து அவர் டிரைவ் ஆட மிட் ஆஃபில் கேட்ச் ஆனது.

 

ஹஷிம் ஆம்லா இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருப்பவர். தொடர்ந்த இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரை மோஹித் சர்மா வீச, ஷாட் பிட்ச் பந்தை ஹூக் செய்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார்.

11-வது ஓவரில் 40/2 என்ற நிலையில் டு பிளேசி மற்றும் டிவிலியர்ஸ் ஒன்று சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காவின் பிரகாசமான தருணம் இதுவே. இவர்கள் இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். டுபிளேசி, டிவிலியர்ஸ் இருவருமே இறங்கி வந்து ஆடத் தொடங்கியிருந்தனர்.

 

2-வது திருப்பு முனை:

தென்னாப்பிரிக்க சரிவைத் தொடக்கி வைத்ததே மோஹித் சர்மா த்ரோவும், டிவிலியர்ஸ் ரன் அவுட்டும்தான்.

டிவிலியர்ஸ் 38 பந்துகளில் 30 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால், அப்போதுதான் 23-வது ஓவரில் ஜடேஜா சில ரன் கொடுக்காத பந்துகளை வீச அழுத்தம் அதிகரித்த்து. இந்த நிலையில்தான் ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப்பர் கவரில் கட் செய்தார் டிவிலியர்ஸ். அங்கு பந்து சற்று வேகமாகச் சென்றது. அங்கு 2 ரன்கள் இல்லை. ஆனால் பிடிவாதமாக 2 ரன்கள் எடுக்க முயல, மோஹித் சர்மாவின் த்ரோ மிகத் துல்லியமாக தோனி கைக்கு வர ஸ்டம்ப் சாய்கிறது. டிவிலியர்ஸ் ரன் அவுட். அவ்வளவுதான் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் கவலை தரும் மவுனம் குடியேறியது.

 

மீதமிருப்பது டுபிளேசி, டேவிட் மில்லர், இருவரும் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 29-வது ஓவரி மோஹித் சர்மாவிடம் தோனி கொடுக்க, டுபிளேசி 55 ரன்கள் எடுத்த நிலையில், தேவையில்லாமல் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்று 30 அடி வட்டத்துக்குள்ளேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு தொடர்ந்த நெருக்கடியில் டுமினி 6 ரன்களில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ரெய்னாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34-வது ஓவரில் டேவிட் மில்லர் (22) மீண்டும் ஒரு நல்ல த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, அதே ஓவரின் கடைசி பந்தில் அஸ்வினிடம் பிலாண்டர் எல்.பி. ஆகி வெளியேற, தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் 177 ரன்களுக்குச் சுருண்டு 130 ரன்களில் தோல்வி தழுவியது.

 

இந்தியத் தரப்பில் அஸ்வின் மீண்டும் சிறப்பாக வீசி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி, மோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை மிகத் துல்லியமாகவும் ஆக்ரோஷமாகவும், ஃபீல்டிங்குக்கு தக்கவாறு வீசியும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினாலும் டிவிலியர்ஸுக்கு அந்த ரன் அவுட் ஓவரில் ரன் கொடுக்காமல் வீசி ஒரு ரன்னை 2 ஆக மாற்ற நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனதற்குப் பிரதான காரணமாகத் திகழ்ந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராகத் திட்டமிடுதலைத் துல்லியமாகச் செய்தது போல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் திட்டமிடுதல் மிகத் துல்லியமாக அமைந்தது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி பாகிஸ்தானின் பலவீனமான பேட்டிங்கினால் என்று இந்திய அணியின் ஆட்டத்திறன் மீது சந்தேகங்களை வல்லுநர்கள் ஏற்படுத்தினர். ஆனால், இந்த 2-வது கிளினிக்கல் வெற்றியின் மூலம் தற்போது உலகக்கோப்பையை வெல்வோம் என்று தன்னம்பிக்கையுடன் திகழும் அணிகளுக்குக் கூட இந்தியாவின் மீது தற்போது மரியாதையும், பயமும் அதிகரித்திருக்கும் என்பது உறுதி.

