Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொருத்தவறயில், எமது ஊர்களில் நடக்கும் குளிர்த்தி போன்ரவை, எமது கலாச்சாரத்துடன் ஒன்றிப்போனவை. இவை பாதுகாத்து எமது அடுத்த சந்ததியிற்கு போகவேண்டியவை. எனெனில் இது கொற்றவை எனும் தமிழரின் தெய்வத்திற்கு எமது முன்னோர்களினால் நடாத்தப்பட்டது. ஏதாவது மாற்றுக்கருத்து?.

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அளவில் வியாபித்துள்ள தீபாவளி பண்டிகை... ஒரு சர்வதேசத்தின் பார்வை...

The autumn holiday of Diwali can be as much a secular expression of national pride as a religious holiday, Indian-Americans in Greater Cleveland say.

Most Indians, including Muslims, Christians, Sikhs, Jains and others, participate in the celebration's gift-giving and other rituals. Still, its traditions come from honoring the ancient Hindu goddess of prosperity, Lakshmi.

http://www.cleveland.com/search/index.ssf?...ml?lrnew&coll=2

இதில் நீங்கள் சொல்லும் வரலாறோ.. கணக்கில் எடுக்கப்படவே இல்லை...!!!!!

புறநானுறு சொன்ன வீரம் நமக்குத் தெரியாது ஆனால் பிரபாகரன் சேனைகளின் வீரம் மேற்கோள்:"தெரிந்தது. அதை வைத்துத்தான் புறனானுறைப் பற்றித் துணியும் நிலையில் நீங்கள் என்னடா என்றால் புராணக் கதைகளை வைத்துத் தலைவரை துணிகிறீர்கள். "

என்ன இது? இவ்வளவு நேரமும் நாங்கள் சங்க இலக்கியங்கள் என்று எதை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறோம்? புறநானு}று என்பது என்ன? புறநானு}று சங்க இலக்கியம் இல்லையா? சங்கப் பாடல்கள் எதுவும் இதிகாசங்கள் அல்ல. அவைகள் வாழ்ந்த மனிதர்களை, நிலங்களை, குலங்களை சொல்கிற பாடல்கள். அத்துடன் பல வரலாற்று செய்திகளை தருகின்றன

நீங்கள் சொல்கிற புராணங்கள் வேறு. நாங்கள் சொல்கிற புறநானு}று, அகநானு}று மற்றும் பல சங்க இலக்கியங்கள் வேறு.

நேற்று நடந்த கொலையை இன்னார் தான் செய்தார் என்பதற்கு கண் கண்ட சாட்சியங்கள் இருக்கின்ற போதும் நீதி மன்றத்தில் தடயவியல் ஆய்வுகளின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க்கப்படுகின்றது. நேற்று கண் முன்னால் நடந்த சம்பவத்திற்கே இவ்வாறு பல ஆய்வுகள் தேவை எனில் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னர் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தேடினால் கிடைக்குமா?

இருக்கும் மொழியில ஆதாரங்களையும் கிடைதிருக்கும் தொல்பொருளியல் ஆதாரங்களையும் மற்றைய சரித்திர ஆசிரியர்களின் புத்தகங்களில் இருக்கும் சமகால வரலாறுகளையும் ஒப்பு நோக்கியே இது தான் நடந்திருக்கக் கூடும் என்று கூற முடியும்.இது தான் கட்டயாமாகா நடந்தது என்று விஞ்ஞான ரீதியாக தடயவியல் ரீதியாக ஒரு போதுமே வரலாற்றை நிறுவ முடியாது.அப்படிக் கோருபவர் ஒரு முழு முட்டாளாகவே இருக்க முடியும்.

ஈற்றில் பலராலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் அல்லது அரசியல் அதிகாரம் உள்ளவர்களால் சொல்லப்படுவதும் வரலாறாக ஆவணப்படுத்தப்படுவதும் கல்விச் சாலைகள் மூலம் புகட்டப் படுவதும் தான் வரலாறாக மாறுகிறது.

