Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைக்காய் நீரெரிந்த தீயில் நினைவெரித்து ....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10429352_10152578200659891_6289390688595

காந்தாளே..!

கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..!

நாமெல்லாம் சுமந்த

விதி தின்ற பெருங்கனவொன்றின்

அடையாளம் நீயென்று அறிவாயா..?

இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில்

நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..?

பெருங்கோடையில்

நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது

எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம்

சருகுகளைப்போல உதிர்ந்துபோயின

எங்கள் நிழலாயிருந்த மரங்கள்

ஊழிக்காலமொன்றில்

உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று

எம் மிச்சமிருந்த கண்ணீரும்..

எம்மைத்தவிர யாரறிவார்

சுடுகாடொன்றில் உயிரோடெரியும்

பிணமொன்றின் வலியை..

காந்தாளே..!

எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..!

அறிவாயா..

எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும்

வயல்களும் காடுகளும்

ஞாபகங்களின் ஞாபகங்களும்

சேர்ந்தேயழும் துயரை நீயறிவாயா...?

தூரத்தே ஒளிரும் வானத்து நட்சத்திரங்களில்

ஊர் மேலொழுகும் ஒவ்வொரு மழைத்துளியில்

புழுதியை அணிந்திருக்கும்

எம்மூர்களின் புன்னகையில்

எங்கள் நதிகளின் பாடலில்

எங்கள் வனங்களின் கவிதையில்

காற்றில் மூச்சில் கனவிலென்று

காலமள்ளிப்போனவர்களின் கதைகளே

எங்கள் வாழ்வெல்லாம்

காய்த்தும் பூத்தும் காய்ந்தும் கிடக்கின்றன..

காந்தாளே..!

எம் கண்ணீரில் பூத்தமலரே..!

அறிவாயா..

ஊரெல்லாம் நினைவெரிக்கும்

எம் கோடையை நீயறிவாயா..?

எங்களுக்கு மட்டும்

இருண்டே கிடக்கும் வானமும்

குரல்களற்று அலையும் எம் நதிகளும்

பிணங்கள் எரிந்த எங்கள் வயல்களின்

துயர்ப்புன்னகைகளும்

குருதி ஊறிய எங்கள் வீதிகளின் சுவடுகளும்

அழக்கூட வாயற்று கண்ணீரை எறிக்கும்

எங்கள் நிலவும்

இனி என்ன செய்யும்

சூரியன் அற்ற நிலத்தில்...?

காந்தாளே..!

எம் காவியங்களை ஊரெல்லாம் பாட

கண் திறந்தமலரே..!

சொல்..

எம் வனமெல்லாம் எரிகிறது..

நிலமெரிக்கா சூரியனுக்கு

இனி நாமெங்கு போவோம்..?

முப்பது வருட கண்ணீருடன்

முகிழ்ந்திருக்கும் அடையாளமே..

இரத்தமாய் சிவந்திருக்கும்

உன் இதழ்களில் இருந்து

நறுமணத்தை போல பரவுகிறது வலி

உடலெங்கும் தொற்றிக்கொள்ளும்

பெருந்துயரோடு பற்றி எரிகிறது மனம்...

எங்கள் வலிகளை வாங்கிப் பூத்த துயர மலரே..!

காந்தாளே..!

அறிவாயா..

எம் முப்பதுவருடக்கதையை

இனி ஒரு முன்னூறு சந்ததிக்கும் சொல்ல

உன்னைத்தவிர எம்மிடம்

மிச்சமாய் எதுவுமில்லையென்று

நீயறிவாயா..? :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கவிதை.
 
அப்படியானால் இது? 
 
கனவாகி விட்ட தமிழரின் மகோனதப் பொற்காலத்தின் அடையாளம் அல்லவா. மனம் தளராதீர்கள் !

 

1024px-View_from_left_side_corner_of_the

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

அப்படியானால் இது?

கனவாகி விட்ட தமிழரின் மகோனதப் பொற்காலத்தின் அடையாளம் அல்லவா. மனம் தளராதீர்கள் !