குறிப்பாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி 8 விக்கெட்டுகளுக்கு வெறும் 69 ரன்கள் மட்டுமே வழங்கியது, அந்த அணியை தவிக்கவைத்த இந்திய அணியின் 'சிகிச்சை'க்கு சான்று.

 

இன்றைய போட்டியில் இருந்து ஒன்று புரிகிறது. கேரி கிர்ஸ்டனைக் கூப்பிட்டுக் கொண்டாலும், மைக் ஹஸ்ஸியைக் கூப்பிட்டுக் கொண்டாலும் மைதானத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி - தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பதை தென் ஆப்பிரிக்கா இன்று உணர்ந்திருக்கும். அதேபோல், ஒரு வலுவான தலைமையின் கீழ் கூட்டு முயற்சியின் அணுகுமுறைக்கு உள்ள சக்தியை இந்திய அணி மீண்டும் புரிந்துகொண்டுள்ளது எனலாம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/article6922257.ece
 

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை chokers என்று அழைப்பது சரிதான்.. அதுக்காக இந்தியா கோப்பையை வெல்லப் போவதில்லை.. :D:unsure:

  • தொடங்கியவர்

யாருக்கு தெரியும்,யார் உலக கிண்ண கோப்பையை வெல்ல போகிறார்களோ :D

  • தொடங்கியவர்

இன்று இங்கிலாந்து எதிர் scotland போட்டி

  • தொடங்கியவர்

ENG 110/0 after 18 overs

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை பார்வையிட கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள்.

 

http://sawlive.tv/v/redsky2

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டது இங்கிலாந்து!

 

கிறைஸ்ட்ஸ்சர்ச்: வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து மொயீன் அலியின் சதம் உதவியுடன் 303 ரன்களை குவித்தது. உலக கோப்பையின், குரூப் ஏ பிரிவிலுள்ள இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் கிறைஸ்ட்ச் சர்ச் மைதானத்தில் இன்று மோதின. டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டது இங்கிலாந்து!

 

இங்கிலாந்து தொடக்க வீரர் மொயீன் இயான் பெல் 54 ரன்களும், மொயீன் அலி 128 ரன்களும் குவித்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் கேரி பேலன்ஸ் 10, ஜோ ரூட் 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் மோர்கன் தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் டைலர் 17, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 24, கிறிஸ் வோக்ஸ் 1 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 303 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஃபின் 1 ரன்னுடனும், ஸ்டூவவர்ட் பிராட் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர். 30.1 ஓவரில் 172 ரன்களுக்குத்தான் முதல் விக்கெட் வீழ்ந்தபோதிலும், இங்கிலாந்தால் 303 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.

 

ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஸ் தாவே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்யும் ஸ்காட்லாந்தின் தொடக்க வீரர் கலம் மேச்லியோட் 4 ரன்களிலும், பிரெட்டி கோல்மேன் 7 ரன்களிலும், மேட் மாச்சன் 5 ரன்களஇலும் அவுட் ஆகினர். ஆண்டர்சன், வோக்ஸ், ஃபின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஸ்காட்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவருகிறது. தொடக்க வீரர் கைய்ல் கொய்ட்சர் 49 ரன்களுடனும், கேப்டன் பிரிஸ்டோன் மொம்சன் 6 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பரிதாபமாக தோற்ற இங்கிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/scotland-win-toss-england-bat-221507.html

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணப் போட்டிகளில்1000 ஓட்டங்களை கடந்த மஹேல
 

2w5vv2o.jpg

 

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மஹேல ஜயவர்தன தனது 15ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 15ஆவது வீரரானார்.

 

1999 முதல் இதுவரை 35 உலகக் கிண்ணப் போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள மஹேல ஜயவர்தன 4 சதங்கள், 5 அரைச் சதங்கள் அடங்களாக மொத்தம் 1075 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார ஆகியோரைத் தொடர்ந்து 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த நான்காவது இலங்கையர் மஹேல ஆவார்.