தமிழர்களைன் கையில் அரசியல் அதிகாரம் மாறும் போது வரலாறுகளும் மீள எழுதப்படும் ,வரலாற்று நியதி அது தான்.

இங்கே கருத்து எழுதுபவர்களால் தாங்கள் படித்த ஆதாரங்களை மட்டுமே இங்கு இணைக்கமுடியும்.தொல்பொருள் ஆய்வுகள் நடாத்த அதற்கென நிதி உதவிகள் அவசியம்.அதற்கென ஒரு கட்டுமானம் வேண்டும்.தமிழர் அரசு உருவாகும் இடத்து அதற்கான வசதிகள் ஏற்படும்.இப்போது இருக்கும் தொல்பொருள் ஆய்வுகள் கூட தமிழில் இணயத்தில் இல்லை.இந்தத் தலைப்பில் போதுமான சான்றுகள் இணயத்தில் இருந்து கொடுக்கப் படுள்ளன.குறிப்பாக விகிபீடியா என்னும் நடு நிலை தளத்தில் தற்போது நிலவும் கோட்பாடுகள் மேற் கோள்களுடன் அந்த அந்த துறை சார் வல்லுனர்களினால் கொடுக்க பட்டுள்ளது.ஆரியர், திராவிடர் என்னும் வரலாற்றை எவருமே மறுக்கவில்லை என்பதுவும், ஆரியர் வடக்கே இருந்து வந்தனர் என்பதுவும் இந்தத் துறையில் ஆராச்சி செய்யும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள்.

முன்னர் இது சம்பந்தமாகா யாழ்க் களத்தில் நடந்த விவாதம் ஒன்றிலும் ஆரியர் வருகையை மறுதலித்து கிந்துதுவ வாதிகளைனால் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட ஒரு மோசடியான கட்டுரையை ராஜாதிராஜ இணைதிருந்தார்.அதற்கு விஞ்ஞான ரீதியானா மரபணு ரீதியான ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டது.பின்னர் அது ஒரு மோசடியான கட்டுரை என்பதுவும் இந்துதுவ வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி என்றும் பல ஆதரங்களுடன் இங்கே நிருபீக்கப்பட்டுள்ளது.ஆதரங்

அடிமைகளின் பேச்சு எப்போது ஏற்கப்பட்டது? நாங்கள் சுதந்திரம் பெற்ற பின்பு நாங்கள் சொல்லும் வரலாறு கணக்கில் எடுக்கப்படும்.

அந்த அச்சத்தில்தான் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் எமது போராட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகன், ஆனைமுகன் என்பது எல்லாம் பிற்காலத்தில் வைக்கப்பட்ட பெயர்.

முருகன் விடயத்தில் இன்னும் ஒரு வேடிக்கையும் உண்டு. முருகனை தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டதற்கு நிறைய குறிப்புக்கள் உண்டு.

ஆனால் கி.பி ஏழாம் நு}ற்றாண்டுக்கு பிறகுதான் கணபதி வழிபாடு தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு ஆதாரம் கேட்பவர்கள் கி.பி ஏழாம் நு}ற்றாண்டுக்கு முன்பு தமிழர்களிடம் கணபதி வழிபாடு இருந்ததற்கு ஆதாரம் காட்டட்டும்.

(ஒளவையார் என்ற பேரில் பலர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதியமானிடம் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், ஆத்திசுூடி எழுதிய அவ்வையார், கம்பர் காலத்து அவ்வையார், மூதுரை எழுதிய அவ்வையார், சுந்தரமூர்த்தி நாயனாரோடு நட்புக் கொண்டிருந்த அவ்வையார் இப்படி அனைவரும் வேறு வேறு. வௌ;வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் சுந்தரமூhர்த்தி நாயனருடன் நட்புடன் இருந்த அவ்வையாரே கிபி எட்டாம் நு}ற்றாண்டில் "வினாயகர் அகவல்" படினார். அவ்வையாரை ஆதாரமாக யாரும் காட்டிவிடக் கூடாது என்பதற்கே இதைச் சொன்னேன்)

இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்த முருகனை பிற்காலத்தில் வந்த விநோத உருவம் கொண்ட கணபதிக்கு தம்பி ஆக்கி விட்டார்கள்.