1024px-View_from_left_side_corner_of_the

அன்பு அண்ணா.. ஈழத்தில் கல்லறைகளில் இருந்து மாவீரர்களின் ஞாபமாக இருந்த அத்தனை அடையாளங்களையும் அழித்துவிட்டது சிங்களம்.. ஆயினும் எம்மண்ணோடு வேரோடி மாவீரர்களின் ஆன்மாவாக கார்த்திகைகள் தோறும் எம்மக்களின் இதயங்களோடு பேசும் காந்தாளை என்ன செய்யமுடியும்.. அந்த நினைவுகளோடு எழுதியது... நம்பிக்கைகள் மட்டுமே மூலதனமானது ஈழத்தமிழரின் வாழ்க்கை.. நன்றி அண்ணா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் வலி சுமந்த வார்த்தைகள் கொண்டு வடிக்கப்பட்ட கவிதை கருத்தெழுத வார்த்தைகளின்றித் தவிக்கின்றேன். ஆயினும் கண்களில் மட்டும் ஓரு துளி கண்ணீர்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10435899_10152559595874891_5836280648957

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்

தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன

இடித்தழிக்கப்பட்ட

கல்லறைகளில் இருந்து

துயருடன் இடம்பெயர்ந்த

ஆன்மாக்கள்.

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10351463_10152580460614891_6761969126000

கேட்க செவிகளும்

பார்க்க விழிகளும்

இல்லா இவ்வுலகில்

விடுதலைக்காய்

நீரெரிந்த தீயில்

நினைவெரித்து நினைவெரித்து

நாமெரிவதை யாரறிவார்... :(

  • கருத்துக்கள உறவுகள்

தூரத்தே ஒளிரும் வானத்து நட்சத்திரங்களில்

ஊர் மேலொழுகும் ஒவ்வொரு மழைத்துளியில்

புழுதியை அணிந்திருக்கும்

எம்மூர்களின் புன்னகையில்

எங்கள் நதிகளின் பாடலில்

எங்கள் வனங்களின் கவிதையில்

காற்றில் மூச்சில் கனவிலென்று

காலமள்ளிப்போனவர்களின் கதைகளே

 

 

'உடல் மண்ணுக்கு ...உயிர் தமிழுக்கு' என வாழ்ந்தவர்கள் அவர்கள் !

 

அவர்களின் புதை குழிகள் சிதைக்கப் பட்டாலும், அவை தாய் மண்ணுக்கே அர்ப்பணமாகின்றன!

 

அவற்றைச் சிதைதவர்கள் இங்கே தான் தோற்றுப் போகின்றார்கள் என்பதை அவர்கள் உணர நீண்ட காலங்கள் எடுக்கும்!

 

அவர்களது உணர்வுகளயும், உயிர் மூர்த்தங்களையும் அந்த மண்ணும், காற்றும், கடலலைகளும் என்றென்றும் சுமந்திருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10610771_10152571683944891_1224375453285

விழுதுமின்றி தவிக்குமென்று

தன் ஆலமரத்திற்காய்

விம்மி அழுதிருக்குமோ

சிலுவை சுமந்த ஆணிவேர்... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10401878_10152582247444891_7485774583903

இருக்கக் கூடும் பறக்க வானும் 
தேடாப்பறவையே..!
சிலுவை சுமந்து நீ பின்னிய கூட்டையும்
உன் சிறகை முறித்து விரித்த வானையும் 
இழந்தாயிற்று..
இழந்த பின் புரிந்தென்ன
இருந்தவை 
எதற்கும் இணையற்ற
எம் கூடும் வானுமென்று... :(
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10417679_10152583451379891_5212350292403