இந்தப் போட்டியில் மஹேல ஜயவர்தன 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது துடுப்பு ஷப்பூர் ஸத்ரானின் பந்துவீச்சில் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வேறொரு துடுப்பைக் கொண்டு தனது துடுப்பாட்டத்தை மஹேல தொடர்ந்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8995#sthash.87Vjru41.dpuf

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவிடம் பெற்ற மரண அடியால் எங்கள் தன்னம்பிக்கை தகர்ந்து விட்டது: ஏபிடி.வில்லியர்ஸ் புலம்பல்

 

மெல்போர்ன்: இந்தியாவிடம் வாங்கிய அடியினால் எங்கள் தன்னம்பிக்கை எல்லாம் தகர்ந்து விட்டது, எங்கள் காயங்களுக்கு நாங்களே மருந்து போட்டு தேற வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கூறினார் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ். இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வி தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது மோசமான தோல்வி இதுகுறித்து அந்த அணி கேப்டன் ஏபிடிவில்லியர்ஸ் கூறியதாவது: வெற்றியும், தோல்வியும் விளையாட்டில் சகஜமானதுதான். ஆனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றதை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த தோல்வியை நினைக்கும்போது, எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.

 

இப்படி பொசுக்கென்று போய்விட்டதே.. போட்டியின் கடைசி பந்து வரை எங்கள் அணி போட்டியில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் இப்படி மொத்தமாக இந்தியாவின் ஆதிக்கத்தில் சரணடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

 

தன்னம்பிக்கை தகர்ந்துவிட்டது காலிறுதிக்கு தகுதி பெறுவது பிரச்சினைகிடையாது. ஆனால் நாங்கள் விளையாடிய விதம்தான் மிக மோசம். இந்த தோல்வியின் மூலம் அணியின் தன்நம்பிக்கை அடிவாங்கிவிட்டது. எங்களது காயத்துக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

 

இந்திய பந்து வீச்சு சூப்பர் எங்கள் அணியின் மோசமான பேட்டிங்கும், இந்தியாவின் திறமையான பவுலிங்கும் இணைந்துதான் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்குள்ளாக்கியது. அவுட் ஆனபிறகு, ஹசிம் ஆம்லா என்னிடம் பேசினார். அப்போது இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அருமையாக இருந்ததாக என்னிடம் சொன்னார்.

 

ஓடியிருக்க கூடாது.. இரு ரன் அவுட்டுகள் தென் ஆப்பிரிக்காவை குலைத்துப்போட்டுவிட்டன. நானும், டேவிட் மில்லரும், எந்த பந்து வீச்சாளராலும் இன்றி, ரன்-அவுட்டுகளால் பெவிலியன் திரும்பியதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. இந்திய ஃபீல்டர்கள் திடீரென சிறப்பாக ஃபீல்டிங் செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்களின் திறமையை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், விக்கெட்டுகளுக்கு நடுவிலான ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்தான் தவறு செய்துவிட்டோம். டாப்-6 பேட்ஸ்மேன்களில் 2பேர் ரன் அவுட் ஆனால் எப்படி அணியால் தாங்கிக்கொள்ள முடியும்.

 

பிட்ச் டஃப்பா இருந்தது.. மெல்போர்ன் பிட்ச் இரட்டை தன்மையுடையதாக இருந்தது. ஒரே இடத்தில் பிட்ச் செய்யப்பட்ட பந்து சில நேரங்களில் பவுன்சராகவும், சில நேரங்களில் விக்கெட்டை நோக்கியும் பாய்ந்து வந்தது. நான் பேட்டிங் செய்தபோதே பேட்டிங் செய்வதில் உள்ள கஷ்டத்தை உணர்ந்தேன். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்துகளை சிறப்பாக அடித்து ஆடக்கூடியவர்கள். அப்படியிருந்தும் இந்தியாவின் பவுன்சர் தாக்குதலில் தடுமாறியதற்கு பிட்சும் ஒரு காரணம். இவ்வாறு ஏபிடிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindi...ing-221523.html