பல முருகன் கேள்வி எழுந்திராவிட்டால் ஒளவையார் கூட அமுங்கிப் போயிருப்பார்??!

எனி முருகனுக்கும் அவரோடு வரும் கிபி..கிமு க்களுக்கும் ஆதாரம் சொல்லுங்கோ??!

காலத்தைத் துணிய தெளிவான ஆதாரம் வேண்டும். தொல்பொருள் ஆய்வுப் பொருட்களின் காபன் வயது அல்லது ஏனைய முறைகளில். ஆனால் நீங்கள் புராணக்கதை தவிர வேறு ஆதாரம் சொல்லவில்லையே...??! அப்படி இருக்க எப்படி நம்புவது முருகனை ஏதோ ஒரு முருகனை தமிழர்கள் பன்னெடுங்காலம் வணங்கினர்..??! அந்தப் பன்னெடுங் காலத்தின் எல்லை என்ன ??! எப்படித் துணியப்பட்டது..??! :idea:

சோ போன்ற பார்ப்பனர்கள் எக்காலத்திலும் தமிழீழ போராட்டத்தை ஆதரிக்காதன் காரணத்தையும், வீரமணி போன்ற பகுத்தறிவாளர்கள் எந்த நிலையிலும் எங்கள் போராட்டத்தை ஆதரிப்பதன் காரணத்தையும் நெடுக்காலபோவான் ஆராய்ந்தால் உண்மைகள் புரிந்துவிடும்.

நான் புராணக் கதையை எந்த இடத்தில் ஆதாரமாகக் காட்டினேன்?

சங்க இலக்கியங்களுக்கும் புராணங்களுக்கும் வித்தியாசம் விளங்காமலா நீங்கள் இவ்வளவு நேரமும் விவாதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
முன்னர் இது சம்பந்தமாகா யாழ்க் களத்தில் நடந்த விவாதம் ஒன்றிலும் ஆரியர் வருகையை மறுதலித்து கிந்துதுவ வாதிகளைனால் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட ஒரு மோசடியான கட்டுரையை ராஜாதிராஜ இணைதிருந்தார்.அதற்கு விஞ்ஞான ரீதியானா மரபணு ரீதியான ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டது.பின்னர் அது ஒரு மோசடியான கட்டுரை என்பதுவும் இந்துதுவ வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி என்றும் பல ஆதரங்களுடன் இங்கே நிருபீக்கப்பட்டுள்ளது.ஆதரங்
  • கருத்துக்கள உறவுகள்

நான் புராணக் கதையை எந்த இடத்தில் ஆதாரமாகக் காட்டினேன்?

சங்க இலக்கியங்களுக்கும் புராணங்களுக்கும் வித்தியாசம் விளங்காமலா நீங்கள் இவ்வளவு நேரமும் விவாதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

இலக்கியங்கள் காலக் கண்ணாடிகள் என்ற பார்வையில் கீறல்கள் இருக்கின்றன. அவற்றிலும் செருகல்களும் கற்பனைகளும் ஏராளம். உங்கள் இலக்கிய வடிவங்களைத் தாருங்கள் நிறைய யதார்த்தத்துக்கு ஒவ்வாத விடயங்களைக் காட்டலாம்.

