Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய பிரதமர் ஈடுபட்டுள்ளார் – லீ ரியன்னன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிறீன் கட்சி பாராளுமன்ற உறுப்பினுர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதனை மூடி மறைக்கும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அபோட் செயற்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் குற்றச்செயல்கள் தொடர்பில் இறுதியில் உலகம் விழித்துக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்கும் இறுதி நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலிய திகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் எனவும், 26 ஆண்டு கால துயரமான யுத்தத்தின் வடுக்களை குறித்த நாளில் தமிழ் மக்கள் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கொள்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனஅவர் தெரிவித்துள்ளார்.

அழுத்தங்கள் காரணமாக புகலிடம் கோரும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்காக அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்த போதிலும், அவுஸ்திரேலியாவின் பிரதான கட்சிகான லிபரல் மற்றும் தொழில் கட்சிகள் தமிழர் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தில் ரியன்னன் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113973/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அபார்ஜினி அவுஸ்ரேலிய டமில்ஸ்?

வாங்கோ, வந்து வக்காலத்து வாங்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசு மட்டுமல்ல, 2009 இல் பதவியில் இருந்த தொழிற்கட்சிகூட தமிழர் பிரச்சினையில் எதிராகத்தான் செயற்பட்டது. ஆனால் ஒரே வித்தியாசம், தொழிற்கட்சிப் பிரதமர் 2009 இல் தனது இயலாமைக்குக் காரணம், பிராந்திய வல்லரசொன்றின் அழுத்தம்தான் என்று தன்னை சந்திக்கச் சென்ற தமிழர்களிடம் சூட்சுமமாகச் சொல்லித் தப்பித்துக்கொண்டார்.

 

ஆனால் இன்றிருக்கும் முதலாளிகளின் தோழனான லிபரல் கட்சியின் டோனி அபோட்டோ, இலங்கையில் இனக்கொலையோ மனிதவுரிமை மீறலோ நடைபெறவில்லை, எல்லாம் சுமூகமாக இருக்கிறதென்று வக்காலத்து வாங்குகிறார்.

 

எல்லாம் படகு அகதிகளை தடுப்பதற்காகவாம். அதற்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்குவதற்கு இந்த அரசு தயார்.

 

குறிப்பு ; தேவையில்லாமல் அவுஸ்திரேலிய அரச தமிழ் அபிமானிகளை சீண்டிவிட்டேனோ தெரியவில்லை, வரப்போகிறார் ஒருத்தர் கூவுக் கூவி விற்கிறதுக்கு !

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர்ச் சந்தையிலேயே விலை போகாத மாடு இந்த ரொனீ அப்பொட்!

சர்வ தேசச் சந்தையிலா விலை போகப் போகுது? :o

வரவு செலவுத் திட்டத்தையே இன்னும் விக்கேலாமல் உள்ளூருக்குள்ள திண்டாட்டம்?

அதுக்குள்ள எதுவும் செய்ய முடியாத ஏதிலிகளிடம் மட்டும் தான் வீரம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.