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. புலம்புறதை விட்டிட்டு கோப்பையை வெல்லுற வழியைப்பாருங்கோ.. உங்களை நம்பி போட்டியில வேறை இருக்கிறம்.. :(:D

  • தொடங்கியவர்

நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் அல்-அமீன் ஹூசைன்
 

 

அணியின் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமீன் ஹூசைன், உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதா பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

பிரிஸ்பேன் ஹோட்டலில் அணியினருடன் தங்கியிருந்த அல்-அமீன் ஹூசைன் அனுமதியின்றி இரவு 10 மணிக்கு பின்னர் வெளியே சென்றுள்ளார்.

 

இதனை அறிந்த ஊழல் தடுப்பு பிரிவு பங்களாதேஷ்  கிரிக்கெட்  சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் அடிப்படையில் அவர் உலகக் கிண்ண கிரிக்கெட்  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.virakesari.lk/articles/2015/02/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

பிப்ரவரி 23, 2015.மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது.

 

ஐ.சி.சி., விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும். இதனையடுத்து ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ஜெப் குரோவ், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்சுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதித்தார். உலக கோப்பை பைனலுக்கு முன், மீண்டும் ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் டிவிலியர்சுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/02/1424706028/worldcupcricketindiasouthafricafine.html

  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி தொடருமா *ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்
பிப்ரவரி 23, 2015.

 

கான்பெரா: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் வெஸ்ட்  இண்டீஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில், இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

 

பிராவோ இல்லை:

அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, எழுச்சி கண்டது. துவக்க வீரர்களான டுவைன் ஸ்மித், கிறிஸ் கெய்லின் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. இதுவரை பெரிய அளவில் சோபிக்காத இவர்கள், சிறந்த துவக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடது கால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்த டேரன் பிராவோ, இன்றைய போட்டியில் விளையாடாதது பின்னடைவு.

 

இவருக்கு பதிலாக ஜோனாதன் கார்டர் விளையாடுவார் எனத் தெரிகிறது. ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த சிம்மன்ஸ், நல்ல ‘பார்மில்’ இருப்பது ‘மிடில்–ஆர்டரில்’ பலம் சேர்க்கிறது. சாமுவேல்ஸ், ராம்தின், டேரன் சமி, ரசல் உள்ளிட்டோரும் அதிரடி காட்டினால் மீண்டும் வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.

வேகப்பந்துவீச்சில் ஜெரோம் டெய்லர் (6 விக்.,) நம்பிக்கை அளிக்கிறார். கேப்டன் ஜாசன் ஹோல்டர், ரசல், சமி, ரோச் உள்ளிட்ட வேகங்களும் எழுச்சி காணும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். ‘சுழலில்’ சுலைமான் பென் கைகொடுக்கலாம்.

 

வில்லியம்ஸ் நம்பிக்கை:

தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றிப் பாதைக்கு திரும்பியது. கடந்த போட்டிகளில் அரைசதம் கடந்த சிபாபா, ஹாமில்டன் மசகட்சா, சீன் வில்லியம்ஸ் மீண்டும் சாதிக்கலாம். பிரண்டன் டெய்லர், சகப்வா, சிக்கந்தர் ராஜா, கேப்டன் எல்டன் சிகும்புரா எழுச்சி கண்டால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

 

வேகப்பந்துவீச்சில் சட்டாரா (4 விக்.,) ஆறுதல் அளிக்கிறார். எல்டன் சிகும்புரா, பன்யங்கரா, சோலோமன் மியர் உள்ளிட்டோர் துல்லியமாக பந்துவீசி விக்கெட் வீழ்த்த முயற்சித்தால் நல்லது. ‘சுழலில்’ சீன் வில்லியம்ஸ் அசத்தலாம்.

 

http://sports.dinamalar.com/2015/02/1424706123/worldcupcricketwestindies.html

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: இரட்டை சதமடித்து கிறிஸ் கெய்ல் சாதனை
 

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 

துவக்க வீரர் ஸ்மித் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், கெய்ல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.

