Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டி குட்டியாய்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10704151_10152564956814891_2728110979082

ஒவ்வொரு இலைகளாய் உதிர்த்த பின்னும்
ஒரு துளி இசையில் தன்னுள் தளும்பியபடி நிறைந்திருக்கும் மனதிற்கு 
வாழ்வின் அடர் வனத்துள் தனித்து நின்று
கதறியழும் தருணமென்று ஒன்று கிடையாது..

10410270_10152564004639891_3027179796026

எங்கோ தூரத்தில்
வானவில்களோடு பேசுகிறோம்
சொந்தமாயிருந்த 
வண்ணங்களை தொலைத்துவிட்டு...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10384108_10152563101854891_7289977849120

மழை..
ஒரு கவிதையாகவும் 
நனைக்கும்,
ஒரு கவிதையிலும்
நனைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10404866_10152566248844891_1385176802029

என்ன என்றேன் 
நீ(ர்) என்றாள்
துடைத்த என் கைகளிலோ கடல்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10375007_10152567949239891_6162134539230

இரவின் வாசற்படிகளில்
இறங்கிவருகிறது நினைவு
ஒளிந்துகொள்ள ஏதுமற்ற
நிர்வாணத்தில் நான்...

பெடியனுக்கு கவிதையும் காதலும் நிரம்பித் தளும்புது போலிருக்கு...

கவிதைகள் நன்றாக உள்ளன சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பெடியனுக்கு கவிதையும் காதலும் நிரம்பித் தளும்புது போலிருக்கு...

கவிதைகள் நன்றாக உள்ளன சுபேஸ்

தள்ளாமல்,தளும்பி என்ன பயன்
  • கருத்துக்கள உறவுகள்

தலை கீழாய் நின்றாலும்.. அந்தந்த வயதில வரவேண்டிய கனவெல்லாம் வந்தே தீரும்!

பொருள், இடம், காலத்திற்கு ஏற்ற மாதிரிக் கனவுகள் வேறு பட்டாலும், ஒரு பொதுவான தன்மை எப்போதுமே இருக்கும்!

அந்த உணர்வில் பிறக்கும் கவிதைகள்....அவற்றிற்கு நிகர் அவையைத் தவிர வேறு எதுவுமில்லை! :lol:

இரவின் வாசற்படிகளில்
இறங்கிவருகிறது நினைவு
ஒளிந்துகொள்ள ஏதுமற்ற
நிர்வாணத்தில் நான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெடியனுக்கு கவிதையும் காதலும் நிரம்பித் தளும்புது போலிருக்கு...

கவிதைகள் நன்றாக உள்ளன சுபேஸ்

நன்றி வாழ்வின் மகா ரசிகனுக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாமல்,

தளும்பி என்ன பயன்

இதுவும் கவிதைபோலத்தான் இருக்கண்ணா.. :D நன்றி ரசிப்புக்கு அண்ணா..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை கீழாய் நின்றாலும்.. அந்தந்த வயதில வரவேண்டிய கனவெல்லாம் வந்தே தீரும்!

பொருள், இடம், காலத்திற்கு ஏற்ற மாதிரிக் கனவுகள் வேறு பட்டாலும், ஒரு பொதுவான தன்மை எப்போதுமே இருக்கும்!

அந்த உணர்வில் பிறக்கும் கவிதைகள்....அவற்றிற்கு நிகர் அவையைத் தவிர வேறு எதுவுமில்லை! :lol:

இரவின் வாசற்படிகளில்

இறங்கிவருகிறது நினைவு

ஒளிந்துகொள்ள ஏதுமற்ற

நிர்வாணத்தில் நான்...

வரவர எழுதிவச்சிடவேணும் அண்ணா. வயசுபோக இருந்து படிச்சு சிரிக்கலாம்.. :D வாழ்வை அதன்போக்கில் ரசிக்க ஒரு மனம் வேணும். அது நிறையவே உங்களுக்கு இருக்கிறது அண்ணா. அதுதான் உங்களையும் இப்பக்கத்திற்கு வந்து படித்து கருத்தெழுதியவர்களையும் பச்சை குத்தியவர்களையும் மனசுக்குள் படித்து கடந்தவர்களையும் இக்கவிதைகளை படித்தபோது ஒருகணம் ரசிக்கவைத்திருக்கிறது இனியும் ரசிக்க வைக்கலாம்.. நன்றி அனைவருக்கும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும்....
அதற்கு, தெரிவு செய்த படங்களும் அழகோ அழகு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும்....

அதற்கு, தெரிவு செய்த படங்களும் அழகோ அழகு. :)

நன்றி தலைவா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

வரவர எழுதிவச்சிடவேணும் அண்ணா. வயசுபோக இருந்து படிச்சு சிரிக்கலாம்.. :D வாழ்வை அதன்போக்கில் ரசிக்க ஒரு மனம் வேணும். அது நிறையவே உங்களுக்கு இருக்கிறது அண்ணா. அதுதான் உங்களையும் இப்பக்கத்திற்கு வந்து படித்து கருத்தெழுதியவர்களையும் பச்சை குத்தியவர்களையும் மனசுக்குள் படித்து கடந்தவர்களையும் இக்கவிதைகளை படித்தபோது ஒருகணம் ரசிக்கவைத்திருக்கிறது இனியும் ரசிக்க வைக்கலாம்.. நன்றி அனைவருக்கும்..

அனேகமாக நான் வந்து படித்து விட்டு நகர்ந்து விடுவேன் சுபேசு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1459745_10152569699584891_46185692364889

சின்னதாய்த்தான் 
தூறிப்போனாய்
தாங்கமுடியாக் கனிகளோடு
தள்ளாடுகிறது என் வனம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.