புராணங்கள் இதிகாசங்கள் இலக்கியங்கள் எல்லாம் தமிழர்களைப் பொறுத்தவரை கற்பனை கலந்த ஆதார அடிப்படை அற்ற சாம்பாறுகள். அவற்றை வைத்து தமிழர்களின் வரலாற்றைத் துணிவது என்பது தமிழர் வரலாற்றில் போலித் தன்மை உண்டோ என்ற ஐயப்பாட்டையே உண்டாக்கும். :idea:

புராண இதிகாச கற்பனைகளை வைத்து எதையும் அணுகக் கூடாது என்பதே எனது நிலைப்பாடும்.

ஆனால் நான் இங்கே எமது முன்னோர் எழுதிய நு}ல்களைப் பற்றி பேசுகிறேன்.

;இன்னும் சில நு}று ஆண்டுகளுக்கு பிறகு நெடுக்காலபோவான் போன்றவர்கள் பாரதியார் வாழ்ந்ததற்கு ஆதாரம் கேட்பார்கள். அவர் வாழ்ந்ததற்கு அவருடைய படைப்புக்கள் மட்டும்தான் ஆதாரமாக இருக்கும். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பாரதியார்தான் பாப்பா பாடல்கள் எழுதினார் என்பதற்கு அறிவியல் ஆதாராம் தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசா!

என்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலைக் கானோம்?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா இல்லை. தெளிவான காலத் துணிவுக்கும் அவர் வாழ்ந்தற்கான புவியியல் அடையாளங்களும் நிறையவே இருக்கின்றன. மொழியின் வலு. அவரின் கவிதைகள் ஆக்கங்கள் தாங்கி வந்த கற்பனை கடந்த யதார்த்தத் தன்மைகள் அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும்.

ஆனால் இங்கோ இராவணனுக்குப் பத்துத் தலை முருகனுக்கோ ஆறுதலை என்று வந்த யதார்த்ததிற்குப் புறம்பான நிரூபிக்கப்படாத விடயங்களே அதிகம். சரி சோழ மன்னர்கள் போல முருகனும் ஒரு மன்னன் என்றால் எங்கே அவனின் ஆட்சி விட்டுச் சென்ற எச்சங்கள்...??! அவை எங்கிருந்தன அல்லது எப்படி இருந்தன...அதை ஏன் நீங்கள் காட்டிய முருகன் இலக்கியப் பதிவுகள் காவி வரவில்லை?? எல்லாம் மர்மமாக இருக்க..கிமு கிபி மட்டும் முளைத்தது எப்படி..??! இது வரலாற்று மீளாய்வு என்ற போர்வையில் இடைச் செருகலாகத்தானே தென்படுகிறது. அது அவசியமில்லை. ஆதாரங்களூடான ஆய்வுகளும் விடைகளுமே அவசியம். அவைதான் சர்வதேசத்தின் முன் எமது வரலாற்றிருப்பை தக்க வைக்கும். :?:

சங்க காலத்தை கிமு 500 - கிபி 200 என்று வல்லுனர்கள் வகைப்படுத்தி உள்ளார்கள்.

இக் காலத்தை சேர்ந்த பல பாடல்கள் முருகன் பற்றி பேசுகின்றன.

ஆனால் கிபி ஏழாம் நு}ற்றாண்டிற்கு பின்பே கணபதி பற்றிய குறிப்புக்கள் தமிழில் வருகின்றன. அதற்கு முன்பு ஏதாவது இருந்தால் ஆதாரம் காட்டலாம்.

முழுமுதற் கடவுளான கணபதி குறித்து சங்கப் பாடல்களில் எதுவுமே இல்லை என்பது ஆச்சரியம் அல்லவா?

நெடுக்காலபோவான்! புவியியல் அடையாளங்கள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?

நைனா! நான் மனிதனுக்கு மதமே தேவை இல்லை என்று சொல்கிறேன். அதேவேளை மதம் வேண்டும் என்று அடம்பிடிக்கிற "இந்துத்" தமிழர்களக்கு சைவத்தை சீர்திருத்தி தமிழ்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! புவியியல் அடையாளங்கள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?