சதமடிக்கும் வரை நிதானித்து ஆடிய கிறிஸ் கெய்ல், அதற்குப் பின் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.

 

சதத்துக்குப் பிந்தைய அடுத்த 33 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டினார். இந்த இரட்டைச் சதத்தில் 9 பவுண்டரிகளும், 16 சிக்ஸர்களும் அடங்கும். 46-வது ஓவரிலேயே இரட்டைச் சதம் அடித்தாலும், பின்னர் ஆடுவதற்கான சரியான வாய்ப்பு அமையாததால் கெய்ல் மேற்கொண்டு 15 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

இன்னிங்ஸின் கடைசி பந்தில், 215 ரன்கள் (147 பந்துகள், 10 பவுண்டரி, 16 சிகஸர்) எடுத்திருந்த நிலையில், கெய்ல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிவந்த சாமுவேல்ஸ் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 372 ரன்களைக் குவித்தது.

 

இதனால், ஜிம்பாம்வே அணிக்கு 373 என்ற கடினமான வெற்றி இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்தது.

 

கெய்ல் முறியடித்த சாதனைகள்

 

* உலகக் கோப்பை போட்டிகளில் அடிக்கப்படும் முதல் இரட்டை சதம் இது. உலகக் கோப்பையில் ஒரு வீரர் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர், அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் என்ற சாதனைகளையும் கெய்ல் படைத்தார்.

 

டிராவிட் - சச்சின் சாதனை முறியிடிப்பு:

* கெய்ல், சாமுவேல்ஸ் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் குவித்த 372 ரன்கள், ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன் இந்தியாவின் டிராவிட் - டெண்டுல்கர் இணைந்து எடுத்த 331 ரன்களே, அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையாக இருந்தது.

 

* சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர்கள் (16 சிக்ஸர்கள்) என்ற ரோஹித் சர்மா மற்றும் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை கெய்ல் சமன் செய்தார். மேலும், இந்தியர் அல்லாத ஒருவர் அடித்துள்ள முதல் இரட்டை சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக, இந்திய வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் (இரண்டு முறை) ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

 

* அதேபோல, ஒருநாள் போட்டிகளில், ரோஹித் சர்மா (264), சேவாக் (219) முதல் இரண்டு இடங்களில் இருக்க, கெய்ல் (215) மூன்றாம் இடத்தில் உள்ளார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6928565.ece

  • தொடங்கியவர்

மூன்றாவது இடத்தில் மஹேல
 

 

உல­கக்­கிண்ணத் தொட­ருடன் ஓய்­வு­பெற இருக்கும் மஹேல ஜய­வர்­தன உல­கக் ­கிண்ணத் தொடர்­களில் அதிக சதம் அடித்­த­வர்கள் பட்­டி­யலில் மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார்.

 

இதன் மூலம் உலகக் கிண்­ணத்தில் அதிக சதங்கள் விளா­சி­ய­வர்­களின் பட்­டி­யலில் இந்­தி­யாவின் சச்சின் டெண்­டுல்கர் (6 சதம்), அவுஸ்­தி­ரே­லி­யாவின் ரிக்­கி ­பொண்டிங் (5 சதம்) ஆகி­யோ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக கங்­குலி, மார்க் வோக் உள்­ளிட்­டோ­ருடன் 3-ஆவது இடத்தை மஹேல பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/24/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வேவை சிதறடித்த மே.இ.தீவு! கெயில் அபார இரட்டை சதம்! 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவிப்பு

 

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி கிறிஸ் கெயிலின் அபார இரட்டை சதம் மற்றும் சாமுவேல்ஸின் சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்களைக் குவித்துள்ளது. ஜிம்பாப்வே வெல்ல 373 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஜிம்பாப்வே அணியும் இடம்பிடித்துள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை எதிர்கொண்டது.

