Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேணன் தடுப்பணை உடைப்பு ; தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் அமைக்கப்பட்டிருந்த வேணன் உவர்நீர்த்தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

201%282%29.jpg

 
காரைநகர் பிரதேசத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு தடுப்பணை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. 
 
மழை பெய்யத் தொடங்கிய நாள் முதல் இதுவரை காலமும் தேங்கியிருந்த நன்னீர் குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்தது.
 
இதனால் அங்குள்ள சிலரினால் குறித்த தடுப்பணை உடைக்கப்பட்டமையால் நேற்று முதல் நன்னீர் கடலுக்குள் சென்று கொண்டிருப்பதுடன் நீர்மட்டமும் குறைந்துள்ளது. 
 
20141203_095919.jpg
 
எனவே சேகரிக்கப்பட்ட நீர் கடலுக்குள் சென்றமையால் எதிர்வரும் ஆண்டு பொதுமக்களுக்கு தேவையான நீருக்கு தட்டுப்பாடு நிலவும்.
 
இதனைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தும் நோக்குடன் தடுப்பணையினை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களம் ஊர்காவற்றுறை பொலிஸ்  நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது. 
 
வடக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
 
20141203_094827.jpg
 
தற்காலிகமாக நன்னீர் கடலுக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கைகளை வட மாகாண நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியன இணைந்து இன்றே ஆரம்பித்துள்ளன. 
 
20141203_110002.jpg
 
 
 இது குறித்து வடக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் தெரிவிக்கையில், 
 
காரைநகர் பொன்னாலை பாலத்தின் வலதுபக்கத்தில் 2.1 கிலோ மீற்றர் அளவிற்கும் இடதுபக்கத்தில் 3.2 கிலோ மீற்றர் அளவிற்கும் வேணன் உவர்நீர்த்தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்பத்தில் குடிநீர்ப்பற்றாக்குறையினை தீர்க்கும் நோக்குடன் உறுப்பினர் தியாகராஜா களிமண்ணினால் அணைக்கட்டினை அமைத்திருந்தார். அவை காலப்போக்கில் அழிந்து போயின.
 
அதனையடுத்து ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் கவனிப்பின்றியிருந்த தடுப்பணை கடந்த வருடம் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டு 23 மில்லியன்  ரூபா செலவில் கட்டப்பட்டது.
 
இதனூடாக மழை நீர் சேமிக்கப்பட்டு குறித்த கிராமத்திற்கு தேவையான நீர் பெறப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த வாரங்களாக பெய்து வரும் மழையினால் வெள்ளம் சிலரது வீடுகளுக்குள் புகுந்து கொண்டது. அதனையடுத்து குறித்த தடுப்பணை சில விசமிகளால் வெட்டப்பட்டது. 
 
எனவே இவ்வாறான செயற்பாட்டினால் அடுத்த ஆண்டுக்கு தேவையான நன்னீர் இல்லாமல் போவதுடன் குடிநீருடன்  கடல் நீர் கலப்பதனால் கிணற்று நீர் உப்பு நீராகவும் மாறும்.
 
இவ்வாறான நடவடிக்கைகள்  எதிர்காலத்தில் நடைபெறாது இருப்பதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில்  நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 
 
எனவே நன்னீரை தற்காலிகமாக பாதுகாக்க மண்மூடைகள் போடுவதற்கான நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் முற்றாக தடுப்பதற்கு நிரந்தர அணையினை அமைப்பதற்கும் நவடிக்கைகளை எடுப்போம் என்றும் தெரிவித்தார். 
 
இதேவேளை, தடுப்பணை உடைக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்ததுடன் எதிர்காலத்தில்  குடி தண்ணீருக்கு தாம் கஷ்ரப்பட வேண்டும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=351973697203291966#sthash.JZCQ5Qs6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

முதலில் தடுப்பணை கட்டியவர்கள் வெள்ள நிலத்தைப் பற்றி (flood plain) அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவதாக உடைத்தவர்களுக்கு நீண்டகால‌ குடிநீர் தேவையைப் பற்றிய அக்கறை இருந்ததுபோலும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடுப்பணையில் வெள்ள வடிகால் மதகுகளே இல்லையா?

 

மதகுகள் இல்லாவிட்டாலும், அருகேயுள்ள மேடான நிலப்பரப்பின் நிலமட்டத்திற்கேற்றவாறு ஒருபகுதியில் உபரி வெள்ள நீர் வழிந்தோட தடுப்பணையின் வடிவமைப்பு இருக்க வேண்டுமே? :o

பொன்னாலைப் பாலம் (காரை மூளாய் பாலம்) பண்ணைப்பாலம் ( யாழ் மண்டைதீவுப் பாலம் ) போன்றவற்றின் நீர் ஓட்டத்தை துரிசை நிரவி தடுத்தும், காரைநகர் ஊர்காவற்துரை இடப்பகுதியை அணைமூலம் தடுப்பதன் மூலமும் இதுவரை கடல் நீர் நிர்ம்பியிருந்த பகுதியை யாழில் பெய்யும் மழைநீரல் நிரப்பலாம். 

 

lagoon_zpsb5243443.png

 

 

 

 

இசை, ராசவன்னியன்
 
ஊருக்குள் வெள்ளம் வராது. ஊர் வெள்ளமே இங்கு சேமிக்கப் படுகிறது.அணைக்கட்டின் உயரத்தை பார்க்க விளங்கும். ஆனால் கரை ஓர‌ங்களில் வசிப்பவர்களே இப்படியான நாச வேலை செய்பவர்கள். இதைப் போல ஊரின் வடபகுதியில் கட்டிய அணைகளையும் கடற் கரை ஓரங்களில் வசிப்பவர்கள் உடைத்தது முன்னர் நடந்துள்ளது. வசிப்பதற்கு பல இடங்கள் இருக்க விளிம்பில் போய்  வசிப்பவர்கள் என்ன சொல்வது. 

சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

முதலில் தடுப்பணை கட்டியவர்கள் வெள்ள நிலத்தைப் பற்றி (flood plain) அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவதாக உடைத்தவர்களுக்கு நீண்டகால‌ குடிநீர் தேவையைப் பற்றிய அக்கறை இருந்ததுபோலும் தெரியவில்லை.

 

 

இந்த தடுப்பணையில் வெள்ள வடிகால் மதகுகளே இல்லையா?

 

மதகுகள் இல்லாவிட்டாலும், அருகேயுள்ள மேடான நிலப்பரப்பின் நிலமட்டத்திற்கேற்றவாறு ஒருபகுதியில் உபரி வெள்ள நீர் வழிந்தோட தடுப்பணையின் வடிவமைப்பு இருக்க வேண்டுமே? :o

 

 

bund_zps9f72289b.png

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. தகவல்களுக்கு நன்றி ஈசன்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.