அவர் வாழ்ந்த இடம். அது வைத்திருக்கும் மொழிநடை. வாழ்வியல் பழக்க வழக்கங்கள்..எச்சங்கள் என்று பல உண்டு. புவியியல் ரீதியாக அவர் மீதான செல்வாக்குக் காரணிகள் அவரின் புவியல் ஸ்தானத்தை அடையாளப்படுத்தும். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசா!

மதமே தேவை இல்லை என்று சொல்வதற்கு காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

நைனா! நான் மனிதனுக்கு மதமே தேவை இல்லை என்று சொல்கிறேன். அதேவேளை மதம் வேண்டும் என்று அடம்பிடிக்கிற "இந்துத்" தமிழர்களக்கு சைவத்தை சீர்திருத்தி தமிழ்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

உங்கள் சீர்படுத்தல் என்பது ஆதாரங்கள் நிறுவல்களுக்கு அப்பாற்பட்ட இடைச் செருகல்கள். அதுவும் ஒரு கற்பனையை மறைக்க இன்னொரு கற்பனையை ஆதாராமாக்கி செய்யப்படும் புதிய ஏற்பாடுகள். இவை மீண்டும் மீண்டும் தமிழர்களி வரலாற்றுக்கு பலவீனத்தை அளிக்குமே தவிர பலமளிக்காது. பலமளிக்க வேண்டும் அறிவியல் ரீதியான ஆய்வுகளும் முடிவுகளும் எட்டப்பட்டு சர்வதேச சமூக பிராந்திய அங்கீகாரங்கள் பெறப்பட வேண்டும். சபேசன் நீங்கள் அந்த நிலைக்கு வரத்தயாரில்லை எனும் போது உங்களின் கட்டுரைகளைப் புறக்கணிப்பதைத் தவிர எம்மைப் பொறுத்தவரை எதுவும் பிரேரரிக்க முடியாது. மற்றும்படி மிளகாய் அரைக்க அரைபடுபவர்கள் படட்டும் என்று ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் சாத்தியம்.

கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி.

கொயுப்புதான் நைனா..... :P

சபேசன்.

மதம் தேவையில்லை. ஆனால் கடவுள் (பயம்) தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியில் நரகாசுரனைப் பற்றிப் பேசுபவர்கள் தமிழர்கள் தான். அந்த வகையில் நரகாசுரன் ஒரு ஆரியன். எனவே தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடலாம். :lol: :wink:

ஆனால் உலகம் இதற்கு எல்லாம் அப்பால் போய் என்ரரெயின்ட்மென்ட் என்ற வகையில் இதிகாசம் கட்டுக்கதைகளுக்கு அப்பால் கொண்டாடும். தீபாவளியை வைத்து வரலாறு எழுதும் நிலை தமிழர்களுக்கு இருக்கலாம். மற்ற இனங்களுக்கு இல்லை என்பது பாவம் தமிழர்கள் அறியாத சங்கதி போலும்.

நாம் உலகோடு போவோம். ஆரிய திராவிட மானுட பிரிவுகளுக்கு அப்பால் அனைவரும் மகிழ்ந்திருக்க குளிர்கால விடுமுறைக்கான விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்.

சர்வதேச அளவில் வியாபித்துள்ள தீபாவளி பண்டிகை... ஒரு சர்வதேசத்தின் பார்வை...

The autumn holiday of Diwali can be as much a secular expression of national pride as a religious holiday, Indian-Americans in Greater Cleveland say.

Most Indians, including Muslims, Christians, Sikhs, Jains and others, participate in the celebration's gift-giving and other rituals. Still, its traditions come from honoring the ancient Hindu goddess of prosperity, Lakshmi.

http://www.cleveland.com/search/index.ssf?...ml?lrnew&coll=2

இதில் நீங்கள் சொல்லும் வரலாறோ.. கணக்கில் எடுக்கப்படவே இல்லை...!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரெ ஒரு செய்தி நெடுக்கால் போவாருக்கு!

