Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காளான் செய்கை பயிற்சிகள், செவ்வாய் ஆரம்பம்

Featured Replies

unnamed(8).jpg

 

 
யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை(15) தெரிவித்தார்.  
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  
 
யாழ். மாவட்டத்தில் தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதாக காணப்படுகின்றது.
  
காளானை உற்பத்தி செய்ய பலர் ஆர்வம் காட்டுவதால் இதற்குரிய பயிற்சிகளை வழங்கும் படி கோரியிருந்தனர். அதற்கமைவாக வருகின்ற 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் பயிற்சி வகுப்பு இடம்பெறும்.  
 
50ற்கும் மேற்பட்டவர்கள் இப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளவுள்ளனர். பயிற்சியை பெற விரும்புகின்றவர்கள் யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

காளான்களுக்கு இன்னமும் சந்தையில் வரவேற்பு இருக்கிறதா?

 

தமிழகத்திலும் சில வருடங்களுக்கு முன் புற்றீசல் போல வீட்டிலேயே காளான் பயிர்வளர்ப்பு பற்றியும், மாதம் இவ்வளவு வ்ருமானம் வரும் என கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றவுடன் படுத்துவிட்டது.

அதே போல ஈமு கோழி வளர்ப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

காளான்களுக்கு இன்னமும் சந்தையில் வரவேற்பு இருக்கிறதா?

 

தமிழகத்திலும் சில வருடங்களுக்கு முன் புற்றீசல் போல வீட்டிலேயே காளான் பயிர்வளர்ப்பு பற்றியும், மாதம் இவ்வளவு வ்ருமானம் வரும் என கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றவுடன் படுத்துவிட்டது.

அதே போல ஈமு கோழி வளர்ப்பும்.

 

pilze-in-thailand_06.jpg

 

மாதம் 2,3 முறையாவது காளானில் சமையல் செய்வோம்.

நன்றாக இருப்பதுடன், உடலுக்கு முக்கிய தேவையான தாதுப் பொருட்கள் அடங்கியது காளான்.

-----

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டு பத்திரிகைகள் எங்கும்.... தேக்கு மர வளர்ப்பு விளம்பரமும் அதிகமாக இருந்தது. அதன் நிலைமை இப்போ என்னவென்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக யாழில் காழானனுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் விற்கப்படும் காளன்கள் சாதுவாக கசக்கும் தன்மை போல் இருக்கின்றது. அதனால் அது உண்ண பிடிப்பதில்லை. வெளிநாடுகளில் விற்கப்படும் காளன்களை எப்படி அங்கு அனுப்புவது?

உந்த farm இல் தான் நாங்கள் போய் கோழி முட்டை ,கோழி குஞ்சு ,மிளகாய் கன்று எல்லாம் வாங்குவது .ஐந்து நிமிட சயிக்கில் ஓட்டம் .

ஒருமுறை பசு மாடு சினைக்காக கொண்டுபோனோம் .இங்கு தட்டு தட்டாக கோழிப்பீயையும் ஏலத்தில் விடுவார்கள் .பசளையாக பாவிக்க விவசாயிகள் வாங்கிக்கொண்டு போவர்கள் .

கோண்டாவில் சந்திக்கும் தின்னவேலி சந்திக்கும் இடையில் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த farm இல் தான் நாங்கள் போய் கோழி முட்டை ,கோழி குஞ்சு ,மிளகாய் கன்று எல்லாம் வாங்குவது .ஐந்து நிமிட சயிக்கில் ஓட்டம் .

ஒருமுறை பசு மாடு சினைக்காக கொண்டுபோனோம் .இங்கு தட்டு தட்டாக கோழிப்பீயையும் ஏலத்தில் விடுவார்கள் .பசளையாக பாவிக்க விவசாயிகள் வாங்கிக்கொண்டு போவர்கள் .

கோண்டாவில் சந்திக்கும் தின்னவேலி சந்திக்கும் இடையில் இருக்கு .

 

நாங்களும்... அங்குதான் கோழிக்குஞ்சு, முட்டை எல்லாம் வாங்குவோம்.

நீங்களும், நாங்களும் அயல் ஊர் போலுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் குறுக்கும் நெடுக்குமா இருக்குற நாலு பெரிய வீதிக்கு அந்தப் பக்கமும் இந்த பக்கமும் நின்று கொண்டு நீங்கள் இரண்டு பேரும் அயலவர் மாதிரி கதைக்குறது நல்ல வேடிக்கை. :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.