 

ஜிம்பாப்வேவை சிதறடித்த மே.இ.தீவு! கெயில் அபார இரட்டை சதம்! 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவிப்பு ஜிம்பாப்வே அணி தமது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. அதே நேரத்தில் 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியானது பாகிஸ்தானை வீழ்த்தியது. ஜிம்பாப்வேயும் அரபு எமிரேட்டை வென்றது.

 

தற்போதைய நிலையில் இரு அணிகளுமே ஒரு தோல்வி- ஒரு வெற்றி என சம நிலையில் உள்ள நிலையில் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்மித் மற்றும் கெயில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜிம்பாப்வேயின் தினசி ப்யங்காரா பந்து வீசினார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஸ்மித் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து கெயிலுடன் சாமுவேல்ஸ் களத்தில் இணைந்தார்.

 

இருவரும் விக்கெட்டை தக்க வைத்துக் கொண்டு ரன்களை எடுக்கத் தொடங்கினர். 51 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கிறிஸ் கெயில் 105 பந்துகளில் சதத்தையும் எட்டினார். அதே நேரத்தில் மறுமுனையில் நிதானமாக ஆடிய சாமுவேல்ஸ் 95 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.

 

சதத்தைக் கடந்த பின்னர் கிறிஸ் கெயில் சிக்சர் மழை பொழியத் தொடங்கினார். 127 பந்துகளில் 151 ரன்களை எட்டிய கெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதாவது 138 பந்துகளில் 201 ரன்களைக் குவித்து இரட்டை சதமடித்தார். கமுன்கோசி வீசிய 44 வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளையும் வில்லியம்ஸின் 45 வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களையும் விளாசினார் கெயில்.

 

சாமுவேல்ஸும் தம் பங்குக்கு 143 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் பெரும்பாடுபட்டனர். கடைசி ஓவர்களில் ஜிம்பாப்வேயின் பந்துகளை சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசித் தள்ளியது கெயில்- சாமுவேல்ஸ் ஜோடி. கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் சதாரா அடுத்தடுத்து 2 நோ பால் வீச கடைசி 2 பந்துகளை மசகட்சா வீச அழைக்கப்பட்டார்.

 

கடைசி ஓவரின் கடைசி பந்தை தூக்கி அடித்த கெயில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்களைக் குவித்து ஜிம்பாப்வே வெல்ல 373 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெயில் 147 பந்துகளில் 215 ரன்களைக் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். 156 பந்துகளை எதிர்கொண்ட சாமுவேல்ஸ் 133 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இன்றைய போட்டியில் கிறிஸ் கெயில் மொத்தம் 16 சிக்சர்களையும் 10 பவுண்டரிகளையும் விளாசினார்.

 

சாமுவேல்ஸ் 3 சிக்சர்களையும் 11 பவுண்டரிகளையும் விளாசினார். கிறிஸ் கெயில் தனிப்பட்ட முறையில் பல்வேறு உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்ததும் கிறிஸ்கெயில்-சாமுவேல் ஜோடிதான். ஜிம்பாப்வே அணியில் 9 ஓவர்கள் வீசிய ப்யங்காரா 82 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். மசகட்சா 6.2 ஓவர்கள் வீசி 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கமுன்கோசி 3 ஓவர்களே வீசி 37 ரன்களையும் வில்லியம்ஸ் 5 ஓவர்கள்வீசி 48 ரன்களையும் கொடுத்தனர்.

 

10 ஓவர்கள் வீசிய ரசா ஒரு மெயிடென்னுடன் 45 ரன்கள் கொடுத்தார். சிகும்புரா 7 ஓவர்கள் வீசி 44 ரன்களையும் சதாரா 9.4 ஓவர்கள் வீசி 74 ரன்களையும் கொடுத்தனர். ஜிம்பாவே பின்னர் ஜிம்பாப்வேவின் ரசா மற்றும் சகப்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சகப்வா 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் 1.4வது ஓவரில் ஹோல்டரின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அப்போது ஜிம்பாப்வே அணி 11 ரன்களை எடுத்திருந்தது. தற்போது ரசாவுடன் மசகட்சா இணைந்துள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-west-indies-vs-zimbabwe-221573.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.