எங்களின் பார்வயில் நீங்கள் ஆராட்சிக் கட்டுரய்களை மட்டும் நம்புவர் போல் இருக்கின்றது. ஆராட்சிக் கட்டுறைகளை எம் விருப்பத்திற்கேற்ப மாத்திஅமைப்பது என்பது பெரிய விடயம் அல்ல. நான் வாழும் நாட்டில் ஒரு வைத்திய கலாநிதி புற்றுனோய் சம்பந்தமான ஒரு கட்டுறையய் பிழையான தகவல்கழை பயன்படுத்தி தனக்கு சாதகமாக எழுதிப்பிடிபட்டுள்ளார். இதனால் அவர் தனது பேராசிரியர் பட்டத்தய்யும் இழந்தார். இன்னுமொறு உதாரணமாக ரொகான் குணவர்த்தனாவைக் கூறலாம், இவரும் ஆராட்சிக்கட்டுரைகள் தான் எழுதுகின்ரார், இவர் கூறுவது எல்லாம் உன்மையாகுமா? கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிப்பதுவே மெய்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரெ ஒரு செய்தி நெடுக்கால் போவாருக்கு!

எங்களின் பார்வயில் நீங்கள் ஆராட்சிக் கட்டுரய்களை மட்டும் நம்புவர் போல் இருக்கின்றது. ஆராட்சிக் கட்டுறைகளை எம் விருப்பத்திற்கேற்ப மாத்திஅமைப்பது என்பது பெரிய விடயம் அல்ல. நான் வாழும் நாட்டில் ஒரு வைத்திய கலாநிதி புற்றுனோய் சம்பந்தமான ஒரு கட்டுறையய் பிழையான தகவல்கழை பயன்படுத்தி தனக்கு சாதகமாக எழுதிப்பிடிபட்டுள்ளார். இதனால் அவர் தனது பேராசிரியர் பட்டத்தய்யும் இழந்தார். இன்னுமொறு உதாரணமாக ரொகான் குணவர்த்தனாவைக் கூறலாம், இவரும் ஆராட்சிக்கட்டுரைகள் தான் எழுதுகின்ரார், இவர் கூறுவது எல்லாம் உன்மையாகுமா? கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிப்பதுவே மெய்

ஆராய்ச்சிக் கட்டுரைகளிலேயே இந்தளவுக்குப் போலித் தன்மை இருக்கென்றால் மற்றவற்றில்...???! ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பிழைகளாவது கண்டுபிடிக்கக் கூடிய அளவுக்கு கவனம் செலுத்தப்படும். அல்லது கண்டுபிடிக்கப்பட சந்தர்ப்பம் இருக்கிறது. கற்பனைக் கட்டுரைகளுக்கு அந்தச் சந்தர்ப்பமே இல்லாமல் போகிறது. ஆனால் சபேசன் போன்றோர் எழுதும் முற்போக்குத்தனம் பேசுவதான மொழியால் பூசி மெழுகப்பட்ட ஆதார அடிப்படைகளற்ற அறிவியல் பூர்வமான சான்றுகள் சமர்பிக்காத இப்படியான கட்டுரைகள் பாமரமக்கள் மீது செலுத்தும் தாக்கத்தை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவையே நாளை வரலாறு என்று ஒரு பகுதியினரால் திணிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதுவே பின்னாடி இருவேறு நிலை வரலாறுகளைத் தமிழர்களுக்கு இயம்ப குழப்பமான வரலாற்று முடிவுகளை இன்று போல் என்றும் தமிழர்கள் எடுக்கும் நிலை அழிய வேண்டின்...அறிவிய பூர்வமான சர்வதேச அங்கீகாரம் நோக்கிய வரலாற்றுப் பதிவுகள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் பார்வை. மற்றவை எவையும் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியதாகிறது. :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.