நவ 27

இன்று ஊரெங்கும் இறுகிப்படிந்திருக்கும் மெளனங்களுக்கும் சோகங்களுக்கும் இடையில் விடிந்திருக்கும் எம் காலை.. நந்தியாவெட்டையும் செம்பருத்தியும் என்றுமில்லா வனப்போடு இன்றெமக்கு மலர்ந்திருக்கும்... எல்லாவீடுகளும் நிறைந்திருக்கும் பூக்களோடும் மாலைகளோடும் காத்திருக்கும் உம் துயிலிடம் வரும் மாலைக்காய்..காற்று கண்ணீரோடு முத்தமிடும் பனைமரக்காடுகளை.. காற்றெங்கும் சோகத்தோடு ஒரு சிலிர்ப்பிருக்கும் இன்றெமக்கு.. நெடிய பனைமரங்களுக்கிடையில் இருக்கும் உம் தடங்களின் மேல் நிலவொளிரும்..பூவரசுகளோடு பேசும் வன்னியின் கரிக்குருவிகளும் புலுனிகளும் அந்த மண்ணில் யாரும் பாடமுடியாமல் இருக்கும் கவிதையை அவர்களுக்காய் பாடும்.. காடும் உறங்காமல் கண்விழித்தழுதிடும் வேரோடு உறவாடிய தம் வீரரின் நினைவுகளில்.. நிழல் விழுந்திருக்கும் எம் மணல்வீதிகளில் நீரிருப்பீர், உம் நினைவிருக்கும்.. தேசங்கள் தாண்டி மேகங்கள் உமை பாட வந்திருக்கும்.. தீபங்கள் எரிந்திடும் இம்மாலையில் கோவில்கள் அழுதிடும் குலங்காக்க வீழ்ந்த சாமிகளுக்காய்.. வனங்களும் மனங்களும் புல்லரிக்கும் உணர்விது.. கடந்துபோகமுடியாதபடி

கொதித்துக்கொண்டிருக்கிறது இந்த நாள்..தகிக்கிறது தீரா வெக்கை மனங்களில்..

வனமேகப்போயினவா வாடிக்கருகியதா நம் தெய்வங்கள்..? யாரறிவார்..? ஊர் எரிக்கிறது துயர்.. அழிவுகளாலும் பிரிவுகளாலும் அள்ளுண்ட தேசம் ஒன்றின் எஞ்சிய சந்ததியின் மொழிகளாலும் குறியீடுகளாலும் காட்டமுடியாத உணர்வுடன் கடந்துபோகிறது இன்னொரு கார்த்திகை..

மாவீரரே..!

ஜந்து பிள்ளைகளையும் நாட்டுக்காய் கொடுத்த

எதுவுமில்லையென்று விரிக்கும் கைகள் நிறைய இருக்கிறீர் நீர், அக்கண்களில் நின்றுதிரும் ஒரு துளிகண்ணீரில் இருக்கிறது கல்லறைகளில் இருந்து நீரின்று கண்திறவா இதயங்களிடம் கையேந்தும் பாடல்.. நதியின் பேரன்போடும் கடலின் பெருங்கருணையோடும் இன்னும் திறவா நம்மக்களின் இதயங்கள் திறக்க நாமெல்லாம் மனச்சாட்சியாய் எழுதுவோம்.. உங்களின் பாடலை பாடுவோம்.. தூங்குங்கள் கண்மணிகளே.. தூக்கமின்றி எத்தனை இரவுகள் எமக்காய் துவக்கோடு விழித்திருந்தீர்ப்பீர்கள்.. துக்கம் தொண்டையை அடைக்கிறது.. ஈகத்தின் கருணையில் விரிந்த உங்கள் உலகில் தூங்குங்கள் தோழர்களே...

எரிமலை நடுவில் போர் தொடுத்தோம்.. எத்தனை உயிர்களை நாம் கொடுத்தோம்..நினைவெரித்து நினைவெரித்து நீறான நதியில் மிதக்கிறது ஈழம்.. சருகுகளில் இருக்கும் இறந்தகாலத்தில் நின்றபடிதான் நிகழ்காலத்தைக்கடக்கிறோம்.. தீராத கனவுகளும் ஆறாத வலிகளும் வாழ்வின் நீளமுழுதும் வரும்சோகம் இது.. வன்னியின்

எல்லா வீட்டுப் பரணிலும் இருக்கிறது வலி பற்றிய கதைகள்.. ஈயமாய் துளைக்கும் கதைகளை தாங்கும் வலிமை செவிகளுக்கில்லையாதலால்தான் தூசிதட்ட யாரும் விரும்புவதில்லை... அந்த மக்களின் கதைகளில் ஒருகதைதான் இனி எப்போதும் பெறமுடியா ஒப்பற்ற எங்கள் தலைவனின் வீட்டின் கதையும்.. இது போதாதா எங்களில் ஒருவன் நீங்கள் என்பதற்கு..

மக்களின் மகனே..!

குன்றென நாம் நிமிர்ந்தபோது கோபுரமாய் நீயிருக்கவில்லை அத்திவாரமாய் இருந்தாய்...தமிழிருக்கும் தேசமெல்லாம் உன் சுவடுகள் சுவறி இருக்கும் அண்ணா..

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.